தமிழ் சொற்பொழிவுகள்
மரணம் பல விதம் விசாரணை நாள் பாவமன்னிப்பு

Monday, 2 May 2016

நோன்பின் சிறப்பு

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் 
நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் 
கெட்ட சொற்கள் பேச வேண்டாம். சச்சரவில் 
ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம்.
அவரிடம் எவராயினும் வசை மொழி பேசினால் 
அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி 
என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.
[பேசவோ சண்டையிடவோ தன்னால் முடியாது 
என்பதைச் சிந்திக்கட்டும்]
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
நூல்..புகாரி, முஸ்லிம்]''ஒருவன் இறைநம்பிகையுடனும் மறுமையின் 
நற்கூலியைப் பெறுகின்ற எண்ணத்துடனும் ரமலான் 
மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின் ,அவர் 
முன்னர் செய்த பாவங்களை அல்லாஹ்  மன்னித்து 
விடுவான். ஒருவன் ரமளானின் இரவுகளில் 
இறைநம்பிக்கையுடனும், மறுமையின் நற்கூலியைப் 
பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் [தராவிஹ்]
தொழுகை தொழுவாராயின் அவர் முன்னர் செய்த 
பாவங்களை அல்லாஹ்  மன்னித்து விடுவான்.
நபிகள் நாயகம் நவின்றார்கள்..
நூல்.. புகாரி, முஸ்லிம்]
நோன்பின் சிறப்பு Saturday, 16 January 2016

பெண்களே

பெண்களே! நீங்கள் தர்மம் செய்து செய்து வாருங்கள். அதிகமாக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள் . ஏனென்றால் நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேன்'' என்று திருநபி [ஸல்] அவர்கள் கூறிய போது  , சிலர் காரணம் என்ன  என்று வினவினர். அதற்கு திருநபி [ஸல்] அவர்கள்,  '' நீங்கள் கணவன்மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள். அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள். மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகிறீர்கள். உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை'' என்று கூறினார்கள்.[அல்ஹதீஸ்]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் , பெண்களைப் பற்றி இப்படி கூறியிருப்பதை . பெண்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்!  ஒருவருக்கு ஒரு நல்ல சாலிஹான மனைவி கிடைப்பது,  அவருடைய வாழ்க்கை சுவன பூஞ்சோலையாக தான் இருக்கும்! மாறாக ஒருவருக்கு தீய குணம் உள்ள மனைவி கிடைத்தால். அவர் வாழ்க்கை ....? [சொல்ல வேண்டாம் அல்லாஹ்  பாதுகாக்கணும்!]

Thursday, 13 August 2015

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் அந்த 37 விடயங்கள் !

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் அந்த 37 விடயங்கள் !!01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

02. மனது புண்படும்படி பேசக் கூடாது.

03. கோபப்படக்கூடாது.

04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

05. பலர் முன் திட்டக்கூடாது.

06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

Wednesday, 29 July 2015

பெண்களை பாதுகாக்கும் இஸ்லாம் ...

பெண்களை பாதுகாக்கும் இஸ்லாம் ...
அன்று நூஹு(அலை) அவர்கள் சமுதாயத்தை ஒழுக்கப்பண்புடைய வாழ்வுக்கே வழிகாட்டினார். புத்தரும் மக்களை ஒழுக்கமாக வாழவே வழிகாட்டினார். அவர் தமது அரச மாளிகையில் இடம் பெற்ற பெண்களின் ஆபாச நட னங்களையும், தீய இசையையும் கண்டு மனம் வருந்தினார். அவர் பெண்கள் ஆபாசமான முறையில் உடையணிவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒழுக்கமுடைய குடும்ப வாழ்வுக்கே வழிகாட்டினர்.

Saturday, 6 June 2015

முஸ்லிம் பெண்களுக்கு முகநூல் தேவையா ..?

முஸ்லிம் பெண்களுக்கு முகநூல் தேவையா ..?
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஒருவன் இன்பாக்ஸ் ல் மிகவும் தரக்குறைவாக பேசியதை பற்றி பதிவிட்டு இருந்தேன்.....
பல சகோதரர்கள் முஸ்லிம் பெண்கள் ஏன் முகநூளுக்கு வர வேண்டும் என்பதை கமெண்ட்ஸ் லும் எனது இன்பாக்ஸ் இலும் .... கவலை தெரிவித்தார்கள்... வர தேவை இல்லை என்றார்கள்.... அப்படியே வருவதாக இருந்தாலும்... ஆண்கள் பெயரில் வர வேண்டியது தானே என்று கூறினார்கள்....

Wednesday, 20 May 2015

தேவைப்படும் பண்பாடு .. ஒரு நிகழ்வு


தேவைப்படும் பண்பாடு..ஒரு நிகழ்வு 
எகிப்தின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவி. தனது ஆசிரியைக்கும்,
தனக்குமிடையே ஒரு சுவரிருப்பது போல் அவள் அடிக்கடி உணர்வாள். இதற்கு என்ன
காரணம்? அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இஸ்லாமியத் தோற்றம்
காரணமா? என்னைப் போன்ற இதே தோற்றத்தில் பலர் உள்ளனரே! எனவே அது காரணமாக
இருக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றும். நான் இஸ்லாமிய விவகாரங்களை
மிகுந்த ஈடுபாட்டோடும், உணர்ச்சிப் பூர்வமாகவும் வாதிப்பேன் அதுதான்
காரணமா? இருக்க முடியாது. என்னைப் போல் பலர் இப்படி இருக்கிறார்களே.
அவளால் சரியான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனக்கும் தனது
விரிவுரையாளருக்கும் இடையே இருக்கும் தடையை, அவர் தன்னை
உதாசீனப்படுத்தும் போக்கை நீக்க பல வழிகளிலும் முயன்று பார்த்தாள். அவளது
முயற்சி எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு,
மிகுந்த ஈடுபாட்டோடு ஒரு வருடகாலம் செலவிட்டு தான் சமர்ப்பிக்கும்
ஆய்வு(க் கட்டுரை)களை நியாயமான எந்தக் காரணமுமின்றி விரிவுரையாளர்
மறுத்து விடுவாரோ என்ற பதற்றம் அவளுக்கு மிகுந்த மனக் கஷ்டத்தையும்,
கலக்கத்தையும் கொடுத்தது. விரிவுரையாளரின் இந்தக் கடும் போக்கு
எப்போதாவது எதிர்பாராத பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் கொண்டுவரலாம் என
அவள் பயந்தாள்.

Friday, 15 May 2015

பெண்கள் பேண வேண்டிய நாணம்

பெண்கள் பேண வேண்டிய நாணம்

[ வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களில் பலர் . அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?
வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன? வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே!