தமிழ் சொற்பொழிவுகள்
மரணம் பல விதம் விசாரணை நாள் பாவமன்னிப்பு

Saturday 6 June 2015

முஸ்லிம் பெண்களுக்கு முகநூல் தேவையா ..?

முஸ்லிம் பெண்களுக்கு முகநூல் தேவையா ..?
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஒருவன் இன்பாக்ஸ் ல் மிகவும் தரக்குறைவாக பேசியதை பற்றி பதிவிட்டு இருந்தேன்.....
பல சகோதரர்கள் முஸ்லிம் பெண்கள் ஏன் முகநூளுக்கு வர வேண்டும் என்பதை கமெண்ட்ஸ் லும் எனது இன்பாக்ஸ் இலும் .... கவலை தெரிவித்தார்கள்... வர தேவை இல்லை என்றார்கள்.... அப்படியே வருவதாக இருந்தாலும்... ஆண்கள் பெயரில் வர வேண்டியது தானே என்று கூறினார்கள்....

அதற்காக.... நான் எழுத வேண்டும் என்று பலர் அறிவுறுத்தினார்கள்....
எனது நிலை இது தான்....
பெண்களுக்கு கூடாது என்றால் ஆண்களுக்கு மட்டும் கூடுமா???? நீங்கள் மட்டும் உங்கள் நட்பு வட்டத்தில் பெண்களை வைத்து கொள்ளலாமா...???? பெண்கள் போட்டோ போட்டால் .. மாஷா அல்லா.. என்று சொல்லலாமா.....??? அப்படி கலக்கக இஸ்லாம் உங்களை அனுமதித்து இருக்கிறதா....???
25 வருடத்திற்கு முன்னாள் எங்கள் ஊரில் வயதுக்கு வந்து விட்டால் பெண் பிள்ளைகளை ஸ்கூல் விட்டு நிறுத்தி விடுவார்கள்..... அப்பொழுதே என் சகோதரிகளை பள்ளி கூடத்திற்கு பர்தாவுடன் அனுப்பினோம்.... அன்றும் இதை தான் பேசினார்கள்..... பெண் பிள்ளைக்கு படிப்பு எதற்கு என்று.... அதே எனது சகோதரி ... பிற்காலத்தில் எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்....
இன்று நிலை அப்படி இல்லை.... பெண்கள் வயதுக்கு வந்ததற்கு அப்புறம் படிப்பது மிக சாதாரணம்.... அதே போல தான்...முகநூலும்..... பெண்கள் என்று அவர்களை அடக்க வேண்டாம்... அவர்களுக்குண்டான இடத்தை அவர்களுக்கு கொடுங்கள்.....
பெண்கள் படிப்பது காலத்தின் கட்டாயம்... திருமண வாழ்க்கை எப்படி போகும் என்று தெரியாது.... அவர்களுக்கு தன்னை காத்துக்கொள்ள கல்வி ஒரு கேடயமாக இருக்கும்.... நல்ல நிலத்தின் தான் பயிர்கள் வளரும்... படித்த பெண்ணால் தான் ... பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க முடியும்.....
நான் படிக்கும் போது ஒரு நகைச்சுவையான சம்பவம்.... என் நண்பன்... பீர் சாப்பிடுவான்.... அவன் அம்மாவிடம் போய் .... உங்கள் மகன் பீர் அடிக்கிறான்.. என்று சொல்லிவிட்டான் இன்னொரு நண்பன்.... வீட்டிருக்கு போனதும் அவனது தாய்.... தம்பி பீர் ( ஒரு பையனின் பெயர் ) எல்லாம் அடிக்க கூடாதும்மா.... இல்லாத வீடு பிள்ளை.. பாவம் என்று சொல்லி இருக்கிறார்கள்....
இன்னொரு முறை ... காலேஜ் ல் இருந்து ரிப்போர்ட் கார்டு அனுப்பி விட்டார்கள்....அவனது தாய் என்ன என்று கேட்ட போது... காலேஜ் பீஸ் கட்ட வேண்டும் என்று சொல்லி டோடல் மார்க்குக்கு பணத்தை வாங்கி வந்து விட்டான்......
அப்போது சிரிப்பாக இருந்தது.... இன்று எமது சமுதாயத்தை நினைக்கும் போது... கவலையாக இருக்கிறது.....
என் தாய் அந்த காலத்து பி யு சி .. அவர்கள் படித்தால் நாங்கள் அனைவரும் பட்டதாரிகள் .... என் சகோதரி எம் பி ஏ... இன்னொரு சகோதரி எம் எஸ் சி... நான் எம் பி ஏ... எம் எஸ் சி.... நாங்கள் மூவரும் ஒவொரு நிறுவங்களை நிர்வகிக்கிறோம் ....
பெண்களுக்கு உலக அறிவு .. மார்க்க அறிவு ... மிகவும் முக்கியம்....
அதலால் பெண்களை அது செய்யாதே இது செய்யாதே என்று தடை செய்வதை......
என்னால் ஒரு தாயின் மகனாய்,
ஒரு சகோதரனாய் ....
ஒரு கணவனாய் ...
ஒரு தகப்பனாய்

ஏற்று கொள்ள முடியாது......
அவர்களுக்கு எப்படி கடந்து செல்வது என்று சொல்லி ... அதற்கு துணை நிற்கவே ஆசை படுகிறேன்.....
ரோட்டில் போகும் போது சாக்கடை இருக்க தான் செய்யும் ... நாம் செய்ய வேண்டியது ...எமது பெண்களுக்கு சாக்கடை பற்றிய விழிப்புணர்வு ... அதை எப்படி தாண்டி பயணிக்க வேண்டும் என்ற அறிவை அவர்களுக்கு ஏற்படுத்துவது....
தெரு நாய்கள் குலைத்தால் எப்படி துணிவுடன் எதிர் கொள்வது என்று அவர்களுக்கு பழக்க வேண்டும்.... அதையும் மீறி நாய்கள் வழி மறித்தால்...... சமுதாயம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்.... நாம் துணை நிற்போம்.... அவர்களை அரணாய் காப்போம்....
இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்.... எந்த பெண்ணை உலகம் தெரியாமல் பொத்தி வைக்கிறார்களோ அவர்கள் தான் எளிதாக அடுத்தவர்களிடம் ஏமாறுகிறார்கள்....
நான் எமது பெண்களுக்கு சொல்லிகொல்வதெல்லாம் இது தான்.....
இஸ்லாம் காட்டிய வரை முறையில் நில்லுங்கள்....
அல்லாஹ் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மறக்காதீர்கள் ....
எவனாவது இடையூறு செய்தால் தகுந்த பதிலடி கொடுங்கள்....
இல்லை பெற்றோர்களிடம்....
உங்கள் குடும்பத்து ஆண்களிடம் சொல்லுங்கள்....
பயந்து மட்டும் அமைதியாக இருந்து விடாதீர்கள்....

பயந்து ஓடினால் தான் நாய் பின்னால் துரத்தும்.... எதிர்த்து நின்று கல்லை எடுங்கள்..... தன்னால் ஓடி விடும்.....
குடும்பத்தில் உள்ள ஆண்களே உங்களை வீட்டு பெண்களை நம்புங்கள் .. அவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்.... அவர்களுக்கு ஒரு அரணாய் இருங்கள்.....
பெண்களே.... உங்கள் வீடு ஆண்களுக்கு உண்மையாக இருங்கள்.... ஒன்றை மனதில் வையுங்கள்..... நீங்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் .... பாத தூரமான விளைவை உங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தும்.....
இது தான் எனது நிலை ....
அன்புடன்..... ஆரிப்
நன்றி.. கல்பிடிய குரல் 

No comments:

Post a Comment

Best comment is welcomed !