தமிழ் சொற்பொழிவுகள்
மரணம் பல விதம் விசாரணை நாள் பாவமன்னிப்பு

Monday 2 May 2016

நோன்பின் சிறப்பு

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் 
நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் 
கெட்ட சொற்கள் பேச வேண்டாம். சச்சரவில் 
ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம்.
அவரிடம் எவராயினும் வசை மொழி பேசினால் 
அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி 
என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.
[பேசவோ சண்டையிடவோ தன்னால் முடியாது 
என்பதைச் சிந்திக்கட்டும்]
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
நூல்..புகாரி, முஸ்லிம்]



''ஒருவன் இறைநம்பிகையுடனும் மறுமையின் 
நற்கூலியைப் பெறுகின்ற எண்ணத்துடனும் ரமலான் 
மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின் ,அவர் 
முன்னர் செய்த பாவங்களை அல்லாஹ்  மன்னித்து 
விடுவான். ஒருவன் ரமளானின் இரவுகளில் 
இறைநம்பிக்கையுடனும், மறுமையின் நற்கூலியைப் 
பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் [தராவிஹ்]
தொழுகை தொழுவாராயின் அவர் முன்னர் செய்த 
பாவங்களை அல்லாஹ்  மன்னித்து விடுவான்.
நபிகள் நாயகம் நவின்றார்கள்..
நூல்.. புகாரி, முஸ்லிம்]
நோன்பின் சிறப்பு 



No comments:

Post a Comment

Best comment is welcomed !