அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாக!
அன்பு சகோதரிகளே! என் அன்பான வேண்டுகோள் .. இந்த தலைப்பு உங்களை குறையாகவோ அல்லது தவறாகவோ சொல்லும் நோக்கம் இல்லை . இன்று வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் பற்றி கூறும் ஒரு சிறிய கட்டுரைதாம்!
பெண்கள் என்பவர்கள் மாணிக்க கற்கள் , அவர்கள் பாதுக்காக்கபடக்கூடியவர்கள் , கண்ணியப்படுத்தக்கூடியவர்கள். ஒரு நபிமொழி கூறுகிறது .. உலகத்தில் சிறந்த பொருள் ஒரு சாலிஹான மனைவி. வீட்டில் அவள் கணவனுக்கு ஒரு சிறந்த சாலிஹான மனைவியாக இருந்தால் , நிச்சயமாக மற்றவர்களுக்கு ஒரு சிறந்த [நல்ல] பெண்மநியாகதான் இருப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமறைக் குர்ஆன் மூலம் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் பெண்ணுரிமையைப் பேணினார்கள் . பெண்களின் கண்ணியத்தை உயர்த்தினார்கள்.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன். திருக்குர்ஆன் 2..228]
அவர்கள் உங்களுக்கு ஆடை . நீங்கள் அவர்களுக்கு ஆடை.
அல்குர் ஆன் ..2..187]
அல்லாஹ் பெண்களுக்கு உரிமைகள் தந்துள்ளனான். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் பெண்ணுரிமையைப் பேணினார்கள் , கண்ணியத்தை உயர்த்தினார்கள் .
ஆனால் , பெண்களாகிய நீங்கள் கண்ணியத்தைக் கெடுத்துக் கொள்கிறீர்கள் , அதிகம் பேராசைக் கொள்கிறீர்கள், ஒருவர்கொருவர் பொறாமைக் கொள்கிறீர்கள். விட்டுக் கொடுத்து வாழ்வதை விரும்ப மாட்டீர்கள் , பிடிவாதம் பிடிப்பதில் பிடிவாதமாக இருக்கிறீர்கள். எதையும் யோசிக்காமல் செய்து விடுகிறீர்கள், புத்தி குறைவாக உள்ளவர்களாகத்தான் இருக்கிறீர்கள். எடுத்தோம் கவுத்தோம் என்று நீங்கள் இருக்கிறீர்கள் , நிதானமாக இருக்க மாட்டீர்கள், சகிப்புத்தன்மை இல்லை , பொறுமை இல்லை. கணவரிடம் பிடிக்காத விஷயம் இருந்தால் , உங்களுக்கு பிடித்த விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும் . பார்க்கும்போது அவரை எனக்கு பிடித்தது , திருமணம் செய்த பிறகு அவரை எனக்கு பிடிக்கவில்லை [சிலரின் குமுறல்] அவரின் அழகைப் பார்த்தேன் , அவரின் நடையைப் பார்த்தேன், உடையைப் பார்த்தேன் ஆனால் அவரின் அகத்தைப் பார்க்கவில்லை. குணத்தைப் பார்க்கவில்லை. இன்று சர்வசாதாரணமாக தலாக்கு ஏற்படுகிறது. இன்று திருமணம் , நாளை தலாக்கு என்று ஆகிவிட்டது . இவரை எனக்கு பிடிக்கவில்லை , காரணம் இவர் மற்ற ஆண்களைப் போல இல்லை. அல்லது என்னிடம் அதிகமாக உரையாடுவதில்லை what 's up லில் அதிகம் என்னிடம் chating பண்ணுவதில்லை. செல்போனில் அதிகம் பேசுவதில்லை. இப்படி அடுக்கடுக்காக குறைகள் சொல்லி வரும் இளைய தலைமுறை தான். இதற்காக எனக்கு அவரைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் பெண்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருப்பவர்கள் கணவன்மார்கள் நேரம் கிடைக்கும்போது பேசலாம், எப்பொழுதும் பேசிக் கொண்டு இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. [சில பெண்கள் மட்டும்] ஒரு காலம் இருந்தது, அப்பொழுது பெண்கள் பெரும்பாலும் அவர்கள் வீட்டில்தான் இருப்பார்கள் , வெளியில் அதிகம் போக மாட்டார்கள். இன்று பெரும்பாலும் வெளியில்தான் சுற்றி திரிகிறார்கள் குறைந்த நேரம் தான் வீட்டில் இருப்பார்கள் . குடும்பப் பெண்களும் சரி , வயது வந்த பெண்களும் சரி [சிலரைத் தவிர] .
கணவரைத் திருப்திப் படுத்துவது எப்படி ?
நீண்டக் காலத்துக்கு பிறகு வெளிநாடுகளிலிருந்து வரும் கணவன்மார்கள் , அவர்கள் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் , ஓய்வாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் வருவார்கள். அவர்கள் தங்கி இருக்கும் காலம் ரொம்ப சொர்ப்பக் காலம்தான் . அந்த காலத்தை சண்டையிலும் , சச்சரவுகளிலும் கழிப்பது எந்த வகையில் நல்லது என்று சில மனைவிமார்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வந்த கணவரைத் திருப்திப் படுத்தும் எண்ணம் இல்லாமல் இருக்கும் சில மனைவிமார்களும் உண்டு. உண்ணும் நேரம் வந்தால் அப்பொழுதுதான் மனைவி ரொம்ப ஆர்வமாக சீரியல் பார்த்துக் கொண்டிருப்பாள் , கணவன் பசியோடு அங்கு காத்துக்கொண்டிருப்பார் . மனைவி அவரைப் பொற்படுத்தாமல் சீரியலை கவனமாக பார்த்துக்கொண்டிருப்பால். சீரியலா ? அல்லது கணவனுக்கு சாப்பாடா? என்று வரும்போது அந்த மனைவி சீரியலுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பாள். [சிலரைத் தவிர] இரவு நேரம் வரும்போது , கணவன் மனைவிக்காக தூங்காமல் காத்திருப்பான். அவள் சீரியஸாக சீரியல் பார்த்துக் கொண்டிருப்பாள். எது முக்கியம் என்று வரும்போது சீரியலாகத்தான் இருக்கும் சிலருக்கு . வந்த கணவன் எப்படி சந்தோஷமாக காலத்தைக் கழிக்க முடியும்? உடனே வெளிநாடுக்கு போக வேண்டும் என்று தான் நினைப்பான். இது பெண்ணின் மிக பெரிய தவறு! இதெல்லாம் எங்கே நடக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம் , நடக்கவில்லை என்று நீங்கள் கூறலாம் . சில இடங்களில் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது உண்மை. கற்பனை அல்ல . சீரியல் வந்ததால் சில குடும்பங்கள் சீரழிந்து போகிறது. கணவன் வெளிநாடு போனபிறகு , அவள் தனியாக நினைத்து வருந்து சில பெண்கள் உண்டு . இதுதான் பெண் புத்தி பின் புத்தி என்பார்கள்..
சில பெண்கள் திருமணம் ஆகிய சில நாட்களிலே கணவரைப் பிடிக்காமல் போய்விடுகிறது. காரணம் எதுவாக இருக்கலாம் . ரொம்ப ரொம்ப முக்கியமான காரணம் ஒன்று அதுதான் தாம்பத்திய உறவு , அது அவர்களுக்குள் இன்பமாக முடியவில்லை என்றுதாம் சொல்ல வேண்டும். பொதுவாக ஆண்களும் சரி பெண்களும் சரி திருமணம் முன் நிறைய ஆசைகளும் , கற்பனைகளும் செய்து வைத்திருப்பார்கள் . எதிர்ப்பார்ப்புகளும் , கனவுகளும் அவர்கள் மனதில் ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் . முதல் இரவு நேரத்தில் சிலருக்கு பூர்த்தியாகாமல் போகலாம் , எதிர்ப்பார்த்தது நடக்காமல் போகலாம் , அங்கு ஒரு விதமான விரக்தி ஏற்படலாம் . அதன் காரணமாக விரிசல் வரலாம். உடலும் உடலும் உரசினால் மட்டும் போதாது , அங்கு உள்ளமும் உள்ளமும் அன்பினால் இணைய வேண்டும் , உள்ளம் இன்பத்தினால் நனைய வேண்டும். இருவரும் இன்ப மழையில் நனைய வேண்டும் , இறைவனின் அருளை பெற வேண்டும் . இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும், அவனின் அருளைத் தேட வேண்டும் , அவனிடத்தில் உதவிக் கோர வேண்டும் , உள்ளத்தை இணைக்கும் அல்லாஹ்வின் உதவி வேண்டும், அன்பை உள்ளத்தில் போடா ஆசையாக தொழுது துஆச் செய்ய வேண்டும். வாழ்வில் சந்தோசம் பெருக அல்லாஹ்வின் வழியிலும் , அல்லாஹ்வின் தூதர் நபி [ஸல்] அவர்களின் வாழ்வைப் பின்பற்ற வேண்டும் . வெற்றி இம்மைக்கும் , மறுமைக்கும் என்பது உறுதி!
கணவர் உங்களுக்கு பிடித்தமாதரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் , முதலில் நீங்கள் கணவருக்கு பிடித்த மாதரி நடந்துக் கொள்ளுங்கள், இன்ஷாஅல்லாஹ் அவர் உங்களுக்கு பிடித்த மாதரி நடந்துக் கொள்வார். ஒரு முஃமினுக்கு கேடயம் என்பது துஆதான்! அதை நீங்கள் பயன்ப்படுத்துங்கள். தானத்தில் சிறந்தது நிதானம் ! குணத்தில் சிறந்தது நற்குணம் ! பெண்களில் சிறந்தவள் சாலிஹான பெண் ! எதையும் நிதானமாக யோசியுங்கள் , அவசரப்படாதீர்கள்! பொறுமையாக இருங்கள்! பொங்கி எழாதீர்கள் !
அல்லாஹ்விடம் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! அவசர முடிவு எடுக்காதீர்கள்! நீங்கள் நல்ல சாலிஹான மனைவியாக இருங்கள் , அல்லாஹ் உங்களுக்கு நல்ல சாலிஹான கணவராக ஆக்கி வைப்பான்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

Comments
Post a Comment
Best comment is welcomed !