திருமணம் மனித வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சம். வயது வந்தும்
திருமணமாகாதவரை சமூகம் விட்டுவைப்பதில்லை. பிரமச்சாரி என்பர். பருவத்தில்
பயிர்செய்யா விட்டால் வேறு எப்போது பயிர்செய்வது எனக் கேட்பர். இப்படியே
தனிக்கட்டையாக காலங்கடத்துவதா எனக் கேட்பர். நல்ல பெண்ணொன்று உள்ளாள்.
பேசுவோமா எனக் கேட்பர். இப்படி செல்லுமிடமெல்லாம் சிலர் அக்கறையோடும்
சிலர் கிண்டலாகவும் சொல்லிச் சொல்லியே, கேட்டுக் கேட்டே மணமாகாத மனிதனை
மணமுடிக்க வைத்திடுவர். அதேவேளை இள வயதிலேயே பிறரின் தூண்டுதல்,
உற்சாகப்படுத்தல், வற்புறுத்தல் ஏதுமின்றி தானாகவே செயற்பட்டு மண
வாழ்க்கையில் இனிதே நுழைவோரும் உளர்.
எது எப்படி இருந்த போதிலும் திருமணமாகுவோரைப் பார்த்து ஏன் மண வாழ்வில்
நுழைகிaர் எனக் கேட்டால் பலரும் பல விதமாகப் பதிலளிக்கின்றனர். திருமணம்
அல்லாஹ்வின் கட்டளையாக இருப்பதால் கல்யாணம் பண்ணுகிறேன் என்றும் ரஸ¤ல்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஸ¤ன்னஹ் என்பதால் மணமுடிக்கிறேன்
என்றும் வயது வந்து விட்டதால் திருமணம் செய்துகொள்கிறேன் என்றும் என்
வயதை ஒத்தவர்கள் எல்லாம் திருமணமாகின்றனர்.
அதனால் நானும் மணமுடிக்கிறேன் என்றும் என் சகாக்கள் எல்லோரும்
திருமணமாகின்றனர். அதனால் நானும் மணமுடிக்கிறேன் என்றும் பெற்றோரின்
வற்புறுத்தலினால் மண வாழ்க்கையில் புகுகின்றேன் என்றும் தாய்க்கு வீட்டு
வேலைகளைச் செய்துகொள்வது கஷ்டமாக உள்ளது.
ஒருவளைக் கட்டிக்கொண்டால் உதவியாயிருக்கும் என்பதனால் மணமுடிக்கிறேன்
என்றும் எவ்வளவு காலத்துக்குத்தான் தொடர்ந்து இப்படி பெற்றோருக்கு
சுமையாக இருப்பது. ஒருவரைக் கரம்பற்றிக் கொண்டால் நான் பெற்றோருக்கு
பாரமாக இருக்க மாட்டேனே என்பதற்காக கல்யாணம் முடிக்கிறேன் என்றும்
வித்தியாசம் வித்தியாசமான பதில்கள் கிடைக்கின்றன. என்ன விசித்திரம்! என்ன
விந்தை!
இஸ்லாத்தின் பார்வையில் கல்யாணத்தின் நோக்கம் உண்மையில் மிக மிக
விசாலமானது. மார்க்கமுள்ள குடும்பமொன்றையும் சந்ததி ஒன்றையும்
உருவாக்குவதை திருமணத்தின் நோக்கமாகப் பார்க்கின்றது இஸ்லாம்.
ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் இல்லற வாழ்வில் இணைந்து வைக்க எத்தனிப்போர்
அவ்விருவரிடத்திலும் மார்க்கம் இருப்பதை ஊன்றி அவதானிக்கும்படி
வேண்டுகிறது.
பின்வரும் ஹதீஸ்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.
“எவரின் மார்க்கத்தை, குணத்தை நீங்கள் பொருந்திக் கொள்கின்aர்களோ
அத்தகையவர் உங்களிடம் திருமணம் கேட்டால் அவருக்கு திருமணம் செய்து
வையுங்கள்” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல்: ஸ¤னன்
அல்-திர்மிதி)
“பெண் நான்குக்காக மணக்கப்படுகிறாள். அவளின் செல்வத்துக்காக, அவளின்
குடும்ப சிறப்புக்காக, அவளின் செளந்தரியத்துக்காக, அவளின்
மார்க்கத்துக்காக. மார்க்கமுடையவளைக் கொண்டு நீர் வெற்றி பெறுக!”
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல்: சஹீஹ் அல்-புகாரி)
கல்யாணமானதன் பின் பிள்ளைகள் பெற்று சந்ததி ஒன்றை உருவாக்க வேண்டும்
‘அதிகம் அன்பு செலுத்தக்கூடிய, அதிகம் பிள்ளை பெறக்கூடியவளை
கட்டிக்கொள்ளுங்கள்’ என்றார்கள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள். (அறிவிப்பவர்: மஃகில் இப்னு யஸார் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல்:
முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
உருவாக்குகின்ற சந்ததி முழுக்க முழுக்க மார்க்கமுள்ள சந்ததியாய் இருக்க
வேண்டும். நீண்ட நாட்களாக பிள்ளைப் பாக்கியமில்லாதிருந்த நபி ஸகரிய்யா
(அலைஹிஸ் ஸலாம்) அல்லாஹ்விடம் பிரார்த்திக்கையில் ‘என் இரட்சகா!
உன்னிடமிருந்து பரிசுத்தமான ஒரு சந்ததியை எனக்கு அன்பளிப்பாயாக!’ (03:38)
எனவும் ‘ஆகவே எனக்கு வாரிசாகவும் மேலும் எஃகூபின் சந்ததியிலிருந்து
வாரிசாகக்கூடிய ஒரு பொறுப்பாளரை உன்னிடமிருந்து எனக்கு அன்பளிப்பாயாக!’
(19:05- 06) எனவும் கேட்டதை அல்-குர்ஆன் பதிவு செய்துள்ளது.
மணமுடித்தோம், பிள்ளைகுட்டிகளைக் கண்டோம் என்றில்லாமல் மார்க்கத்தின்
அடிப்படையில் மண வாழ்வில் புகுந்து மார்க்க ரீதியில் குடும்பம் நடத்தி
பிள்ளைகள் பெற்று மார்க்கமுள்ளவர்களாக அவர்களை உருவாக்கி பரம்பரைப்
பரம்பரையாக இன்னானின் மகன் இன்னான், இன்னானின் மகள் இன்னாள் என
வரலாற்றில் பேசப்படக்கூடியவறான சரித்திரத்தைப் படைத்து விட்டுச் செல்ல
வேண்டுமென நபி ஸகரிய்யா (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் விரும்பியிருந்ததனால்
தான் அன்னாரின் துஆ அப்படி அமைந்திருந்தது. தனக்கு மட்டுமல்ல நபி யஃகூப்
(அலைஹிஸ் ஸலாம்) அவர்களை மையப்படுத்தி தனது அப்பப்பா பரம்பரைக்கும்
வாரிசாக அதுவும் காரியங்களைக் கவனிக்கின்ற ஒரு பொறுப்புள்ள வாரிசாக தன்
பிள்ளை அமைய வேண்டுமென அவர்கள் இறைஞ்சியதின் பின்னணி இதுதான். இது
ஒவ்வொரு முஸ்லிமுக்கு முன்மாதிரியாகும்.
‘அல்லாஹ்வைத் துதிக்கின்ற ஒரு மனிதனை என்னிலிருந்து அல்லாஹ் வெளிக்கொணர
வேண்டுமென்ற அவாவினால் அல்லாஹ் மீது ஆணையாக திண்ணமாக என்னை நான்
உடலுறவுக்கு நிர்ப்பந்திக்கின்றேன்’ என ஹழ்ரத் உமர் (ரழியல்லாஹு அன்ஹ்)
அவர்கள் கூறியது கவனிக்கற்பாலது.
ஹஸாலான வழியில் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கு நிச்சயம் கூலியுண்டு.
ஆனாலும் அதிலும் கூட ஒரு மார்க்கமுள்ள பிள்ளை கிடைத்திட வேண்டுமென
இலட்சியத்தோடு ஈடுபட வேண்டுமென்று ஹழ்ரத் உமர் (ரழியல்லாஹு அன்ஹ்)
அவர்கள் வேணவாவுற்றிருக்கிறார்கள்.
அல்லாஹ்வை அஞ்சி, அவனின் ஏவல் விலக்கல்கள், ஹலால் ஹராமைப் பேணி, விழுமிய
ஒழுக்க நெறியுடன் அவனின் ஷரீஅஹ் வரையறைகளுக்குள் நின்று வாழ்கின்றவர்களாக
கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் திகழ வேண்டும்.
தமது அடுத்த வழித்தோன்றல்களும் இவ்வாறே தோன்றி வாழ்ந்து மறைய வேண்டும்.
இது தலைமுறை தலைமுறையாகத் தொடர வேண்டும் என்ற இலட்சிய வேட்கையோடு
முனைந்திட வேண்டும்.
ஆம்! திருமணம் இன்பமானது, சுவையானது, புனிதமானது, இலட்சியமிக்கது,
அனுபவித்துப் பார்க்க வேண்டியது.
நன்றி.. dahwaworld .com
தலைப்பு// இலட்சியம் இல்லறம் நோக்கி

Comments
Post a Comment
Best comment is welcomed !