இருள் நிறைந்த இந்திய தேசம்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சில மாதங்களாக இந்தியாவில் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள்கள் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில் தொடர் பிரச்சனையாக தான் இருக்கிறது ஒழிய எந்த பிரச்சனைகளுக்கும் எந்த ஒரு தீர்வும் இதுவரை தீர்க்கப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் அல்ல, மாறாக மதவெறிபிடித்தவர்கள் . கருணை இல்லாத காட்டுமிராண்டிகள். இரக்கம் காட்டாத கல்நெஞ்சம் உள்ளவர்கள். அவர்கள் உள்ளத்தில் மதவெறி, பகை, பிரித்தாளும் சூழ்ச்சி, பொறாமை, ஆணவம், தீய எண்ணங்கள், தீய செயல்கள் இவைகள் மட்டும்தான் இருக்கிறது.
மதவெறி பிடித்த இந்த பிஜேபி எப்பொழுது ஆட்சிக்கு வந்ததோ அப்பொழுதே இந்திய மக்களுக்கு கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது. பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் திண்ணும் கதைதான்! பேய்கள் இடத்தில் பொற்கால ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா ? இந்த பாசிச கொள்கை உடையவர்களுக்கு ஒரே இலக்கு , இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது. அவர்களை அழிக்கவேண்டும் அல்லது அகதிகளாக ஆக்கவேண்டும்! முஸ்லிம்களை அழிக்கமுடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களை மதம் மாற்றமும் செய்யமுடியாது என்று அவர்களுக்கு புரியும் , ஆனால், அவர்களை அகதிகளாக ஆக்கி , அடிமைகளாக ஆக்கமுடியும் என்று தீர்மானித்து , இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மூலமாக இவர்களை அகதிகள் முகாமுக்கு அனுப்பிவிடலாம் என்று சூழ்ச்சி செய்து இந்த சட்டத்தை கொண்டுவருகிறார்கள். இதை உணர்ந்து தான் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று இணைந்து இந்த சட்டத்துக்கு எதிராக போராடுகிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் நிறைய இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி எப்பொழுதும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சோதனைக்கு மேல் சோதனை வந்துகொண்டே இருக்கிறது. இந்த குடியுரிமை சட்டம் என்பது ஒரு பெரிய சோதனை மட்டும் அல்ல அது பெரிய ஆபத்து! இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற ஒரு அச்ச நிலை இப்பொழுது வந்துவிட்டது. இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லாத்தையும் இழந்தார்கள். ஆனால் இந்த குடியுரிமை எப்படி இழக்கமுடியும் ? அதற்காகத்தான் இன்று முஸ்லிம்கள் வீதிக்கு வந்து அவர்களின் உரிமைக்காக போராடுகிறார்கள். குறிப்பாக பெண்கள் , வயதான பெண்கள், குழந்தைகள் பல நாட்களாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு போராடுகிறார்கள்.
அந்த போராட்டத்தை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் , இந்த பாசிச கோழைகள் கலவரத்தை ஏற்படுத்தி நேற்றிலிருந்து தலைநகரம் டெல்லியில் வன்முறையை தூண்டிவிட்டார்கள். முஸ்லிம்கள் வீடாக பார்த்து , கடையாக பார்த்து அடித்து உடைத்து சேதமாக்குகிறார்கள். மஸ்ஜிதுகள் எரிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். சிலரும் கொல்லப்படுகிறார்கள் . இதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை, டெல்லி அரசு இன்னும் பல ஊடகங்கள் . இந்தியாவில் சமீப காலமாக இந்த காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. அவர்களும் சேர்ந்து கலவரம் செய்கிறார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதல் , சரியாக திட்டமிட்டு சூழ்ச்சி செய்து வன்முறை செய்து இருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இருள் நிறைந்த தேசமாக தான் இருக்கிறது. நீதிமன்றங்களில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பி இருக்கிறோம். முஸ்லிம்கள் ஒருபோதும் இந்தியாவில் வன்முறையை கையில் எடுத்ததில்லை. அவர்கள் ஒருபோதும் அமைதியை குலைத்ததில்லை . தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் , அவர்கள் தேசவிரோதியா? இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள் இவங்கதான் இந்த நாட்டு தேசவிரோதிகள்? இந்த நாட்டுக்கு வந்த வந்தேறிகள், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக வேலை செய்தவர்கள் இவர்கள் தேசபக்தர்கள்! முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மறைத்து, இந்த பாசிச சக்திகள் துரோக செயல்கள் எல்லாம் மறைத்து, அவர்கள் இந்த நாட்டுக்கு உண்மையானவர்கள் போல் வரலாறை மறைத்து , வரலாறை இப்பொழுது மாற்றி அமைக்கிறார்கள். இவர்கள் தாம் இந்த நாட்டின் உண்மையான தேசபக்தர்கள்?
இப்பொழுது ஆட்சி, அதிகாரம், பணபலம் இருக்கிறது என்று ஆணவத்தினால் ஆடுகிறார்கள் . இந்த ஆட்டத்துக்கு ஒருநாள் முற்றுப்புள்ளி இருக்கிறது. ஒரு கெட்ட முடிவு இவர்களுக்கு காத்திருக்கிறது. அநியாயக்காரர்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்.
நடுநிலையாக இருக்கக்கூடிய ஊடகங்கள் . இப்பொழுது தடுமாறி நிற்கிற காட்சியை பார்க்கிறோம். எதிர் கட்சி காங்கிரஸ் கேங் rss ஆக ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. திராணி இல்லாத கட்சியாக ஆகிவிட்டது. தமிழ் நாட்டில் ஆளும் கட்சியை அடிமை கட்சியாக தான் பார்க்கமுடிகிறது. எதிர் கட்சி திமுக அடுத்த தேர்தலில் ''நாம் எப்படி வெற்றி பெறுவது '' என்று சிந்தித்து கொண்டுயிருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ''தலைவர்கள் அறிக்கை மட்டும் வெளியிடுவார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். அதைவைத்து அரசியல் செய்வார்கள். இது வழக்கமான ஒன்றுதான்!
இந்த உலகத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிகளும்தாம்! அகதிகளாக ஆக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள்தான்! வேறு எந்த மதத்தினரும் அகதிகளாக அதிகமாக பார்க்கமுடியாது.
இந்த உலகத்தில் யாரும் பிறக்கும்போது , கெட்டவனாகவோ , திருடனாகவோ, தீயவனாகவோ , கொலை செய்பவனாகவோ அல்லது தீவிரவாதியாகவோ பிறப்பதில்லை. அவர்களை ஆக்குவது சூழ்நிலை அல்லது அரசாங்கம்.
பணத்துக்காக கொலைகாரனாக மாறிகிறான் . சுகபோக வாழ்க்கைக்காக கொள்ளைக்காரனாக ஆகிவிடுகிறான். மதத்துக்காக தீவிரவாதியாக ஆகிவிடுகிறான். ஆட்சிக்காக எதையும் செய்யும் கெட்டவனாக மாறிவிடுகிறான். பெண்ணுக்காக ,பெண்ணுக்காக பேராசைக்காரனாக மாறிவிடுகிறான். மதம் ஒருபோதும் மனிதனை நல்வழிப்படுத்தாதது மாறாக அவனை மதவெறி பிடித்தவனாக மாற்றிவிடுகிறது. இஸ்லாம் என்னும் மார்க்கம் அது மதம் அல்ல மாறாக மனிதனை நேர்வழியில் செலுத்தும் உன்னதமான இறைவன் ஒருவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியும்! நேர்வழி என்பது எந்த மனிதனாலேயோ அல்லது நாட்டு தலைவராலேயோ காட்டமுடியாது. அகிலங்களை படைத்த அல்லாஹ் ஒருவனாலேயே மட்டும் சாத்தியம்.
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.(2 ;257 )
மனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில்தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.
நாம் அல்லாஹ்விடம் நிறைய துஆச் செய்கிறோம் , அல்லாஹ் நமக்கு இன்னும் பதில் தரவில்லை என்று மனம் தளர கூடாது, நிராசை வந்துவிடக்கூடாது. பொறுமை அவசியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு , அந்த காலம் வந்தால் தானாகவே எல்லாம் இன்ஷாஅல்லாஹ் நடக்கும்! நம்முடைய நம்பிக்கை, உறுதி அல்லாஹ் மீது தான் வைக்கவேண்டும்! மாறாக வேறு எதன் மீதும் நம்பிக்கை வைக்கக்கூடாது.
அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான். இந்திய முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொண்டு அல்லாஹ் சோதிக்கிறான் என்று எண்ணிக்கொள்ளலாம். இறுதியில் பொறுமையாளர்களுக்குத்தான் வெற்றி .
இந்த உலகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இது கியாமத்தின் அடையாளமாக கருதலாம்... காலமும் சுருங்கிவிட்டது. குழப்பமும் அதிகரித்து கொண்டே வருகிறது. நாம் எதை இழந்தாலும் , அதை பெற்றுவிடலாம் அல்லாஹ் நாடினால், ஆனால் ஈமானை இழந்தால் ஒருபோது அதை திரும்ப பெறமுடியாது என்பதை ஒவ்வொருவரும் தன் மனதில் ஆழமாக பதிய வைக்கவேண்டும்! உண்மையான வெற்றி நமக்கு மறுமைதான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்! அதே நேரத்தில் அல்லாஹ் மீறி எதுவும் நடக்காது, யாரும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது, அல்லாஹ் நாடினால் ஒழிய.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள்.
இதே ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறு சில அறிவிப்பாளர்களும் அறிவித்தார்கள்.( நூல்: புகாரி )

Comments
Post a Comment
Best comment is welcomed !