ஆபாசமும் , சரசமும் மலிந்துவிட்டது !
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
இன்று எங்கு பார்த்தாலும் ஆபாசம் காட்சி அளிக்கிறது . டீவியை பார்த்தால் ஆபாசம் , விளம்பரம் அதிலும் ஆபாசம் , பத்திரிக்கைகள் அதிலும் ஆபாசம் , எங்கும் ஆபாசம், எதிலும் ஆபாசம் . இச்சையை தூண்டக்கூடிய விஷயங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சில பெண்கள் டிக் டாக் மூலம் செய்யும் சேட்டைகள் சொல்லிமாளாது, அந்தளவுக்கு மிக மோசமாக ஆபாசமாக ஆடி , பாடி மற்றவர்களை ஈர்க்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்! இந்த கேலிக்கூத்தை ஒரு பொழுபோக்காக தான் செய்கிறார்கள் என்றும், தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்காக தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஒரு மொக்கை காரணத்தை சொல்கிறார்கள் . இதனால் என்ன நடக்கிறது என்று சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஒழுக்கமுள்ள ஒருவனை , ஒழுக்கம்கெட்டவனாக ஆக்கும் செயல் தான் இந்த மோசமான செயல்! காம இச்சைகளை தூண்டும் விதமாக இந்த டிக் டாக் மாறிவிட்டது! இப்படியெல்லாம் இருந்தால் , என்ன நடக்கும் ? பாலியல் குற்றம்தான் அதிகரிக்கும் . கற்பழிப்பு பெருகும். கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும். பெண்களை கற்பழித்தவனுக்கு தண்டனை எங்கே கொடுக்கப்படுகிறது ? அவன் பாதுகாக்கப்படுகிறான் என்றுதான் சொல்லவேண்டும்! ஆபாசமும், சரசமும் அதிகரிக்க , பெண்களுக்கு தான் ஆபத்து என்பதை சில ஒழுக்கம் இல்லாத பெண்களுக்கு ஏன் புரியவில்லை ? ஒவ்வொரு வீடுகளிலும் இந்த ஆபாசமும் , சரசமும் ஆக்கிரமித்து கொண்டுயிருக்கிறது தொலைக்காட்சி , செல்போன் மூலம்!
இன்று வெளிப்படையான விபச்சாரம் நடக்கிறது . விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று திருமறை அல்குரான் போதிக்கிறது: அதற்க்கு என்ன பொருள்? விபச்சாரத்தின் பக்கம் கொண்டுபோய் சேர்ப்பது இந்த ஆபாசமும், சரசமும் தான் ! ஆபாசமான காட்சிகளை பார்க்கும்போது , உள்ளத்தில் ஒரு விதமான ஆசை வருகிறது பிறகு சந்தர்ப்பம் கிடைத்தால் பாலியல் பலாத்துகாரம் அல்லது விபச்சாரம் செய்ய துணிகிறது இரண்டும் இல்லாவிட்டால் சுயஇன்பம் செய்ய ஆசை பிறக்கிறது! அது போக போக அந்த இழிவான செயல் விபச்சாரத்தின் பக்கம் கொண்டுபோய் சேர்க்கும் !
பெண்களை ஆபாசமாக ஆட வைக்கும் ஒரு கூட்டம் . அந்த ஆபாசத்தை பார்க்கும் இன்னொரு கூட்டமாகிய மக்கள் கூட்டம்! மோசமான டிவி சேனல்களில் ஒரு சேனல் விஜய் டிவி சேனல் , அதில் தான் முதன் முதலில் பெண்களை வைத்து ஆபாசமாக ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள், பிறகு அதை தொடர்ந்து மற்ற சேனல்கள் அதே பார்மூலாவை காப்பி அடித்தார்கள். இப்பொழுது அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் , ஆபாசமாகவும், சரசமாகவும் மக்களுக்கு தெரியவில்லை ! பழகிவிட்டது!
இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படாமல் இருப்பது, இரண்டு, தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமலிருப்பது.
ஆபாசப் படங்களைத் திரையிடுவதற்கும், ஆபாசப் பத்திரிகைகள் வெளிவருவதற்கும், ஆபாசமாக உடையணிவதற்கும் அனுமதி வழங்கப்பட்ட நாட்டில் விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை ஒழிக்க முடியாது. ஏனென்றால் விபச்சாரத்திற்கு அடிப்படையே ஆபாசம் தான். இவற்றை இல்லாமல் ஆக்கினால் தான் இந்தத் தீமையை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியும்.
மது அருந்துவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும் உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதை உணர்ந்த நம்முடைய நாட்டிலே மது பாட்டில்களின் மீது, “குடி குடியைக் கெடுக்கும்’ என்றும் பீடிக் கட்டுகளில் மண்டை ஓட்டுப் படங்களை போடுவதன் மூலமும், பதினாறு வயதிற்குக் குறைந்தோர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என விளம்பரம் செய்வதன் மூலமும் இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாத்து விடலாம் என நினைக்கின்றனர்.
ஆனால் இவற்றைக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதியளித்த பிறகு இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாக்க விளம்பரம் செய்வது ஒரு பொருளை சாக்கடைக்குள் வைத்துக் கொண்டே அதன் நாற்றத்தைப் போக்க முயல்வதைப் போன்றதாகும்.
இரண்டாவது காரணம், குற்றங்களுக்குத் தகுந்த தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்யத் தூண்டப்படுகிறான்.
மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களைச் செய்து விட்டுத் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். பல குற்றவாளிகள் தண்டனை யிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.
படைத்த இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தவறுகளைத் தூண்டக் கூடிய காரணிகளை அடியோடு ஒழிப்பதுடன் தவறுகளுக்குத் தகுந்த தண்டனைகளையும் வழங்குகிறது.
நம்முடைய கண்கள் எவ்வளவு மதிப்புள்ள விலைமதிக்கமுடியாத ஒரு அருட்கொடை என்பது தெரியாமல் நிறைய பார்க்கக்கூடாத காட்சிகளை பார்க்கிறோம்! பார்க்கும்போது இறைவன் நம்முடைய பார்வையை பறித்துக்கொண்டால்; நம் நிலை என்ன ஆகும்?
இறைவன் மனிதர்களுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கொடுப்பது , அவர்கள் திருந்துவதற்கு ; அவன் பக்கம் மீளுவதற்காக என்பதை நாம் இன்னும் ஏன் உணரவில்லை ?
நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

Comments
Post a Comment
Best comment is welcomed !