மாதவிடாய்; ஆரம்ப முடிவு வயது!
இதற்கு வயதெல்லை உண்டா?
ஒரு பெண்ணுக்கு பன்னிரண்டு வயதிற்கும் ஐம்பது வயதிற்கும் இடைப்பட்ட காலத்தில் மாதவிடாய் உண்டாகும். ஆயினும், அவளது தேக நிலை, சூழல், சுற்றுப்புற நிலைமைகளைப் பொறுத்து இது முன் பின் உண்டாகலாம். கண்ணியமிக்க உலமாக்(இஸ்லாமிய அறிஞர்)கள் மாதவிடாய்க்கான குறித்த வயதுக் காலம் பற்றிய கால வரையறை உண்டா என்பதிலும், இந்த மாதவிடாய் கால எல்லைக்கு முன் பின் வெளியாகும் இரத்தம் தொடர்பாக, அது அவளது மாதவிடாய் இரத்தமா அல்லது வேறேதும் இரத்தமா? என்பதிலும் மாறுபட்ட கருத்துடையவர்களாக இருக்கின்றார்கள்.
இது தொடர்பான வித்தியாசமான கருத்துக்களை முன்னிறுத்தி பேசிய இமாம் அத் தாரிமீஅவர்கள் கூறினார்கள்:
"என்னைப் பொறுத்த வரையில் இவை எல்லாமே பிழையானவை! ஏனெனில், ஒருவரின் வயதை கருத்தில் கொள்ளாது அவருக்கு இரத்தம் வெளியாகியுள்ளதா இல்லையா என்பதைப் பார்ப்பதைத்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு வெளியான இரத்தத்தை மாதவிடாய் இரத்தம் என்றே கொள்ள வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!"
இமாம் அத் தாரிமீ அவர்கள் கூறியதே மிகவும் சரியானது. செய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யர் (ரஹ்) அவர்களும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளார்கள்.
எனவே, ஒரு பெண் தன்னிடம் இரத்தம் வெளிவரக் கண்டால் அதை மாதவிடாய் என்றே கருத வேண்டும். அப்பொழுது அவள் ஒன்பது வயதை விடக் குறைவாகவோ அல்லது ஐம்பது வயதை விடக்
4. அத் தாரிமீ இஸ்லாமிய அறிஞர்களுள் மிகவும் பிரபலமான ஒருவர். ஹிஜ்ரி 181 ல் பிறந்தவர் இமாம்களான முஸ்லிம், அபூதாவுத், திர்மிதீ உட்பட பலர் இவரை மேற்கோள் காட்டியுள்ளர்கள் இவர் நீண்ட பிரயாணங்கள் செய்ததுடன் பல இஸ்லாமிய விளக்கங்களுக்குப் பொறுப்புடையவராகவும் இருந்தவர். ஹிஜ்ரி 255ல் மரணமானார்.
5. இப்னு தைமிய்யா இஸ்லாமிய பேரறிஞரான இவர் கி.பி 1263 ல் பிறந்தார். அவரது ஆரம்ப வயதில் பல்வேறு இஸ்லாமியக் கலைகளில் ஆழ்ந்த பாண்டித்தியம் பெற்றார் நபி (ஸல்) அவர்களின் சுன்னாஹ்வை மிகப் பலமாக ஆதரித்த இவர், தன்னை பலமுறை சிறையிலிடக் காரணமாக சதி செய்த தத்துவ வாதிகள் மற்றும் படித்தவர்கள் குழுக்கள் இஸ்லாத்தில் இடை செருக முனைந்த பலவற்றை மிகக் கடுமையாக எதிர்த்து நின்றார். அதோடு, பாரிய சிரியாவிலான தாத்தாரிய படை எடுப்பை எதிர்த்துப் போராடி முஸ்லிம்களைப் பாதுகாப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். இவர் இஸ்லாத்தில் இடைச்செருகல் செய்வோர் தொடர்பாக வெளியிட்ட ஃபத்வா (இஸ்லாமிய சட்டத் தீர்ப்பு)வையொட்டி கைது செய்யப்பட்டு டமஸ்கஸ் சிறையிலிருக்கும் போது, கி.பி. 1326ல் மரணமானார் இஸ்லாமிய அறிவைப் பெற விரும்புவோருக்கு அவரது எழுத்தாக்கங்கள் மிகப் பெரும் பயனுடையவைகளாக இப்பொழுதும் இருக்கின்றன. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!
கூடுதலாகவோ இருக்கின்றாள் என்பதைக் கருத்தில் கொள்ளக் கூடாது. ஏனெனில், ஒரு பெண்ணிடம் எப்பொழுதும் இரத்தம் வெளிவரக் கண்டால் அதை மாதவிடாய் என்றே கொள்ள வேண்டும் என அல்லாஹ்வும் அவன் தூதர் அவர்களும் நெறி வகுத்துள்ளார்கள். அன்றி, மாதவிடாய் ஆரம்பமாவதற்கும் முடிவதற்கும் அந்நெறியில் குறித்த வயதெல்லை குறிப்பிடப்பட வில்லை. உண்மையில் இது தொடர்பான வயதெல்லையை வகுக்க குர்ஆனினதும் சுன்னாஹ்வினதும் ஆதாரம் அவசியமாகின்றது. ஆனால், அத்தகைய ஆதாரங்கள் எதுவுமே அவற்றில் இல்லை.
மாதவிடாய் நீடிக்கும் கால எல்லை
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் உண்டாகிவிட்டால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் உலமாக்களிடையே பெரும் வாதப் பிரதிவாதங்களும் சர்ச்சைகளும் இருக்கின்றன சில உலமாக்கள். "மாதவிடாய் மிகச் சாதாரணமாகவோ அன்றி பாரிய அளவிலோ இருந்தாலும் அதற்குரிய நாட்கள் இவ்வளவுதான் என்ற வரையறையில்லை!" எனக் கூறுகின்றார்கள். இந் நூலாசிரியர், "இது (முன்னர்) அத்தாரிமீ அவர்கள் கொண்ட கருத்துக்கும், சைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் வழி மொழிந்த கருத்துக்கும் இணக்கமானதே!" என்கின்றார் இதுவே சரியான கருத்து ஏனெனில், இது குர்ஆனினதும் சுன்னாஹ்வினதும். ஒப்புதலுடைய கருத்துக்களினதும் ஆதாரங்களைக் கொண்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆதாரம் -1:
அல்லாஹ் கூறுகின்றான்.
ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهُنَّ حتى يطهرن ) [ الىٰ آآة
''இன்னும் மாதவிடாய் (குறித்த சட்டம்) பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: 'அது தூய்மையற்ற நிலை; ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்; மேலும், அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்."
(அல் குர்ஆன் 2:222)
இங்கு அல்லாஹ், சட்ட ரீதியான உடலுறவு இன்பத்தைப் பெறுவதிலிருந்து (ஆண்கள்) ஒதுங்கி நிற்பதற்கு 'மாதவிடாய் காலத்தில் பெண் அசுத்தமுற்று இருக்கின்றாள்' என்பதையே காரணமாகக் காண்பிக்கின்றான் என்பது மிகத் தெளிவானதே, அவ்வாறின்றி, ஓர் இரவு. ஒரு நாள், மூன்று நாட்கள், பதினைந்து நாட்கள் என கால எல்லையொன்றை அவன் வகுத்துத் தரவில்லை. மாதவிடாய் (சுத்தமற்ற நிலை) உண்டு அல்லது அவ்வாறு இல்லை (சுத்தமாகவே இருக்கின்றாள்) என்பது தொடர்பாக அல்லாஹ் வகுத்துத் தரும் நெறிமுறை நமக்கோர் ஆதாரமாகவுள்ளது.
ஆதாரம்-2:
ஆயிஷா (ரலி) அவர்கள் உம்ரா 'வுக்காக இஹ்ராம் அணிந்த பின் மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கொடுத்த விளக்கம் ஆதாரபூர்வமான ஹதீஸ் கிரந்தத்தில் காணப்படுகின்றது. இது எதனை உறுதிப் படுத்துகின்றது என ஆராய்ந்துப் பார்ப்போம். அவர்கள் கூறினார்கள்:
"(அங்கு) ஒரு யாத்ரீகர் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்யுங்கள். ஆனால், (மாதவிடாயிலிருந்து) சுத்தமாகும் வரை கஃபாவை தவாஃப் செய்வதை (வலம் வருவதை) செய்ய வேண்டாம்? அவர் (ஆயிஷா) கூறினார்: நஹ்ர் தினத்தில் (துல்ஹஜ் 10 ஆம் தினம்) நான் சுத்தமானேன்."
மற்றோர் ஆதாரபூர்வமான ஹதீஸ் கீழ்க்கண்டவாறு விளக்கம் தருகின்றது.
"நபி (ஸல்) அவர்கள் அவரு(ஆயிஷாவு)க்குக் கூறினார்கள்: "நீங்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமடையும் வரை காத்திருந்து, அதன்பின் 'அத்தன்ஈம்' (மக்காவிலான ஓர் இடம்) செல்லுங்கள். "அங்கு இஹ்ராம் அணிந்து (உம்ரா செய்த பின்) அத்தகைய இடத்தில் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.10
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை ஹஜ் கிரியைகளை செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தக் காரணமாக இருந்தது அப்போதைய அவர்களது சுத்தம் தொடர்பான அமசங்களே என்பது தெளிவாகின்றது. அன்றி, அவர்களின் மாதவிடாயின் போது வெளிவரும் இரத்தம் தொடர்பான கால எல்லையொன்றை அவர்கள் வகுத்துக் கூறவில்லை. எனவே, இது தொடர்பான இஸ்லாமிய சட்டம் மாதவிடாய் இரத்தம் வெளிப்படுவதையும் அது அல்லாத நிலையையும் பொறுத்து அமைவதைக் காணலாம்.
ஆதாரம்-3:
பெண்களின் மாதவிடாய் ஆரம்பமாகும் வயதும் முடியும் வயதும் பற்றி சில சட்ட அறிஞர்கள் மதிப்பீடுகளும் விளக்கங்களும் தந்துள்ளனர். எனினும் அவை அல்லாஹ்வின் அருள்மறையி (குர்ஆனி)லோ, நபி (ஸல்) அவர்களின் சுன்னாஹ்விலோ காணப்படவில்லை. இந்த மதிப்பீடுகளை நன்கு விளங்குவதும், அல்லாஹ்வுக்கான வணக்க வழி பாடுகளில் பயன்படுத்துவதும் கட்டாயக் கடமையாயின், அல்லாஹ்வும் அவன் தூதர் (ஸல்) அவர்களும் இது பற்றி ஒவ்வொருவரும் தெளிவாக அறிந்து கொள்ள செய்திருப்பார்கள்
6. (ரலி) ரலியல்லாஹு அன்ஹா 'அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக! என்பது இதன் கருத்து
7. உம்ரா மக்காவுக்கான புனிதப் பயணம் இப் பயணத்தின் போது கஃபாவை ஏழு முறை தவாஃப் செய்வது (வலம் வருவது)ம், சஃபா மாலா குன்றுகளிடையே ஏழுமுறை எபஈ செய்வதும் இடம் பெறும்.
8. இஹ்ராம் இதன் நேரடி சொல் கருத்து 'பரிசுத்தமடைவது தூய்மைக்குட்படுவது' என்பதாகும். நபி (ஸல்) அவர்களின் சுன்னாஹ்வின்படி குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த உடையணிந்து, சில செயல்களிலிருந்து ஒதுங்கியிருத்தலையே இச் செயல் குறிக்கும். இது நபி (ஸல்) அவர்களால் கூறப்பட்ட 'மவாகீத்' எனும் இடங்களில் செயலுக்குக் கொண்டுவரப்படுகின்றது.
9. ஸஹீஹுல் புகாரி (அரபு - ஆங்கிலம்) Vol 1. பக் 182-3, ஹதீஸ் எண் 302.
10. ஸஹீஹுல் புகாரி (அரபு - ஆங்கிலம்) Vol 3, பக் 9. ஹதீஸ் எண் 15
என்பதில் ஐயமில்லை. இஸ்லாமிய சட்டங்கள், இறை வழிபாடு தொடர்பான பல்வேறு அம்சங்களில் அந்த அளவுக்கு முக்கியத்துவமிக்கதாய் ஆதிக்கம் செலுத்துவதே அதற்குக் காரணமாகும். மாதவிடாய், அதற்கான விளக்கங்கள், சட்டங்கள் ஆகியவற்றைச் சார்ந்திருப்பது தொழுகை, நோன்பு, விவாகம், விவாகரத்து, வாரிசுச் சொத்து போன்றவை அவற்றிற்குரிய இஸ்லாமியச் சட்டங்களைச் சார்ந்து நிற்பது போன்ற தன்மைக்குச் சமமானதேயாகும்.
அல்லாஹ்வும் அவன் தூதர் (எஸல்) அவர்களும் கீழ்க்காண்பவைப் பற்றி இவ்வாறு விளக்கம் தந்துள்ளதை நாம் அறிவோம்.
* தொழுகை.
இதற்கான எண்ணிக்கை, நேரம், ருகூஉ, சுஜூத் என்பன.
* ஸகாத் " இதற்கான செல்வம், சொத்து வகைகள்; நிஸாப்' எனும் அளவு, இதனைப் பெறுவோர் என்பன.
* நோன்பு இதற்குரிய காலமும், ஒரு நாளின் குறிப்பிட்ட (நோன்பு நோற்க வேண்டிய) நேரமும் பற்றியன.
ஹஜ்
இதன் கடமைகளும் விதிகளும் பற்றியன.
* அன்றாட வாழ்விலான உண்ணல், பருகல், உறங்குதல், மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல், அமருதல், வீட்டிற்குள் பிரவேசித்தல், வெளியே செல்லுதல், மலசலம் கழித்தல், இஸ்திஜ்மார்'' செய்வதில் எத்தனைக் கற்கள் பயன்படுத்துதல் ஆகியன.
இவ்வாறு, வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் செய்ய வேண்டிய அற்ப விடயத்திலிருந்து ஆகப் பெரிய விடயம் வரை, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை, அல்லாஹ் தன் மார்க்கத்தின் மூலம் பூரணமாகத் தெளிவுபடுத்தி தனது விசுவாசிகளுக்கு அருள் புரிந்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்
و ومركن عليك الكتاب بياناً لكل شيء ( النحل، الآية ٨٩)
"(நபியே!) உமக்கு இவ்வேதத்தை நாம் இறக்கியருளியுள்ளோம். இது யாவற்றையும் மிகத் தெளிவாக விவரிக்கக் கூடியதாய் இருக்கின்றது."
(அல் குர்ஆன் 16:89)
و ما kan حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء) ( يوسف، الآية ١١١)
11. ஸகாத் இஸ்லாம் வகுத்துள்ள சட்ட திட்டங்களுக்கமைய வசதி படைத்த முஸ்லிம்களிடமிருந்து திரட்டி எடுத்து வசதியற்றோருக்கு வழங்கும் குறிப்பிட்டதொரு தாமம் இஸ்லாம் வகுத்துள்ள கட்டாயக் கடமைகளுள் இதுவும் ஒன்று
12 நிஸாப் இது ஒரு வருட இறுதியில் ஒரு முஸ்லிம் தன்னிடம் கொண்டுள்ள ஆகக் குறைந்த அளவு சொத்தைக் குறிக்கும் ஒருவர் இவ்வாறு வைத்துள்ள சொத்தின் வகை, அளவு என்பவற்றிற்கமையவே ஸகாத் எனும் வரி நிர்ணயிக்கப்படும் பணத்தைப் பொறுத்தவரையில் ஒருவரின் வருடாந்த நிகர இருப்பிலிருந்து 2.5% ஸகாத் பெறப்படும்.
13. இஸ்திஜ்மார் ஒருவரின் மறைவான பகுதிகளை ஒற்றை எண்ணிக்கை கொண்ட கற்களால் சுத்தப்படுத்துவதைக்(மூன்று கற்களை விடக் குறைவில்லாமல்) குறிக்கும் நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் "யாரேனும் தமது மறைவான பகுதிகளைக் கற்களைக் கொண்டு சுத்தம் செய்வாராகில், ஒற்றை எண்ணிக்கை கற்களைக் கொண்டு சுத்தம் செய்யட்டும் " (ஸஹீஹுல் புகாரி, அரபு-ஆங்கிலம்
"(குர்ஆனில் விவரித்துக் கூறப்படுகின்ற) இச்செய்திகள் புனைந்துரைக்கப் பட்டவை அல்ல. மாறாக, (குர்ஆன் ஆகிய) இது தனக்கு முன் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பிக்கக் கூடியதாகவும், ஒவ்வொன்றையும் விவரிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது."
(அல் குர்ஆன் 12:111)
இருந்தும், (மாதவிடாய்த் தொடர்பான சட்ட அறிஞர்களின்) மதிப்பீடுகள் பற்றி அல்லாஹ்வின் அருள் மறையிலோ, நபி (ஸல்) அவர்களுடைய சுன்னாஹ்விலோ எதுவும் கூறப்பட வில்லை. எனவே, ஒருவர் அவற்றைக் கருத்தில் கொள்ளாது ஒதுக்கிவிட முடியும் என்பது தெளிவாகின்றது. உண்மையில், (மேலே நிரூபித்துக் காட்டியமைக்கமைய) இது பற்றிய தீர்மானங்கள் எடுப்பது மாதவிடாய் இரத்தம் வெளிவந்துள்ளது அல்லது வெளிவரவில்லை என்பதைப் பொறுத்தே அமைய வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாகக் கருத்துப் பரிமாற்றம் செய்யும் பொழுது ஒரு முக்கியமான அம்சத்தை நாம் மறந்து விடக்கூடாது. அதாவது, அல்லாஹ்வின் அருள்மறையாம் அல் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் சுன்னாஹ், நன்றாக அறிந்த இஜ்மாஉ' அல்லது தெளிவான கியாஸ் 5 ஆகியவற்றுள் ஒன்றின் தெளிவான ஆதாரமின்றி இது பற்றிய இஸ்லாமியத் தீர்மானமொன்றை அங்கீகரிக்க முடியாது.
செய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தமது சட்டவரைவொன்றில் இவ்வாறு கூறுகின்றார்.
'..அதோடு இது போன்ற: மாதவிடாயைப் பொறுத்து, அல்லாஹ் பல கட்டளைகளை தனது வேத நூலிலும் சுன்னாஹ்விலும் கூறியுள்ளான். ஆயினும், அது பற்றிய குறுகிய கால, நீண்ட கால எல்லைகளை வகுத்து எமக்கவன் தரவில்லை. மேலும், இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயம் மிக அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் கூட, அவன், ஒரு பெண் இரண்டு மாதவிடாய்களுக்கு இடையில் எவ்வளவு காலம் சுத்தமாய் இருப்பாள் என வரையறுத்துக் கூறவில்லை. மொழிவாரியாகக் கூட 'ஹயிளு' (மாதவிடாய்) என்பது ஒரு மதிப்பீடையோ வேரேதும் விளக்கத்தையோ குறித்துக் காட்டவில்லை.
எனவே, யாரேனும் ஒருவர் மாதவிடாய் தொடர்பாக குறித்த கால எல்லையொன்றை வகுக்க முனைவாராகில் அவரோஃஅவளோ குர்ஆனுக்கும் சுன்னாஹ்வுக்கும் இணக்கமற்ற நிலையொன்றைக் கொண்டுள்ளார் என்பது தெளிவாகின்றது!"
ஆதாரம் - 4:
கியாஸ்: அல்லாஹ் மாதவிடாயை வேதனை மிக்கதும், தூய்மையற்றதுமென கூறியுள்ளான். எனவேதான், அது ஒரு பெண்ணுக்கு உண்டாகி இருக்கும்போது உடலுறவு கொள்ளக்கூடாது என கூறப்படுகின்றது. மாதவிடாய் உண்டாகியுள்ள வேளையில் சுத்தமற்றத் தன்மையும் இருக்கின்றது என்பது நாமறிந்த விஷயம். இதில் இரண்டாம் முதலாம் நாட்களுக்கிடையில், நான்காம் மூன்றாம் நாட்களுக்கிடையில், பதினாராம் பதினைந்தாம் நாட்களுக்கிடையில், பதினெட்டாம் பதினேழாம் நாட்களுக்கிடையில் என எத்தகைய வேறுபாடும் வித்தியாசமுமில்லை. ஏனெனில், மாதவிடாய், 'மாதவிடாய்' என்ற நிலையில் வேதனைத் தருவதாகவும், தூய்மையற்றதாகவும் இருக்கிறது. இது மாதவிடாய் உள்ள எல்லா நாட்களிலும் சமமாகவே காணப்படும் நிலையாகும்.
எனவே, மாதவிடாய் தொடர்பான நடைமுறை காரணிகளைக் கொண்டு இரண்டு நாட்களுக்கும் உரியதான சட்ட முடிவு இருக்கும் பொழுது ஒரு நாளுக்கு ஒன்று என்ற வகையில் அமையப்பெறும் வெவ்வேறான சட்ட முடிவுகளை எவ்வாறு அங்கீகரிக்க முடியும்? இது தூய கியாஸுக்கு எதிரானதாகும். இரண்டு நாட்களுக்கும் சமமாக சட்ட முடிவுகளைப் பயன்படுத்துவது என்ற ரீதியில் சிந்திப்பது தூய கியாஸ் எனக் கொள்ள முடியாதா? ஏனெனில், அந்தச் சட்ட முடிவுகளை சமமாக கொண்டு வருவதற்கான காரணிகள் அவ்விரண்டு நாட்களிலும் தங்கியுள்ளன.
ஆதாரம் - 5:
மாதவிடாய்க்கான குறிப்பிட்ட கால எல்லையை வகுத்துக் கூறுவோரது உடன்பாடில்லாத, சிக்கலான கூற்றுக்களுக்கு ஆதாரங்கள் தரப்படவில்லை. இவை இஜ்திஹாத்'"மூலமே கொண்டு வரப்பட்டன. இவை பிழையாகவோ சரியாகவோ இருக்க முடியும். இவற்றுள் ஒரு கருத்து மற்றொரு கருத்தை விட மிகைத்து நிற்கவில்லை. இத்தகைய பிரச்சினைக்குரிய விடயங்களில் குர்ஆனையும் சுன்னாஹ்வையும் அணுக வேண்டியது அவசியமாகும்.
இப்பொழுது இது விடயம் நன்கு தெளிவாகி இருக்கும். அதாவது, மாதவிடாயைப் பொறுத்த வரையில் உள்ள உறுதியான தீர்மானம் என்னவெனில், குறுகிய அல்லது நீண்ட கால வரையறை எதுவும் அதற்கு இல்லை என்பதாகும். மாறாக, (காயம் அல்லது அது போன்ற ஒன்றிலிருந்தன்றி) பெண்கள் இயற்கையாக இரத்தம் வெளிவரக் கண்டால் அதை மாதவிடாய் என்றே கருத வேண்டும் இது தொடர்பாகக் கால வரையறைகள் சார்ந்த மதிப்பீடுகளையோ வயதெல்லையையோ கருத்திற் கொள்ளக் கூடாது. ஆனால், இரத்தம் வெளிவருவது நிற்கவில்லையாயின் அல்லது ஒரு மாதத்திற்கு இரண்டொரு நாட்கள் வெளிவந்து நின்றுவிடுமாயின் அப்பொழுது அந் நிலைக்கு ஆளாகும் பெண் இஸ்திஹாதாஹ் என்ற நிலையில் இருப்பதாகக் கருதப் படுவாள்.
சைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அடிப்படையில், இஸ்திஹாதாஹ் எனத் தீர்மானிப்பதற்குச் சாதகமான ஆதாரம் எதுவும் கிடைக்காதபட்சத்தில், கருப்பையிலிருந்து வெளிவரும் அனைத்தும் மாதவிடாய் சார்ந்தனவாகும்."
அவர் மேலும் கூறினார்.
''(ஒரு பெண்ணிடமிருந்து) வெளிவரும் இரத்தம் ஒரு காயத்திலிருந்தோ, ஓர் இரத்த நாலத்திலிருந்தோ வெளிவருகின்றது என அறிந்து கொண்டாலன்றி அதனை மாதவிடாய் இரத்தம் என்றே கொள்ள வேண்டும்."
இக்கூற்றுக்கள் ஒரு பலமான கருத்தைக் கொண்டுள்ளன என்பது மட்டுமல்ல, விளங்கி, கருத்தில் கொண்டு, இலகுவாக செயல்படுத்தவும் கூடியதாகவுள்ளன. மேலும், இக்கருத்தை மற்ற எல்லாக் கருத்துக்களையும் விட மேலான நிலையில் வைத்து அங்கீகரிக்கவும் முடியும். ஏனெனில், நிவாரணமிக்க, இலகுவாகப் பின்பற்ற முடிந்த இஸ்லாத்தின் உயிரோட்டத்திற்கும் ஓட்டு மொத்தக் கருத்திற்கும் இது இணக்கமானதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
அவர்
"அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில்-வாழ்க்கை நெறியில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை."
(அல் குர்ஆன் 22:78)
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் :
"நிச்சயமாக, இந்தத் தீன் (வாழ்க்கை நெறி) (பின்பற்றுவதற்கு) மிக இலகுவானது. யாரேனும் தமது தீனைப் பின்பற்றுவதில் தமக்கு அதிகச் சுமையை ஏற்றிக் கொள்கிறாரோ, அவர் அவ்வாறே அதனை தொடர்ந்து பின்பற்ற முடியாது, எனவே, நீங்கள் தீவிரவாதிகளாகி விடாதீர்கள். (மிகச் சரியான) நிறைவானதை அண்மித்து வர முயற்சியுங்கள்; உங்களுக்கு வெகுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறும் நற்செய்திகளை நாடிப் பெறுங்கள்."17
இவ்வாறு நவின்ற நபி (ஸல்) அவர்கள், எப்பொழுதாயினும், ஏதாவது இரண்டு விடயங்களுள்
ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய நிலைக்குட்பட்டால், அதுவொரு தவறான விடயமாக இல்லாவிடத்து, மிக இலகுவானதையே தெரிவு செய்வார்கள்.
Comments
Post a Comment
Best comment is welcomed !