குஸ்ல் (குளிப்பு) கட்டாயமாதல்
மாதவிடாய் உண்டான ஒரு பெண் அதன் இறுதி கட்டத்தில் (அதாவது மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்) குளிப்பது ஒரு கட்டாய கடமையாகும். இது பற்றி (அபூ ஹுபைஸின் மகள்) ஃபாத்திமாவுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு மொழிந்தார்கள்
"உங்களுடைய மாதவிடாய் ஆரம்பமானால், தொழுகையை விடுங்கள் (தொழ வேண்டாம்) அது
(மாதவிடாய்) முடிவுற்றதும் உங்கள் உடலில் உள்ள இரத்தத்தை நன்றாகக் கழுவி (முழுமையான குளிப்பை மேற்கொள்வதன் மூலம் சுத்தமாகி) விடுங்கள்| பின்னர் தொழுகையை ஆரம்பியுங்கள்."45
குளிப்பைப் பொறுத்த வரையிலான குறைந்தபட்ச கடமை என்னவெனில் தலையின் மேற்பகுதி உட்பட உடலின் எல்லாப் பகுதிகளையும் நன்கு கழுவி விடுவதாகும். இக்குளிப்பை நிறைவேற்றவுள்ள சிறப்பான முன்மாதிரி நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும்.
ஸக்ல் என்பவரின் மகள் அஸ்மா கட்டாயக் குளிப்பு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவிய போது கீழ்க்கண்டவாறு அவர்கள் பதில் அளித்தார்கள் என ஹதீஸ்களில் காணப்படுகின்றது.
ஒரு ஹதீஸ் இவ்வாறு உள்ளது :
"உங்களில் ஒவ்வொருவரும் எஸித்ர் மரத்தின் (இலைகள் கலந்த) நீரைப் பயன்படுத்தி நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும் பின்னர், அவள் தனது தலையில் நீரை ஊற்றி (தலை) மயிரின் வேரை (அந்த நீர்) சென்றடையும் வரை நன்றாகத் தேய்க்க வேண்டும் பின்னர், அவள் நீரை அதன் (தலையின்) மீது ஊற்றிக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு கஸ்தூரி கலந்த பருத்தித் துணித் துண்டொன்றை எடுத்து அதன் மூலம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். அப்பொழுது "அதைக் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்வது ? என அஸ்மா கேட்டதும், நபி (ஸல்) அவர்கள்: "சுப்ஹானல்லாஹ்" என்று அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள் இரத்த அடையாளங்கள் நீங்கும் வரை சுத்தம் செய்யுங்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். 46
மாதவிடாய் உண்டான ஒரு பெண் தனது தலை முடியின் அடிப்பாகம் வரை நீர் செல்வதைத் தடுக்கும் வகையில் முடியை நெருக்கமாக பின்னிவிடாத வரையில், கட்டாயக் குளிப்புக்குப் போகும்போது முடியை அவிழ்த்து விடுவது கடமையில்லை.
உம்மு ஸலாமாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள் :
"நான் தலை முடியை நெருக்கமாக பின்னிவிட்ட ஒரு பெண் எனவே, உடலுறவு கொள்வதனால் (அல்லது மற்றோர் அறிவிப்பின் படி மாதவிடாய் உண்டானால்) குளிப்பதற்காக, பின்னிவிடப்பட்ட தலைமுடியை அவிழ்த்து விட வேண்டுமா?" என்று. "இல்லை, நீங்கள் மூன்று முறை கை நிறைய நீரை எடுத்து உங்கள் தலையில் ஊற்றிக் கொண்டால் போதுமானது. பின்னர், உங்கள் மீது நீரை ஊற்றுங்கள். இவ்வாறு (செய்வதன் மூலம்) நீங்கள் சுத்தம் அடைவீர்கள் 147 நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
மாதவிடாய் உண்டான ஒரு பெண் குறிப்பிட்ட தொரு தொழுகைக்குரிய வேளையில் சுத்தமடைவாளாயின், உடனே கட்டாயக் குளிப்பை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு குளித்தால் தொழுகையை தாமதப்படுத்தாது அதற்குரிய வேளையில் நிறைவேற்ற முடியும். சிலவேளை, அவள் பிரயாணத்தில் இருக்கின்றாள்; நீர் கிடைக்கவில்லை. அல்லது நீரிருந்தும் அதைப் பயன்படுத்தினால் அவளுக்குத் தீங்கு (நோய் அல்லது வேரேதும்) ஏற்படும் என்ற அச்சம் இருக்குமாயின், அவள் 'தயம்மும்*48 செய்யலாம். அவள் நீரைப் பயன்படுத்தத் தடையாயுள்ள நிலை நீங்கும் வரை அப்படிச் செய்யலாம். பின்னர் அவள் குளிக்க முடியும்.
குறித்ததொரு தொழுகை வேளையில் சுத்தமாகிவிடும் சில பெண்கள் இருக்கின்றனர். அவர்கள் குளிப்பதைப் பிற்படுத்துகின்றவர்களாவார்கள் அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், 'குறித்த தொழுகைக்குரிய காலத்தினுள் தம்மை சுத்தப்படுத்திக் கொள்வது சாத்தியமில்லை' என்பதாகும். இது கடமையை தட்டிக் கழிக்கும் கூற்றாகும். ஏனெனில், அவர்கள் தம்மை சுத்தமாக்கி விடும் கட்டாயக் குளிப்பு சார்ந்த கண்டிப்பான கடமைகளை ஒழுங்குற நிறைவேற்றவும், குறித்த தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றவும் போதிய அவகாசம் இருக்கின்றது. பின்னர் அவர்களுக்கு வாய்ப்பும் வசதியும் கிட்டும்போது முழு அளவிலான குளிப்பை மேற்கொள்ள முடியும்.
Comments
Post a Comment
Best comment is welcomed !