கருத்தரித்த பெண்ணின் மாதவிடாய்!
அனேகமாக பெண்கள் கருத்தரித்துவிட்டால் அவர்களது மாதவிடாய் நின்றுவிடுகின்றது. இமாம் அஹ்மத்""(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பெண்களின் மாதவிடாய் நின்றுவிட்டால் அவர்கள் கருத்தரித்துள்ளனர் என அறிந்துகொள்ள முடியும்!" என்று ஒரு கருவுற்ற பெண் பிரசவத்திற்கு சற்று (இரண்டு மூன்று நாட்களுக்கு) முன்னர் இறுகிப்பிடிக்கும் (பிரசவ) வேதனையுடன் இரத்தம் வெளிவரக் கண்டால் அது 'நிஃபாஸ்' என்றே கருத வேண்டும். சில வேளை, அவள் தனது பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது பிரசவத்திற்கு சற்று முன்போ எத்தகைய பிரசவ வேதனையுமின்றி இரத்தம் வெளிவரக் கண்டால், அது 'நிஃபாஸ்' அல்ல.
(இறுதியாகக் கூறப்படும் இந்நிலை நிஃபாஸ் அல்ல எனில்) இதனை மாதவிடாய் என கணிக்க முடியுமா? இது தொடர்பாக மாதவிடாய்க்கான எல்லாச் சட்டங்களையும் பிரயோகிக்க முடியுமா? முடியாதா? என்பன போன்ற கேள்விகள் எழக் காணலாம். இது விடயமாக அறிஞர்களிடையே கருத்து முரண்பாடு இருக்கின்றது. எவ்வாறாயினும், இதற்கான மிகச் சரியான கருத்து என்னவெனில் இது மாதவிடாய் இரத்தம் என்பதாகும். இதற்கான காரணம் இது தொடர்பான பொதுவான நெறிமுறையில் தங்கியிருக்கின்றது. அதாவது, ஒரு பெண் தன்னில் காணும் இரத்தம் மாதவிடாய் சார்ந்தது என்ற கணிப்பை மாற்றக் கூடிய காரணிகள் இல்லாத வரையில் அது மாதவிடாய் இரத்தமேயாகும். கர்ப்பிணியான ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் உண்டாகாது எனச் சுட்டிக்காட்டும் எதுவும் அல்லாஹ் அருளிய அல்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களுடைய சுன்னாஹ்விலும் இல்லை
19 20 இதுதான் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடையவும் இமாம் சாபிஈ (ரஹ்) அவர்களுடையவும்
12. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (கி.பி 778-855) அவர்கள், அவர் வாழ்ந்த காலத்தில் ஹதீஸ்களை மனனமிடுவதிலும், அறிவிப்பதிலும் சிறந்து விளங்கிய ஒருவராவார் அவர்கள் ஹதீஸ்களை சேகரித்தல், அவற்றை அறிவித்தல், அவற்றிற்கு விளக்கமளித்தல் என்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள் குர்ஆனையும் ஹதீஸையும் விளங்குவதில் ஒருவகையானத் தத்துவப் போக்கு கொள்கை உருவானபோது, அவர் அதற்கெதிரான போக்கைக் கடைப்பிடித்ததால் பல தொடரான தொல்லைகளுக்கு ஆளாக நேர்ந்தது. அவருடைய சட்ட முறையான சிந்தனைப் போக்கு -குர்ஆன், சுன்னாஹ், ஸஹாபாக்களின் ஏகோபித்த கருத்து என்பவற்றை ஆதாரமாகக் கொண்டவைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் அமையப் பெற்றதே.
19. இமாம் மாலிக் இப்னு அனஸ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் (கி.பி.717-801) மதீனாவில் பிறந்தவர்கள் அவருடைய பாட்டனார் ஆமிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறப்பான தோழர்களுள் ஒருவராவார்கள். இமாம் மாலிக் அவர்கள் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மதீனாவில் ஹதீஸ்கள் கற்றுக் கொடுப்பவராகத் திகழ்ந்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள், ஸஹாபாத் தோழர்களின் கூற்றுக்கள், அவர்களைத் துயர்ந்தோர் கூற்றுக்கள் என்பன அடங்கிய நூவொன்றைத் தொகுத்தளித்தார்; அதன் பெயர் 'அல் முலத்தா' என்பதாகும். இந் நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந் நூலுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இங்கிலாந்திலுள்ள ஒரு ஸூஃபி இதற்கொரு அறிமுகம் எழுதியுள்ளார். மாயைமிக்க ஸுஃபிஸத்திற்கு இஸ்லாத்துடன் எதுவித உறவும் இல்லை இந்த ஸுஃபித்துவக் குழுவைச் சார்ந்தோர் 'தமக்கு அவ்லாஹ்விடமிருந்து நேரடியாகவே 'கஸ்ஃப்' எனும் அறிவிப்பு வருவதாக வாதிடுவர் 'அவர்களால் இப் பிரபஞ்சத்தையே ஆட்டிப் படைக்க முடியும்' 'அல்லாஹ்வின் ஒருமை என்பதன் பொருள் அவன் அனைத்துப் பொருட்களிலும் வியாபித்து நிற்கின்றான்' என்பதுதான், என்றும் வாதிடுவர் நிச்சயமாக, கண்ணியமிக்க அல்லாஹ் அளஸில் இருந்து அனைத்தையும் பார்ப்பவன்; அறிபவன்; சூழ்ந்து இருப்பவன். அன்றி, கிறிஸ்தவர்களும் மற்றைய குழுக்களும் வாதிடுவது போல் அல்லாஹ் தனது படைப்புக்களில் இரண்டரக் கலந்து நிற்கின்றான்!' என்பதில்லை அல்லாஹ்வின் பண்புகள் யாவுமே தனித்தன்மையுடையன பரிபூரணத்துவமுடையன; அவனுடைய படைப்புக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டனவாகும்.
ليس كمثله شيء وهو السميع البصير ) و الشورى ، الآية 11) "(உலகத்தின்) எந்தப் பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை, அவன் அனைத்தையும் செவியறுபவனும் பார்ப்பவனும் ஆவான்
(அல் குர்ஆன் 42:11)
20. இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஸ்ஸாஃபிஈ (ரஹ்) (கி.பி. 769-820) அவர்கள் காஸ்ஸாவில் பிறந்து, தனது இளவயதில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் மார்க்கக் கல்வி பெற மதீனாவுக்குச் சென்றார்கள். இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் பிரபலமிக்க கருத்தாகும்;இதுவே சைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்)அவர்களது தெரிவாகும்; இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களும் இதனையே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
எனவே,கீழ்க்காணும் இரு நிலைகளிலன்றி, கருவுற்ற ஒரு பெண்ணின் மாதவிடாய்க்கு, சாதாரண (ஒரு பெண்ணின்) மாதவிடாய்க்கும் பொருந்தும் எல்லாச் சட்டங்களும் பொருந்துவனவாய் அமையும்.
அ) விவாகரத்து: கருவுறாத ஒரு பெண்ணை அவளது இத்தா ' வின் போதுதான் விவாகரத்து செய்ய வேண்டுமே (அவளது கணவன் அவளுடன் உடலுறவு கொள்வது, அவள் கருவற்று இருப்பது போன்றவற்றிலிருந்து தூய்மையாகி இருந்தாலே) தவிர அவள் மாதவிடாய் உண்டாகி இருக்கும் போது விவாகரத்து செய்வது கூடாது என்பது நாம் அறிந்ததே. இஸ்லாத்தின்படி அது சட்ட முரணானதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
إِذا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلَقُوهُنَّ لِعِدَّتِهِنَّ ) [ الطلاق، الآية 1]
"நீங்கள் பெண்களை விவாகரத்து செய்வீர்களாயின் அவர்களின் இத்தா (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக விவாகரத்து செய்யுங்கள்."
(அல் குர்ஆன் 65:1)
கருவுற்ற ஒரு பெண்ணின் இத்தா காலம் அவள் கருவுற்றுள்ள காலம் முழுவதுமாகும்: அப்பொழுது அவளுக்கு மாதவிடாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரியே இதில் மாற்றமில்லை. எனவே, அவளது விவாகரத்து அந்த கருவுற்றுள்ள காலத்தின் முடிவினை சார்ந்து நிற்கின்றது. இதில் அவளது மாதவிடாய்க்கு எதுவித சம்பந்தமும் இல்லை.
ஆ) அல்லாஹ்வின் கூற்றுக்கேற்ப கருவுற்ற பெண்ணின் இத்தா அவளுடைய பிரசவத்துடன் முடிவடைகின்றது. அக்கால எல்லையில் அவளுக்கு மாதவிடாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுவே சட்டமாகும்.
அல்லாஹ் கூறுவது இதுதான்.
وأولات الأحمال أجَلَهُنَّ أن يَضَعْنَ حَمَلَهُنَّ ) [ الطلاق ، الآية (٤)
"மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன் முடிகின்றது."
(அல் குர்ஆன் 65:4)
மாணவரான ஈராக்கைச் சேர்ந்த இமாம் முஹம்மத் இப்னு அல் ஹஸன் அவர்களிடமும் கல்வி கற்றவர். இமாம் ஸாஃபி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய ஃபிக்ஹு சட்டங்களின் அடிப்படை அம்சங்களை சீரமைத்து ஒழுங்குபடுத்துவதில் ஈடுபாடு கொண்ட முதல் இமாம் என்ற சிறப்பைப் பெற்றுத் திகழ்கின்றார்.
21. இத்தா (குறித்துத் தரப்பட்ட காலம்) இத்தாவுக்குரிய வரைவிலக்கணத்தை ஒரு ஹதீஸின் மூலம் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
அந்த ஹதீஸ் வருமாறு
'தமி (ஸல்) அவர்கள் வாழ்ந்து வந்த வேளையில், அப்துல்லாஹ் பின் உமன் (ரலி) அவர்கள், மாதவிடாய் உண்டாகி இருந்த தனது மனையியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவிக்கின்றார் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறுகின்றார். அப்பொழுது
தபி (ஸல்) அவர்கள், "அவருக்கு (உங்கள் மகனுக்கு)க் கட்டளையிடுங்கள். அவளைத் திரும்ப எடுத்து, அவன் சுத்தமாகும் வரை வைத்திருக்க வேண்டும்.பின்னர் அடுத்த மாதவிடாய் உண்டாகி சுத்தமாகும்வரை காத்திருக்கும்படி கூறுங்கள் அதன் பின்னர், அவர் அவளைத் தன்னுடன்
வைத்துக்கொள்ள விரும்பினால், அவ்வாறு செய்து கொள்ளலாம். சிலவேளை அவர் அவளை விவாகரத்து செய்ய விரும்பினால் அவளுடன் உடலுறவு
கொள்வதற்கு முன்னர் விவாகரத்து செய்யலாம் இதுதான் ஒரு பெண்ணை விவாகரத்து செய்வதற்கு அல்லாஹ் விதித்துள்ள கால வரையறையாகும்."
எஸஹீஹ் புகாரி (ஆங்கிலம் -அரபி)Vol: 7. பக் 129, ஹதீஸ் எண் 179
Comments
Post a Comment
Best comment is welcomed !