மாதவிடாய் சம்பந்தமான சட்டங்கள்!


 மாதவிடாய் சம்பந்தமான சட்டங்கள்!


மாதவிடாய் சம்பந்தமாக ஏராளமான சட்டங்கள் இருக்கின்றன. இங்கு மிக அவசியமானவற்றை மட்டும் எடுத்துக் கூறுவது போதுமானது எனக் கருதுகின்றோம்.


1- அஸ்ஸலாத் (தொழுகை)


பெண்களுக்கு மாதவிடாய் உண்டாகி இருக்கும்போது பர்ளான சுன்னத்தான எந்தத் தொழுகையும் தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு தொழுகைக்குரிய நேரத்தில், அத்தொழுகையின் பூரணமான ஒரு ரக்அத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தாலன்றி, அத்தொழுகையை நிறைவேற்றும் கட்டாயமோ கடமையோ ஒரு பெண்ணுக்கு இல்லை. இதை இன்னும் விரிவாகக் காண்பதற்கு கீழ்க் காணும் உதாரணங்களை நோக்குங்கள்.


முதலாவது உதாரணம் : ஒரு பெண்ணுக்கு சூரியன் மறைந்த பின்னர் மாதவிடாய் உண்டாகின்றது.


அவ்வேளையில் மஃரிப் தொழுகையின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக் கொள்ளும் அளவு காலம் அவள் சுத்தமாக இருந்துள்ளாள். இதன் காரணமாக, அவள் பூரணச் சுத்தம் அடைந்தபின் அந்த மஃரிப் தொழுகையை பூரணமாக நிறைவேற்ற வேண்டும்.


இரண்டாவது உதாரணம் : ஒரு பெண்ணுக்கு சூரியன் உதயமாகுமுன்னர் மாதவிடாய் நின்று


விடுகின்றது. அவ்வேளையில் ஃபஜ்ர் தொழுகையின் ஒரு ரக்அத் மாத்திரம் தொழுவதற்குரிய காலம் உண்டு. எனவே, அவள் தன்னைப் பூரணமாகச் சுத்தப்படுத்திக் கொண்ட பின்னர் ஃபஜ்ர் தொழுகையைப் பூரணமாக நிறைவேற்ற வேண்டும்.


இந்த இரண்டு உதாரணங்களிலும் காணப்படும் யதார்த்தம் என்னவெனில், அவளுக்கு தொழுகையின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றுவதற்குக்கூட காலம் போதவில்லை என்றால், அவள் மீது அத் தொழுகையை நிறைவேற்றும் கட்டாயம் இல்லை என்பதாகும்.


நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:


"ஒரு தொழுகையின் ஒரு ரக்அத்தை (அத்தொழுகைக்குரிய சரியான நேரத்தில்) எவர் பெற்றுக் கொள்கின்றாரோ அவர் தொழுகையைப் பெற்றுக் கொண்டவர் ஆவார்."""இந்த ஹதீஸ், ஒரு தொழுகையின் ஒரு ரக்அத்தை அதற்குரிய சரியான நேரத்தில் எவர் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் தொழுகையைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்குப் பொருந்துகின்றது.


ஓர் அணுகல் :


சிலவேளை, ஒரு பெண் அஷர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அத்தொழுகைக்குரிய சரியான நேரத்தில் பெற்றுக் கொள்ள முடிகின்றது. அப்பொழுது அவள் லுஹர் தொழுகையை அஷர் தொழுகையுடன் தொழும் கட்டாயத்திற்கு உட்படுகின்றாளா? அல்லது ஒரு பெண் இஷா தொழுகையின் ஒரு ரக்அத்தை அத் தொழுகைக்குரிய சரியான நேரத்தில் பெற்றுக் கொள்ள முடிந்தால், அப்பொழுது அவள் மஃரிப் தொழுகையை இஷா தொழுகையுடன் தொழும் கட்டாயத்திற்கு உட்படுகின்றாளா?


இந்த விடயங்கள் தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் சர்ச்சை இருக்கின்றது. இது தொடர்பான சரியான நிலைப்பாடு என்னவெனில், அவள் எந்தக் குறிப்பிட்டத் தொழுகையைப் பெற்றுக்கொள்ள முடிந்ததோ அதை மட்டும் நிறைவேற்ற வேண்டும். உதாரணமாக அஸர் தொழுகையையும் இஷா தொழுகையையும் மட்டும் நிறைவேற்ற வேண்டும். இது நபி (ஸல்) அவர்களது ஹதீஸ் ஒன்றை அடித்தளமாகக் கொண்டுள்ள கருத்தாகும்.


அவர்கள் மொழிந்தார்கள்:


"சூரியன் மறைவதற்கு முன்னர் அஷர் தொழுகையின் ஒரு ரக்அத்தை எவர் பெற்றுக் கொள்கின்றாரோ, அப்பொழுது அவர் அஷர் தொழுகையைப் பெற்றவர் ஆவார். (இருவரும் ஒப்பியது)²" மாறாக. "அப்பொழுது அவர்/அவள் லுஹர் தெர்ழுகையையும் அஷர் தொழுகையையும் பெற்றுக் கொண்டார்!" என நபி (ஸல்) அவர்கள் மொழியவில்லை. மேலும் லுஹர் தொழுகையை நிறைவேற்றுவது கடமை என்றும் அவர்கள் மொழியவில்லை. இது இமாம் மாலிக் (ரஹ்), இமாம் அபூஹனிஃபா (ரஹ்) ஆகியவர்களது மத்ஹப்கள் கொண்ட நிலைப்பாடாகும்.


மற்றோர் அணுகல் :


ஒரு பெண் மாதவிடாயின்போது (தக்பீர், தஸ்பீஹ், தஹ்மீத் '8 என்பன மொழிந்து) அல்லாஹ்வைப் புகழ்வதோ.(உண்ணல், பருகல், போன்ற) செயல்களை ஆரம்பிக்கும் பொழுது 'பிஸ்மில்லாஹ்' மொழிவதோ, ஹதீஸ்கள் படிப்பது, இஸ்லாமிய கலந்துரையாடல்களில் ஈடுபடுவது, அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவது, குர்ஆன் ஓதக் கேட்பது போன்றவற்றைச் செய்வதோ இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானவையல்ல. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது ஒரு கூற்று இதற்காதாரமாகின்றது. அவர்கள் கூறினார்கள் "நான் மாதவிடாய் உண்டாகியிருந்த போது நபி (ஸல்) அவர்கள் என் மடியில் சாய்ந்திருந்து குர்ஆன் ஓதினார்கள்.29


(புஹாரி, முஸ்லிம்)


27. ஸஹீஹ் முஸ்லிம் (ஆங்கிலம் -அப்துல் ஹமீத் ஸித்தீக்கி மொழிபெயர்ப்பு, தாருல் அரபி, பெய்ரூத், லெபனான் வெளியீடு)


தொகுதி: 1. : 296, ໑໑: 1266.


28. தக்பீர் அல்லாஹு அக்பர் (அல்லாஹ்வே மிகப் பெரியவன்) என மொழிவது


தஸ்பீஹ் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகுந்த கண்ணியமிக்கவன்) என மொழிவது.


தஹ்மீத் அல்ஹம்துலில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) என மொழிவது


29. ஸஹீஹுல் புகாரி (அரபு - ஆங்கிலம்) Vol: 1. பக் 179. ஹதீஸ் எண்: 296.நபி (ஸல்) அவர்கள் நவின்றிடக் கேட்டதாக உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:


"எப்பொழுதும்போல் திரைக்குப் பின்னால் இருக்கும் மணமாகாத இளம் கன்னிகளும், நன்கு வளர்ந்த பெண்பிள்ளைகளும் அல்லது எப்பொழுதும்போல் திரைக்குப் பின்னால் இருக்கும் மணமாகாத இளம் கன்னிகளும், மாதவிடாய் உண்டான பெண்களும் வெளியே வந்து நற்காரியங்களில் பங்கெடுக்க வேண்டும்; அத்துடன் உண்மையான விசுவாசிகளின் மார்க்கக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், மாதவிடாய் உண்டான பெண்கள் முஸல்லாவை (தொழும் இடத்தை) விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்."30


இன்னுமோர் அணுகல் :


மாதவிடாய் உண்டான ஒரு பெண் தனது நாவால் உண்மையான சொல் வடிவில் ஓதாது நேரடியாகப் பார்த்தோ அல்லது (அவளது மனதால்) அமைதியாகவோ குர்ஆனை ஓதுவதற்கு அனுமதி உண்டு. அறிஞர்களுள் பெரும்பாலானோர் அவள் குர்ஆனை சப்தமிட்டு ஓதுவது தடை செய்யப் படவில்லை என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இமாம் புகாரி (ரஹ்), இப்னு ஜரீர் அத்தபரீ (ரஹ்), இப்னு அல் முந்திர் (ரஹ்). இமாம் மாலிக் (ரஹ்), இமாம் ஷாபிஈ (ரஹ்) (இவர் தனது முக்கிய கூற்றொன்றில்) ஆகியவர்கள், 'அவள் ஆயத்து (குர்ஆனிய வசனங்)கள் ஓதுவது அனுமதிக்கப்பட்டது' என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள்.


சைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். "அடிப்படையில் அவள் குர்ஆன் ஓதுவதை தடுக்கக்கூடிய சுன்னாஹ் எதுவும் இல்லை!" என்று, "மாதவிடாய் உண்டான ஒரு பெண்ணும், ஜனாபத்"துடன் இருக்கும் ஒருவரும் குர்ஆனிலுள்ள எதுவும் ஓதக்கூடாது." என்ற ஹதீஸ் பலமீனமானது. ஹதீஸ் கலை பற்றிய ஆழ்ந்த பாண்டித்தியம் உள்ளவர்கள் இதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளார்கள்.


உண்மையில், நபி (ஸல்) அவர்கள் காலத்து பெண்களுக்கும் மாதவிடாய் இருக்கவே செய்தது. (தொழுகை சம்பந்தமாக அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை போல) அவர்கள் குர்ஆன் ஓதுவது தடை செய்யப்பட்டிருந்தால், நபி (ஸல்) அவர்கள் தமது சமூகத்திற்கு அதை நன்கு தெளிவுபடுத்தியிருப்பார்கள். அவர்களது தூய மனைவியர் இதை அறிந்துவைத்து, மக்களுக்கு அறிவித்திருப்பார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் இதனைதடை செய்ததாக எவரும் அறிவிக்காத நிலையில், அன்றும் பெண்களுக்கு மாதவிடாய் இருந்த போது நபி (ஸல்) அவர்கள் இதைத் தடை செய்யாத நிலையில், இப்பொழுது தடை செய்வது சாத்தியமில்லை. எனவே, குர்ஆனை நாவினால் ஓதுவது ஹராம் (தடை செய்யப்பட்டது) அல்ல.32


30. இருவரும் ஒப்பியது. ஸஹீஹுல் புகாரி (அரபு-ஆங்கிலம்) Vol: 2, பக் 192, ஹதீஸ் எண்: 321


31 ஜனாபத்: ஆணோ பெண்ணோ உடலுறவு கொள்வதன் மூலம் அல்லது கனவு மூலம் விந்து வெளியான நிலையை இது குறிக்கும். இவ் வேளையில் கட்டாயக் குளிப்பை மேற்கொள்ளாமல் தொழுவதற்கோ மற்றும் வணக்கங்கள் தொடர்பான கடமைகள் செய்வதற்கோ முடியாது. தண்ணீரைக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தால் அப்பொழுது தயம்மம் செய்து கொண்டு வணக்க வழிபாடுகளைச் செய்யலாம்.


32. இமாம் இப்னு தைமிய்யாவின் அல் ஃபதாவா: Vol: 26. பக் 191.இந்நூலாசிரியர் கூறுகிறார்:


"இந்த விடயம் (மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆன் ஓதுவது) தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் சர்ச்சை இருப்பதால் மாதவிடாய் உண்டான ஒரு பெண், ஆசிரியையாகவோ, ஒரு பரீட்சைக்குத் தமது பாடங்களைத் தயார் பண்ணுபவளாகவோ இருக்கும் நிலை போன்ற தவிர்க்க முடியாத நிலைகளில் அன்றி, மற்றைய நிலைகளில் - வேளைகளில் குர்ஆனைத் தனது நாவினால் ஓதாமல் இருப்பதே மிகவும் நல்லது."

Comments