- விவாகரத்தின் இத்தாவும் மாதவிடாயுடனான தொடர்பும்

 


- விவாகரத்தின் இத்தாவும் மாதவிடாயுடனான தொடர்பும்


ஒரு கணவன் தனது மனைவியுடன் முதல் உடலுறவு கொண்டபின்னரோ, அல்லது, அவளுடன் தனிமையில் இருந்த பின்னரோ, அவன் அவளை விவாகரத்து செய்தால், அவள் இத்தாவாக மூன்று மாதவிடாய்களைப் பூரணமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். (அதன் மூலம் அவள் மாதவிடாயுடைய பெண்ணாவாலேயன்றி கர்ப்பிணியல்ல என்பது தெளிவாகும்.) இது அல்லாஹ்வின் கீழ்க் காணும் வசனத்துடன் இணக்கமானதாகும்.


அவன் கூறுகின்றான்:


‎‫والْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُروء [ البقرة، الآية ٢٢٨]‬‎


“தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை தாமாகவே பொறுத்திருக்க வேண்டும்."


(அல் குர்ஆன் 2:228)


சிலவேளை, அவள் கருத்தரித்திருந்தாள் அவளுடைய இத்தா பிள்ளைப் பிரசவம் வரைத் தொடரும். (அவள் குறை மாத அல்லது நிறை மாதக் கர்ப்பிணியாயினும் சரியே!)


இது தொடர்பாக அல்லாஹ் கூறுவதாவது


‎‫وأولات الأحمال أجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ ﴾ [ الطلاق، الآية ٤]‬‎"மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு (அவர்கள் விவாகரத்து செய்யப்பட்டோ அல்லது அவர்களது கணவர்கள் மரணித்திருந்தாலோ) அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன் முடிகின்றது."


(அல் குர்ஆன் 65:4)


சிலவேளை, பருவமடையாத பெண்களுக்குப் போல் அவளுக்கு ஏதேனும் (மாதவிடாய்) இல்லையாயின், அல்லது மாதவிடாய் உண்டாகும் வயதெல்லையைக் கடந்துவிட்டாளாயின், அல்லது அறுவை வைத்தியம், மூலம் அவளது கருப்பை அகற்றப்பட்டவளாயின், இத்தகைய இன்ன பிற கட்டங்களில் அவளுடைய இத்தா சரியாக மூன்று மாதங்களாகும். அல்லாஹ்வின் கூற்று இதற்காதாரமாகின்றது.


அவன் கூறுகின்றான் :




‎‫لَمْ يَحِضن ) [ الطلاق، الآية ٤]‬‎


"உங்கள் பெண்களில், எவர்கள் ‘இனி மாதவிலக்கு வராது' என்று நம்பிக்கையிழந்து விட்டிருக்கின்றார்களோ அவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், (நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களுடைய இத்தா காலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு வரவில்லையோ அவர்களுக்கான விதிமுறையும் இதுவே.


(அல் குர்ஆன் 65:4)


சிலவேளை, மாதவிடாய் உண்டாகும் ஒரு பெண் ஏதோ சில (நோய், குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்ற) காரணங்களால் மாதவிடாய் உண்டாகாது நிற்கக் காண்கின்றாள். அவள் தனது மாதவிடாய் மீண்டும் வரும் வரை (அது மிக நீண்ட காலமாயினும்) இத்தா இருக்க வேண்டும். அப்பொழுது அவள் இத்தாவின் காலத்தைக் கணக்கிட்டு வரவேண்டும். அவளுடைய அந்த நிலைக்கான காரணங்கள் நீங்கியும் மாதவிடாய் உண்டாகவில்லையாயின், அக்காரணங்கள் நீங்கிய காலத்திலிருந்து ஆரம்பமாகும் அவளது இத்தா பூரணமாக ஒரு வருடத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதுதான் இஸ்லாமிய சட்டத்திற்குப் பொருந்தும் மிகச் சரியான கருத்தாகும். இவளது நிலை, அறியாக் காரணங்கள் நிமித்தம் மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களின் நிலைக்கு ஒப்பானதாகும். இவளது இத்தாவின் காலம் ஒரு வருடமாகும். (பொதுவாக பிள்ளைப் பிரசவக் காலமாகக் கணிக்கப்படும்) ஒன்பது மாதமும், அவளது அசல் மாதவிடாய்க் காலத்திற்கான மூன்று மாதமும் இதிலடங்கும்.


ஒரு பெண்ணுக்கு விவாக ஒப்பந்தம் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால், அவளது கணவனுடன் அவள் தனித்திருக்கவில்லை; உடலுறவு கொள்ளவும் இல்லை. இந் நிலையில் அவர்களிடையே விவாகரத்து நிகழுமாயின், அப்பொழுது எத்தகைய இத்தாவும் அவள் அனுஷ்டிக்க வேண்டியது இல்லை.


* கணவன் மரணித்த போது, அவரது மனைவியின் நிலை இதிலிருந்து சற்று மாரானதே அல்லாஹ் இதுபற்றி இவ்வாறு கூறுகின்றான்


"உங்கள் எவரேனும் மனைவியரைவிட்டு மரணமடை த்துவிட்டால், அந்த அவருடைய மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள்


தாமாகக் காத்திருக்க வேண்டும்.


(அல் குர்ஆன் 2:234)அல்லாஹ் கூறுகின்றான் :


‎‫يا أيها الذين آمنوا إذا நகல் عليهِنَّ مِنْ عِدَّةٍ تَعتَدُونَهَا ﴾ [الأحزاب، ٤٩]‬‎


"விசுவாசிகளே! இறைவிசுவாசங் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து பின்னர் அவர்களைத் தொடுவதற்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டால், நிறைவேற்றுமாறு நீங்கள் கோரக்கூடிய வகையில் உங்களுக்காக அவர்கள் மீது 'இத்தா' எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்கு கொஞ்சம் பொருள்களைக் கொடுத்து நல்ல முறையில் அவர்களை அனுப்பி வைத்து விடுங்கள்."


(அம் குக்ஆன் 33:49) 36/72


9 - சுதந்திரமான கருப்பை


கருத்தரிப்பதிலிருந்து சுதந்திரமடைந்த கருப்பையொன்று ஒரு பெண்ணின் மாதவிடாய் நிலையை ஒத்திருக்கின்றது. எனவே, அதற்கென சில இஸ்லாமியச் சட்டங்களும் இருக்கின்றன.


உதாரணமாக: ஒரு விவாகமான பெண்ணுக்கு உறவு முறையான ஒருவர் மரணிக்கின்றார் என வைத்துக் கொள்ளுங்கள். அவருக்குக் குறிப்பிட்டதொரு வாரிசுச் சொத்து இருக்கின்றது. இந்த நிலையில், அந்தப் பெண் கருத்தரித்து இருக்கின்றாளா அல்லது வாரிசுச் சொத்தை பகிர்ந்தளிக்கும் நிலை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கும் நிலையில் இல்லையா என்பன அறிவது அவசியம்.


எனவே,அவளது கணவன் கீழ்க்காணும் அம்சங்கள் நன்கு தெளிவாகும் வரை அவளுடன் பாலியல் தொடர்பு கொள்ளக்கூடாது.


அ) அவள் மாதவிடாய் உண்டாகும் தன்மையுடையவள் அவளது அந்த நிலையில் கருப்பை சுதந்திரமாக இருப்பதால் வாரிசுச் சொத்தின் அவசியப் பொருத்தம் இல்லை எனத் தெளிவுபெறல்.


ஆ) வாரிசுச் சொத்துக்கு உரிமையுடைய நபர் மரணிக்கும்போது அவள் கருத்தரித்து இருக்கின்றாள் என்பது ஊர்ஜிதமாதல். இந்நிலையில், வாரிசுச் சொத்து பகிர்ந்தளிக்கையில் புதிதாகப் பிறக்கும் ஜீவனும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

Comments