நிற்காமல் வெளிவரும் இரத்தம்


 இஸ்திஹாதாஹ்!


இஸ்திஹாதாஹ் என்பது ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பிலிருந்து நிற்காமலேயே அல்லது மிகக் குறைந்த காலத்திற்கு (மாதாந்தம் இரண்டொரு நாட்களுக்கு) நின்று மீண்டும் வெளிவரும் இரத்தத்தைக் குறிக்கும்.


1-நிற்காமல் வெளிவரும் இரத்தம் :


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :


"பாத்திமா பிந்த் அபீ ஹுபைஸ் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நான் சுத்தமாகின்றேனில்லை (இரத்தம் வெளிவருவது நிற்பதில்லை)" என்றோ, மற்றோர் அறிவிப்பில், "எனக்கு (மாதவிடாய் காலங்களுக்கிடையில்) நிற்காது இரத்தம் வெளிவருகின்றது. அதனால் நான் சுத்தமாக இல்லை! என்றோ கூறியதாக.


2- மிகக் குறைந்த காலத்திற்கு நின்று, வெளிவரும் இரத்தம் :


நபி (ஸல்) அவர்களிடம் வந்த ஹம்னாஹ் பிந்த் ஜஹ்ஷ் அவர்கள், "எனது மாதவிடாய் அளவில் கூடியதும் தாங்க முடியாததுமாகும்!" எனக் கூறினார்" 50


இஸ்திஹாதாஹ்வின் பலதரப்பட்ட நிலைகள்


ஒன்று ஒரு பெண்ணைப் பொறுத்த வரையில் இஸ்திஹாதாஹ்வுக்குப் புறம்பாக, அவளது மாதவிடாய்க்கு ஒழுங்கான, தெளிவான காலச்சக்கரம் ஒன்றுண்டு. அதற்கமைய குறித்த காலத்தில் அவளுக்கு மாதவிடாய் உண்டாகும். அப்பொழுது தொழுகை, நோன்பு மற்றும் விடயங்களில் மாதவிடாய்த் தொடர்பான சட்டங்களையே அவள் பின்பற்றுவாள். இக் குறித்த மாதவிடாய்க் காலத்திலன்றி மற்றைய காலத்தில் வெளிவரும் இரத்தம் 'இஸ்திஹாதாஹ்' என கணிக்கப்பட்டு அதற்குரிய சட்டங்கள் பின்பற்றபட வேண்டும்.


உதாரணமாக ஒரு பெண் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஆறு நாட்களுக்கு சாதாரணமான நிலையில் இரத்தம் வெளியேறக் காண்கிறாள். பின்னர் அவளுக்கு இரத்த வெளியற்றம் நிற்காமல் போக ஆரம்பிக்கின்றது. இப் பெண்ணைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் ஆறு நாட்கள் வெளியேறும் இரத்தமே மாதவிடாய் சார்ந்ததாகும். அதைத் தொடர்ந்து வெளியேறும் இரத்தம் இஸ்திஹாதாஹ் சார்ந்ததாகும்.


49. ஸஹீஹுல் புகாரி (அரபு-ஆங்கிலம்) Vol: 1,பக்: 194, ஹதீஸ் எண்: 322ன் ஒரு பகுதி.


50. இதனை ஸஹீஹான ஹதீஸென அறிவிப்பாளர்களான அஹ்மத், அபூதாவுத், திர்மிதீ ஆகியோர் கூறுகின்றார்கள். இமாம் அஹ்மத் இதனை ஸஹீஹான ஹதீஸ் என அறிவிக்கும் போது, இமாம் புகாளி அவர்கள் இதனை சிறப்பானதொரு ஹதீஸ் என அறிவித்துள்ளார்கள்.


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் கீழ்க்காணும் ஹதீஸ் இதற்காதாரமாக அமைகின்றது.


"எனக்கு (மாதவிடாய் காலங்களில்) நிற்காது இரத்தம் வெளிவருகின்றது. அதனால் நான் சுத்தமாக இல்லை. நான் தொழுகையை விட்டு விடட்டுமா?" என பாத்திமா பிந்த் அபீ ஹுபைஸ் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இல்லை; அது ஓர் இரத்த நாலத்திலிருந்தாகும். நீர் வழமையாக மாதவிடாய் உண்டாகும் நாட்களுக்கு மட்டும் தொழுகையை விட்டுவிடும். பின்னர், குளித்துவிட்டு தொழுகையை மேற்கொள்ளும். SI என்றார்கள்.


'ஸஹீஹ் முஸ்லிம்' எனும் கிரந்தத்தில் வரும் மற்றொரு ஹதீஸ் இவ்வாறு மொழிகின்றது.


"தொடர்ச்சியாக இரத்தம் வெளிவந்து கொண்டிருந்த உம்மு ஹபீபாஹ் பிந்த் ஜஹ்ஸ் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நவின்றார்கள்! "உமது மாதவிடாயின் போது (தொழுகையிலிருந்து) விலகி நில்லும், பின்னர் கழுவிவிட்டு தொழும்! 52 இப்படி சுத்தம் செய்து அவள் தொழுத பின் அவளது இரத்த வெளியேற்றம் பற்றி கவனித்தல் அவசியம்.


இரண்டு : ஒரு பெண்ணுக்கு இஸ்திஹாதாஹ்வுக்குப் புறம்பாக, அவளது மாதவிடாய் தொடர்பாக ஒழுங்கான தெளிவான காலச்சக்கரம் ஒன்றில்லை. எனவே, சாதாரண மாதவிடாய் இரத்தத்திற்கும் இஸ்திஹாதாஹ் சார்ந்த இரத்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்வதற்கு, அவள் இந்த இரண்டு விதமான இரத்தத்தின் தன்மைகளை அவதானித்து வர வேண்டும். மாதவிடாய் இரத்தத்தின் அடர்த்தி. கருமை நிறம், குறிப்பிட்டதொரு வகையான மணம் என்பவற்றிலிருந்து இதை மாதவிடாய் இரத்தம் எனப் புரிந்து கொள்ள முடியும்.


உதாரணமாக : ஒரு பெண் தொடராக இரத்தம் வரக் காண்கின்றாள். அதில், மாதத்தின் முதல் பத்து


நாட்களிலும் கருமை நிறமுடையதாகவும், ஏனைய நாட்களில் சிகப்பு நிறமுடையதாகவும் இருக்கக் காண்கின்றாள். அல்லது முதல் பத்து நாட்களில் அடர்த்தியாகவும் மீதி நாட்களில் மென்மையாகவும் இருக்கக் காண்கின்றாள். அல்லது முதல் பத்து நாட்களில் மாதவிடாய் இரத்தத்தின் மணம் வரவும் ஏனைய நாட்களில் எதுவித மணமும் இல்லாதிருக்கவும் காண்கின்றாள். இதற்கமைய அவளது இரத்தம் கருமையாகவும். அடர்த்தியாகவும், குறித்த மணம் வீசுவதாயும் இருக்கும் காலம் மாதவிடாய்க் காலமாகும். அதைத் தொடர்ந்து வரும் இரத்தம் இஸ்திஹாதாஹ் எனக் கணிக்கப்படும்.


நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா பிந்த் அபீ ஜஹ்ஸ் அவர்களுக்குச் சொன்னார்கள்:


"மாதவிடாய் இரத்தம் வெளிவரும்போது, அது கறுப்பாகவும் (மாதவிடாய் இரத்தமே என) புரிந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருப்பின்; அப்படியான அது வந்தால் தொழுகையிலிருந்து விலகி இருங்கள். எனினும், வித்தியாசமான தன்மையுடைய இரத்தம் வரக் காணின் ஒழு (சுத்தம்) செய்து தொழுங்கள் ஏனெனில். அது ஓர் இரத்த நாலத்திலிருந்தேயாகும்."53


மூன்று : ஒரு பெண்ணுக்கு அவளது மாதவிடாய் தொடர்பாக ஒழுங்கான காலச் சக்கரமோ, மேற்கூறிய வகையிலான குறிப்பிட்ட வித்தியாசமான தன்மைகளோ காணப்படவில்லை. ஒரே வகையான தன்மையுடைய இரத்தம் வடிதலோ அல்லது இயற்கைக்கு மாறான தன்மையுடைய இரத்தம் வடிதலோ இஸ்திஹாதாஹ்விலிருந்து மாதவிடாயைப் பிரித்தறிவதை சிரமமாக்கி விடுகின்றன. இந்நிலையில் தொடர்ச்சியாகவும், என்னவென்று தீர்மானிக்க முடியாமலும் வெளிவரும் இரத்தப் போக்கை சந்திக்கின்ற ஒரு பெண், அநேகமான பெண்களைப் போல், இரத்தம் வரக் கண்ட நாளிலிருந்து 6-7 நாட்களை மாதவிடாய் நாட்கள் என்றே கொள்ள வேண்டும். இந்த நாட்களுக்கு மேல் வெளிவரும் இரத்தத்தை இஸ்திஹாதாஹ் என்றே கொள்ள வேண்டும்.


உதாரணமாக : ஒரு பெண் மாதத்தின் ஐந்தாம் நாள் தன்னிலிருந்து இரத்தம் வெளிவருவதை


முதலாவதாகக் காண்கின்றாள், தொடர்ந்து வெளிவரும் அந்த இரத்தத்தின் நிறம், மணம், அடர்த்தி என்பவற்றைக் கொண்டு எந்த வித்தியாசத்தையும் விளங்கிக் கொள்ள முடியாது இருக்கின்றாள். அந் நிலையில் அவளது மாதவிடாய் நாட்களை ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தினத்திலிருந்து ஆறு அல்லது ஏழு நாட்கள் என கணிக்க வேண்டும். இது கீழ்க்காணும் ஹதீஸுடன் இணக்கம் கொள்கின்றது.


"ஒரு முறை ஹம்னாஹ் பிந்த் ஜஹ்ஸ் (ரலி) அவர்கள், ரஸூல் (ஸல்) அவர்களை விளித்து, "யா ரஸூலுல்லாஹ்! நான் அளவில் கூடியதும், தாங்க முடியாததுமான மாதவிடாயையுடைய பெண்ணாவேன். எனவே, அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது என்னை தொழுகையிலிருந்தும் நோன்பு நோற்பதிலிருந்தும் தடுத்து நிறுத்தியுள்ளது." என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் பருத்தித் துணியை பயன்படுத்துவது நல்லது என ஆலோசனைக் கூறுகிறேன். அதை உமது மறைவிடத்தில் வையும். அது இரத்தத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.'" என்றார்கள். அப்பொழுது, "மிக அதிகமாக வருகின்றதே!" என்றார் அந்தப் பெண். இந்த ஹதீஸில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் : "இது ஷைத்தானின் கோளாறிலிருந்தும் உள்ளது. எனவே, உங்கள் மாதவிடாயை ஆறு அல்லது ஏழு நாட்கள் எனக் கணியுங்கள். அது எதுவாக இருக்க வேண்டும் என்பதை மிக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே, பின்னர் கழுவிக் கொள்ளுங்கள்; நீங்கள் நன்கு சுத்தமாக இருப்பதாகக் கண்டால் இருப்பத்திமூன்று அல்லது இருபத்து நான்கு தினங்களின் இரவு பகலில் தொழுங்கள்; அத்துடன் நோன்பும் நோற்றுக் கொள்ளுங்கள். இது உங்களுக்குப் போதுமானது."54


நபி (ஸல்) அவர்கள் இங்கு 'ஆறு அல்லது ஏழு நாட்கள்' என மொழிந்தது ஹம்னாஹ் பிந்த் ஜஹ்ஸ் (ரலி) அவர்களுக்கு தாம் விரும்பிய எதையேனும் தெரிந்தெடுத்துக் கொள்வதற்கல்ல. மாறாக, (மற்ற பெண்களுள்) தனது வயது, உடல் அமைப்பு, பிள்ளைகளின் எண்ணிக்கை போன்றவற்றில் தன்னுடன் ஒத்துவருபவர்களுடன் தன்னிலையை ஒப்பு நோக்கி விவரங்களை அறிந்து கொள்வதற்கே. அப்பொழுது அநேகமாக அவருடன் ஒத்துவரும் பெண்களுக்கு ஆறு நாட்கள்தான் மாதவிடாய் உண்டாகின்றதென்றால், அவர் தனக்கும் உரிய நாட்கள் ஆறு என்றே கருத வேண்டும்; சிலவேளை மற்ற பெண்களுக்கு ஏழு நாட்கள் என்றால் அவருக்கும் ஏழு நாட்கள் என்றே கருத வேண்டும்


"முஸ்தஹதாஹ்" வை ஒத்திருக்கும் ஒருவர்!


பெண்ணுருப்பிலிருந்து இரத்தம் வெளிவருவதற்கு (இரண சிகிச்சை - Surgery போன்ற) ஏதேனும் காரணிகள் இருக்க முடியும். அவ்வாறான இரண்டு வகைகள், மாதிரிகள் இருக்கின்றன:


1- இரண சிகிச்சையைத் தொடர்ந்து அவளுக்கு மாதவிடாய் உண்டாவது சாத்தியமில்லை. உதாரணமாக கருப்பையை அல்லது அதன் தடுப்பம்சத்தை அகற்றுவதைக் குறிப்பிடலாம். இத்தகையவற்றிற்கு இஸ்திஹாதாஹ் தொடர்பான சட்டங்கள் பொருந்தமாட்டாது. இந்நிலையில் ஒரு பெண்ணுக்கு இரத்தம் வரக்கண்டால், மஞ்சள் நிறத்தில் ஏதும் வெளிப்படுவதற்கான சட்டங்களே இதற்கு பொருந்துவனவாக அமையும்.* எனவே, அவள் தொழுவது, நோன்பு நோற்பது போன்றவற்றிலிருந்து தன்னைத் தடுத்துக் கொள்ளக் கூடாது. அவற்றை உரிய முறையில் செய்துவர வேண்டும். மேலும், இத்தகைய கட்டத்தில் அவள் தனது கணவனுடன் உடலுறவு கொள்வதும் தடை செய்யப்படவில்லை. அதோடு இவ்விரத்த வெளியேற்றம் தொடர்பாக அவள் கட்டாயக் குளிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் இல்லை. எனினும், அவள் தன்னைக் கழுவி, நன்கு சுத்தம் செய்து, பர்ளான தொழுகைக்குரிய நேரம் வந்தால் அல்லது சுன்னத்தான தொழுகைகள் தொழ நினைத்தால், அப்பொழுது வுளூஉ செய்துகொள்ள வேண்டும்; தொழுகையை மேற்கொள்ள வேண்டும்.


2. இரண சிகிச்சையைத் தொடர்ந்து அவளுக்கு மாதவிடாய் வருவது நின்றுவிடும் என்ற நிச்சயம் இல்லை. அவளுக்கு மாதவிடாய் வருவது சாத்தியமேயாகும். இந் நிலையில் முஸ்தஹாதாஹ் (இஸ்திஹாதாஹ்வுக்கு ஆளான பெண்) சார்ந்த சட்டங்கள் இதற்குப் பொருந்தும். இதற்காதாரமாகக் கீழ்க்காணும் ஹதீஸ் அமைகின்றது.


நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா பிந்த் அபீ ஹுபைஸ் அவர்களுக்கு நவின்றதாவது


"அது ஓர் இரத்த நாலத்திலிருந்தேயாகும். எனவே, உண்மையான மாதவிடாய் ஆரம்பமானால் தொழுகையை விட்டு விலகி நில்லுங்கள். பின்னர் அது (மாதவிடாய்) முடிவுற்றால், உங்கள் உடலில் (பட்டுவிட்ட) இரத்தம் நீங்கிவிடும்படி கழுவி (நன்கு குளித்து) உங்கள் தொழுகைகளை நிறைவேற்றுங்கள்.*$$ இங்கு நபி (ஸல் ) அவர்கள் "உண்மையான மாதவிடாய் ஆரம்பமானால்" எனக் குறிப்பிடுவதன் மூலம் முஸ்தஹதாஹ்வுடைய பெண்ணுக்குரிய சட்டங்கள் ஓர் ஆரம்பமும் ஒரு முடிவுமுள்ள) மாதவிடாய் உண்டாகும் வாய்ப்புள்ள பெண்ணுக்கும் பொருந்துவனவாய் இருக்கும் என்பது தெளிவாகின்றது. எனினும, ஒரு பெண்ணுக்கு ஒழுங்கான முறையில் மாதவிடாய் உண்டாகும் வாய்ப்பு இல்லாத வரையில், அவளுக்கு வெளிவரும் இரத்தம் ஓர் இரத்த நாலத்திலிருந்து என்றாகி விடும்.


முஸ்தஹதாஹ் பற்றிய சட்டங்கள்.


முன்னர், எப்பொழுது பெண்ணுக்கு வெளியாகும் இரத்தத்தை மாதவிடாய் இரத்தம் என்றோ அல்லது இஸ்திஹாதாஹ் சார்ந்த இரத்தம் என்றோ கருதுவது எனப் பார்த்தோம். மாதவிடாய்க்கும் இஸ்திஹதாஹ்வுக்கும் பொருந்தும் சட்டங்கள் அதனதன் நிலையில் வெளியாகும் இரத்தத்தின் தன்மையைப் பொறுத்து அமைகின்றது. மாதவிடாய்த் தொடர்பான சட்டங்களை முன்னர் பார்த்தோம். இஸ்திஹாதாஹ் சம்பந்தமான சட்டங்கள் கீழ்க்காண்பவர்களைத் தவிரவுள்ள சுத்தமான பெண்களுக்குப் பொருந்துவன போலவே பொருந்தும் தன்மை உடையனவாகும்.


1. முஸ்தஹதாஹ்வுடைய பெண்கள் தமது ஒவ்வொரு தொழுகைக்காகவும் தனித்தனியாக வுளூஉ செய்வது கட்டாயக் கடமையாகும். ஃபாத்திமா பிந்த் அபீ ஹுபைஸ் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் கட்டளையிட்டார்கள். அவர்கள், "பின்னர் ஒவ்வொரு தொழுகைக்குமாக வுளூஉ செய்யுங்கள். 6 என்றுதான் கட்டளை பிறப்பித்தார்கள். இதன் கருத்து என்னவெனில், குறிப்பிட்டதொரு தொழுகை நேரம் வந்தால் அந்தப் பெண் வுளூஉ செய்து கொள்ள வேண்டும், அதற்கு முன் (வுளூஉ செய்து கொள்வது) அல்ல என்பதாகும்.


2. அவள் வுளூஉ செய்து கொள்வதற்கு முன்னர் உடலிலுள்ள இரத்தக் கறைகளைக் கழுவிவிட வேண்டும் அத்துடன் அவளது மறைவான பகுதியில் ஒரு துணித் துண்டை வைத்துக் கொள்ள வேண்டும், அது அங்கு வெளியாகும் இரத்தத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.


நபி (ஸல்) அவர்கள் ஹம்னாஹ் பிந்த் ஜஹ்ஸ் அவர்களுக்கு நவின்றதாவது : "நீர் பருத்தித் துணியை பயன்படுத்துவது நல்லது என நான் ஆலோசனை கூறுகிறேன். அது இரத்தத்தை உறிஞ்G எடுத்துக் கொள்ளும்; அப்பொழுது அவள், "மிக அதிகமாக வருகின்றதே;" எனக் கூறினாள். “அவ்வாறாயின் (பெரிய அளவிலான) துணியை வையுங்கள்." என்றார் நபி (ஸல்) அவர்கள். "அப்பொழுதும் அதிகமாக வருகின்றதே!" எனக் கூறினாள் அந்தப் பெண். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின் 'தலஜ்ஜமீ' செய்யுங்கள்" என்றார்கள். அதாவது, பெண்ணின் மறைவான இடத்திலிருந்து வரும் இரத்தத்தைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளும் வகையில் பருத்தித் துணியை வைத்து, அதை இருக்கமாகப் பிடித்துக் கொள்வதற்காக இடையைச் சுற்றி ஒரு பிடியை (பட்டியை) அணிந்து கொள்ள வேண்டும். அதன்பின் வெளிவரும் எதுவும் அவளுக்குத் தீங்காக மாட்டாது. ஃபாத்திமா பிந்த் ஹுபைஸ் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "உமது சாதாரணமான மாதவிடாயின்போது தொழுகையிலிருந்து விலகி நில்லும். பின்னர் ஒவ்வொருதொழுகைக்குமாக கழுவி வுளூஉ செய்து கொண்டு தொழுகையை நிறைவேற்றும். அப்பொழுது இரத்தத் துளிகள் விரிப்பில் விழுந்தாலும் சரியே!"*


3- உடலுறவு கொள்ளுதல் இதற்கான அனுமதி பற்றி அறிஞர்கள் கருத்து முரண்பாடு கொண்டுள்ளார்கள். மிகச் சரியான கருத்து என்னவெனில், 'அது அனுமதிக்கப்பட்டதே' என்பதாகும். ஏனெனில் பல (பத்து அல்லது அதற்கு மேற்பட்ட) பெண்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே 'இஸ்திஹாதாஹ்' உடையவர்களாக இருந்துள்ளனர். அப்படியிருந்தும் அல்லலாஹ்வோ அவன் தூதர் அவர்களோ அந்தத் தம்பதிகள் உடலுறவு கொள்வதற்குத் தடை விதிக்கவில்லை.


உண்மையில் அல்லாஹ் இவ்வாறுதான் கூறுகின்றான் :


‎‫فَاعْتَزِلُوا النساء في المحيض ) [ البقرة ، الآية ٢٢٢ ]‬‎


"மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்."


(அல் குர்ஆன் 2:222)


இதுதான் பெண்கள் மாதவிடாய் உண்டாகி இருக்கும்போது மாத்திரம் அவர்களுடன் உடலுறவு கொள்வது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரமாகும். இஸ்திஹாதாஹ்வின் போது பெண்களுக்குத் தொழுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுடன் அந்த வேளையில் உடலுறவு கொள்வதிலும் எத்தகைய சிக்கலும் இல்லை. மாதவிடாய் உண்டாகி இருக்கும்போது உடலுறவு கொள்வதைத் தடுக்கும் வகையில் 'கியாஸ்'* (அனுமான) முறைப்படி முடிவுக்கு வருவது சரியல்ல. காரணம், இரண்டு சூழ்நிலைகளின் தன்மை ஒரே விதமானவையல்ல என்பதாகும். 'கியாஸ்' எனும் அனுமான முடிவுகள் எடுப்பதானது, மாறுபட்ட தன்மைகள் நிலைபெறும் பட்சத்தில் செல்லாததாகி விடுகின்றது.

Comments