விவாகரத்து
ஒருவர் தனது மனைவியை மாதவிடாய் உண்டாகி இருக்கும் வேளையில் விவாகரத்து செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான் :
إِذا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ ) [ الطلاق، الآية (1)
"நீங்கள் பெண்களை விவாகரத்து செய்வீர்களாயின் அவர்களின் இத்தா (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக விவாகரத்து செய்யுங்கள்."
(அல் குர்ஆன் 65-01)
இதன் கருத்து என்னவெனில், பெண்கள் விவாகரத்துச் செய்யப்படும் கட்டத்தில் அவர்கள் தமது இத்தாவை நிர்ணயிக்கக் கூடிய நிலைமை இருக்க வேண்டும் என்பதாகும். அதாவது அவர்கள் ஒன்றில் (மாதவிடாய், உடலுறவு கெள்வதால் உண்டான நிலைமை ஆகியவற்றிலிருந்து) சுத்தமாக அல்லது கருவுற்ற (தனால் உருவான பொறுப்பை நீக்கிக் கொள்ளவுள்ள குறிப்பிடப்பட்ட காலம் வரையிலான) தன்மையில் இருக்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு பெண் மாதவிடாயில் இருக்கும் பொழுது விவாகரத்து செய்யப்பட்டால், அவளது மாதவிடாயை நியமிக்கப்பட்ட இத்தாவின் ஒரு பகுதியாகக் கொள்ள முடியாது. (அடிக்குறிப்பு எண் 21 ஐப் பார்க்கவும்) அதனால், அவள் தனது இத்தாவை மிகச் சரியாக நிர்ணயிக்கத் தவறி விடுகின்றாள். மேலும், அவள் சுத்தமாக இருந்து, தனது கணவருடன் உடலுறவு கொள்பவளாகவும் இருந்தால், அக்கட்டத்தில் அவளை விவாகரத்து செய்தால் அப்பொழுது அவள் தனது இத்தாவைப் பற்றி நிச்சயமற்றத் தன்மையிலேயே இருப்பாள் (அல்லது கருத்தரிக்காத நிலையில் இருப்பாள்) எனவே, அவளது இத்தா எந்த வகையானது என்ற நிச்சயமற்ற நிலையில், அவள் (சுத்தமானவளா அல்லது கர்ப்பிணியா என்ற) நிலைத் தெளிவாகும் வரையில் அவளை அவளது கணவன் விவாகரத்து செய்வது தடைசெய்யப் பட்டுள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது மனைவியை, மாதவிடாய் உண்டாகி இருக்கும் போது விவாகரத்து செய்துவிட்டார் என்பதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் கடும் கோபமுற்றார்கள் என அறிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலைத் தந்த உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களிடம் "அவளைத் திருப்பி எடுங்கள் என அவர்கள் கூறினார்கள் (அடிக்குறிப்பு 21 ப் பார்க்கவும்) எனவே, ஒருவர் தனது மனைவி மாதவிடாய் உண் டாகியுள்ள வேளையில் அவளை விவாகரத்து செய்வது ஒரு பாவச் செயலாகும். அதற்கு பச்சாதாபப்பட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும், பின்னர் அவரது முடிவை மாற்ற வேண்டும்; அவள் சுத்தமாகும் வரை தன்னுடன் வைத்திருப்பதுடன் அடுத்த மாதவிடாய் உண்டாகும் வரை காத்திருக்க வேண்டும்; அதன் பின்னர், அவள் சுத்தமான பின்பு, அவளுடன் உடலுறவு கொள்ளாது, அவளை வைத்திருப்பதா அல்லது விவாகரத்து செய்வதா என்ற இரண்டில் ஒரு முடிவை அவர் எடுக்க முடியும்.
மாதவிடாயின் போது ஒரு பெண்ணை விவாகரத்துச் செய்ய மூன்று நிபந்தனைகள் இருக்கின்றன.
அவையாவான :
முதலாவது: ஒரு கணவன் தனது மனைவியுடனான பாலியல் தொடர்புகளிலிருந்து ஒதுங்கி நிற்கும் நிலையில் அல்லது உண்மையிலேயே அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்னர், அவன் அவளை விவாகரத்து செய்வானாயின், அத்தகைய கட்டத்தில் அவளுக்கு இத்தா என்பது இல்லை என்பதுடன் அவளது விவாகரத்து அல்லாஹ்வின் கட்டளையுடன் மாறுபடுவதுமில்லை.
அல்லாஹ்வின் கட்டளை இதுதான்.
فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ)
"அவர்களின் இத்தா (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக விவாகரத்து செய்யுங்கள்."
(அல் குர்ஆன் 65:1)
இரண்டாவது : சிலவேளை ஒரு பெண் கருத்தரித்து இருக்கம் போது மாதவிடாய் உண்டானால், முன்னர் விளக்கம் தந்தது போல், அவளது இத்தா அவளுடைய மாதவிடாயுடன் அன்றி கருத்தரித்தமையுடன் தொடர்புடையதாக அமைந்து விடுகின்றமை.
மூன்றாவது : ஏதாவது (அல் கூல் AL KHUL) பெற்றுக் கொண்டு அதற்குப் பகரமாக
விவாகரத்தை வழங்குவது. உதாரணமாக : ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தொடரான பெரும் பிர ச்சினைகளும், கொடுமை நிறைந்த தன்மையும் இருக்குமாயின் அந்தக் கணவன் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்குப் பகரமாக ஏதாவது பெற்றுக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்றில் காணப்படுகின்றது.
"தாபித் பின் கய்ஸ் பின் ஸமாஸ் அவர்களது மனைவியவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "யா றஸூலுள்ளாஹ்! நான், தாபித்தின் குணத்திலோ அவரது மார்க்கத்திலோ உள்ள குறைகளுக்காக அவரை குறை கூறவில்லை. ஆனால், நான் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு. (அவருடன் தொடர்ந்து வாழ்வதால்) இஸ்லாமிய மாண்புகளுக்கு முரணான முறையில் நடந்து கொள்ள நான் விரும்பவில்லை." என்றார்கள். இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள், "உமக்கு உமது கணவன் (மகராகத்)42 தந்த காணியை அவருக்குத் திருப்பிக் கொடுப்பீரா?' எனக் கேட்டார்கள் அவர் "ஆம்!" என்றார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தாபிதைப் பார்த்து; "தாபிதே | உங்கள் காணியை எடுத்துக் கொள்ளுங்கள், அவளை ஒரு முறை விவாகரத்து செய்யுங்கள்."43 என்றார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம் என்னவெனில், நபி (ஸல்) அவர்கள், 'அவள் மாதவிடாய் உண்டாகி இருக்கிறாளா இல்லையா' எனக் கேட்கவில்லை என்பதுதான். இத்தகைய நியாயமான காரணங்களைப் பொறுத்து, தனது மாதவிடாய்த் தன்மையை கருத்தில் கொள்ளாது ஒரு மனைவி விவாகரத்து கோரி நிற்க முடியும். மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதானது அவர்களது இத்தாவை நீடிக்கச்
42. மகர் (மகர்-MAHAR) : மணமகள் பெறும் சீர்வரிசை
43. ஸஹீஹுல் புகாரி (அரபு-ஆங்கிலம்) Vol: 7, பக் 150, ஹதீஸ் எண்: 197.
செய்து அவர்களுக்குத் தீமையை தந்துவிட முடியும். எனினும், கொடுமைப்புரிவது, பாரிய பிரச்சினைகளில் சிக்கிச் சீரழிவது போன்ற தீமைகள், இத்தா நீடிப்பதனால் வரும் தீமைகளைவிட மிகவும் பயங்கரமானதே. எனவே இத்தகைய கட்டத்தில் விவாகரத்துக் கோரிக்கையை ஏற்பதன் மூலம் இத் தீமைகளை அகற்றுவது மிகவும் அவசரமும் அவசியமுமாகும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தாபித் பின் கய்ஸின் மனைவியிடம் அவளது மாதவிடாய் நிலைமைப் பற்றிக் கேட்கவில்லை.
ஒரு விடயம்;மாதவிடாய் உண்டான ஒரு பெண் பற்றி எதுவும் கூறுவதற்கு ஆதாரம் இல்லாததால், அவளுடன் திருமண ஒப்பந்தம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், குறிப்பிட்ட கணவன் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். சிலவேளை அவரால் தனது பாலியல் உணர்வுகளையும் ஆசையையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதெனக் கண்டால், அவரது மனைவி மாதவிடாயிலிருந்து சுத்தமாகும் வரை அவளுடன் தனித்திருக்கக் கூடாது.
Comments
Post a Comment
Best comment is welcomed !