அஸ்ஸவ்ம் (நோன்பு நோற்றல்)
மாதவிடாய் உண்டான ஒரு பெண் பர்லானதோ சுன்னத்தானதோ, எந்த வகையான நோன்பும் நோற்பது அனுமதிக்கப் படவில்லை. ஆனால், விடுபட்ட நாட்களின் கட்டாய(பர்ல்) நோன்புகளை நோற்பது கடமையாகும். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், 'நாம் இதனை(மாதவிடாய் காலத்தை)க் கடந்தோம். அப்பொழுது நாம் எமது நோன்புகளைப் பூர்த்தி(ஈடு) செய்யும்படி பணிக்கப் பட்டோம். ஆனால், நாம் தொழுகையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனப் பணிக்கப்படவில்லை. " எனக் கூறினார்கள்.
ஒரு பெண் நோன்பு நோற்றிருக்கும்பொழுது மாதவிடாய் உண்டானால் அவளது நோன்பு செல்லாததாகி விடும், அது சூரியன் மறைவதற்கு நொடிப்பொழுது முன்னால் நிகழ்ந்தாலும் சரியே. இது அவளுக்கு நோன்பு கட்டாயமாக்கப்பட்ட நாளாயின், அவள் சுத்தமானபின் அந்த நோன்பை மீண்டும் நோற்றாக - ஈடுசெய்தாக - வேண்டும். சிலவேளை, ஒரு பெண் நோன்பு நோற்றிருக்கும்பொழுது மாதவிடாய் உண்டாகலாம் என உணர்கிறாள்; ஆனால், சூரியன் மறைந்த பின்னர் வரை இரத்தம் வெளிவரவில்லை; இந்நிலையில், இது தொடர்பான மிகச் சரியான கருத்துக்களின்படி அவளது நோன்பு பூர்த்தியாகின்றதே தவிர செல்லாததாகி விடுவதில்லை. ஏனெனில், பெண்ணின் உடலினுள்ளே உள்ள இரத்தம் தொடர்பாக சட்டங்கள் எதுவும் இல்லை.
"ஒரு பெண்ணுக்கு கனவில் ஸ்கலிதமானால் குளிப்பது கடமையா?" என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் : "ஆமாம், அவள் ஏதும் வெளியேறியிருக்கக் கண்டால்!" என பதில் அளித்தார்கள். இதிலிருந்து, நபி (ஸல்) அவர்கள் எதும் வெளிவருவதை நிதர்சனமாகக் காண்பதை வைத்து சட்டம் வகுத்துள்ளார்களே தவிர அதன் (உள்ளேமிருந்து வெளியே) மாறுவதை வைத்து சட்டம் வகுக்கவில்லை என்பது தெளிவாகின்றது. அதேபோன்று, மாதவிடாயைப் பொறுத்த வரையிலும்கூட ஏதும் வெளியாவதை நிதர்சனமாகக் காண்பதைப் பொறுத்து அதற்குரிய சட்டம் அமுலுக்கு வருகின்றது.
ஒன்று ஒரு பெண்ணின் மாதவிடாய் காலம் சூரிய உதயத்தின் (ஃபஜ்ரின்) பின்னரும் தொடருமாமின், அப்பொழுது அவளது அன்றைய நோன்பு அங்கீகரிக்கப்பட மாட்டாது. சூரியன் உதயமாகி ஒரு நொடிப்பொழுதில் அவள் சுத்தமாகி விட்டாலும் சரியே.
33. இதற்கான விடயம் சஹீஹ் முஸ்லிம், Vol:1, பக்: 191 லிருந்து எடுக்கப்பட்டது.
34. ஸஹீஹுல் புகாரி (அரபு-ஆங்கிலம்) Vot 1, பக்: 171-2இரண்டு அவள் ஃபஜ்ருக்கு முன் சுத்தமாகி நோன்பும் நோற்றால், ஃபஜ்ர் பிந்தியும் பர்லான கட்டாயக் குளிப்பைக் குளிக்காவிட்டாலும் அவளுடைய நோன்பு ஏற்கத் தக்கதாகும். ஜனாபத்துடைய ஒருவரின் நிலைமையை ஒத்ததே இந்த நிலைமையுமாகும். ஒருவர் நோன்பு நோற்க எண்ணி ஃபஜ்ருக்குப் பின்னரும் அவர்/அவள் கட்டாயக் குளிப்பைக் குளிக்காவிட்டாலும் கூட அவரது/அவளது அன்றைய தின நோன்பு ஏற்கத்தக்கதாகிவிடும். இது கீழ்க்காணும் ஹதீஸுடன் இணக்கமானதே.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்
"நபி (ஸல்) அவர்கள் ஜனாபத்துடைய நிலையில் (அவர் தனது மனைவியருடன் உடலுறவு கொண்ட பின்) எழுந்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றார்கள்.×35
3- தவாஃப் (கஃபாவை வலம் வருதல்)
மாதவிடாய் உண்டான பெண்கள் (கட்டாயமான ஃ கட்டாயமில்லாத) எத்தகைய தவாஃபும் (கஃ பாவை வலம் வருதல்) செய்வது தடை செய்யப் பட்டுள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜின் போது மாதவிடாய் உண்டாகி இருந்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
"(ஹஜ்ஜின் போது) ஒரு யாத்ரீகர் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்யுங்கள். ஆனால், கஃபாவை வலம் வருவதை (தவாஃப் செய்வதை) மாத்திரம் நீங்கள் (மாதவிடாயிலிருந்து) சுத்தமாகும் வரை 36 செய்யாதீர்கள் "இ "இது தவிர்ந்த ஹஜ்ஜுடன் தொடர்பான ஏனைய கடமைகளைச் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு பெண் தவாஃப் அல்லது ஸஈ (ஸஃபா மர்வா மலைகளுக்கிடையில் நடத்தல்) செய்து முடியும் தருணத்தில் அவளுக்கு மாதவிடாய் உண்டானால்கூட அவளது செய்துமுடிந்த இக்கடமைகளுக்கு எந்தப் பங்கமும் வந்து விடாது. ہوں
4- பிரியாவிடை தவாஃபிலிருந்து விதிவிலக்களித்தல்
ஒரு பெண் ஹஜ் உம்ரா ஆகியவை சார்ந்த கிரியைகள் யாவற்றையும் நிறைவேற்றிவிட்டு வீட்டுக்கு (நாடு அல்லது நகரத்திற்கு)ப் போகுமுன் மாதவிடாய் உண்டாகி விடுகின்றது. இந்த மாதவிடாய் அவளது பயணத்தின் இறுதி வரை நீடிக்குமாயின், அவள் பிரியாவிடை தவாஃபை நிறைவேற்றாமலேயே சென்றுவிட முடியும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்று இதற்காதாரமாகின்றது.
அவர்கள் கூறினார்கள்:
35. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "ரமளானில் கனவில் ஸ்கலிதமாகியதால் அன்றி (உடலுறவு கொண்டதால்) நபி (ஸல்) அவர்கள் ஜனாபத்துடன் இருந்த போது பொழுது விடிந்து விட்டது. அவர்கள் தன்னைக் கழுவிக் கொண்டு நோன்பு நோற்றார்கள் .
(சஹீஹ் முஸ்லிம், Vol: 2:539)
36. மேற்படி, அடிக் குறிப்பு 9.
"மாதவிடாய் உண்டான பெண்களைத் தவிரவுள்ள மக்கள் (மக்காவை விட்டு) வெளியேருவதற்கு முன்னுள்ள கடைசி கிரியையாக தவாஃப் அல் வதாஃவை (பிரியாவிடை தவாஃபை) நிறைவேற்ற வேண்டும் எனக் கட்டளை இடப்பட்டார்கள் (மாதவிடாய் உண்டானதன் காரணமாகப் பிரியாவிடை தவாஃபை நிறைவேற்ற முடியாது போன) பெண்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்களே 37
மாதவிடாய் உண்டான ஒரு பெண் புனித மஸ்ஜிதின் அருகில் இருந்து துஆ (பிரார்த்தனை) செய்வது விரும்பப்படவில்லை. ஏனெனில், இது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை அல்ல மாறாக. (கட்டாயத் தவாஃபான) தவாஃப் அல் இஃபாதாவை அடுத்து மாதவிடாய் உண்டானால் வெளியேறிவிடும்படி அன்னை ஷஃபிய்யா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளைதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தவாஃப் அல் இஃபாதாவை அல்லது உம்ராவை சார்ந்த தவாஃபை நிறைவேற்று முன்னர் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் உண்டானால், அவள் சுத்தமானபின் இந்த தவாஃப்களை நிறைவேற்ற வேண்டும்.
5 - பள்ளிவாயலில் தங்குதல்
மாதவிடாய் உண்டான ஒரு பெண் பள்ளிவாயலில் (ஈத் தொழுகை நடத்தப்படும் பகுதியில் கூட) தங்குவது தடைசெய்யப் பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் மொழிந்ததாக உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸ் இதற்காதாரமாகின்றது.
அவர்கள் கூறுகின்றார்கள்
''எப்பொழுதும் திரைக்குப் பின்னால் இருக்கும் மணமாகாத இளம் கன்னிகளும், நன்கு வளர்ந்த பெண் பிள்ளைகளும் அல்லது எப்பொழுதும் போல் திரைக்குப் பின்னால் இருக்கும் மணமாகாத இளம் கன்னிகளும், மாதவிடாய் உண்டான பெண்களும் வெளியே வந்து நற்காரியங்களில் பங்கெடுக்க வேண்டும் அத்துடன் உண்மையான விசுவாசிகளின் மார்க்கக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் இவ்வாறு மொழிந்து வந்த நபி (ஸல்) அவர்கள், "ஆனால், மாதவிடாய் உண்டான பெண்கள் முஸல்லாவை (தொழும் இடத்தை) விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்" என முடித்தார்கள்."3# 38
6- முறையான உடலுறவு கொள்ளல்
ஒரு கணவர் மாதவிடாய் உண்டான தனது மனைவியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யபட்டுள்ளது. அத்துடன், அது நிகழ்வதற்கான நிலைமையை அவள் ஏற்படுத்திக் கொடுப்பதும் அனுமதிக்கப்படவில்லை
அல்லாஹ் கூறுகின்றான்
வைஸ்ஸலோங்க அன் அல்முஹைஸ் குல் ஹூ அஸ்ஸர் ஃபே அல்மஹைஸ் வலா தக்ரபூஹன் ஹடப் இஸ்ஹர்ன் ) (அலபக்ரஸ் அல்)
37 இருவரும் ஒப்பிய ஹதீஸ் ஸஹீஹுல் புகாரி (அரபு -ஆங்கிலம்) Vol 2. பக் 459 ஹதீஸ் எண் 810
“இன்னும் மாதவிடாய் (குறித்த சட்டம்) பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: "அது ஒரு தூய்மையற்ற நிலை; ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்; மேலும் அவர்கள் தூய்மை ஆகும் வரை அவர்களை அணுகாதீர்கள்."
(அல் குர்ஆன் 2:222)
இங்கு மாதவிடாய்க் காலம் பற்றியே குறிப்பிடப் படுகின்றது. அத்துடன் பெண்ணின் மறைவான பகுதிகளே தடைசெய்யப்பட்ட இடங்களாகவும் இருக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் "உடலுறவு கொள்வதைத் தவிரவுள்ள எல்லாவற்றையும் செய்யுங்கள் "39 மாதவிடாய் உண்டான பெண்ணுடன் உடலுறவு கொள்வது தடை என்பதில் எல்லா முஸ்லிம்களும் 'இஜ்மாஉ' எனும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உறுதியாக நம்பும் எவரும் இக் காரியத்தில் ஈடுபடுவது அனுமதிக்கப் படவில்லை. எவர் இக்காரியத்தில் ஈடுபடுகின்றாறோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் அடிபணியாது, விசுவாசிகளின் பாதையல்லாது மற்றைய பாதையில் செல்பவாராவார். 40
இமாம் ஸாபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுவதாவது "யாரேனும் இத்தகைய காரியமொன்றில் ஈடுபட்டால் அவர் பெரும் பாவமொன்றை செய்தவர் ஆவார்." அதே மத்ஹபைச் சேர்ந்த ஏனைய அறிஞர்களும் கூறுவதாவது: ''யாரேனும் ஒருவர் மாதவிடாய் உண்டான ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டது எனக் கருதுவாராயின் அவர் குஃப்ரில் (மார்க்க நிராகரிப்பில்) வீழ்ந்துவிட்டவராகக் கருத வேண்டும்."
ஒருவரின் அதி தீவிரமான பாலியல் உணர்வை, ஆசையை மட்டுப்படுத்தவென அவர் மாதவிடாய்
உண்டாண தனது மனைவியின் தடுக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனையப் பகுதிகளை முத்தமிடவும். கட்டித் தழுவவும், அணைத்துக் கொள்ளவும், அத்துடன் அவர்களுடன் கொஞ்சிக் குலாவும் அனுமதியுண்டு. (அல்லாஹ் புகழுக்குரியவன்)
ஆனால், ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விடக் கூடாது. அதாவது, ஒரு கணவர் மாதவிடாய்
உண்டான தனது மனைவியின் தொப்பூழ்க்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட பகுதியை எதைக் கொண்டேனும்
மறைக்காது அணுகக் கூடாது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், 'அவர் (நபியவர்கள், எனது மாதவிடாயின்
போது) ஓர் இஷாரை (இடைக்குக் கீழே அணியும் ஆடை) அணிந்து கொள்ளும்படி கட்டளையிட்டு.
அதன்பின் என்னுடன் குலாவுவார்கள்.41 என்று கூறினார்கள்.
39. ஸஹீஹ் முஸ்லிம் (ஆங்கிலம்) Vol: 1, பக். 175, ஹதீஸ் எண்: 592
"மேலும், தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், யார் இறைத் தூதரிடம் பகைமை காட்டுவதில் முனைப்பாக
இருக்கின்றாணே, இறை நம்பிக்கையாளரின் போக்கிற்கு மாறான பாதையில் செல்கிறானோ, அவனை அவன் திரும்பிவிட்ட
திசையிலேயே நாம் செலுத்துவோம் பின்னர் அவனை நரகத்தில் வீசி எறிவோம். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்."
(அல் குர்ஆன் 4:115)
Comments
Post a Comment
Best comment is welcomed !