நிஃபாஸ் என்றால் என்ன?
நிஃபாஸ் : ஒரு கர்ப்பிணியின் பிரசவம் தொடர்பாக வெளிவரும் இரத்தத்தையே 'நிஃபாஸ்'
எனக்கூறப்படும். இது பிரசவத்தின் போது வெளிவரலாம்; அல்லது பிரசவத்திற்கு பின்னர் வெளிவரலாம்; அல்லது பிரசவத்திற்கு முன் (இரண்டு மூன்று நாட்களுக்கு முன் பிரசவ வேதனையின் போது) வெளிவரவும் முடியும். சைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள், "ஒரு பெண்ணுக்கு கடுமையாக பிரசவ வேதனையுடன் இரத்தம் வெளிவரக் கண்டால் அது நிஃபாஸ் ஆகும். அது இரண்டு முன்று நாட்களுக்கு என வரம்பிடப்படவில்லை. இந்தப் பிரசவ வேதனை பிரசவம் வரை நீடிக்கும்; அல்லாத பட்சத்தில் வெளிவந்த இரத்தம் நிஃபாஸுக்குறியது அல்ல" என்று கூறினார்கள்.
இது (நிஃபாஸ்) நீடித்து நிற்கும் காலம் தொடர்பாக ஏதும் வரம்புண்டா என்பதில் அறிஞர்கள் கருத்து முரண்படுகின்றனர். சைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நிஃபாஸைப் பொறுத்த வரையில் குறைந்த/கூடிய காலம் என்ற வரம்பில்லை. ஒரு பெண்ணுக்கு நாற்பது, அறுபது அல்லது எழுபது நாட்களுக்கு மேலாக இரத்தம் வரக் காண்கின்றாள்; பின்னர் அது நின்று விடுகின்றது. இவ்வாறு வெளிவரும் இரத்தம் நிஃபாஸுடையதாகும். சிலவேளை இவ்விரத்த வெளியேற்றம் தொடருமாயின் அப்பொழுது நிஃபாஸ் என்ற ரீதியில் அதற்கு நாற்பது நாட்களுடைய வரம்பு வைக்கப்படும். காரணம், இதுவே அதிகமான பெண்கள் காணும் சாதாரண கால எல்லையாகும்."
இந் நூல் ஆசிரியர் குறிப்பிடுவதாவது : "மேற்காண்பவற்றின் அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு நாற்பது நாட்களுக்கு மேல் இரத்தம் வெளிவருகின்றது என வைத்துக் கொள்வோம். அக்கட்டத்தில் (முன்னைய பிரசவங்கள் அல்லது வேறு அறிகுறிகளைக் கொண்டு)அவளது இரத்த வடிதல் நிற்பதற்கான அறிகுறிகள் இருந்தால், அவள் அது நிற்கும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு பெண் இத்தகைய அறிகுறிகள் எதுவுமே காணாத பட்சத்தில், அதிகமான பெண்களுக்குரியது போல் நாற்பது நாட்களைப் பூரணப்படுத்தி, (குளித்து) தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மறுபுறம், அந்த நாற்பது நாட்களையும் பூரணப் படுத்தியதைத் தொடர்ந்து அவளுக்கு மாதவிடாய் உண்டாகுமாயின் அது நிற்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் எனினும், அவளது வழக்கமான மாதவிடாய் காலத்தையும் கடந்து இரத்த வெளியேற்றம் இருக்குமாயின் அப்பொழுது அவள் 'முஸ்தஹதாஹ்' என்று கருத வேண்டும் அதோடு இஸ்திஹாதாஹ்வுக்குரிய சட்டங்களையே அப்பொழுது அவள் பின்பற்ற வேண்டும்.''
சிலவே-ளை, பொதுவாகக் கணிக்கப்பட்ட நாற்பது நாட்களுக்கு முன்னரே அவளது நிஃபாஸ் நின்று, சுத்தமுள்ளவளாகினால், உடன் குளித்து தொழுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் முடியும். அத்துடன் அவள் தன் கணவனுடன் உடலுறவு கொள்ளவும் முடியும். ஒரு நாளுக்கு குறைவாக அவளது இரத்தம் வெளிவருவது நிற்பதானது அவள் சுத்தமடைந்து விட்டால் எனற கருத்தைத் தரமாட்டாது. (இது அல் முஃனியில் குறிப்பிடப்பட்டுள்ள முறைக்கமையவேயாகும்)
ஒரு பெண் தெளிவான உடலமைப்பைக் கொண்ட மனித உருவை பெற்றெடுக்காத வரையில் அவளது நிஃபாஸை ஊர்ஜிதப் படுத்த முடியாது. ஒரு சிறு உடலைப் பெற்றெடுத்து அது நன்கு வளர்ச்சியடைந்த மனித உருவின் அமைப்பைத் தெளிவாகக் காட்டாத பட்சத்தில், அதனுடன் வெளிவந்த இரத்தத்தை நிஃபாஸ் எனக் கொள்ள முடியாது. மாறாக அது 'இர்க்' இரத்தம் ஓர் இரத்த நாலத்திலிருந்து வெளிவந்த இரத்தம்) என்றே கொள்ள வேண்டும். ஒரு மனித உரு கருவில் உருவாகி வளர்ச்சியடைவதற்கு, அது கருத்தரித்த தினத்திலிருந்து மிகக் குறைந்தபட்சம் எண்பது நாட்கள் ஆகும்; கூடியபட்சம் தொண்ணூறு நாட்களாகும்.
அல் முஜீத் இப்னு தைமிய்யா 57கூறுகிறார்: “சிலவேளை அவள் 80/90 நாட்களுக்கு முன்னர் கடும் வேதனையுடன் கலந்து இரத்தம் வரக் கண்டால் அதை கவனத்தில் கொள்ளவேண்டியது இல்லை. (அவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தொழுகையை நோன்பு நோற்பதை தொடர வேண்டும்.) ஆனால், இந்த கால எல்லைக்குப் பின்னர் இரத்தம் வெளிவரக் கண்டால் அவள் தொழுகை நோன்பு என்பவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவள் தனது குழந்தையைப் பிரசவித்து, அது வளர்ச்சியடைந்த மனித உருவின் அமைப்பைக் கொண்டிருந்தால் அப்பொழுது (80/90 நாட்களுக்கு முந்திய)அவளது இரத்தம் வெளிவரல் நிஃபாஸ் என்றே கருதி, அவளுக்கு விடுபட்ட தொழுகை, நோன்பு போன்றவற்றை ஈடு (களா) செய்ய வேண்டும். மறுபுறம், புதிதாகப் பிறந்த குழந்தை வளர்ச்சியடைந்த மனித உருவின் அமைப்பைக் காட்டாவிட்டால், அப்பொழுது அவளது இரத்த வெளிவரல் நிஃபாஸ் எனக் கருத முடியாது. விடுபட்ட தொழுகை நோன்பு போன்றவற்றிற்கு ஈடு (களா) செய்ய வேண்டியதும் இல்லை. "
நிஃபாஸுக்குரிய சட்டங்கள்
கீழ்க்காணும் நிலைகளைத் தவிர்த்து, நிஃபாஸுக்குரிய சட்டங்களாவன மாதவிடாய்க்கான சட்டங்களைப் போன்றேயுள்ளன.
1- இத்தா நிஃபாஸுடன் தொடர்பு கொண்டதல்ல எனினும் விவாகரத்து தொடர்பான சட்டங்களுடன் தொடர்புடையதாய் உள்ளது. உதாரணமாக : தலாக் (விவாகரத்து) பிரசவத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டால். இத்தா பிரசவத்துடன் முடிவடைகின்றது. அன்றி, அதற்கு நிஃபாஸுடைய காலத்துடன் எதுவிதத் தொடர்புமில்லை. சிலவேளை தலாக்கை பிரசவத்தின் பின்னால் அறிவித்தால், அவள் தனது மாதவிடாய் வரும்வரை காத்திருந்து அதற்கமைய முன்னர் விவரித்தபடி அவளது இத்தாவை கணிக்க வேண்டும்.
2- 'ஈலாஃ' உடைய காலம் 'ஈலாஃ' என்பது ஒரு கணவன் காலவரையறையின்றி (அல்லது நான்கு மாதத்திற்கு மேல்) தனது மனைவியுடன் உடலுறவு கொள்வதில்லையென சத்தியம் செய்வதைக் குறிக்கும். இத்தகைய கட்டத்தில் குறித்த மனைவி உடலுறவு கொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்பாளாயின், அக்கணவன் சத்தியம் செய்த நாளிலிருந்து நான்கு மாதங்கள் அதற்காக நிர்ணயிக்கப்படும். இக்கால எல்லை முடிவுற்ற பின்னர் (ஒரு முஸ்லிம் நீதிபதியால்) அவருடைய மனைவியுடன் உடலுறவு கொள்ளும்படியோ அல்லது அவருடைய மனைவி கோரி நிற்கும் பிரிவினையை நிறைவேற்றும்படியோ கட்டளையிடப்படுவார். நிஃபாஸுடைய காலத்தை ஈலாஃவுடைய காலத்திற்குறியதாகக் கணிக்கப்படமாட்டாது. எனவே, இக்கால எல்லைக்குள் மனைவிக்கு நிஃபாஸ் ஏற்பட்டால் அது சுத்தமாவதற்கு சமமான காலத்தைக் கணித்து ஈலாஃ வுடைய காலத்துடன் சேர்க்கப்படும். இது மாதவிடாயிலிருந்தும் வித்தியாசமானது. அதனால், இதன் காலத்தை ஈவர்ஃவுடைய காலத்துடன் சேர்த்து கணிக்கப்படும்.
3- பருவம் எய்தல் நிஃபாஸ் கருத்தரித்தலுடன் சம்பந்தமானது என்பது தெளிவானது. ஒரு பெண்ணுக்குப் பாலியல் சார்ந்த ஒரு வகையான நீர் வெளிப்படும் தன்மை உருவாவதற்கு முன் கருத்தரித்தல் ஏற்பட மாட்டாது. (நிஃபாஸ் அல்ல) மாதவிடாய், பெண் பருவமெய்தியதை சுட்டிக்காட்டுவதாக இருக்கும்.
4- சிலவேளை, 'நிஃபாஸுடைய இரத்தம் வெளியாவது நாற்பது நாட்கள் காலத்தினுல் நின்று, மீண்டும் நாற்பதாவது நாள் வெளிவருகின்றதெனில் அதை என்ன சொல்வது' என்ற வினா எழலாம். மாதவிடாய் இரத்தத்திற்கு வித்தியாசமான 8 விதத்தில் இவ்வாறு வெளியாகும் இது 'சந்தேகத்திற்குரியது' என்பது, ஹனபிலாஹ் அறிஞர்களின் பிரபலமான கூற்றுக்கள் அடிப்படையில் அமைந்ததாகும். அவர்களின் கருத்துக்களின்படி அவள் உரிய வேளையில் தொழுகை, நோன்பு ஆகிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். கட்டாயக் கடமைகளைத் தவிர வேறு எவையெல்லாம் மாதவிடாய் உண்டான பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவை இவளுக்கும் தடையானவையே மாதவிடாய் உண்டான பெண் எவற்றுக்கெல்லாம் ஈடு செய்கின்றாளோ அவற்றுக்கெல்லாம் இவளும் ஈடுசெய்தல் வேண்டும்.
இந்நூலின் ஆசிரியர் இவ்வாறு கருத்து கொண்டுள்ளார். "நிஃபாஸுடைய காலம் எனவுள்ள காலப் பகுதியில் மீண்டும் இரத்தம் வெளிப்படுமாயின் அது அவளுடைய நிஃபாஸ் சார்ந்த இரத்தமே அவ்வாறு இல்லாவிட்டால் அது மாதவிடாய் இரத்தமே எனினும் அது நிற்காது தொடர்ந்து வெளிவருமாயின் அப்பொழுது அது ஸ்திஹாதாஹ் இரத்தமேயாகும். இது அல் முஃனி (Vol: 1, பக் : 349) யில் வரும் கருத்துக்கு மிக நெருக்கமானதாகும். இக்கிரந்தத்தில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாவது "அவளுடைய இரத்தம் வெளிவருவது நின்று இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் வரக்கண்டால் அது நிஃபாஸுடைய இரத்தமே; அல்லாவிட்டால் அது மாதவிடாயுடைய இரத்தமே." சைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களும் இக் கருத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளார்கள்.
உண்மையில், இரத்தத்தைப் பொறுத்தமட்டில் 'சந்தேகம்' என எதுவும் இருக்க முடியாது. என்றாலும், மக்களின் அறிவு, விளங்கும் தன்மை என்பவற்றின் அடிப்படையில் இது பற்றிய அவர்களது கருத்துக்களில் வேறுபாடுகள் தென்படுகின்றன. அல்லாஹ் அருளிய அல் குர்ஆனும், அவன் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சுன்னாஹ்வுமே அனைத்து அம்சங்களுக்கும் விளக்கம் பெறவேண்டிய மூலங்களாகும்.
58. மாதவிடாய் இரத்தம் வெளிவருவது நின்று மீண்டும் வருமாயின் அது நிச்சயமாக மாதவிடாய் இரத்தமே உதாரணமாக, ஒரு பெண் மாதாந்தம் எட்டு நாட்கள் மாதவிடாய் உடையவளாக இருக்கின்றாள் அவள் கூறுவதற்கொப்ப அவளது இரத்தம் வெளிவருவது நான்காம் நாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு நின்று விடுகின்றது. பின்னா 7 ஆம் 8 ஆம் நாட்களில் மீண்டும் இரத்தம் வர ஆரம்பிக்கின்றது. இவ்வாறு மீண்டும் வெளிவரும் இரத்தம் நிச்சயமாக மாதவிடாய் இரத்தமேயாகும்.
நோன்பு, தவாஃப் போன்ற கடமைகளை நிறைவேற்றும் பொழுது முதற் தடவையாக ஏதும் தவறுகள் நடந்தாலம்தி அவற்றை இருமுறை நிறைவேற்றும்படி அல்லாஹ் எவருக்கும் பணிக்கவில்லை. அதோடு, அவ்வாறு அவற்றை மீண்டும் நிறைவேற்றாமல் அவற்றில் நேர்ந்த பிழைகளை நிவர்த்தியாக்கவும் முடியாது.
எனினும், யாரேனும் ஒருவர் அவரது / அவளது சக்திக்குட்பட்ட வரையில் தமக்குத் கடமையான வணக்க வழிபாடுகளை மிக அழகாகவும், திருப்தியாகவும் நிறைவேற்றுவார்களாமின், அவர் / அவள் தமது பொறுப்பிலிருந்து விடுவிக்கப் படுவார்.
அல்லாஹ் கூறுகின்றான் :
لا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ﴾ [ البقرة ، الآية ٢٨٦]
"அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப் படுத்துவது இல்லை."
(அல் குர்ஆன் 2:286)
மீண்டும் அவன் கூறுகின்றான்.
فَاتَّقُوا اللَّه مَا اسْتَطَعْتُمْ ﴾ [ التغابن، الآية ١٦]
“எனவே, உங்களால் முடிந்த வரை அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் வாழுங்கள்"
(அல குர்ஆன் 54:16)
5- நிஃபாஸுடைய காலம் எனக் கணிக்கப்பட்ட நாற்பது நாட்களில், குறித்த நாட்களுக்கு முன்னர் சுத்தமடைந்த ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது பற்றிய கருத்தென்ன? மாதவிடாயைப் பொறுத்த வரையில் ஒரு பெண்ணின் வழமையான மாதவிடாய்க் கால எல்லைக்கு முன்னர் அவள் சுத்தமடைந்து விடுவாளாயின் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு அனுமதியுண்டு, நிஃபாஸைப் பொறுத்தவரையில் ஹன்பலி மத்ஹபின் தெளிவான கருத்துக்களின்படி உடலுறவு கொள்வது விரும்பப்படவில்லை.
இது தொடர்பான சரியான கருத்து என்னவெனில், இது விரும்பப் படவில்லை என்பதல்ல என்பதாகும். இதுவும் மிக அதிகமான முஸ்லிம் அறிஞர்களின் கருத்தாகும். ஏதாவதொன்று விரும்பப்படவில்லை என்பதற்கு இஸ்லாமிய சட்டத்திலிருந்து சான்று தேவைப்படுகிறன்து. எனினும் இது தொடர்பாக இமாம் அஹ்மத் அவர்கள் அறிவிக்கும் ஒரு விடயத்தைத் தவிர வேறு ஆதாரமில்லை.
அவர் அறிவிப்பதாவது :
"அபீ அல்ஆசின் மகன் உஸ்மானை அவரது மனைவி, தனது (நிஃபாஸின்) நாற்பது நாட்களுக்குரிய
கால எல்லை முடிவடையும் முன்னர் நெருங்கினார். அப்பொழுது அவர் (கணவரான உஸ்மான்) "வேண்டாம்"
என்றார்." இந்நிகழ்வு அந்தப் பெண் செய்ததை அவர் விரும்பவில்லை எனபதை தெட்டத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் காட்டவில்லை. அவர் அவ்வாறு சொல்வதற்கு, அவள் நிஃபாஸிலிருந்து சுத்தமாகிவிட்டாளா இல்லையா என்பதை அறியாதிருக்கலாம் என நினைத்திருக்கலாம்; அல்லது அவளுடன் உடலுறவு கொள்வதால் மீண்டும் இரத்தம் வர ஆரம்பித்து விடலாம் என நினைத்திருக்கலாம்; அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
Comments
Post a Comment
Best comment is welcomed !