மாதவிடாயிலான மாற்றங்கள்!

 


மாதவிடாயிலான மாற்றங்கள்!


மாதவிடாயில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடியும்.


முதலாவது கூடுதல் அல்லது குறைதல். உதாரணமாக சாதாரணமாக ஆறு நாட்கள் வரை இருக்கும் கால எல்லை ஏழாவது நாள் வரை நீடித்தல், அல்லது ஏழு நாட்கள் வரை நீடிக்க வேண்டிய கால எல்லை ஆறாவது நாளுடன் முடிவடைதல்.


இரண்டாவது குறித்த காலத்திற்கு முன்னே வருதல் அல்லது தாமதித்து வருதல் உதாரணமாக: வழமையாக ஒரு பெண் தனது மாதவிடாயை ஒவ்வொரு மாத இறுதியிலும் வரப் பெறுகின்றாள். ஆனால் பின்னர் மாதத்தின் ஆரம்பத்தில் அல்லது அதற்கு நேரெதிராக அது நடைபெறக் காண்கின்றாள். இந்த இரண்டு நிலை தொடர்பான இறை மார்க்கத்தின் முடிவு என்ன என்பதில் அறிஞர்கள் கருத்து முரண்படுகின்றனர். இது பற்றிய மிகவும் சரியான நிலைப்பாடு என்னவெனில், அவள் எப்பொழுது இரத்தத்தைக் காண்கின்றாளோ அப்பொழுது அதை மாதவிடாய் எனக்கருத வேண்டும்; எப்பொழுது இரத்தம் நின்று சுத்தமடைகின்றாளோ அப்பொழுது அவள் தூய்மை அடைந்து விட்டதாகக் கருத வேண்டும். இதில் கூடுதல் அல்லது குறைதல் என்றோ, குறித்த காலத்திற்கு முன்னே வருதல் அல்லது தாமதித்து வருதல் என்றோ மனதை அலட்டிக்கொள்ள வேண்டியது இல்லை. ஏனெனில் முன்னர் விளக்கியது போன்று மாதவிடாய் பற்றிய சட்டங்கள், உண்மையான மாதவிடாய் தொடர்பான இரத்தம் இருப்பதைச் சார்ந்து நிற்கின்றன.


மூன்றாவது: (சற்று மஞ்சல் நிறமுடைய சீழ் போன்றுள்ள) சாடையான மஞ்சல் நிறமுடைய அல்லது 'குத்ராஹ்' எனும் சாடையான மஞ்சல் கறுப்பு நிறங்களுக்கு இடையிலான ஏதும் வெளிப்படுதல் மாதவிடாய் காலத்தின் போது இவ்வாறு ஏதும் வெளிப்படுமானால் அல்லது அதற்கு அடுத்தாற் போன்று -தஹாரா (சுத்தம்) உடைய நிலையை அடைவதற்கு முன்போ இது நிகழுமானால், இதை மாதவிடாய் என்றே கருத வேண்டும். அத்துடன் மாதவிடாய் தொடர்பான அனைத்து சட்டங்களும் இதற்குப் பொருந்துவதை நோக்க வேண்டும்.


சிலவேளை, இத்தகைய ஏதும் வெளிப்படுதல் தஹாராவை (சுத்தத்தை) அடைந்ததன் பின் நிகழுமாயின், அந்நிலையை மாதவிடாய் எனக் கருதக் கூடாது என்பது உம்மு அதிய்யாஹ் (ரலி) அவர்களது கருத்திலிருந்து யூகிக்க முடிகின்றது. அவர்கள் கூறினார்கள் : "(சுத்தம் அடைந்ததன் பின்பு) சற்று மஞ்சள் நிறத்தில் வெளிப்படும் எதனையும் மாதவிடாயைப் போன்று (முக்கியத்துவம் கொடுத்து) நாம் கருதவில்லை.*?" 23 "சுத்தம் அடைந்ததன் பின்பு" என்ற இந்த சொற்களின்றி இதே விடயம் புகாரி ஹதீஸ் கிரந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை 'மாதவிடாய் காலத்திற்கு இடையிலான தினங்களில் வெளிப்படும் சற்று மஞ்சள் நிறமுடையவை' என்ற தலைப்பிலான அத்தியாயத்தின்


22. சிறப்பான அறிவிப்பாளர்களைக் கொண்டு இமாம் அபூதாவுத் இதை அறிவிக்கின்றார்.


23. ஸஹீஹுல் புகாரி (அரபு-ஆங்கிலம்) Vol: 1, பக் 194, ஹதீஸ் எண் 323.கீழ்க் கொண்டு வந்துள்ளார்கள்.


இதனை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த மற்றொரு ஹதீஸ் மூலம் தெளிவுக்குக் கொண்டு வருகிறார் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் :


"சில பெண்கள் (தாம் மாதவிடாயிலிருந்து சுத்தம் அடைந்துவிட்டோமா இல்லையா என்பதை அறிந்து கொள்ளவென) சற்று மஞ்சள் நிறத்தில் வெளிப்பட்டது பட்டுவிட்ட அடையாளம் உள்ள தமது பருத்தி வைப்பு (Pad) களை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். (அப்பொழுது) ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்வார்கள்: “நீங்கள் 'அல் கஸ்ஸத்தல் (B)பஈதாவை (கருப்பையிலிருந்து வெள்ளை வருவது; பருத்தி வைப்பு (Pad) வெள்ளையாயிருத்தல்) காணும் வரை அவசரப்படாதீர்கள். அதாவது மாதவிடாய் முற்றாக நீங்கும் வரை என்பது இதன் கருத்தாகும். "24


நான்காவது: மாதவிடாயில் தொடரின்மை ; ஒழுங்கின்மை அதாவது, ஒருநாள் இரத்தம் வெளிவரும்; ஆனால், மறுநாள் அது நின்றுவிடும். இது தொடர்பாக இரண்டு விதத் தன்மைகள் இருக்கின்றன.


1. இத்தகைய தொடரின்மை எல்லா நேரங்(நாட்)களிலும் இடம் பெருமாயின், அப்போது வெளிவரும் இரத்தம் இஸ்திஹாதாஹ் என்றே கருதப்பட வேண்டும். இஸ்திஹாதாஹ்வுக்குரிய எல்லா சட்டங்களும் இதற்கு எற்புடையதாகும்.


2. இத் தொடரின்மை சிற்சில நேரங்(நாட்)களில் இடம் பெறுவதுடன் சுத்தமாக இருக்கும் காலமும் இருக்கின்றது. இந்த சுத்தமாக இருக்கும் காலம் பற்றி அறிஞர்கள் கருத்து முரண்படுகின்றனர். அதாவது, அது உண்மையிலேயே மாதவிடாய்க்கான சட்டங்கள் பொருந்தாத சுத்தமுடைய காலமா? அல்லது அது மாதவிடாய்க் காலத்தின் ஒரு பகுதியா? என்பதே கருத்து முரண்பாட்டிற்கான விடயமாகும்.


இமாம் ஷாஃபிஈ (ரஹ்). சைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்), இமாம் அபூ ஹனிஃபா (ரஹ்) அவர்களின் மத்ஹபின் கருத்துக்களின்படி இது மாதவிடாயின் ஒரு பகுதியாகும். ஏனெனில், 'காஸ்ஸாஹ் அல் (B)பாதா' அங்கு காணப்படவில்லை. இந்நிலையில் அதை தூய்மையானதாகக் கருத முற்பட்டால் அது பெண்களுக்குப் பெரும் கஷ்டத்தையும் துன்பத்தையும் தருவதாகவே அமையும். நிச்சயமாக இது இஸ்லாமியக் கோட்பாடுகளின் சாராம்சத்திற்கு முரணானதாகும்.


மறு புறத்தில், ஹன்பலி மத்ஹபின் மிகப் பிரபலமான கருத்து என்னவெனில் இரத்தம் வெளிவந்தால் அது மாதவிடாயாகும்; சுத்தம் அடைந்தால் அது தஹாராவாகும் (தூய்மையாகும்). எனினும், மாதவிடாய் காலமும் தூய்மையுடைய காலமும் இணைந்து 'மாதவிடாயின் மிக நீண்ட காலத்தை' (இந்த மத்ஹபின்படி பதினைந்து நாட்களைக்) கடந்து விடுமாயின், அப்பொழுது அதை 'இஸ்திஹாதாஹ்' எனக் கருத வேண்டும். (ஹம்பலி மத்ஹபின் ஃபிக்ஹ் நூலான) அல் முஃக்னியின் ஆசிரியர் இவ்வாறு கூறுகின்றார்: “ஒரு நாளை விடவும் குறைவாக இரத்தம் நிற்குமாயின் அவள் தெளிவான ஆதாரத்தைக் கண்டாலன்றி அதைத் 'தஹாரா' (சுத்தம்) உடைய நிலை எனக் கருத முடியாது உதாரணமாக அவளது மாதவிடாயின் இறுதியில் (இரத்தம்)


வெளிவருதல் நின்றுவிடுகின்றது. அல்லது 'காஸ்ஸாஹ் அல் (B)பாதா'வை அவள் காண்கின்றாள்.


இந்நூலின் ஆசிரியர், "முஃக்னியின் இக்கூற்று, மேற்காணும் இரண்டு கருத்துக்களுக்கும் இடையிலான மத்திமமான நிலையாகும். அல்லாஹ் மிக சிறப்பானதை அறிந்தவன்!" எனக் கூறுகின்றார்.


ஐந்தாவது: இரத்தத்திலான வரண்ட தன்மை: ஒரு பெண் ஈரமான ஏதும் வெளியேறக் காண்கின்றாள். இது மாதவிடாயின் போது நிகழுமாயின் அல்லது சுத்தம் அடையுமுன் அதனுடன் தொடர்புற்று இருக்குமாயின், அப்பொழுது அது மாதவிடாயாகும். ஆனால், சுத்தம் ஆகிய பின்னர் அது நிகழுமாயின், அப்பொழுது அது மாதவிடாய் அல்ல.

Comments