மாதவிடாயைத் தடுத்தல்; கருத்தடை, கருச்சிதைவு செய்தல்!

 


மாதவிடாயைத் தடுத்தல்; கருத்தடை, கருச்சிதைவு செய்தல்!


மாதவிடாயைத் தடுப்பவற்றை இரண்டு நிபந்தனைகளுக்கமைய பயன்படுத்த அனுமதிக்கலாம் |


முதலாவது பெண்ணக்கு அதனால் தீங்கு வரக் கூடாது. அல்லாஹ் கூறுகின்றான் :


‎‫ولا تُلْقُوا بِأَيْدِيكُم إلى التهلكة ﴾ [ البقرة ، الآية ١٩٥]‬‎


"மேலும், உங்களுடைய கரங்களால் உங்களுக்கு அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள்."


(அல் குர்ஆன் 2:195)


மீண்டும் அருளுகின்றான் :


மற்றும்


“உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்கள் மீது அளப்பரிய கருணை புரிபவனாக இருக்கின்றான்."


(அல் குர்ஆன் 4:29)


இரண்டாவது : சிலவேளை, மாதவிடாயைத் தடுப்பவற்றைப் பயன் படுத்துவதால் ஏதோ ஒரு வகையில் கணவரைப் பாதிக்குமாயின், அப்பொழுது அவரது அனுமதியைப் பெறுவது தலையாய அம்சமாகும். உதாரணமாக : ஒரு பெண் இத்தாவில் இருப்பதாக வைத்துக் கொள்வோம், அப்பொழுது அவளுக்கான செலவை கணவரே ஏற்பது கட்டாயம். இந்நிலையில் (மாதவிடாய்த் தடுப்புகளைப் பயன்படுத்தி) கணவரிடமிருந்து அதிகச் செலவுப் பணம் பெறும் நோக்குடன் இத்தாவை நீடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக, அவள் அவரின் அனுமதியைப் பெற வேண்டும். அதேபோல், மாதவிடாய்த் தடுப்புக்களை பயன்படுத்துவதால் ஒரு பெண் கருத்தரிக்காது விடலாம் என்ற அச்சம் இருக்குமாயின், அப்பொழுதும் கணவரின் அனுமதியின்றி அத்தகைய தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படக்கூடியது அல்ல.


எனவே. மேற்காணும் நிபந்தனைகளுக்கு அமைவாக அன்றி மாதவிடாய்த் தடுப்புக்களைப்


பயன்படுத்தாது இருப்பது நல்லது. மேலும், இதற்கான உண்மையான தேவை இருக்குமாயின் பெண்ணின்


ஆரோக்கியம், பாதுகாப்பு என்பன கருத்திற்கொண்டு முடிந்த அளவு இயற்கையான வழிமுறைகளை

மேற்கொள்ளலாம்.


மாதவிடாய் உண்டாவதற்கான மருந்து உபயோகத்தை இரண்டு நிபந்தனைகளுக்கமையவே அனுமதிக்கப்படலாம்!


முதலாவது: இவ்வுபயோகத்தைத் தவறான முறைக்கு உபயோகப்படுத்தக் கூடாது; துஷ்பிரயோகிக்கக் கூடாது. உதாரணமாக : ஒரு பெண் தன் மீது கடமையான கட்டாய வணக்க வழிபாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இதனைப் பயன்படுத்தக் கூடாது, அதாவது ரமளான் மாதம் வருகிறது என வைத்துக் கொள்வோம். எனவே, அம்மாதத்தில் நோன்பு நோற்பது, தொழுவது போன்றவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்ள நல்லதொரு சாதனமாக இதனைப் பயன்படுத்துவதைக் குறிப்பிடலாம். இது அறவே ஆகாத விஷயம்; தரப்பட்ட அனுமதியைத் துஷ்பிரயோகம் செய்வதாகும்.


இரண்டாவது ஒரு பெண் மாதவிடாய் உண்டாகுவதற்கான மருந்து உபயோகிப்பதாக வைத்துக் கொள்வோம். அதனால் மாதவிடாய் உண்டாகி, அவளது கணவன் அவளுடன் முழு இன்பத்தையும் அனுபவிக்க அது குந்தகம் விளைவிக்குமானால் அப்பொழுது, அத்தகைய ஏதேனும் உபயோகிக்க அவள் தனது கணவனது அனுமதியைப் பெற்றாக வேண்டும் அதோடு, அவள் விவாகரத்து செய்யப்பட்டிருந்தால். இத்தகைய ஏதேனும் உபயோகிப்பதானது அவளது கணவன் அவளை நோக்கி வருவதற்குரிய உரிமையைத் துரிதமாக இழக்கச் செய்து விடும் காரணம், இத்தகைய ஏதேனும் உபயோகிப்பதன் மூலம் இத்தா துரிதமாக முடிவதாகும். இத்தாவுடைய கால எல்லையில் தன் மனைவியை நோக்கி மீண்டும் வரும் முறையிலான விவாகரத்து சொல்லப்பட்டிருந்தால், அதற்கமைய அக்கணவன் இத்தா முடிவடையமுன் தன் மனைவியிடம் வரும் உரிமையுண்டு


கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதன் அவசியம்!


முதலாவது கருத்தரிப்பை முற்றாகத் தடுப்பது. இதற்கு அனுமதியில்லை. ஏனென்றால்:


அ) இது முஸ்லிம்களின் பெருக்கத்தைக் குறைத்து விடும் இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கம் முஸ்லிம்களின் சனத்தொகை பெருக வேண்டும் என்பதே


ஆ) ஒரு பெண் தனக்கிருக்கும் பிள்ளைகள் எல்லோரும் மரணமடையாது வாழ்வர் என்று உறுதி கூற முடியாது. இக்கட்டத்தில் அவள் நிரந்தர கருத்தடை செய்து பிள்ளைப் பெறுவதை தடை செய்து கொண்டால். அவளுக்கு பிள்ளைகளே இல்லாது மரணிக்க நேரிடலாம்.


இரண்டாவது தற்காலிகமாக கருத்தரிப்பதைத் தடுப்பது பலமுறை கருத்தரித்து ஒரு பெண்,


மீண்டும் கருத்தரித்தால் பலமீனமடைவாள் என்றிருக்குமாயின் அக்கட்டத்திற்கு இது பொருந்துவதாக அமையும் மேலும், ஒரு பெண் தனது கருத்தரித்தலானது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையென ஒழுங்குபடுத்திக் கொள்ள நாடி, அவளது கணவனும் அனுமதியளித்தால், அதோடு கருத்தடை சாதனங்கள் அவளுக்கு தீங்கு இல்லை எனக் கண்டால், அக்கட்டத்தில் அப்படி ஏதும் பயன்படுத்த அனுமதிக்கப் படலாம் நபித்தோழர்கள் தமது விந்து பெண்ணை சென்றடைவதைத் தடை செய்தார்கள்  (இதை அரபியில் 'அஸ்ல் செய்தல்' எனக் கூறுவார்கள்.) (நபி (ஸல்) அவர்கள்) இவர்கள் இப்படிச் செய்வதை 'வேண்டாம்' எனக் கூறவில்லை. ஒருவர் தன்னுடைய மனைவியுடன் உடலுறவு கொண்டு விந்து வரும் கட்டத்தில் தனது உறுப்பைப் பெண்ணுறுப்பிலிருந்து வெளியே எடுத்து விந்தை வெளியில் விடுவதையே இது குறிக்கும்.


கருச்சிதைவு செய்தல்: இது இருவகைப்படும்.


முதலாவது : ஒரு தாயின் கருப்பையில் உள்ளதை நீக்கிவிட நினைத்தல். (வயிற்றிலுள்ள) உடலுக்கு உயிரூட்டப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு செய்ய திட்டமிட்டால், அது சட்டமுரணானது என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஏனெனில், அது ஓர் உயிரைக் கொலைசெய்யும் கொடிய செயலாகும்." இது குர்ஆன், சுன்னாஹ், இஜ்மாஉ ஆகியவைகளின் கருத்துக்களுக்கு அமைவானதாகும்.


சிலவேளை, வயிற்றிலுள்ள கருவிற்கு உயிர் ஊதப்படுமுன் கருச்சிதைவு செய்யப்படுமாயின் அதை சில அறிஞர்கள் 'ஆகும்' என அனுமதிக்கின்றனர்: வேறு சிலர் அனுமதிப்பதில்லை. சில அறிஞர்கள் அது 'அலக்கா'(இரத்தக் கட்டி) என்றிருக்கும் போது கருச்சிதைவு செய்ய அனுமதிக்கப்படலாம் என்று கூறுகின்றனர். அதாவது கருத்தரித்து நாற்பது நாட்களுக்குக் குறைவாக இருக்கும்போது அது அனுமதிக்கப் படலாம் என்பது அவர்கள் கருத்து, எனினும் மற்றும் சிலரின் கருத்துப்படி கரு மனித உருவின் அமைப்பைப் பெறாத நிலை வரை இது அனுமதிக்கப் படலாம் எனக் கூறுகின்றனர். எவ்வாறாயினும், நியாயமான காரணமின்றி கருவை சிதைக்காமல் இருப்பதில் கவனம் செலுத்துவது அவசியம் உதாரணமாக: ஒரு தாய் கருவை சுமந்திருக்க முடியாத அளவுக்கு சுகவீனமுற்று இருக்கின்றாளாயின், அவளது அந்தக் கரு மனித உருவின் அமைப்பைப்


60. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். "சத்தியமும் அதன்பால் உணர்வூட்டப் பட்டவருமான நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : (ஒரு விதைவையின் உருவில்) உங்களுள் ஒவ்வொருவரும் உங்கள் தாயின் கருப்பையில் நாற்பது நாட்கள் சேர்த்து வைக்கப்படுவீர்கள் பின்னர் அதற்கு சமமான (நாற்பது நாட்கள்) காலத்தில் ஓர் இரத்தக்கட்டியாக மாற்றப்படுவீர்கள். பின்னர் அதற்கு சமமான (நாற்பது நாட்கள்) காலத்தில் ஒரு சதைத் துண்டாக மாற்றப்படுவீர்கள், பின்னர் (உயிரை அதற்கு ஊதிவிடும்) ஒரு மலக்கை அல்லாஹ் அனுப்புவான்."இந்த ஹதீஸை முஸ்லிமிலும், புகாரியிலும் (Vol:) 8, பக் 387, ஹதீஸ் எண்: 593) "உயிரை அதற்கு யார் ஊதிவிடுகின்றாரோ" என்ற பகுதி முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.


61. இதன் ஆசிரியர் இது பற்றி இன்னும் சில நூல்களில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய 'அல் ஃபதாவா அந்நிஷாஇய்யாஹ்' என்ற நூலின் 54,55 பக்கங்களில் குறிப்பிடுவதாவது "இது ஒரு தடை செய்யப்பட்ட ஒரு செயல், 'இந்த சமுதாயம் பெருக வேண்டும் ' என்ற நபி (ஸவ்) அவர்களது கருத்துக்கும் இது முரணானது. இது முஸ்லிம்களைப் பலமீனப்படுத்தி இழிவைக் கொண்டுவரும் காரணிகளுள் ஒன்றாகும். முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடும்போது அவர்கள் வலிமையடைவர், அதனால்தான் அல்லாஹ் இஸ்ராயிலிய மக்களை நோக்கி இவ்வாறு பேசினான்.


ரா மத்னா காம் பஜ்முவல் வமீன் வூஸ்ஆக்ம் ஆக்ஷர் தஸ்யூரா )


"மேலும், பொருட் செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்தோம் உங்கள் எண்ணிக்கையை முன்பைவிடப் பெருகச் செய்தோம்,"


(அல் குர்ஆன் 17:6)


நபி ஹைப் (அலை) அவர்கள் தமது மக்களுக்கு இவ்வாறு நினைவூட்டினார்கள் :


‎‫والذكروا إذا كنتم قليلا فكثر كم ) ( الأعراف ، الآية ٨٦)‬‎


நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள் பிறகு அல்லாஹ் உங்களைப் பெருகச் செய்தான்."


(அல் குர்ஆன் 7:86)


"எண்ணிக்கையில் மிக அதிக மக்களைக் கொண்ட சமுகம் தனது சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடிகின்ற அதேவேளை, அதனைக் கொண்டு எதிரிகளும் அச்சமுறுவர் என்பது அறிந்துகொள்ளவேண்டிய அம்சமாகும். எனவே, நியாயமான காரணமின்றி பிள்னை பெறும் வாய்ப்பை அழிப்பது அனுமதிக்கப்படக் கூடியதல்ல உதாரணமாக ஒரு பெண் கருத்தரிப்பது அவளது உயிருக்கு ஆபத்தாயின் அல்லது அவளது கருப்பையை பயங்கரமான நோய் ஒன்று தாக்கி, அது அவளது உடலில் பரவி அவள் அழித்துவிடும் ஆபத்து இருக்குமாயின் அன்றி பிள்ளை பெறும் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது"


பெற்றில்லாவிட்டால் அதை சிதைப்பது அனுமதிக்கப்படலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.


இரண்டாவது கருவை அழிக்கும் எண்ணம் இல்லாமை.


ஒரு பெண் கர்ப்பிணியாகி அதன் கடைசி வேளையில், பிரசவத்தின் போது, தாய்க்கும் அவளது புதிய ஜீவனுக்கும் ஏதேனும் தீங்கு ஏற்படாதவாறும், அதோடு இரண சிகிச்சைக்கான தேவை இல்லாதபோதும் மிகக் கவணமாகக் காரியமாற்றுவது அனுமதிக்கப் பட்டுள்ளது. சில வேளை இரண சிகிச்சை அவசியமாகிவிட்டால் அதற்கான நான்கு வழி முறைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.


அ) தாயும் சேயும் உயிருடன் இருக்கும் போது இத்தகைய கட்டத்தில் உண்மையிலேயே இரண சிகிச்சையின் அவசியம் இருந்தால் மட்டும் அது அனுமதிக்கப்பட முடியும். உதாரணமாக: பிள்ளையைப் பெற்றெடுப்பதில் சிக்கல்கள் ஏதும் இருந்தால் இதற்கு அனுமதிக்கலாம். காரணம் உடல் ஓர் அமானம்; ஒரு நம்பிக்கைச் சொத்து. எனவே, ஒரு பெரும் பயன் இல்லாது ஓர் ஆபத்தான நிலைமைக்கு வழியமைத்து விடக்கூடாது.


ஆ) தாயும் சேயும் இறந்திருக்கும் போது இந்நிலையில் இரண சிகிச்சை அனுமதிக்கப்படக் கூடியதல்ல. ஏனெனில், அதனால் எத்தகைய பயனும் இல்லை.


இ) தாய் உயிருடன் இருக்க, சேய் இறந்தபோது (தாய்க்கு ஏதும் ஆபத்து நேரும் என்ற அச்சம் இல்லாவிட்டால்) இறந்திருக்கும் சுமையை அகற்றவென இரண சிகிச்சை செய்ய அனுமதியுண்டு. இறந்த சுமையை இரண சிகிச்சை செய்யாது அகற்ற முடியாது என்பது தெளிவானதே; அல்லாஹ் மிக அறிந்தவன் அது தாயின் கருப்பையில் இருந்தால் அவளுடைய எதிர்கால பிரசவங்களுக்குக் குந்தகம் விளைவிக்கலாம்; சகிக்க முடியாத கஷ்டங்களைத் தரலாம் அதோடு, அவளது முந்திய கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று இத்தாவில் இருக்கும் பொழுது அந்நிலை அவளை ஒருவிதவையாகவே வைத்து விடலாம். எனவே, இறந்த சுமையை இரண சிகிச்சை மூலம் அகற்றுவது அனுமதிக்கக் கூடியதே.


ஈ) தாய் இறந்து சேய் உயிருடன் இருக்கும் போது சிலவேளை பிள்ளை உயிருடன் இருக்க மாட்டாது என்ற முடிவுக்கு வந்தால், அப்பொழுது அதனை அவளிடமிருந்து அகற்றுவது அனுமதிக்கப்படக்கூடியது அல்ல. ஆனால், பிள்ளை உயிருடன் இருக்கும் என அறிந்து கொண்டால், அதன் சில பகுதிகள் வெளிவந்திருந்தால் அப்பொழுது இரண சிகிச்சை மூலம் அப்பிரசவத்தை பூர்த்தி செய்து பிள்ளையை எடுத்துக்கொள்வது அனுமதிக்கப் படமுடியும் மறுபுறம் பிள்ளையின் பகுதிகள் எதுவும் வெளிவராத கட்டத்தில் இரண சிகிச்சை செய்து பிள்ளையயை வெளியே எடுப்பது தொடர்பாக சில சட்ட நிபுணர்களின் கருத்து என்னவெனில், 'அது உடலை உருக்குலைத்தல், அங்கவீனமாக்குதல்' என்பதாகும்.


இது தொடர்பான சரியான கருத்து என்னவெனில், தாயின் வயிற்றை இரண சிகிச்சை மூலம் திறந்து உள்ளேயுள்ள பிள்ளையை வெளியே எடுக்க அனுமதிக்க முடியும் என்பதே குறிப்பாக, வேறு வழியே இல்லாத கட்டத்தில், வயிற்றைத் திறந்து மீண்டும் முன்பிருந்தது போல் அதைத் தைத்து விடும் அளவுக்கு இரண சிகிச்சை வைத்திய முறை வளர்ந்து விட்ட இக்காலத்தில் இதை அனுமதிக்க முடியும் மேலும் இறந்து விட்ட ஒருவரை விடவும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை பாதுகாப்பது மிகவும் உயர்ந்ததொரு விடயம் என்பதால், தவறே செய்யாத (பாடமற்ற) ஓர் உயிரைப் பாதுகாப்பது கடமை எனக் கொள்ள வேண்டியது அவசியமானதோர் அம்சமாகும். புதிய ஜீவன் பாவங்களிலிருந்து தூய்மையானதே. அல்லாஹ் மிக அறிந்தவன்.


எச்சரிக்கை : கருச்சிதைவு செய்வதற்கு அனுமதிக்கப்படக் கூடிய எல்லா கட்டங்களிலும் (குழந்தையின்) தந்தையின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். இது தொடர்பாக நான் (கலாநிதி ஸாலிஹ்) செய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் அவர்களை சென்ற ஹிஜ்ரி 1413 முஹர்ரம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை (1992 ஜூலை 17ஆம் திகதி) சந்தித்து, “சிலவேளை ஒரு கர்ப்பிணிக்கு கருச்சிதைவு செய்வதன் நியாயமான தேவை இருந்தும், தந்தையின் அனுமதியைப் பெறுவது சாத்தியமில்லை என்றிருந்தால், அப்போது அவள் கருச்சிதைவு செய்து கொள்ள முடியுமா?" எனக் கேட்டேன் செய்க் அவர்கள், “இக்கட்டத்தில் 'தேவை' என்பதானது 'அனுமதி பெற வேண்டும்' என்பதனை மீறி நிற்கின்றது!" என பதிலளித்தார்கள்.


இறுதியில் சில குறிப்புகள்...


நான் எடுத்துக் கொண்ட தலைப்பிலான என் கருத்துக்களை உங்கள்முன் சமர்ப்பித்து விட்டேன். இங்கு நான், இது தொடர்பான அடிப்படை அம்சங்களை மட்டுமே முன்வைத்துள்ளேன். உண்மையில் பெண்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் பலவற்றை நோக்கும் பொழுது அவை கரையில்லாத கடலளவு விசாலமானவையாகும். எவரும் நன்னோக்கோடு இந்த அடிப்படைகளுக்கான விளக்கங்களை அணுகி, விளங்கி மிகச் சிறந்த நியாயமான முடிவுகளைப் பெறமுடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.


ஒரு முஃப்தி. தான் அல்லாஹ்வினதும் அவன் தூதரினதும் கட்டளைகளை எடுத்து வைக்கும் ஒருவர் மட்டுமே என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்; அவர் அல்லாஹ்வின் கிரந்தத்தை (குர்ஆனை)யும். நபி (ஸல்) அவர்களது சுன்னாஹ்வையும் பின்பற்றும் பொறுப்பும் கடமையும் உள்ளவர்; அல்குர்ஆனுடனும் நபிகளாரின் சுன்னாஹ்வுடனும் இணங்கி வராத எவையாயினும் அவை பிழையானவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; அத்தகைய பிழையானவற்றை நடைமுறை படுத்தவோ பின்பற்றவோ கூடாது அவற்றைத் தனது இஜ்திஹாத் தொடர்பாக மன்னிக்கப் படக்கூடிய ஒரு முஜ்தஹித் முன்வைத்தாலும் சரியே. ஓர் அம்சம் தொடர்பான குறிப்பிட்டதோர் இஜ்திஹாத் பிழையானது என யாரேனும் அறிந்துகொண்டால், அதை அவர் ஏற்றுக்கொள்ளக்கூடாது.


ஒரு முஃப்தி தனது எண்ணத்தை, சிந்தனையை அல்லாஹ்வுக்கென தூய்மையாக வைத்துக்கொள்வது கடமையாகும் அதோடு, எவை மிகச் சரியானவையோ அவைகளையொட்டி உறுதியாக நிற்கவும், அவற்றின்பால் வழிநடத்தப்படவும் அல்லாஹ்வுடைய உதவியையும் ஒத்தாசையையும் வேண்டி நிற்க வேண்டும்.


அல் குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களுடைய சுன்னாஹ்விலும் உள்ளவற்றையொட்டி அவர் (முஃப்தி) சிந்திப்பதும், ஆராய்வதும், நன்கு விளங்கிக்கொள்ள முயல்வதும் மிக மிக அவசியம். அத்துடன், இஸ்லாமிய அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களை தேடிப்படிப்பதுடன் அவற்றை விளங்கிக்கொள்ள ஆவன செய்வதும் தவிர்க்கக் கூடாத தேவையாகும்.


பல்வேறு கட்டங்களில் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து சம்பந்தப்பட்டவர்கள் அறிஞர்களின் கருத்துக்களைத் தேடிச் செல்கின்றனர். எனினும், அவர்களது உள்ளங்கள் திருப்தியடையாத முடிவுகளையே அவர்கள் பெறுகின்றனர்; அல்லது எதுவுமே பெறாதவர்களாகி விடுகின்றனர். இக்கட்டத்தில் அவர்கள் தமது தூய எண்ணம், அறிவு, விளங்கும்தன்மை ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து தமது தேவைக்கு அல்குர்ஆனையும் நபிகளாரின் சுன்னாஹ்வையும் அணுகினால், அவரோ / அவளோ தெளிவானதும் மிக நெருக்கமானதுமான தீர்வுகளின்பால் வருவது திண்ணம்.


ஒரு முஃப்தி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானதோர் அம்சம் என்னவெனில், அவர் ஏதாவதொரு விடயத்தில் மார்க்கத் தீர்ப்பு வழங்க அவசரப்படக் கூடாது. ஒரு பிரச்சினை வந்துற்றபோது அது பற்றி தெளிவாக விளங்கிக் கொள்வதும் ஆராய்வதும் அவசியம். பின்னர் அது தொடர்பாகத் தீர்ப்பு வழங்குவதற்கு முஃதியொருவர் அவசரப்படக் கூடாது. ஏனெனில், அதனால் பிழையான தீர்ப்பினை வழங்கி, அதன் விளைவுகள் காரணமாக பின்னர் வருந்த நேரிடலாம்.


ஒரு குறிப்பிட்ட முஃப்தியிடம் எடுத்துச் செல்லும் தமது விவகாரங்கள் தொடர்பாக அவர் தகுந்த இடம் வழங்கி மிகுந்த கவனம் செலுத்துவதாகக் காணும் மக்கள், அவரில் அபார நம்பிக்கை வைப்பர்; அவரது தீர்ப்புக்களை ஆர்வத்துடன் கருத்தில் கொள்வர். அவ்வாறு இல்லாது தீர்ப்பு வழங்குவதில் அவர் அவசரப்பட்டால்; அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இழக்கப்பட்டுவிடும். அதனால் அவர் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் நிலை உருவாவதுடன் மற்றார் அவரது அறிவிலிருந்து பயன் பெறவும் முடியாது போய்விடும்.


கண்ணியமும் உயர்வும் உடைய அல்லாஹ்விடம் எம்மையும் எமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளையும் நேரிய வழியில் நடத்துமாறு நான் பிரார்த்தனைப் புரிகின்றேன். மேலும், அவனுடைய பாதுகாப்பை எமக்குத் தருவதுடன், எம்மைத் தீயன பாபமான செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும் காத்தருளும்படி வேண்டுகிறேன். அவன் தாராளத் தன்மையும், வேண்டி நிற்கும் போது தருபவனும் ஆவான்.


அல்லாஹ் தனது ஸலாத்தையும் ஸலாமையும் கருணை நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும் பொழிவானாக. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்து; அவனே இந்த நற்செயல்களைப் புரிவதற்குக் கருணையுடன் அருள் புரிந்தவனாவான்.


அல்லாஹ்வின் முன்னிலையில் ஏழ்மையின் நிலையிலிருக்கும் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் ஆகிய நான், ஹிஜ்ரி 1392 ஷஃபான் மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இப்பணியை நிறைவு செய்தேன்.




அல்ஹம்துலில்லாஹ்

Comments