மங்கையருக்கான மாநபி மணிமொழிகள்🧕

 


மங்கையருக்கான மாநபி  மணிமொழிகள்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


1. இல்லத்தில் தங்குவதே சிறந்தது


பள்ளிவாசலுக்கு செல்வதைவிட இல்லத்தில் தங்கியிருப்பதே ஒரு பெண்ணுக்கு சிறந்ததாகும்.


அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அருளியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்ப தாவது,


‎‫لا تَمْنَعُوا نِسَاءَكُمُ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ‬‎


'உங்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்காதீர்கள், ஆயினும், இல்லங்கள்தாம் அவர் களுக்கு சிறந்தவையாகும்' (சஹீஹான ஹதீஸ் பதிவு: அபூ தாவுது, இப்னு குஸைமா)


உம்மு ஹுமைத் அஸ்ஸாயிதிய்யா ரழியல் லாஹு அன்ஹா என்பார் ஒரு சிறந்த ஸஹாபியப் பெண்மணி. அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைச் சந்தித்து, 'இறைத் தூதரே, தங்களோடு சேர்ந்து தொழ விரும்புகிறேன். (எனக்கு அனுமதி தாருங்கள்)' என முறையிடுகிறார்கள். 'நீங்கள் என்னோடு சேர்ந்து தொழ விரும்புவதை நானறிவேன். ஆனால், உங்கள் வீட்டின் உட்பகுதியில் தொழு வது உங்கள் அறையில் தொழுவதைக் காட்டிலும் சிறந்தது. உங்கள் அறையில் தொழுவது உங்கள் குடும்ப வளாகத்தில் தொழுவதைக் காட்டிலும் சிறந்தது. உங்கள் வளாகத்தில் தொழுவது உங்கள் மஹல்லா பள்ளிவாசலில் தொழுவதைக் காட்டி லும் சிறந்தது. உங்கள் மஹல்லா பள்ளியில் தொழுவது எனது இப்பள்ளியில் தொழுவதைக் காட்டிலும் சிறந்தது' என்றார்கள் அண்ணலார். அதேபோல் அவர் தம்வீட்டின் இறுதிப் பகுதியில் ஓர் அறையை ஒதுக்கி அங்கு தொழுது வந்தார். தன் னிறைவனைச் சந்திக்கச் செல்லும்வரை அங்கேயே தொழுது வந்தார். (முஸ்னத் அஹ்மத், சஹீஹ் இப்னு குஸைமா ஹஸன் ஹதீஸ் இது என்கிறார் அல்பானி)


‎‫إِنَّ أَحَبَّ صَلَاةٍ تُصَلِّيهَا الْمَرْأَةُ إِلَى اللَّهِ أَنْ تُصَلِّي فِي أَمَشَدِ بَيْتِهَا ظُلْمَةٌ‬‎


'வீட்டின் உள்ளறையில் தொழுவதுதான் ஒரு பெண்ணின் தொழுகையிலேயே மிகச்சிறந்தது' (அபூ ஹுரைரா/ இப்னு குஸமா)


* அறிந்து கொள்க: மஸ்ஜிதுந் நபவியில் தொழுதால் மற்றயிடங்களில் தொழுவதைக் காட் டிலும் ஆயிரம் மடங்கு நன்மை உண்டு. ஆனால் இவ்விதி ஆண்களுக்குத்தான் பொருந்தும், பெண்களுக்குப் பொருந்தாது என்பதை மேற் கண்ட நபிமொழியின் வாயிலாக அறிகிறோம்.


பெண்களுக்கும் அந்தளவு நன்மைகள் கிடைப்ப தாக இருந்தால் அவற்றையடைய விடாமல் ஸஹாபியப் பெண்மணிகளை அண்ணலார் தடுத்திருக்கமாட்டார்கள். ஆக, வீட்டின் உட்பகுதி யில் பெண்கள் தொழவேண்டும் என்பதுதான் ஷரீஅத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.


அடுத்து, பள்ளிவாசல்களில் இறைவனைத் தியானிப்போரைப் பற்றி அத்தியாயம் அன்னூ ரில் உள்ள ஓர் இறைவசனம் சிறப்பித்துச் சொல் கின்றது. அவ்வசனத்தில் ஆண்கள் என்னும் பதம் கையாளப்பட்டுள்ளது.


‎‫فِي بُيُوتٍ أَذِنَ اللهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْدُ மற்றும்‬‎


(அவனது ஒளியின்பால் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள்) எந்த இல்லங்கள் உயர்த்தப்படுவ தற்கும், எங்கே தன் பெயர் நினைவுகூரப்படுவ தற்கும் அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளானோ அந்த இல்லங்களில் காணப்படுகிறார்கள். அவற் றில் காலை, மாலை நேரங்களில் அவனைத் துதித் துக் கொண்டிருப்பவர்கள்.


எத்தகைய ஆண்கள் எனில், இறைவனை நினை வுகூருவதை விட்டும், தொழுகையை நிலைநாட்டு வது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும் வியா பாரமும் கொள்வினை கொடுப்பனையும் அவர் களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங் கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒருநாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 24:36)


இதில் உள்ள 'ரிஜாலுன்' எனும்பதம் ஆண்களை மட்டுமே குறிப்பிடுகின்றது என்பதை அறிக!


முன்மாதிரிச் சமூகமாக திகழுகின்ற ஓர் இஸ்லா மிய சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என் பதைப் பற்றி வான்மறை குர்ஆன் கீழ்வரும் வச னத்தில் எடுத்துரைக்கின்றது.


‎‫وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولى‬‎


'உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந் தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனை யையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள்' (அல்குர்ஆன் 33:33)


பெண்களின் நிலை இதுதானென்று இஸ்லாமிய ஷரீஅத் வரையறுத்துக் கூறுகின்றது. பெண்கள் இல்லங்களில்தான் தங்கி இருக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் வீட்டை விட்டு வெளியே வந்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வெளி யே வர அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள் ளது. அத்தருணங்களில் அவர்கள் அச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். 

ஒரு ஜாஹிலிய்யா சமூகத்தில் தேவை உள் ளதோ இல்லையோ, காரணம் இருக்கின்றதோ இல்லையோ பெண்கள் சர்வசாதாரணமாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் வெளியே சுற்றுவதைத் தான் 'பெண்ணுரிமை'யின் அடையாளமாக ஜாஹி லிய்யா சமூகம் அடையாளப் படுத்துகின்றது. இறைநிராகரிப்புக் கோட்பாட்டின் அடிப்படை யில் பிறப்பெடுத்த ஜாஹிலிய்யாவின் அனைத்து அம்சங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி அவற் றை அகற்றி இறைநம்பிக்கைக் கோட்பாட்டை உள்ளீடு செய்து இறைச் சட்டங்களின் அடிப் படையில் அச் சமூகத்தை செம்மைப்படுத்த எண்ணுகின்றது இஸ்லாம். எனவேதான் மேற் கண்ட இறைவசனத்தில் அடுத்தவரியிலேயே ஜாஹிலிய்யா சமூகம் கடைப்பிடித்த வழக்கத்தின் மீதும் அந்த எண்ணத்தின்மீதும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. 'முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யா ரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள்'


இறைமறை குர்ஆன் பெண்களையும் இல்லங் களையும் இணைத்து இன்னும் இரு வசனங்களி லும் குறிப்பிடுகின்றது.


‎‫وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَتِ اللَّهِ وَالْحِكْمَةِ‬‎


'உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற இறைவச னங்களையும் நுண்ணாஞக் கருத்துகளையும் நினைவில் வையுங்கள்' (அல்குர்ஆன் (33:34)


‎‫لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ‬‎


'அப்பெண்களை அவர்களின் இல்லங்களி லிருந்து நீங்கள் வெளியேற்ற வேண்டாம்' (அல் குர்ஆன் 65:1)


சுவர்கள், திரைகளுக்குப் பின்னால் அந்நிய ஆண்களின் பார்வையில் படாமலும் பொதுத் தளங்களில் அந்நிய ஆண்களோடு கலக்காமலும் இருப்பதுதான் உண்மையான ஹிஜாபாகும். அதற்குரிய மிகச்சரியான இடம் இல்லமே ஆகும்.


ஒருவேளை அந்நிய ஆண்களுக்கு முன்னால் வந்துதான் ஆகவேண்டும் என்னும் நிலை தோன் றினால் அணிந்துள்ள ஆடைகளையும் அணி கலன்களையும் முழு உடலையும் அலங்காரங் களையும் மறைக்கின்ற வகையில் ஹிஜாபை அணிந்து கொண்டு வெளியே வரலாம்.


பெண்கள் பள்ளிவாசலுக்கு போய் தொழுகும் போது பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடித் தாக வேண்டும் என்கின்றது, ஷரீஅத். அப்துல் லாஹ் இப்னு மஸ்ஊதுடைய மனைவியான ஸைனப் ஸகஃபிய்யா, அண்ணல் நபிகளாரிடம் பள்ளிவாசலில் தொழுவதைப் பற்றி விசாரித்தார். அப்போது அண்ணலார்


‎‫إِذَا شَهِدَتْ إِحْدَا كُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا‬‎


நீங்கள் பள்ளிக்கு போய் தொழுவதாக இருந் தால் அதற்குரிய கட்டுப்பாடுகளை பின்பற்றியாக வேண்டும். வாசனைத் திரவியங்களை தடவிக் கொண்டு போகக்கூடாது என அறிவுறுத்தி னார்கள். (சஹீஹ் முஸ்லிம்)


உடை, நடை, நறுமணம் என அனைத்து விஷ யங்களிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தாக வேண்டும்.


'கற்பின் கவசம்' என்னும் நூலில் சகோதரர் பகர் இப்னு அப்துல்லாஹ் அபூ ஸைத் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். (இன்ஷா அல்லாஹ் அந்நூல் தமிழில் கூடிய விரைவில் வெளிவர உள்ளது)


1) மனித இயல்புகளை அடிப்படையாக கொண்டு மனிதர்களின் இருப்பை கவனத்தில் கொண்டு அவர்களின் சூழல்களை கருத்தில் கொண்டு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய அடியார்களுக்கான சட்ட திட்டங்களை ஷரிஆ வை வகுத்துள்ளான். மனித சமூகத்தின உறுப் பினர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் இன்னின்ன பங்கு இன்னின்ன பொறுப்பு என மிகச் சரியான பங்கீட்டை வகுத்துள்ளான். அதன் படி பெண்கள் வீடுகளுக்கு உள்ளே இருக்க வேண்டும் ஆண்கள் வீடுகளுக்கு வெளியே இருக்க வேண்டும்.


2) ஷரிஆவை பொருத்தவரை இஸ்லாமிய சமூகம் என்பது தனித்தனி சமூகம் ஆண்களும் பெண்களும் கலக்காத சமூகம். பெண்கள் தங்க ளுக்கு மட்டுமே உரித்தான ஒரு சமூக ஒழுங்கில் வாழ்கிறார்கள். அது இல்லம் மற்றும் இல்லம் சார்ந்த இடங்கள் ஆண்கள் தங்களுக்கே உரித்தான ஒரு சமூக ஒழுங்கில் காணப்படுகிறார்கள் அது இல்லங்களுக்கு வெளியே உள்ள களம்.


3) தன்னுடைய வாழ்வில் தான் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மையல் கொண்ட ஒரு தளத்தோடு பெண் பிணைக்கப்பட்டிருக்கின்றாள். அது இல்லம் ஆகும். தன் நேரத்தை உழைப்பை அங்கே அவர்கள் செலவிட வேண்டும். பல்வேறு புறங்களிலிருந்தும் தன்மீது சுமத்தப்படுகின்ற பொறுப்புகளை அங்கிருந்து அவள் நிறைவேற்ற வேண்டும். இல்லம் சார்ந்த பொறுப்புகள் தான் பெண் மீது சுமத்தப்படுகின்றன. மனைவி, தாய், தன் கணவனின் இல்லத்திற்கு பொறுப்பாளி, அவ்வில்லத்தில் வசிப்போரை கண்கானிப்பவள், அவ்வில்லம் சார்ந்தோரின் உணவு மற்றும் இன்ன பிற தேவைகளை ஏற்பாடு செய்பவள், இளம் தலைமுறையினரை பயிற்றுவிப்பவள் என்று இப்படிப்பட்ட பல்வேறு பொறுப்புகள் பெண்கள் மீது சுமத்தப்படுகின்றது.


அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழியின் வாயிலாக இது ஊர்ஜிதமாகின்றது. அண்ணல் நபி களார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் சொன்னார்கள் ‎‫وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ‬‎


தன் கணவனின் இல்லத்திற்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் ஒரு பெண் பொறுப்பாளி ஆவாள். தன்னுடைய பொறுப்பை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். (புகாரி, முஸ்லிம்)


'ஓர் அடியான்மீது இறைவன் பொறுப்பை சுமத் தியிருக்க அதனை முறைப்படி நிறைவேற்றாமல் அவன் செத்துப்போய்விட்டால் சொர்க்கத்தை அவனுக்கு அல்லாஹ் ஹறாமாக்கிவிடுவான்' (சஹீஹ் முஸ்லிம்)


4) பெண் தன்னுடைய இல்லத்தில் இருந்தவாறு இறைவன் தன்மீது கடமையாக்கியுள்ள தொழுகை களையும் இன்னபிற பொறுப்புகளையும் நிறை வேற்ற வேண்டும். இதனால்தான் இல்லத்தை விட்டு வெளிச் செல்ல தேவையில்லாத வகையில் அவர் மீது பொறுப்புகள் கடமையாக்கப்பட்டன. ஜும்ஆ தொழுகையில் கலந்து கொள்வதோ ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுவதோ பெண்கள் மீது கடமையாக்கப் படவில்லை. ஹஜ் கடமையை அவள் நிறை வேற்றுவதாக இருந்தாலும் தக்க திருமணத் தடையுள்ள மஹரமான ஆண் துணையோடுதான் நிறைவேற்ற வேண்டும் என்னும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


5) இந்த நோக்கத்திற்காகத்தான் தூய ஷரிஆ, தம் செயல் வட்டத்திற்குள் உள்ளடக்கியுள்ள பெண் ணின் கண்ணியம் பெண்ணின் மானத்திற்கான பாதுகாப்பு, அரண் போன்ற இந்த நோக்கத்திற் காகத்தான் அவளுடைய செயற்களத்தை அவ ளுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான இடமாக வீட்டை மெய்ப்பிக்கின்றது.

Comments