ரமளான் மாதத்தில் மாதவிடாய்த் தடுப்பு மாத்திரைகள் உட்கொள்வது பற்றிய மார்க்கத் தீர்ப்பு என்ன?
விடை:
அந்த மாத்திரைகள் உட்கொள்வதை, தீங்குகள் எதுவும் இல்லை எனும் வரையிலும், அவை உட்கொள்வதற்குக் கணவனின் அனுமதி இருக்கும் வரையிலும் அனுமதிக்கப் படமுடியும். எவ்வாறாயினும், என் அறிவுக்கு எட்டிய வரையில் இத்தகையவை பெண்ணுக்குத் தீங்கு விளைவிக்கவே முடியும். குறிப்பாக, ஓர் இயற்கை ஒழுங்கின்படி மாதவிடாய் மூலம் இரத்தம் வெளிவருகின்றது என்பதை அறிந்துள்ள நிலையில் இவ்வாறு இந்த இயற்கைக்கு எதிராக செயற்பட்டு அதைத் தடைசெய்வது தீங்கை வருவிப்பதாகும். அத்துடன் இத்தகைய மாத்திரைகள் உட்கொள்வதால் பெண்ணினது மாதவிடாய்க் கால ஒழுங்கில் பாதகம் ஏற்படலாம்; அதனால் அவனது தொழுகையை உரிய வேளையில் நிறைவேற்றுவதில் சந்தேகமும் சிக்கலும் தோன்ற முடியும்; அத்துடன் அவளது கணவனுடன் உடலுறவு கொள்வதற்கு முடியுமா? அல்லது முடியாதா? என்ற மனச்சிக்களையும் உருவாக்கிவிடமுடியும் எனவே, இவற்றிற்காகவும் இன்னும் சில காரணிகளுக்காகவும் இந்த மாத்திரைகள் உட்கொள்வது சட்ட முரணானது எனக் கூற எனக்கு முடியாவிட்டாலும், நான் அதை விரும்பவில்லை; அதனால் அதை எவரும் உட்கொள்ள ஊக்குவிப்பதுமில்லை.
நான் கூறுவது என்னவென்றால், பெண்கள், தமக்காக அல்லாஹ் விதித்துள்ளவற்றை மனமுவந்து ஏற்க வேண்டும். அத்துடன், நபி (ஸல்) அவர்கள் தனது துணைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தபின் மாதவிடாய் உண்டான போது நவின்றதை நினைத்துப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், "ஆயிஷாவே! உங்களுக்கு மாதவிடாய் உண்டாயிற்றா?" ஆயிஷா (ரலி) அவர்கள், "ஆமாம்" என்றார்கள். அப்பொழுது "இதுதான் ஆதமுடைய அனைத்துப் பெண்களுக்கும் அல்லாஹ் விதித்துள்ள விடயமாகும்" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். "62
62 ஸஹீஹுல் புகாரி (அரபு - ஆங்கிலம்) Vol: 1. 182)
எனவே, பெண்கள் பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ள முயல வேண்டும். சிலவேளை, ஒரு பெண்னுக்கு உண்டாகும் மாதவிடாய் காரணமாக தொழுவதற்கோ நோன்பு நோற்பதற்கோ முடியாதிருப்பின், அக்கட்டத்தில் அல்லாஹ்வைப் புகழ்வது, தான தருமங்கள் செய்வது. மக்களுக்கு நன்மை புரிவது போன்ற நற்காரியங்களுக்கான கதவு திறக்கப்பட்டேயுள்ளது. இவற்றைச் செய்யலாம் இவை அல்லாஹ்வின் உவப்புக்குரிய அழகிய நற்காரியங்களாகும்.
Comments
Post a Comment
Best comment is welcomed !