தேவைப்பட்டால் வெளியே செல்லலாம்
قَدْ أُذِنَ أَنْ تَخْرُجْنَ فِي حَاجَتِكُنَّ
'தேவை இருக்கும் பட்சத்தில் வெளியே செல்ல அனுமதி உள்ளது' என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறியதாக, அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
வேறுவழியின்றி வெளியே போயே தீர வேண் டும் என்னும் கட்டாயத் தேவை இருந்தால் ஒழிய, பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதை இஸ்லாம் அங்கீரிக்கவில்லை, ஆதரவளிக்க வில்லை. மற்றவர்கள் என்ன சொல்வார்களோ? நம்மைப் பற்றி என்னவெல்லாம் எண்ணுவார் களோ? என்றெல்லாம் எண்ணி சிந்தனையை அலைபாய விடாமல் இறைவனின் ஷரீஅத் என்ன விதித்திருக்கின்றது? மனிதனுடைய இயற்கை எவ்விதம் உருவாக்கப் பட்டிருக் கின்றது? என்பதையே நாம் பார்க்க வேண்டும்.
இஸ்லாம் பரிந்துரைக்கின்ற ஹிஜாப் இரு வகைப்படுகின்றது. முழு உடலையும் மறைப்பது ஒருவகை. ஆண்களும் பெண்களும் பொதுத் தளங்களில் ஒன்றாகக் கலக்காமல் இருப்பது பிறிதொரு வகை. முழு ஹிஜாப் உடையை அணிந்துகொண்டு ஒரு பெண் அந்நிய ஆண் களுக்கு மத்தியில் சங்கோஜமில்லாமல் வளைய வருகின்றாள் என்றால், இஸ்லாமிய ஷரீஅத்தைப் பொருத்தவரை அவள் ஹிஜாபைக் கடைப்பிடிக்க வில்லை என்றே பொருள்.
'நிகாப்' போன்ற முழு அளவிலான ஹிஜாபை அணிந்துகொண்டு பொதுத் தளங்களிலும் அங் காடிகளிலும் உணவு மையங்களிலும் வலம் வரு கின்ற நவீன மகளிர் தாம் இஸ்லாமிய மகளிர் தாமோ என சிந்தித்தாக வேண்டிய தருணம் இது. இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட பெண்கள் என்பது தான் முஸ்லிமஹ் என்னும் சொல்லுக்குப் பொருள். இப்பொருள் கொண்ட முஸ்லிமஹ் என்னும் பதம் தமக்கும் பொருந்துமா என அவர்கள் சற்றே சிந்தித்து ஆராய வேண்டும்.
3. பெண்கள் வெளியேறினால் சீர்குலைவு தோன்றும்
إِنَّ الْمَرْأَةَ عَوْرَةٌ ، فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَ فَهَا الشَّيْطَانُ،
وَأَقْرَبُ مَا تَكُونُ مِنْ وَجْهِ رَبِّهَا وَهِيَ فِي قَعْرِ بَيْتِهَا
'பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் (வீட்டைவிட்டு) வெளியே கிளம்பினால் ஷைத்தான் அவளைப் பின்தொடருகிறான். வீட் டின் உட்பகுதியில் இருக்கும்வரை தன்னிறை வனின் திருமுகத்துக்கு அருகில் இருப்பாள்' (திர் மிதீ, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்)
கஅர் என்னும் சொல் இந்நபிமொழியில் கையா ளப்பட்டுள்ளது. கஅர் என்றால் உட்பகுதி, உள் ஆழப்பகுதி, கடைசிக்கீழ்ப்பகுதி எனப்பொருள்.
அப்படியென்றால் பெண்களை நீங்கள் வீட்டில் பூட்டிவைக்க, சிறை செய்துவைக்க விரும்புகிறீர் களா? என்றொரு கேள்வியை நீங்கள் எழுப்ப லாம். அவள் வேலைக்குப் போகக்கூடாதா? விற் கவோ வாங்கவோ செல்லக்கூடாதா? நோயுற்றால் சிகிச்சைக்காக வெளியே போகக்கூடாதா? தவா ஃப் செய்யக்கூடாதா? ஸஈதொங்கோட்டம் ஓடக் கூடாதா?
சிறையில் இருப்பதாக நாங்கள் சொல்ல வில்லை. வீட்டின் உட்பகுதியில் இருப்பதை சிறையில் இருப்பதக நீங்கள் கருதினால் இறை வன்தான் அவளைச் சிறை செய்துள்ளான். வீட் டில் தங்கியிருப்பதை சிறையென்று நாங்கள் கூற வில்லை. சிறை என்பது ஒரு தண்டனை. தண் டனைக் காலம் முடியும்வரை வெளியே வரவோ சிறைச் சுவர்களைத் தாண்டிப்போகவோ முடி
யாது. ஆனால், இங்கு அப்படி ஏதும் கிடையாது.
தேவை இருந்தால் விரும்பினால் தாராளமாக
அவள் வெளியே வரமுடியும். சிறைபட்டிருக்க
அவள் ஒன்றும் குற்றவாளி அன்று!
அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காலத்தில் பெண்கள் தம் வேலைகளை நிறைவேற்றவும் விற்கவும் வாங்க வும் மற்றும் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வும் வெளியே வந்திருக்கிறார்கள். ஆனால், இன்று பெண்கள் வெளியே நடமாடுவதைப் போல, பெண்ணுரிமை பேசுவோர் எதிர்பார்க்கும் கோலத்தில் அவர்கள் வெளியே சுற்றித்திரிந்து கொண்டிருக்கவில்லை.
இரண்டாவதாக, அண்ணலார் காலத்தில் மண முடித்த முதிர்ந்த பெண்கள் தாம் தேவை கருதி வீட்டிற்கு வெளியே வருவார்கள். இளம் பெண்க ளும் சிறுமிகளும் வீட்டிலேயே இருப்பார்கள். இன்றோ இளம் பெண்களும் யுவதிகளும்தான் வெளியே சுற்றுகிறார்கள். அதனால்தான் ஈதுப் பெருநாள் அன்று அவர்கள் யாவரையும் தொழுகைத் திடலுக்கு வருமாறு அழைப்பு விடுக் கப்பட்டது, இறைவனின் தூதரே அழைப்பு விடுத் திருக்கிறார்கள்.
أُمِرْنَا أَنْ نُخْرِجَ الْعَوَاتِقَ وَذَوَاتِ الْخُدُورِ
பெருநாள் தொழுகையின் போது பெண்களும் ஈதுத் திடலுக்கு வர வேண்டும் என ஆணை பிறப் பிக்கப் பட்டது. தொழ முடியா நிலையில் இருந் தாலும் கூட வரவேண்டும் எனப் பட்டது. (அறி விப்பு: உம்மு அதிய்யா, பதிவு: முஸ்லிம்)
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல் லம் அவர்களடைய காலத்தில் பற்பல தேவை களுக்காகவும் இஸ்லாமிய கடமைகளை நிறை வேற்றுவதற்காகவும் பெண்கள் வீட்டுக்கு வெளி யே வந்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இறைவனின் பாதையில் ஹிஜ்ரத் செய்வதைப் பற்றியும் இறைப் பாதையில் போரிடுவதைப் பற்றியும் ஆலு இம்ரான் அத்தியாயத்தின் கடைசித் தொகுதி வசனம் ஒன்று பேசுகின்றது. (எண்:195) அண்ணல் நபிகளாரோடு சேர்ந்த பல ஸஹாபியப் பெண்கள் போரிலும் ஜிஹாதிலும் கலந்துகொண்டதை பல்வேறு நபிமொழி நூற்கள் பதிவு செய்துள்ளன. உஹதுப் போரில் ஆயிஷா அவர்களும் உம்மு ஸுலைம் அவர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அண்ணலாரோடு ஏழு போர்களில் தாம் பங்கேற்றதாக உம்மு அதிய் யா ரழியல்லாஹு அன்ஹா குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வுகள் யாவும் அன்றாடம் நிகழ்கின்ற யதார்த்த நிகழவுகள் அல்ல! பெண்களும் கலந்து கொண்டே ஆக வேண்டிய கட்டாயத் தேவைகள்.
ஆனால், இன்றோ சாதாரண பொது நாள்களில் பெண்கள் வெளியே வருமாறும் சுற்றித் திரியுமாறும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. அதுவும் இளம் பெண்களுக்கும் யுவதிகளுக்கும்தான் இவ் வழைப்பு விடுக்கப்படுகின்றது. இளமைப் பரு வத்து பெண்களைத்தானே சீர்குலைவை ஏற்படுத் தும் கருவிகளாகப் பயன்படுத்த முடியும்? நாற் பது வயதைத் தாண்டிய பெண்களைப் பற்றி இவர் கள் அலட்டிக் கொள்வதே இல்லை. ஒருசில ஜாஹிலிய்யா பணிகளில் இளமையைக் கடந்து விட்ட பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவதே கிடையாது.
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களும் ஆண்களும் சரிசமமாக இருக்க வேண்டும் என இன்று கூறப்படுகின்றது. ஆண்களும் பெண்க ளும் பொதுத் தளங்களில் இரண்டறக் கலக்க வேண்டும். பெண்கள் தம் ஹிஜாபைத் துறக்க வேண்டும். ஹிஜாபைத் துறக்காமல் சரிசம சமத் துவத்தை இவர்களுடைய கருத்தின்படி அடை யவே முடியாது.
ஆக, மனிதர்களை ஷைத்தானின் பக்தர்களாக மாற்றுகின்ற இன்றைய ஜாஹிலிய்யா பெண்களை எவ்வகையிலாவது எதைச்சொல்லியாவது வீட்டை விட்டு வெளியே கொண்டுவர வேண் டும் என்பதில் முனைப்போடு உள்ளது. ஒரு பெண் வீட்டைவிட்டுக் கிளம்பினால் பின்னா டியே ஷைத்தானும் வருகின்றான். காண்போர் கண்களில் அவளை அழகாகக் காட்டுகின்றான், சில்மிஷங்களிலும் சீண்டல்களிலும் ஈடுபடுமாறு அவர்களை தூண்டுகின்றான். என்னதான் நாகரீ கம், பண்பாடு வளர்ந்தாலும் இந்நடைமுறை இன் றும் தொடர்வதை காணத்தான் செய்கிறோம். காண் போரை ஈர்க்கும் விதத்தில் தம்மை அழகுபடுத்திக் கொள்ளுமாறும் அலங்கரித்துக் கொள்ளுமாறும் பெண்களை ஷைத்தான் தூண்டுகின்றான்.
إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُورَةٍ شَيْطَانٍ وَتُدْبِرُ فِي صُورَةٍ شَيْطَانٍ
'பெண் என்பவள் ஷைத்தானைக் கொண்டுவரு கிறாள், ஷைத்தானை விட்டுச் செல்கிறாள்' என இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். (முஸ்லிம், அந்நிகாஹ்)
பெண் என்பவன் அவ்ரத் (மறைவானவள்) என் பதை உம்மத்தின் பொறுப்பாளர்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லையே தவிர மற்ற எல்லா இடங்களுக்கும் சர்வ சாதாரணமாக போய் வருகின்றார்கள். மருத்துவமனை போன்ற சில இடங்களுக்கு தவிர்க்க முடியாமல் போக வேண்டியிருக்கின்றது. பல சமயங்களில் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏன், பிரசவம் கூட பார்க்க வேண்டியிருக்கின்றது. இவற்றை கருத்தில் கொண்டு தக்க ஏற்பாடுகளை செய்தாக வேண்டி யது உலமாக்கள் மற்றும் வழிகாட்டிகளின் பொறுப்பாகும்.
என்னதான் சிகிச்சை என்றாலும் மருத்துவப் பணி புனிதமானது என்றாலும் 'மூன்றாமவனாக அங்கு ஷைத்தான் வந்துவிடுவான்' என்னும் நபி மொழியையே பல்வேறு நிகழ்வுகள் ஊர்ஜிதப் படுத்துகின்றன.
Comments
Post a Comment
Best comment is welcomed !