மாதவிடாயிலிருந்து தூய்மையாதல்
வினா 2
ஒரு பெண் மணமுடித்து இரண்டு மாதங்களுக்குப்பின், அவன் மாதவிடாயிலிருந்து நன்கு சுத்தமான பின்னர் சிறுதுளி இரத்தம் வரக்காண்கின்றாள். இத்தகைய நிலையில் அவளுக்கு தொழுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் அனுமதிக்க முடியுமா? அல்லது அவள் என்ன செய்யலாம்?
விடை
பெண்களின் மாதவிடாய், மணம் புரிவது தொடர்பாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கரையில்லாக் கடல் அளவு விசாலமானதாகும். அவற்றுள் சில மாதவிடாய்த் தடுப்பு மாத்திரைகள் உட்கொள்வதாலும், கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதாலும் விளைவனவாகும் முந்தைய மக்கள் தற்போதுள்ள பல பிரச்சினைகளை தம் வாழ்வில் சந்தித்ததில்லை. இன்றைய நிலை மிகவும் வருந்தத் தக்கது.
நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய பொதுவான சட்டம் என்னவென்றால், மாதவிடாயற்ற ஒரு பெண் அதிலிருந்து சுத்தமாகிவிட்ட தற்கான தெளிவான அறிகுறிகளைக் கண்டால், அப்பொழுது 'அவள் சுத்தமானவள் என்பதாகும். இது விடயத்தில் 'வெள்ளை வருவது' பற்றி பெண்கள் அறிவர் ஒரு பெண் சுத்தமான பின் வெளிவரும் மஞ்சள் நிறத்தன்மையுடைய திரவமோ, ஈரத் திரவமோ துளிகளோ மாதவிடாய்த் தொடர்பானவை அல்ல. எனவே, அப்பெண் தொழுவது, நோன்பு நோற்பது, தனது கணவனுடன் உடலுறவு கொள்வது என்பவற்றை அவை தடை செய்யாது. உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நாம் மஞ்சள் நிறத் தன்மையில்வெளியாகும் திரவத்தை முக்கியமான ஒன்றாக ஒரு போதும் கருதியது இல்லை" என்று. (இந்த ஹதீஸ் புகாரி கிரந்தத்தில் பதிவாகியுள்ளது) அபூதாவுத் ஹதீஸ் கிரந்தத்தில் "சுத்தமான பின்+63 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (இதன் கருத்து மாதவிடாயிலிருந்து சுத்தமான பின் வெளியாகுபவை மாதவிடாய் சார்ந்தன எனக் கருதப்படுவது இல்லை என்பதாகும்.)
ஓர் எச்சரிக்கை; பெண்கள், தாம் நிச்சயமாக சுத்தமாக இருப்பதாக அறிந்து கொள்வதற்கு முன் எது விடயத்திலும் அவசரப்படக் கூடாது. சில பெண்கள் மாதவிடாய் உண்டாகிய பின் அது சற்று காய்ந்துவிட்டால் போதும், குளிப்பதற்கு விரைந்து விடுவார்கள் அன்றி, தாம் மாதவிடாயிலிருந்து நன்றாக சுத்தமாகிவிட்டோமா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வது இல்லை. நபித் தோழர்களின் மனைவியர் மாதவிடாயற்ற போது தமது மறைவிடத்தில் வைக்கும் பருத்தித் துணி வைப்பை (Pad) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அனுப்பி விளக்கம் கேட்டு நிற்பார்கள். அப்பொழுது "வெள்ளைத் திரவம் வெளியாவதைக் காணும் வரை (மாதவிடாயிலிருந்து சுத்தமாகிவிட்டதாக முடிவு செய்ய) அவசரப்படவேண்டாம்" என அறிவுரை பகர்வார்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
Comments
Post a Comment
Best comment is welcomed !