ஈரமாக வெளியாகும் திரவம் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

 


ஈரமாக வெளியாகும் திரவம் பற்றி என்ன கூறுகிறீர்கள்? அது சுத்தமானதா அல்லது அசுத்தமானதா?


விடை


இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுப்படி நாம் அறிந்து வைத்துள்ளதாவது, ஆண் பெண் சகலரதும் மறைவான பகுதிகளிலிருந்தும் மலக்குடலிலிருந்தும் வெளிவருபவைகளுள் விந்தைத் தவிரவுள்ள எல்லாமே அசுத்தமானவை; விந்து மட்டுமே சுத்தமானது எனவே, பெண்களிடமிருந்து எவை வெளியாகின்றதோ அவை அசுத்தமானவை அப்பொழுது வுளூஉ செய்வது அவசியம். இது தொடர்பாக வேறு சில அறிஞர்களுடன் நான் கலந்துரையாடிய பின் என்னால் வரமுடிந்த முடிவு இதுவாகும் இருந்தாலும் என்னைப் பொறுத்தமட்டில் இது தொடர்பாக ஒரு பிரச்சினையான நிலை இருக்கவே செய்கின்றது. அதாவது சில பெண்களுக்கு இத்தகையவை வெளிவருவது தொடராக இருக்கின்றது. இத்தன்மையைத் தொடர்ந்தாற் போல் சிறு நீர் வெளியாகும் ஒருவரின் தன்மையுடன் ஒப்பு நோக்கி, தொழுகைக்குரிய வேளை வந்தால் சம்பந்தப்பட்டவர் வுழூஉ செய்து கொள்வதையே தீர்வாகக் கொள்ளலாம் இதுபற்றி நான் சில மருத்துவர்களுடன் கதைத்தேன் அதற்கமைய நான் சொல்வதாவது இவ்வாறு வெளியாகுபவை சிறுநீர்ப்பையிலிருந்து வெளியாகுமாயின் நான் மேலே தந்துள்ள தீர்வு அதற்குறியதாக அமையும் சிலவேளை, அவ்வாறு வெளியாகுபவை பிள்ளை பிறக்குமிடத்திலிருந்து வருமாயின் அதற்காக வழூஉ செய்வது உரிய பரிகாரமாக அமையும் ஆனால் வெளியாகுபவை தூய்மையானவை சுத்தமானவையாயின் அத்தகையவைபட்டுவிட்ட உடைகளை கழுவுவது அவசியமில்லை.


வினா 4


நிஃபாஸுடையவனாக இருக்கும் ஒரு பெண் நாற்பது நாட்களுக்கு முன்னர் தொழுகையையோ நோன்பையோ நிறைவேற்ற முடியுமாயிருந்தும் குறிப்பிட்ட அந்நாட்கள் பூர்த்தியாகும் வரை காத்திருக்க வேண்டுமா? அல்லது அவளது இரத்தம் வெளியாவது நின்று, சுத்தமாகிவிட்ட எக்கட்டத்திலும் இவ்வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியுமா?


விடை


நிஃபாஸுடைய ஒரு பெண்ணுக்கு குறிக்கப்பட்ட கால எல்லையொன்று இல்லை. அவள் நிஃ பாஸுடைய இரத்தத்தைக் கண்டு கொண்டு இருக்கும் வரையிலும் தொழுகை, நோன்பு, தனது கணவனுடன் உடலுறவு கொள்ளுதல் என்பனவற்றிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் அவள் குறிப்பிட்ட நூற்பது நாட்களுக்கு முன்னர் (சிலவேளை 10வது அல்லது 15வது நாளில்) சுத்தமாகிவிட்டால், அதன் பின் மேற்காணும் அனைத்து வணக்க வழிபாடுகளிலும் சிறப்பாக ஈடுபடுவதுடன், அவள் தனது கணவனுடன் உடலுறவு கொள்ளவும் முடியும்


நிஃபாஸ் என்பது உடற்கூறு சம்பந்தப்பட்ட ஒரு விடயம் நிஃபாஸுக்குரிய சட்டங்கள் நிஃபாஸ் தொடர்பான இரத்தம் இருக்கின்றது அல்லது இல்லாதிருக்கின்றது என்பதைப் பொறுத்து பிரயோகிக்கப் படுகின்றது எவ்வாறாயினும், அறுபது நாட்களுக்கு மேல் ஒரு பெண்ணுக்குத் தொடராக இரத்தம் வெளியாகுமாமின் அப்பொழுது அவள் இஸ்திஹாதாஹ் என்ற நிலைக்கு ஆளாகின்றாள் இந்நிலையில், நாற்பது நாட்களுள் சாதாரன நாட்களை வழமையான மாதவிடாய் நாட்களாகக் கருதி, அந்நாட்களில் தொழுகை, நோன்பு, தனது கணவனுடன் உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அந்நாற்பது நாட்களின் முடிவில் அவள் இஸ்திஹாதாஹ் என்ற நிலையில் இருப்பதாகக் கருதி, குளித்துவிட்டு தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.*

Comments