வெறுப்பு ஒரு நெருப்பு!
குடும்பத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.
உறவுகளில் எல்லோரும் ஒரே குணத்தில் பழக மாட்டார்கள்.
சொந்த பந்தங்களில் பலதரப்பட்டப் பண்புகளை உடையவர்கள் இருப்பார்கள்.
வாசனைகள் எல்லாம் ஒரு மாதிரியாக இருந்தால் அதுவும் சலித்துவிடும் அல்லவா?
பூக்கள் எல்லாம் ஒரே நிறமாக இருந்தால் பார்க்க அலுப்பு தட்டிவிடுமல்லவா?
பூமி முழுக்க ஒரே மாதிரியாக இருந்தால் சுற்றி பார்க்க மனம் வருமா?
கடல்களில் பல வகை! மலைகளில் பல வகை! மரங்களில் பல வகை! நீர்களில் பல வகை! நிறங்களில் பல வகை! கனிகளில் பல வகை! ஒரே வகை கனியில் பல சுவை! பூமியிலும் பல வகை! இப்படி பல வகை மக்களாகத்தான் மனிதர்களையும் அல்லாஹ் படைத்துள்ளான்.
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
மக்களிலும், ஊர்வன விலங்குகளிலும், (-பூமியின் மேல் செல்லக் கூடிய பொதுவான மிருகங்களிலும், ஆடு மாடு ஒட்டகம் குதிரை போன்ற) கால்நடைகளிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் எல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் தன் ஞானத்தின் படி இந்த உலகத்தில் உள்ள படைப்புகளை ஜோடி ஜோடியாக, ஜதை ஜதையாக படைத்திருக்கிறான்.
ஆண் பெண். இரவு பகல், நீர் நெருப்பு, வானம் பூமி, இனிப்பு கசப்பு. நல்லது கெட்டது. உண்மை பொய், இப்படியாக பல முரண்பட்டதை அல்லாஹ் சில தத்துவங்களின் அடிப்படையில் படைத்திருக்கிறான்.
முரண் இல்லை என்றால் ஒரு பொருளை அறிய முடியாது.
அநீதி, அக்கிரமம் என்று ஒன்று இல்லை என்றால் நீதியை நேர்மையை புரிய முடியாது. குருடு என்று ஒன்று இல்லை என்றால் பார்வையின் அருமை தெரியாது. செவிடு என்று இல்லை என்றால் செவியின் பெருமையை உணர முடியாது. ஊமை என்று ஒன்று இல்லை என்றால் பேச்சின் மதிப்பை அறியமுடியாது.
எல்லாவற்றுக்கும் ஒரு தத்துவம் இருக்கிறது. அந்த தத்துவத்தின் ஆழத்தை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்.
ஏக இறைவன் அல்லாஹ்வை நம்புகிற நாம் அவனது படைப்புகளில் உள்ள அவனது ஏற்ற தாழ்வையும் மாறுபட்ட பல தன்மைகளையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹ் படைத்ததில் எந்த தீமையும் இல்லை. மனிதன் அதை பயன்படுத்துவதில்தான் தீமை நிகழ்கிறது.
7. அல்குர்ஆன் 35:28. சரி, ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ சில நேரம் வெறுப்பு தவிர்க்க முடியாமல் இருக்கலாம்.
சில நேரங்களில் மனைவியின் சில பேச்சுகளால், அல்லது சில செயல்களால் அல்லது சில அனுகுமுறைகளால் கணவனுக்கு மனைவி மீது கோபம் வரலாம். பிறகு அந்த கோபம் வெறுப்பாக மாறலாம். ஆனால், அந்த வெறுப்பை போக்க வழிகளை தேட வேண்டுமே தவிர எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற முயற்சிக்கக் கூடாது. அதாவது, அந்த வெறுப்பை அதிகப்படுத்தக் கூடாது.
முதலில் வெறுப்பிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும்.
கணவன் மனைவி ஒவ்வொருவரும் மற்றவரின் அன்பை வேண்டி அல்லாஹ்விடம் மிக உருக்கமாக துஆ செய்ய வேண்டும்.
வெறுப்புக்கான காரணங்களை விட்டு விலகி செல்ல வேண்டும்.
என் வாழ்க்கைத் துணைக்கு என்னில் என்ன பிடிக்க வில்லை. எது? அவனை / அவளை வெறுப்படையச் செய்கிறது என்பதை கணவன் / மனைவி அறிந்து அதை விட்டு தன்னை தூரமாக்க வேண்டும்.
விருப்பு. மற்றும் வெறுப்பின் அளவுகோல் மார்க்கத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் மார்க்கம் அனுமதித்த தனி உரிமையில் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று மற்றவர் முரண்டு பிடிக்க கூடாது.
இருவரும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும்.
உளு செய்துவிட்டு, முடிந்தால் இரண்டு ரக்அத் தொழுது துஆ செய்துவிட்டு பேச்சை ஆரம்பிக்க வேண்டும்.
பேசும்போது அமைதியாக பேச வேண்டும். கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும்.
பேச துவங்கும் முன் ஒருவர் மற்றவரை உயர்த்தி, புகழ்ந்து, அவரிடம் உள்ள நல்லதை எடுத்து சொல்லி பேச ஆரம்பிக்க வேண்டும்.
முடிந்தளவு தனி அறையில் அமர்ந்து பேச வேண்டும்.
இருவரில் ஒருவர் அடுத்தவரிடம் என்ன குறையை காண்கிறாரோ அதை மிகவும் பெரிது படுத்தாமல், கடுமையான சொற்களை கொண்டு விமர்சிக்காமல், எனக்கு உன்னிடம் இன்ன இன்ன செயல் அல்லது குணம் மனதுக்கு வலியை தருகிறது என்று பண்பாக பேச வேண்டும்.
பண்பு மிகத் தேவை. பண்பாக பேசவில்லை என்றால் எல்லாம் வீணாகிவிடும்.
ஒருவர் மற்றவரிடமிருந்து அவர் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். எடுத்தெறிந்து பேசக் கூடாது. இடைமறித்து பேசக் கூடாது.
அசிங்கமான வார்த்தைகளால், கடுமையான வார்த்தைகளால் ஒருவர் மற்றவரை காயப்படுத்த கூடாது.
ஒருவர் மற்றவரின் இயற்கை படைப்பை பற்றி பேசக் கூடாது. ஒருவர் மற்றவரை அவரின் இயற்கை உடல் அமைப்பை குறை கூறக் கூடாது. அல்லாஹ் படைத்தது அவர் என்ன செய்ய முடியும்? ஒருவர் மற்றவரை பார்த்து பொருந்தி கொண்டுதான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தீர்கள். அப்படி இருக்க திருமணத்திற்கு பின்னர், ஒருவர் மற்றவரை பார்த்து, நீ குண்டு. நீ ஒல்லி, நீ நெட்டை, நீ குட்டை, நீ கருப்பு, நீ அப்படி நீ இப்படி என்று குறைப் பேசுவது மிகவும் நேர்மையற்றதாகும்.
ஒருவர் மற்றவரின் பெற்றோரை பற்றி பேச நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அவர்களை மரியாதை குறைவாக பேசக் கூடாது.
பேசும்போது இணக்கத்தை ஏற்படுத்தவே பேசுகிறேன் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி பேச வேண்டும்.
ஒரே செய்தியை திரும்ப திரும்ப பேசக்கூடாது.
ஒருவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டால் மீண்டும் அதை நினைவுபடுத்தக் கூடாது.
பேசிக்கொண்டிருக்கும்போது பிள்ளைகள் வந்தால் அவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது. அவர்கள் முன்னிலையில் பேச்சை தொடரக் கூடாது. அவர்களை வேறு வேலையில் ஈடுபடுத்திவிட்டு, வேறு இடத்திற்கு அனுப்பிவிட்டு பேச்சை தொடர வேண்டும். இல்லை என்றால் பேச்சை வேறு ஒரு நேரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்.
நேர்மையாக, நீதமாகப் பேச வேண்டும். பிறர் தன் மீது குறை சொன்னார் என்பதற்காக உடனே அவர் இவர் மீது இல்லாத பொல்லாததை சொல்ல முயலக் கூடாது. பழிபோட வழி தேடக் கூடாது.
நீண்ட நேரம் பிரச்சனைகளை பேசக் கூடாது. ஷைத்தான் தேவை இல்லாத குழப்பங்களை ஏற்படுத்தலாம்.
மறுமை பயத்தையும், விசாரணை நாளையும் நினைவில் வைத்து அல்லாஹ்வின் தண்டனையை பயந்து பேச வேண்டும்.
ஒருவர் மற்றவரின் செயலுக்கு இதுதான் காரணம் என தன் யூகத்தின் படி முடிவு செய்துகொண்டு பேசக் கூடாது. ஒருவர் சொல்லும் நியாயமான காரணங்களை அழகிய முறையில் மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தேவை இல்லாத யூகங்களை அறவே பேசக் கூடாது.
கணவன், மனைவியின் மீது கற்பு ரீதியாக சந்தேகப்பட்டு பேசக் கூடாது.
அதுபோன்ற குழப்பத்தை கண்கூடாக பார்க்காமல் பிறர் சொல்வதை வைத்து முடிவு செய்து விடக்கூடாது.
தீர விசாரிக்காமல் எடுக்கப்படுகிற எல்லா முடிவுகளும் நஷ்டத்தையே ஏற்படுத்தும்.
ஒவ்வொரு காரியத்திலும் நிதானமும் சகிப்புத் தன்மையும் பொறுமையும் மிக உயர்ந்த குணங்களாகும்.
நபி அவர்கள் ஒரு தோழரை பார்த்து உம்மிடம் இருகுணங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ் விரும்புகிறான் என்று கூறினார்கள்.
ஆகவே, பிரச்சனைகளில் சகிப்புத்தன்மையோடும் நிதானத்தோடும் இல்லை என்றால் பிரச்சனைகள் தீராது. முடிவுக்கு வராது.
மனைவியிடம் உள்ள ஒரு குறையை சொல்வதற்கு முன்னர் கணவன் தனது குறையை திருத்த வேண்டும். அப்படித்தான் மனைவியும். தன்னிடம் அதே தீமையை வைத்துக் கொண்டு அடுத்தவரை மட்டும் குறை சொல்வது எப்படி நியாயமாகும்?
அல்லாஹ்வின் விதியை பொருந்திக் கொண்டு பேச வேண்டும். அல்லாஹ்வையோ, அவனது விதியையோ குறை கூறி விடக் கூடாது. அல்லாஹ்விற்கு கோபத்தை ஏற்படுத்தும் சொற்களை பயன்படுத்தக் கூடாது.
தொழுகை நேரம் வந்துவிட்டால் முதலில் தொழுகைக்கு சென்றுவிட வேண்டும். உணவு நேரம் வந்து விட்டால் உணவுக்காக சென்றுவிட வேண்டும்.
முடிந்தவரை அஸர் தொழுகைக்கு பின்னர் பேசுவது நல்லது. மக்ரிபு தொழுகைக்கு முன்பாக பேசி முடித்து விட வேண்டும். அதாவது அந்தளவு நேரத்திற்குள்ளாக பேசி தீர்ப்பது நல்லது.
8. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் . நூல்: ஸுனனுத்
திர்மிதி எண்: 2011. எந்தளவு குறைவாகப் பேச முடியுமோ பேசி. பிரச்சனைகளை பெரிதாக்காமல் இலகுவாக முடித்துக் கொள்வது மிக நல்லது.
ஒருவர் மற்றவருக்காக அல்லாஹ் உனக்கு அருள் புரியட்டும் அல்லாஹ் உன் மீது கருணை காட்டட்டும் இப்படி நல்ல துஆக்கள் செய்துகொண்டே பேச வேண்டும்.
பொய் சத்தியம் செய்துவிடக் கூடாது. மிக மிக அவசிய தேவை இல்லாமல் மற்றவரை சத்தியம் செய்ய சொல்லக் கூடாது. சத்தியம் செய்ய அவசியம் ஏற்பட்டால் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்ய வேண்டும். ஒருவர் சத்தியம் செய்து விட்டால் அவர் அதை மீறக் கூடாது. மற்றவர் அவரை பொய்ப்பிக்கக் கூடாது. அவர் பொய் சத்தியம் செய்தார் என்று அல்லாஹ் வெளிப்படுத்தினால் தவிர.
இணக்கமே சிறந்தது என்று (4:128ல்) அல்லாஹ் கூறி இருப்பதை நினைவில் வைத்து பேச வேண்டும்.
மன கசப்புகளை நீக்க, வெறுப்புகளை களைய நமது நபி அவர்கள் கூறிய அழகிய அறிவுரையை நமது கவனத்தில் எப்போதும் வைக்க வேண்டும்.
முஃமினான கணவன் முஃனினான மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளிடம் ஒரு குணம் அவனுக்கு பிடிக்க வில்லை என்றால் அவளிடம் வேறு ஒரு குணம் அவனுக்கு திருப்தியாக இருக்கும்.
அல்லாஹ்வே, எங்கள் குடும்பங்களை எங்களுக்கு கண் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் துணைகள் மூலமாக எங்களுக்கு நிம்மதியை அமைதியை ஆதரவை ஏற்படுத்துவாயாக! எங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவாயாக! கோபத்தை வெறுப்பை பகைமையை எங்கள் உள்ளத்திலிருந்து அகற்றுவாயாக! உனக்கு நன்றி உள்ளவர்களாக, நீ எங்களுக்கு
9. அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா நூல்: ஸஹீஹ் முஸ்லிம் எண்: 1469. பங்களித்ததை கொண்டு திருப்தி அடைந்தவர்களாக எங்களை ஆக்கி வைப்பாயாக! எங்களில் ஒருவரை மற்றவருக்கு சோதனையாக ஆக்கி விடாதே! எங்களை நல்லோரில் ஆக்குவாயாக!
"எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!”
ஆமீன்.
Comments
Post a Comment
Best comment is welcomed !