அன்னை கதீஜா (ரலி)

 .


அன்னை கதீஜா (ரலி)


கேள்வி : கதீஜா (ரலி) அவர்களின் பட்டப் பெயர் என்ன?


பதில் : அவர்களின் பட்டப்பெயர் 'தாஹிரா' என்பதாகும்.


கேள்வி:'தாஹிரா' என்றால் என்ன பொருள்?


பதில் : 'தாஹிரா' என்றால் தூய்மையானவர் என்று பொருளாகும்.


கேள்வி : நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன? அவர்களின் பிறப்பு, வளர்ப்பு, தாய் தந்தையர் யார்?


பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்


முதல் மனைவி உம்முல் முஃமினீன் (முஃமின்களின் தாய்) அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா என்பவர்கள். கதீஜா (ரலி) அவர்கள் அரபு நாட்டில் மிக உயர்ந்த குரைஷ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களின் தாயார் பெயர் பாத்திமா, தந்தையின் பெயர் குவைலிது என்பதாகும். அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கி.பி. 555ல் பிறந்தார்கள்.


கேள்வி : நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை திருமணம் செய்து கொண்ட பொழுது அவர்களின் வயது எவ்வளவு?


பதில் : நபி (ஸல்) கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்து கொண்ட பொழுது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 40. நபி (ஸல்) அவர்களுக்கு வயது 25.


கேள்வி : நபி (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்த பொழுது கதீஜா (ரலி) விதவையாக இருந்தார்களா?

பதில்: ஆம்! கதீஜா நாயகி ஏற்கனவே இரண்டு முறைகள் திருமணம் செய்யப்பட்டு, கணவர்களை இழந்து விதவையாக இருந்தார்கள். அதன் பின்னரே நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.


கேள்வி: நபி (ஸல்) அவர்களை கதீஜா (ரலி) அவர்கள் திருமணம் செய்து கொள்ள என்ன காரணம்?


பதில்: நபி (ஸல்) அவர்களிடம் இருந்த நேர்மை, நாணயம், உயரிய ஒழுக்கம், சிறந்த குண நலன்கள், மோசடி செய்யாமை போன்ற அரிய பண்புகளே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களைத் திருமணம் செய்து கொள்வதற்குரிய காரணங்களாகும்.


குழந்தைப் பேறுகள்


கேள்வி: அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கு எத்தனை குழந்தைகள்? அவர்களில் ஆண்கள் எத்தனை பேர்? பெண்கள் எத்தனை பேர்?


பதில்: கதீஜா (ரலி) அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்களுள் நான்கு பெண் குழந்தைகள். இந்நால்வரும் இஸ்லாமிய காலத்திலேயே வாழ்ந்தனர். மக்காவிலிருந்து மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்' செய்தார்கள்.


ஆண் குழந்தைகள் காஸிம், அப்துல்லாஹ் என இருவர் ஆவார்கள். பெண் மக்கள் ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸும், ஃபாத்திமா ஆகியோர் ஆவார்கள்.


ஹல்ரத் காஸிம்: இவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம்.


அருளப்படுவதற்கு முன் பிறந்தார்கள். நபிப்பட்டம் அருளப்படு வதற்கு முன்னரே இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த நிலையிலேயே இறந்து போனார்கள்.


ஹல்ரத் அப்துல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு நபிப் பட்டம் அருளப்பட்ட பிறகு பிறந்து குழந்தைப் பருவத்திலேயே இறந்து போனார்கள். இவர்களுக்கு 'தய்யிப்' என்றும் 'தாஹிர்' என்றும் சிறப்புப் பெயர்கள் இருந்தன.


கேள்வி: ஹல்ரத் ஜைனப் (ரலி) அவர்களை யாருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது?


பதில்: இவர்களை ரஸூல் (ஸல்) அவர்களின் சிறிய தாயாரின் மகன் அபுல் ஆஸ் (ரலி) அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அபுல்ஆஸ் அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னரே ஜைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள்.


இவ்வாறு மணந்து கொண்டது ஷரீஅத்துக்கு மாற்றமாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் இருவரையும் பிரித்து வைத்திருந்து, அபுல்ஆஸ் அவர்கள் தீனுல் இஸ்லாத்தில் இணைந்த பின் அவ்விருவரின் திருமணத்தைப் புதுப்பித்தார்கள்.


கேள்வி :ஜைனப் (ரலி) அவர்களுக்குக் குழந்தைகள் எத்தனை?


பதில்: ஜைனப் (ரலி) அவர்களுக்கு உமாமா, அலி என்னும் பெயர் கொண்ட இரு ஆண் மக்கள் இருந்தனர்.


கேள்வி: இவ்விரு பிள்ளைகளும் எவ்வளவு காலம் வாழ்ந்தனர்?


பதில்: அலீ என்பவர் குழந்தையிலேயே இறந்து போனார். உமாமா சில ஆண்டுகள் வாழ்ந்து இறந்து போனார்.


கேள்வி: ஜைனப் (ரலி) எப்பொழுது மரணமானார்கள்?


பதில்: இவர்கள் தம் கணவர் அபுல்ஆஸ் (ரலி) அவர்களுடன் உஹதுப் போருக்கு வந்திருந்தார்கள். அச்சமயம் இவர்கள் கருவுற் றிருந்தார்கள். அபுல் ஆஸ் அவர்கள், இவர்களை ஓர் ஒட்டகத்தின் மீது அமர்த்தி ஜைது இப்னு ஹாரிதா என்பவரையும், ஓர் அன்ஸாரியையும் இவர்களுடன் துணைக்கு அனுப்பி மதீனாவிற்குக் கொண்டு செல்லுமாறு அனுப்பி வைத்தார்கள். இவர்களை வழியில் குரைஷிகள் சூழ்ந்து கொண்டனர். குரைஷிகளில் இருந்த ஹப்பார் இப்னு அஸ்வத் என்னும் கொடியவன் தன் கையில் வைத்திருந்த கேள்வி: எத்தனையாம் வயதில் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்குத் திருமணம் நடந்தது?


பதில்: அவர்களின் பதினைந்தாம் வயதில் நடந்தது.


கேள்வி: இவர்களுக்கு எத்தனை குழந்தைகள்?


பதில்: இமாம்கள் ஹஸன், ஹுஸைன், முஹ்ஸின் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய மூன்று ஆண் மக்களும், ருகைய்யா, உம்மு குல் ஸும் என்னும் பெயர் கொண்ட இரு பெண் மக்களும் ஆவார்கள்.


ருகைய்யா என்னும் பெண் குழந்தை, குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டது. உம்மு குல்ஸும் அவர்களை ஹல்ரத் உமர் (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள்.


கேள்வி: இவர்கள் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள்?


பதில்:


59 வருடங்கள் வாழ்ந்தார்கள்.


கேள்வி: இவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முன் இறந்தார்களா? அவர்களுக்குப் பின் இறந்தார்களா?


பதில்: நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு, ஹிஜ்ரி பதினொன்று, பிறை 3-ல் காலமானார்கள்.


கேள்வி: அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் எங்கே அடக்கப்பட்டார்கள்?


பதில்: இரவு நேரத்தில் மதீனா நகரில் ஜன்னத் துல்பகீஃஎன்னும் கப்ருஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டார்கள். ஹல்ரத் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாஸாத் தொழ வைத்தார்கள்.


முதன்முதலாக இவர்களின் ஜனாஸாவுக்குத்தான் போர்வை போர்த்தப்பட்டது. அந்த அளவிற்கு நாணமுள்ளவர்களாகவும், அந்நிய ஆடவர்களின் பார்வைதம் மீது படாதவாறும் காத்துக் கொண்டார்கள்.


அன்னை கதீஜா (ரலி) அவர்களின் குணநலன்கள்


உலகப் பெண்களில் சிறப்பும், முழுமையும் பெற்றவர்கள் நான்கு பேர் ஆவார்கள். அவர்கள்: (1) ஹல்ரத் மர்யம் (அலை), (2) பிர்அவ்னின் மனைவி ஹல்ரத் ஆஸியா, (3) அன்னை கதீஜா (ரலி), (4) அன்னை ஃபாத்திமா (ரலி) ஆகியோர் ஆவர்.


ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்து, "அல்லாஹ்வின் தூதரே! இதோ அன்னை கதீஜா (ரலி) அவர்கள் தங்களிடம் ஒரு பாத்திரத்தில் உணவு கொண்டு வருகிறார்கள்.


"அவர்களுக்கு ரப்பாகிய அல்லாஹ்வுடையவும், என்னுடையவும் ஸலாமைக் கூறுங்கள். சுவர்க்கத்தில் முத்தால் ஆன ஒரு மாளிகை உண்டு. எனவே, எத்தகைய சப்தமோ, வீண் தொல்லையோ இராது என்னும் நற்செய்தியை அவர்களுக்குக் கூறுங்கள்" என்றனர்.


(புஹாரி, பாகம் 1, பக்கம் 539)


நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுவார்கள். "வீட்டில் எஜமானியாகவும், குழந்தைகளின் தாயாகவும் கதீஜா இருந்தார்"


ஏழைகள், அநாதைகள், விதவைகளை அன்புடன் நடத்துவார் கள். தம் பொருட்களைத் துன்பப்படுவோர்களுக்கு அள்ளிக் கொடுப் பார்கள். எவரேனும் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், அவருக்குப் பகைவர்கள் பல வகையிலும் துன்பங்களை இழைத்து வருவார்கள். உணவு கொடுக்க மாட்டார்கள். வீட்டை விட்டும் துரத்தி விடுவார்கள். மனைவியைப் பிரித்து விடுவார்கள்.


இவை போன்ற இக்கட்டான நிலைகளில், அன்னை கதீஜா (ரலி) அவர்கள் பொன்னும் பொருளும் கொடுத்து, அவர்களை ஆதரிப்பார்கள்.


வீட்டை விட்டும் துரத்தப்பட்டவர்களைத் தம் வீட்டில் இருக்கச் செய்து அடைக்கலம் அளிப்பார்கள்.


சில நேரங்களில் இஸ்லாமியப் பகைவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குத் தீங்கிழைத்து விடுவார்கள். பகைவர்கள் செய்த கொடுமைகளைப் பற்றி அன்னை கதீஜா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் முறையிடுவார்கள்.


அச்சமயம் கதீஜா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வருந்த வேண்டாம். இதற்கு முன்னர் உலகில் தோன்றிய பல நபிமார்களுக்கும், இதேபோன்று தான் பகைவர்கள் துன்பங்கள் இழைத்து வந்தார்கள்” என்றெல்லாம் ஆறுதல் மொழி கூறி அண்ணலாரைத் தேற்றுவார்கள்.


இவ்வாறு கணவரின் அன்பிற்குரியவராகவும், குழந்தைகளுக் குச் சிறந்த தாயாகவும், இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத் தம் பொருட்களைத் தியாகம் செய்யக் கூடியவராகவும் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது.


கேள்வி: கதீஜா (ரலி) அவர்கள் எப்பொழுது மரணமானார்கள்?


பதில்: ஹிஜ்ரத் செய்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 65-ம் வயதில் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள். அவர்களை மக்காவிலுள்ள ஜன்னத்துல் முஅல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Comments