அன்னை மைமூனா (ரலி)
கேள்வி: அன்னை மைமூனா (ரலி) அவர்கள் யாருடைய மகளார் ஆவர்?
பதில்: உம்முல் முஃமினின் ஹல்ரத் மைமூனா (ரலி) அவர்கள், முனர் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்த ஹாரிது என்பவரின் மகளாவார்.
கேள்வி: இவர்களை நபி (ஸல்) அவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொண்டார்கள்?
பதில்: நபி (ஸல்) அவர்கள் உம்ராச் செய்வதற்காகத் திரு மக்காவுக்கு ஹிஜ்ரீ 7-ம் ஆண்டு வந்த பொழுது மணந்து கொண்டார்கள். திருமணம் நடந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் உடை அணிந்திருந்தார்கள். உம்ராச் செய்து முடித்த பின், இஹ்ராமைக் களைந்த பிறகு குடும்ப வாழ்க்கையை நடத்தலானார்கள்.
கேள்வி: நபி (ஸல்) அவர்கள் அன்னையாரை மணந்தபோது மைமூனா (ரலி) அவர்களின் வயது எத்தனை?
பதில்: அப்பொழுது அன்னையாரின் வயது 36.
கேள்வி : எங்கு,எப்பொழுது, எத்தனையாம் வயதில் மரணமானார்கள்?
பதில்: திரு மக்காவுக்கு அருகில் உள்ள ஸஹிப் என்னும் இடத்தில் தங்களின் 80ம் வயதில் ஹிஜ்ரி 51ம் வருடம் காலமானார்கள்.
கேள்வி: மைமூனா (ரலி) அவர்களின் தாயார் பெயர் என்ன?
பதில்: தாயார் பெயர் ஹிந்த் என்பதாகும்.
கேள்வி : மைமூனா (ரலி) அவர்கள் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்களா?
பதில்: ஆம்! அன்னையார் அவர்கள் 76 நபி மொழிகளை அறிவித்துள்ளார்கள்.
10. அன்னை ஸஃபிய்யா (ரலி)
கேள்வி: அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் யார்?
பதில்: அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழித்தோன்றல் ஆவார்கள்.
கேள்வி: அன்னையாரின் தந்தையின் பெயர் என்ன?
பதில்: தந்தையின் பெயர் ஹய்யிப்னு அக்தப் என்பதாகும்.
கேள்வி: தாயின் பெயர் என்ன?
பதில்: பர்ரா பின்த் ஸம்வால் என்பதாகும்.
கேள்வி: ஸஃபிய்யா (ரலி) அவர்களின் முதல் திருமணம் பாருடன் நடந்தது?
பதில்: அவர்களின் முதல் கணவரின் பெயர் ஸலாம் இப்னு மஷ்கம் குரைலி என்பதாகும். அவர் அன்னை அவர்களை மணவிலக்குச்(தலாக்) செய்து விட்டார்.
கேள்வி: அதன்பின் யாரை மணந்தார்கள்?
பதில்: கனானா என்பவரை இரண்டாவதாக மணந்தார்கள். இவர் (கனானா) மிகப் பெரிய வணிகராக இருந்தார். கைபர் போரில் இறந்து போனார். அதே போரில் ஸஃபிய்யா நாயகியின் தந்தையும், சகோதரரும் இறந்து விட்டனர்.
கேள்வி: அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களை எப்படித் திருமணம் செய்து கொண்டார்கள்?
பதில்: நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொள்வது போன்று பல கனவுகள் கண்டார்கள். இதோ! அவர்களே கூறுகிறார்கள்: “ஒருமுறை வெண்மதி என்மடியில் வந்து விழுவது 'போல் கனவு கண்டேன். நான் இதை என் தாயாரிடம் கூறினேன். இதைக் கேட்ட என் தாயார் பலமாக என் முகத்தில் ஒரு குத்தினை விட்டு, "நீ அரபு நாட்டின் அதிபர் முஹம்மதை மணந்து கொள்ள ஆசைப்படுகிறாயா?" என்று கேட்டனர். தாயார் விட்ட குத்தால் என் முகத்தில் காயம் ஏற்பட்டு விட்டது. அந்த அடையாளம் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யும் வரையும் இருந்தது.
கேள்வி: அன்னை
ஸஃபிய்யாவை அண்ணலார் எப்பொழுது திருமணம் செய்து கொண்டனர்?
பதில்: ஹிஜ்ரி 7-ம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் படையுடன் கைபரை அடைந்தார்கள். ஏறத்தாழ பத்து நாட்கள் போராடி, அங்கிருந்த யூதர்களின் கோட்டைகள் அனைத்தையும் வென் றார்கள். இப்போராட்டத்தில் அன்னை ஸஃபிய்யாவின் இரண்டாம் கணவன் கொல்லப்பட்டான். அவன் கொல்லப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கனவு ஒன்று கண்டார்கள். அதைப் பற்றி அவர்கள் கூறுகிறார்கள்: "சூரியன் என் மார்பில் விழுந்ததாகக் கனவு கண்டேன். இக்கனவு பற்றி என் கணவரிடம் கூறினேன். இதனைக் கேட்ட என் கணவர் ''நம் மீது படை நடத்தி வந்துள்ள அந்த அரபு நாட்டு மன்னர் முஹம்மதை மணந்து கொள்ள விரும்புகிறாயா" எனக் கேட்டு விட்டு என்னை ஏசினார்.
கைபர் போர் முடிவு பெற்றது. வெற்றி பெற்ற முஸ்லிம்கள் ஆண்களையும், பெண்களையும் கைது செய்தனர். அக்கைதிகளில் அன்னை ஸஃபிய்யாவும் ஒருவர் ஆவார். அச்சமயம் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான வஹிய்யா என்பவர் அல்லாஹ்வின் தூதரே! எனக்கோர் அடிமைப் பெண் வேண்டு' மென்றார்கள். 'நீர் விரும்பியவரை அழைத்துச் செல்லும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். வஹிய்யா அன்னை ஸஃபிய்யா அவர்களை அழைத்துச் சென்றார்.
அச்சமயம், "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஸஃபிய்யா அவர்களின் தந்தை 'பனூ நுளைர்' கூட்டத்தின் தலைவர். தாயார் ‘பனூ குலைர்' கூட்டத்தின் தலைவரின் மகள். "அவ்விருவரின் மகளான ஸஃபிய்யா 'பனூ நுளைர், 'பனூ குரைலா’ ஆகிய இரு வகுப்பாருக்கும் தலைவர் என்று சிறப்பாகக் கருதப்படுகிறார்கள். ஆகவே, ஸஃபிய்யா அவர்கள் தங்களுக்கு மட்டுமே தகுதியானவர் ஆவார்கள். தாங்கள் நண்பர் வஹிய்யாவுக்குக் கொடுத்து விட்டீர்களே!" என்று ஒரு நபித் தோழர் கூறினார். மீண்டும் ஸஃபிய்யா அவர்கள் அண்ணலாரிடமே ஒப்படைக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா அவர்களை விடுதலை செய்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் மூலம் அன்னை ஸஃபிய்யா (ரலி) கண்ட கனவும் உண்மையாயிற்று.
கேள்வி: அன்னை ஸஃபிய்யாவின் இயற்பெயர் என்ன?
பதில்: ஜைனப் என்பதாகும். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காக அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவே, அது முதல் 'ஸஃபிய்யா தேர்வு செய்யப்பட்டவர்' என்னும் பெயர் அவர்களுக்கு வழங்கலாயிற்று.
கேள்வி:இத்திருமணம் எங்கு நடந்தது?
பதில்: கைபருக்கும், மதீனாவுக்கும் மத்தியில் காட்டில் பயணத்தின் பொழுது நடைபெற்றது.
கேள்வி:'வலீமா' விருந்து கொடுக்கப்பட்டதா?
பதில்: தம் தோழர்களை நோக்கி, 'உங்களிடமுள்ள உணவுப் பொருள்களைக் கொண்டு வாருங்கள்' என்று முஸ்லிம் வீரர் களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அச்சமயம் வீரர் களில் சிலர் பேரீச்சம் பழம், நெய், மாவு முதலியவற்றைக் கொண்டு வந்து கொடுத்தனர். அவற்றை ஒன்றாகக் கலந்து கொண்டு 'மலீதா' செய்து 'வலீமா' விருந்து படைக்கப்பட்டது. இங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். புதுப் பெண்ணுடன் மதீனா வந்தடைந்த நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை ஹாரிஸ் இப்னு நுஃமான் என்பவரின் வீட்டில் இருக்கச் செய்தார்கள்.
கேள்வி: அன்னை ஸஃபிய்யாவின் நற்பண்புகள் யாவை?
பதில்: அன்னையவர்கள் நற்குணங்கள் அனைத்தும் கைவரப் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். ஆழ்ந்த ஞானமும், அறிவும் பெற்றவர்கள் எனப் புகழப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்களின் மீது அதிகமான அன்பு வைத்திருந்தார்கள். ஒரு முறை நபி (ஸல் ) அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது அதனைப் பொறுத்து கொள்ள முடியாத அன்னையவர்கள்,
"இந்த நோய் எனக்கு வந்திருக்கக் கூடாதா?" என்று கவலையுடன் கூறியபோது, அருகில் இருந்த மற்ற மனைவியர்கள்.
அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களை உற்றுப் பார்த்தனர். இவற்றைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள், "ஸஃபிய்யா கூறியது உண்மையான வார்த்தைகள் (உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறவில்லை.)" என்று கூறினார்கள். மேலும், இரக்கக் குணமும், தயாள எண்ணமும் பெற்றுத் திகழ்ந்தார்கள்.
கேள்வி: அன்னையார் எப்பொழுது, எங்கு மரணமானார்கள்?
பதில்: ஹிஜ்ரி 50-ம் ஆண்டு ரமளான் மாதத்தில், கலீஃபா முஆவியா (ரலி) அவர்களின் காலத்தில் மதீனாவில் மறைந்தார்கள். ஜன்னத்துல் பகீஃவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
Comments
Post a Comment
Best comment is welcomed !