அஸ்மா பின்த் எஜீத் (ரலி)

 


அஸ்மா பின்த் எஜீத் (ரலி)


கேள்வி: அஸ்மா பின்த் எஜீத் என்பவர்கள் யார்?


பதில்: இப்பெண் ஸஹாபி 'எர்மூக் போரில்' கலந்து கொண்ட வீரத் தாய் ஆவார்கள்.


கேள்வி: இவர்கள் எப்பொழுது இஸ்லாத்துக்கு வந்தார்கள்?


பதில்: மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த பின்னர் இஸ்லாத்தில் சேர்ந்தார்கள்.


கேள்வி: நபி (ஸல்) அவர்களின் கைகளில் பைஅத் செய்து கொள்ள விரும்பினார்களா?


பதில்: ஆம்! இவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "பெண்கள் தங்கள் கைகளில் உறுதி மொழி எடுத்துக் கொள்ள விரும்புகிறோம்; தாங்கள் தங்கள் கைகளை நீட்டுங்கள்" என்றனர்.


கேள்வி: நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரலி)வுக்கு 'பைஅத்' செய்து கொடுத்தார்களா?


பதில்: "நான் அந்நியப் பெண்களின் கைகளைத் தொட மாட்டேன்" என்று நபி (ஸல்) கூறி விட்டார்கள்.


கேள்வி: பைஅத் என்றால் என்ன பொருள்?


பதில்: 'பை அத்' என்றால் "விற்றுவிடுவது" என்பது பொரு ளாகும். அதாவது அல்லாஹ்வின் பாதையில் உடல், பொருள்,உயிர் ஆகிய மூன்றையும் விற்று விடுதல் என்பது இதன் கருத்தாகும்.


இம்மூன்றையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்து விடுவதாக வாக்குறுதி அளிப்பதாகும்.


கேள்வி: பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு பைஅத் செய்து கொடுத்தார்கள்?

பதில்: நபி (ஸல்) அவர்கள் திரு விரலைத் தண்ணீரில் நனைத்து, அத்தண்ணீரைப் பெண்களிடம் கொடுத்தார்கள். அத்தண்ணீரில் பெண்கள் தங்கள் கைகளை நனைத்துக் கொண்டார்கள்.


கேள்வி: நபி (ஸல்) அவர்களிடம் அஸ்பா (ரலி) அவர்கள் கேட்ட கேள்வி என்ன?


"அல்லாஹ்வின் தூதரே! பெண்களாகிய நாங்கள் வீடுகளில் மறைவாக இருந்து வருகிறோம். ஆண்கள் தங்கள் தேவைகளை எங்களிடம் நிறைவேற்றிக் கொள்கின்றனர். நாங்கள் அவர்க ளுடைய குழந்தைகளை வயிற்றில் சுமக்கிறோம். எனினும் எங்களை விட ஆண்கள் நற்செயல்களில் அதிகமாக ஈடுபட்டு நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றனரே?


"அவர்கள் ஜுமுஆத் தொழுகைகளிலும், ஜமாஅத் தொழுகை களிலும் கலந்து கொள்கின்றனர்; நாங்கள் அவற்றில் கலந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றோமே?" என்று கேள்வி கேட்டனர்.


பதில்: நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில் என்ன?


நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “இவ்வாறு கேள்வி கேட்ட பெண்ணை நீங்கள் கண்டுள்ளீர்களா?" என்று கேட்க, "நாங்கள் இது போன்ற பெண்ணைக் கண்டதேயில்லை,” என்று ஸஹாபாக்கள் கூறினர்.


நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களைப் பார்த்து, "மனைவி கணவனின் திருப்தியையும், மகிழ்ச்சியையும் பெற்றுக் கொள்ளத் தக்கவாறு நடந்தும், கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்தும் வருவாளாயின், கணவனுக்குக் கிடைக்கும் நன்மையின் அளவே மனைவிக்கும் கிடைக்கும்”என்று கூறினார்கள்.


கேள்வி: அஸ்மா (ரலி) அவர்கள் கலந்து கொண்ட போர் எது?

பதில்: ஹிஜ்ரி 15-ம் ஆண்டில் யர்முக் என்னும் போர் ஆரம்பமாயிற்று. இப்போரில் அன்னை அஸ்மா (ரலி) அவர்களும் கலந்து கொண்டார்கள்.


பல வீர தீரச் செயல்களையும் போரில் செய்து காட்டினார்கள்.


கேள்வி: அந்த வீர தீரச் செயல்கள் என்ன?


பதில்: போரின் நடுவே தங்கள் கூடாரத்தில் அடிக்கப்பட்டிருந்த முளைக் குச்சியை எடுத்து, ரோம் நாட்டின் ஒன்பது வீரர்களை அடித்துக் கொன்றார்கள்.


கேள்வி: அஸ்மா (ரலி) அவர்களின் மரணம் எங்கே நிகழ்ந்தது?


பதில்: அது பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை.


கேள்வி: அஸ்மா (ரலி) அவர்கள் ஹதீஸ்களை அறிவித்துள் ளார்களா?


பதில்: ஆம்! பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். அறிவிலும், நல்லொழுக்கப் பண்பிலும் சிறந்து விளங்கினார்கள். மேலும், விருந்தினர் களை வரவேற்று நன்முறையில் அவர்களுக்குப் பரிமாறுவார்கள்.

Comments