அன்னை ஜுவைரிய்யா (ரலி)
கேள்வி: அன்னை ஜூவைரிய்யா யாருடைய மகள்?
பதில்: பனூ முஸ்தலக் கிளையைச் சேர்ந்த 'ஹாரிது' என்பவரின் மகளாவார்கள்.
கேள்வி: இவர்களின் முதல் கணவர் யார்?
பதில்: அன்னை ஜுவைரிய்யாவின் முதல் கணவரின் பெயர் மஸாபிஃ இப்னு ஸஃப்வான் என்பதாகும். இவரும் அன்னை ஜுவைரிய்யா வின் தந்தை ஹாரிதும் இஸ்லாத்தின் பகைவர்களாக இருந்து வந்தனர்.
கேள்வி: இவர்களை நபி (ஸல் ) அவர்கள் எவ்வாறு திருமணம் செய்து கொண்டார்கள்?
பதில்: பனூ முஸ்தலிக் கோத்திரத்தார் இஸ்லாத்தின் எதிரி களாக இருந்து வந்தார்கள். இவர்கள் 'முரைஸீஃ' என்னும் போரில் தோல்வியடைந்து கைதியாகப் பிடிபட்டுச் சிறையில் அடைக்கப் பட்டனர். சிறைக் கைதியாகப் பிடிக்கப்பட்ட அன்னை ஜுவைரிய்யா, தாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் பாகத்தில் சேர்க்கப்பட் டார்கள். தாபித் (ரலி) அவர்கள், "ஒரு தொகையைக் கொடுத்து விட்டு விடுதலைப் பெற்றுக் கொள்ளும்" எனக் கூறினார்கள். உரி மைப் பணம் கொடுப்பதற்காக ஜுவைரிய்யா அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் ஏற்கெனவே முஸ்லிமாவேன். பனூ முஸ்தலிக் கோத்திரத்தின் தலைவரான ஹாரிதுப்னு அபீளர்ராக் என்பவரின் மகளுமாவேன்" எனக் கூறினார்கள்.
அவர்கள் கூறியதைக் கேட்ட பின் நபி (ஸல்) அவர்கள், "உம்முடைய கோரிக்கைக்கு அதிகமான உதவிகள் செய்யட்டுமா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். 'அது என்ன உதவி? என்று ஜுவைரிய்யா அவர்கள் கேட்டபோது, "உமக்கு ஏற்படுத்தப்பட்ட தொகையை நான் கொடுத்து விடுகிறேன். உம்மையும் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட ஜுவைரிய்யா அவர்கள் மிகவும் மகிழ்ந்தவர் களாக ஒப்புக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பணத்தைக் கொடுத்து விடுதலைச் செய்து மணந்து கொண்டார்கள்.
கேள்வி : அன்னை ஜூவைரிய்யா (ரலி) அவர்களின் இயற்பெயர் என்ன?
பதில்: பெற்றோர் வைத்த பெயர் 'பர்ரா' என்பதாகும். நபி (ஸல்) அவர்கள் அப்பெயரை மாற்றி, ஜூவைரிய்யா என்று வைத்தனர்.
கேள்வி: நபி (ஸல்) அவர்கள் எந்த ஆண்டில் ஜுவைரிய்யா (ரலி) அவர்களை மணந்தார்கள்?
பதில்: ஹிஜ்ரி 5-ம் ஆண்டு மணந்து கொண்டனர்.
கேள்வி: அன்னையாரின் மரணம் எப்பொழுது ஏற்பட்டது?
பதில்: ஹிஜ்ரி 50-ம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதத்தில் அப்பொழுது அவர்களின் வயது 65.
கேள்வி: அவர்கள் எங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள்?
பதில்: ஜன்னத்துல் பகீஃ என்னும் கப்ருஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
கேள்வி: அன்னை ஜூவைரிய்யா (ரலி) அவர்களின் சிறப்புகள் யாவை?
பதில்: அன்னை அவர்கள் அதிகமாக இறைவனை வணங்குபவர் களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும் இருந்து வந்தனர்.
அன்புச் சகோதரிகளே! இவ்வரலாறுகளைப் படிக்கின்ற நீங்கள் அவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுக முயற்சி செய்ய வேண்டும்.
(நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுடைய வரலாறு சம்மந்தமான கேள்வி பதில் முற்றுப் பெற்றது.)
12.வீராங்கனை ஸஃபிய்யா (ரலி)
கேள்வி: ஸஃபிய்யா என்பவர்கள் யார்?
பதில்: இவர்கள் அப்துல் முத்தலிப் அவர்களின் மகளாவார்கள். இவர்கள் நபி (ஸல்) அவர்களின் மாமியும் ஆவார்கள்.
கேள்வி: இவர்கள் போரில் காட்டிய வீரம் எத்தகையது?
பதில்: இவர்களுடன் மற்ற பெண்களும், குழந்தைகளும் ஒரு கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனர்.
கேள்வி: அக்கோட்டை எந்த இடத்தில் இருந்தது?
பதில்: 'பனூ குரைலா' வர்க்கத்தினர் வசிக்கும் இடத்தில் இருந்தது. இப்பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஹல்ரத் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்.
கேள்வி: எதிரிகளாகிய யூதர்கள் என்ன செய்தார்கள்?
பதில்: முஸ்லிம்கள் அகழியின் பக்கம் போரிட்டுக் கொண்டிருந் ததால் இக்கோட்டையில் ஆண்கள் எவரும் இருக்கமாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தில், கோட்டையைத் தாக்க யூதர்கள் திட்டமிட்டார்கள். எனவே, எதற்கும் அங்குள்ள நிலையைத் தெரிந்து
வருவதற்காக ஒரு யூதனைக் கோட்டையின் பக்கம் அனுப்பி வைத்தனர். அவன் அக்கோட்டையின் பக்கம் வந்து, அதனை எப்படித் தாக்கலாம் என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
கேள்வி: இவனைக் கோட்டையினுள் இருந்து கவனித்தது யார்?
பதில்: ஹல்ரத் ஸஃபிய்யா அம்மையார் அவர்கள், ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அவர்களை நோக்கி, "அதோ அந்த யூதனைக் கொன்று விட்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.
கேள்வி: அதற்கு ஹஸ்ஸான் என்ன பதில் சொன்னார்கள்?
66 பதில்: அதற்கு ஹஸ்ஸான், "அப்துல் முத்தலிபின் மகளே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அக்காரியத்தைச் செய்வதற்குச் சக்தி பெறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்" என்றார்கள்.
கேள்வி: ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள்?
பதில்: காரணம் அவர்கள் உடல் நலம் குன்றி பலவீனமானவர் களாக இருந்தார்கள்.
கேள்வி: ஸஃபிய்யா அம்மையார் என்ன செய்தார்கள்?
பதில்: உடனே வீறு கொண்டு எழுந்து, கூடாரத்தின் மூலையில் கிடந்த ஒரு கம்பை எடுத்துக் கொண்டு, கோட்டையிலிருந்து வெளிவந்து, அந்த யூதனைக் கம்பால் ஓங்கி அடித்துக் கொன்று விட்டார்கள்.
கேள்வி: பிறகு அந்த யூதனை என்ன செய்தார்கள்?
பதில்: கோட்டைக்கு வந்து, "ஹஸ்ஸானே! நீங்கள் சென்று அவனின் உடைகளையும், ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள், அவன் ஓர் ஆணாக இருப்பதால் அதனை என்னால் செய்ய முடியவில்லை" என்றனர்.
கேள்வி: அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் என்ன
கூறினார்கள்? பதில்: அவர்களே அக்காரியத்தையும் செய்து அந்த யூதனின் தலையை வெட்டிக் கோட்டைக்கு வெளியே வீசினார்கள். இந்த சம்பவம் யூதர்களுக்குத் தெரிந்ததும், கோட்டையினுள் வீரர்கள் இருப்பதாக எண்ணிக் கொண்டு, கோட்டையைத் தாக்கும் எண்ணத்தைக் கை விட்டார்கள்.
கேள்வி: ஹல்ரத் ஸஃபிய்யாவின் மரணம் எப்பொழுது நிகழ்ந்தது?
பதில்: ஹல்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணமடைந்தார்கள். அச்சமயம் அவர்களுக்கு வயது 73.
கேள்வி: எங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள்?
பதில்: திரு மதீனாவிலுள்ள 'ஜன்னத்துல் பகீஃ' என்னும் கப்ருஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
சகோதரிகளே!
இக்காலத்தில் உள்ள பெண்மணிகள் இஸ்லாத்தைப் பற்றியும், இஸ்லாமிய பெண்கள் செய்த வீர தீரச் செயல்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்குச் சிறிதும் ஆர்வம் காட்டுவதில்லை.
வீட்டு வேலைகளைப் பார்க்கவே தயக்கம் காட்டுகிறார்களே! அவர்கள் எங்கே இஸ்லாமிய வரலாறுகளைக் கூறும் புத்தகங்களைப் படிக்கப் போகிறார்கள்.
அன்றைய பெண்மணிகள் இஸ்லாத்திற்காகச் செய்த தியாகத்தால் தான் நாம் முஸ்லிம்களாகப் பெயர் அளவிலேனும் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
முஸ்லிம் பெண்கள் தங்களால் முடிந்த அளவுக்கு இஸ்லாத்துக் காக ஏதேனும் ஒரு வகையில் தியாகம் செய்தே தீர வேண்டும்.
நம் பிள்ளைகளை அந்த வகையில் தியாகம் செய்யக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும்.
Comments
Post a Comment
Best comment is welcomed !