அன்னை ஹஃப்ஸா (ரலி)
கேள்வி: நபி (ஸல்) அவர்களின் மூன்றாம் மனைவி யார்?
பதில்: நபி (ஸல்) அவர்களின் மூன்றாம் மனைவி அன்னை ஹஃப்ஸா ஆவார்கள். இவர்கள் அமீருல் முஃமீனின் ஹல்ரத் உமர் (ரலி) அவர்களின் திருமகளாவார்கள்.
கேள்வி: அன்னை ஹஃப்ஸா (ரலி) எத்தனையாம் வயதில் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்?
பதில்: தங்களுடைய 22-ம் வயதில் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.
கேள்வி: இவர்கள் எப்பொழுது? எங்கு மரண மானார்கள்?
பதில்: இவர்கள் தங்களுடைய 59-ம் வயதில் ஹிஜ்ரீ 45-ம் வருடம் திரு மதீனாவில் வஃபாத்தானார்கள். மதீனாவின் கவர்னராக இருந்த மர்வானுப்னுல் ஹக்கம் ஜனாஸாவைத் தொழ வைத்து அவர்களின் ஜனாஸாப் பெட்டியையும் சுமந்தார். அத்துடன் ஹல்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஜனாஸாப் பெட்டியைச் சுமந்தார்கள்.
கேள்வி: அன்னை ஹஃப்ஸா (நபி) அவர்களின் சிறப்புகள் என்ன?
பதில்: அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள், அண்ணல் (நபி ) அவர்களின் மனைவியாக மட்டும் இல்லாமல், குர்ஆன் ஹாபி ளாகவும், ஓதுவதிலும், எழுதுவதிலும் திறமை வாய்ந்தவர்களாகவும் இருந்து வந்தனர்.
மேலும், அன்னையார் அவர்கள், பகல் காலங்களில் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையிலேயே வஃபாத் ஆனார்கள்.
அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறுபது ஹதீஸ்கள் வரை அறிவிப்புச் செய்துள்ளார்கள்.
அன்னை உம்மு ஸல்மா (ரலி )
கேள்வி: நபி (ஸல்) அவர்களின் நான்காம் மனைவி யார்?
பதில்: அன்னை உம்மு ஸல்மா (ரலி) அவர்களாகும்.
கேள்வி: அன்னை உம்மு ஸல்மா (ரலி) அவர்களின் பிறப்பு, சிறப்புகள் யாவை?
பதில்: அன்னை உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் விதவையாகவே இருந்து வந்தார்கள். ஆழிய கடலைப் போன்ற இரக்க குணம் கொண்டவர்கள். நபி (ஸல்) 'உம்முல் மஸாக்கீன் - ஏழைகளின் தாய்' என்ற பட்டத்தையும் இவர்களுக்கு அளித்திருந்தார்கள்.
கேள்வி: இவர்களின் இயற்பெயர் என்ன?
பதில்: இவர்களின் இயற்பெயர் 'ஹிந்த்' என்பதாகும்.
கேள்வி: இவர்கள் முதலில் யாரைத் திருமணம் செய்திருந்தார்கள்?
பதில்: இவர்கள் நபி (ஸல்) அவர்களின் மாமியான பர்ரா என்பவரின் மகள் அபூ ஸல்மா (ரலி) என்பவரை மணந்திருந்தார்கள்.
இந்த அபூ ஸல்மா (ரலி) என்பவர்கள் நபி (ஸல்) அவர்களை ஈமான் கொண்டவர்களில் பன்னிரண்டாவது மனிதர் ஆவார்கள்.
நபி (ஸல்) அவர்களும் அபூஸல்மா (ரலி) அவர்களும் ஒரே பெண்ணிடம் பால் குடித்த சகோதரர்கள் ஆவார்கள்.
இந்த அபூ ஸல்மா (ரலி) அவர்களும், அன்னை உம்மு ஸல்மா (ரலி) அவர்களும், அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத்துச் செய்து, அங்கு சில காலம் இருந்த பிறகு, மீண்டும் மக்க மாநகரம் வந்து, மதீனாவுக்கு ஹிஜ்ரத்துச் செய்தார்கள். இவ்விருவரும் திரு மக்காவை விட்டும் புறப்பட்டபொழுது, இவர்களின் உறவினர்கள் அபூ ஸல்மா (ரலி) அவர்களை நோக்கி,
"உம்முடைய குழந்தைகள், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; எனவே நீர் அவர்களை எங்களிடம் விட்டுச் செல்வீ ராக" என்று கூறி, குழந்தைகளைப் பறித்துக் கொண்டார்கள்.
உம்மு ஸல்மா (ரலி) அவர்களின் உறவினர்கள், "எங்கள் குடும்பத்துப் பெண்ணை நாங்கள் விட மாட்டோம்" என்று கூறி உம்மு ஸல்மா (ரலி)வைத் தங்களுடன் தங்க வைத்துக் கொண்டனர். பின்னர் அபூஸல்மா (ரலி) அவர்கள் மனைவியையும், மக்களையும் பிரிந்து திரு மதீனா வந்து விட்டனர்.
கேள்வி: அபூ ஸல்மா (ரலி) அவர்கள் நிலை என்ன ஆனது?
பதில்: பத்ரு, உஹதுப் போர்களில் கலந்து கொண்டனர். உஹதுப் போரில் ஏற்பட்ட காயத்தால் ஷஹீத் ஆனார்கள்.
கேள்வி: உம்மு ஸல்மா (ரலி ) அவர்களின் முதல் கணவருக்குப் பிறந்த குழந்தைகள் எத்தனை பேர்கள்?
பதில்: இரண்டு ஆண், இரண்டு பெண் மக்கள் இருந்தனர்.
கேள்வி: உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை எப்படித் திருமணம் செய்து கொண்டனர்?
பதில்: இதோ! அன்னையார் கூறுகிறார்கள், கேளுங்கள்: "என்னுடைய இத்தா கழிந்தவுடன், அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னை மணம் முடித்துக் கொள்வதாக என்னிடம் தூது அனுப்பி னார்கள். எனினும் நான் அவர்களை மணமுடித்துக் கொள்ள (ஒப்ப)வில்லை.
"பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் மூலமாக என்னை மணம் செய்து கொள்வதாகத் தூது அனுப்பினார்கள்.
'"அதற்கு நான், "நிச்சயமாக நான் ஓர் உரோஷமுள்ள பெண், அன்றியும் பிள்ளைக் குட்டிக்காரி. என் உறவினர்களும் இங்கு இல்லை!" என்று கூறினேன். எனவே அவர்கள், இச்செய்தியை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நீர் அவர்களிடம் சென்று மீண்டும் அவரை நோக்கி, 'உம்முடைய உரோஷத்தன்மையைப் பற்றி நான் இறைவனிடம் இறைஞ்சி (துஆச் செய்து) அதனை உம்மை விட்டும் அகன்றொழியச் செய்து விடுகிறேன்.
''ஆனால் உம்முடைய சிறு குழந்தைகளைப் பற்றி நீரே அவர்களுக்குப் போதுமானவராக இருக்கின்றீர். அன்றி, உம் காரியஸ்தர்களில் இங்கு இருப்பவர்களும் சரி, இங்கு இல்லாதவர்களும் சரி, இதைப் பற்றி அதிருப்தியுறுபவர் எவருமிலர்' என்று (நான் கூறியதாகக்) கூறும் " என்றனர்.
"நான் என் மகனை நோக்கி, "உமரே! எழும், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும், எனக்கும் மணம் முடித்துவையும்!" என்று கூறினேன். எனவே, அவர், அவர்களுக்கு (என்னை) மணம் முடித்து வைத்தார்"
அறிவிப்பவர்: உம்மு ஸல்மா (ரலி)
நூல்: நஸாயீ
கேள்வி: நபி (ஸல்) அவர்களை மணந்து கொண்ட பொழுது உம்மு ஸல்மா (ரலி) அவர்களின் வயது எவ்வளவு?
பதில்: அப்பொழுது அன்னையாரின் வயது 24.
கேள்வி : அன்னை அவர்கள் எத்தனையாம் வயதில் இறந்தனர்?
பதில்: அன்னை உம்மு ஸல்மா (ரலி) அவர்கள், ஹிஜ்ரி 60-ம் வருடம் தங்களின் 80-ம் வயதில் காலமானார்கள்.
அன்னையார் மார்க்க அறிவில் கடல் போன்ற ஞானம் பெற்றிருந்தார்கள். ஏழைகளின் மீது மிகவும் இரக்கம் கொண்டவர்கள்.
ஒரு முறை சில ஏழைகள் வாயிலில் வந்து நின்று வற்புறுத்திப் பிச்சைக் கேட்டனர். பெண்களும் இக்கூட்டத்தில் இருந்தனர். இவ்வாறு கட்டாயப்படுத்தி யாசகம் கேட்கவும், அன்னை ஃபாத்திமா (ரலி) சிறிது கோபம் கொண்டனர். அன்னை உம்மு ஸல்மா (ரலி) அவர்கள், "அவர்களைக் கோபித்துக் கொள்ள நமக்கு எத்தகைய உரிமையும் இல்லை!" என்று கூறிவிட்டு பணியாட்களிடம், "பேரீத்தம் பழத் துண்டில் ஒன்றையேனும் அவர்களிடம் கொடுத்தனுப்புங்கள்" என்றார்கள்.
Comments
Post a Comment
Best comment is welcomed !