அன்னை ஜைனப் (ரலி)
கேள்வி: அன்னை ஜைனப் (ரலி) அவர்கள் முதலில் யாரைத் திருமணம் செய்திருந்தார்கள்?
பதில்: அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் என்பவரின் மனைவியாக இருந்தார்கள்.
கேள்வி: இவர்கள் நபி (ஸல்) அவர்களை எப்பொழுது மணந்து கொண்டார்கள்?
பதில்: அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் உஹதுப்போரில் வீர மரணம் அடைந்த பின் நபி (ஸல்) அவர்களை மணந்து கொண்டார்கள்.
கேள்வி: இவர்கள் எத்தனை ஆண்டு காலம் வாழ்ந்தார்கள்?
பதில்: இவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களைப் போன்றே நபி (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே காலமானார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜா (ரலி) அன்னை ஜைனப் (ரலி) ஆகிய இருவருக்கும் மட்டுமே தாங்களே முன்னின்று மரணச் சடங்குகளைச் செய்து முடித்து, 'ஜன்னத்துல் பகீஃ' என்னும் கப்ருஸ்தானில் அடக்கம் செய்தார்கள்.
கேள்வி: அச்சமயம் அன்னை ஜைனப் (ரலி) அவர்களின் வயது என்ன?
பதில்: அச்சமயம் அன்னையாரின் வயது முப்பது
கேள்வி: இவர்களுக்குரிய சிறப்புப் பெயர் என்ன?
பதில்: 'உம்முல் மஸாக்கீன் - 'ஏழையர்களின் தாய்' என்பதாகும்.
8.அன்னை ஜைனப் பிந்த் ஜஹ்ஷ் (ரலி)
கேள்வி: இந்த ஜைனப் பிந்த் ஜஹ்ஷ் என்பவர் யார்?
பதில்: இவர்கள் நபி (ஸல்) அவர்களின் மாமி மகள் ஆவார்.
கேள்வி: இவர்கள் எப்பொழுது இஸ்லாத்தில் சேர்ந்தனர்?
பதில்: இவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நபிப் பட்டம் கிடைத்த ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தில் சேர்ந்து விட்டார்கள்.
கேள்வி: இவர்களின் முதல் திருமணம் யாருடன் நடந்தது?
பதில்: நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாராக இருந்த ஹஜ்ரத் ஜைத் இப்னு ஹாரிதாவுடன் திருமணம் நடந்தது.
கேள்வி: அன்னை ஜைனப் (ரலி) அவர்கள் ஜைத் (ரலி) அவர்களுடன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தனர்?
பதில்: சுமார் ஓராண்டு காலம் வரை அன்னை ஜைனப் (ரலி) அவர்களும், ஜைத் (ரலி) அவர்களும் குடும்ப வாழ்க்கை நடத்தினார்கள்.
கேள்வி: ஜைத் (ரலி) அவர்கள் ஜைனப் (ரலி) அவர்களை ஏன் மண விலக்கு (தலாக்) சொன்னார்கள்?
பதில்: காரணம் என்னவென்றால் ஜைத் (ரலி) அவர்கள் அடிமை யாக இருந்தவர்கள். இஸ்லாத்தில் அடிமையோ, விடுதலை பெற் றவரோ, குரைஷிக் குலமோ எவராயினும் அனைவரும் சமமே ஆவார் கள். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் தம் மாமி மகளான ஜைனப் (ரலி) அவர்களை ஜைத் (ரலி) அவர்களுக்கு மணமுடித்து வைத்தார் கள். ஜைத் (ரலி) அவர்கள் அடிமையாக இருந்து விடுதலை பெற்ற வராகவும், அழகு குறைந்தவராகவும் இருந்ததைக் காரணமாக வைத்து ஜைத் (ரலி) அவர்களுடன் சரியாக வாழாமல் அவர்கள் வெறுப்படையும் சொற்களைக் கூறி வந்தார்கள் ஜைனப் (ரலி). இச்சொற்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஜைத் (ரலி) அவர் கள், நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அதன் பின்னரே இருவருக்கும் கசப்பு மேலோங்கித் தலாக் ஏற்பட்டு விட்டது.
கேள்வி: இத்தா கழித்தபின் ஜைனப் பிந்து ஜஹ்ஷ் யாரை மணந்து கொண்டார்கள்?
பதில்: இத்தா கழிந்த பின் நபி (ஸல்) அவர்களே ஜைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டனர்.
கேள்வி: அன்னை ஜைனப் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொண்டனர்?
பதில்: இது பற்றி ஹதீஸில் வந்துள்ளது. அது வருமாறு: “ஜைனப்
(ரலி) அவர்களுடைய 'இத்தா' காலம் கழிந்த பின், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களை நோக்கி, "நீர் ஜைனப் (ரலி) அவர்களிடம் சென்று, 'நான் அவரை மணம் முடிக்க விரும்புவ தாகக் கூறும்" என்றார்கள். எனவே, அனஸ் (ரலி) அவர்கள் அவர்களிடம் சென்றபோது, அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார். பின்னர் நிகழ்ந்தவற்றை அனஸ் (ரலி) அவர்களே விவரிக்கிறார்கள்; அவரை நான் கண்டதும் (அவர் இருந்த நிலை) என் மனத்திற்குப் பெரும் கவலையைத் தரவே, அவரைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. எனவே அவரை விட்டும் சற்றுத் திரும்பி, பின் சென்று நின்று 'ஜைனபே! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (உம்மை) மணமுடிக்க விரும்புவதாக உம்மிடம் அறிவிக்குமாறு என்னை அனுப்பி வைத்தனர்' என்று கூறினேன்.
அதற்கு அவர், 'நான் யாதொன்றும் செய்வதற்கில்லை. என்னு டைய இறைவனிடமிருந்து அனுமதி வரும் வரை' என்று கூறித் தாம் தொழும் இடத்திற்குச் சென்று தொழத் துவங்கி விட்டார். குர்ஆனில் சில வசனங்கள் அருளப்பட்டன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வந்து அவரிடம் அனுமதி பெறாது உள்ளே நுழைந்து சென்றனர். பின்னர் அவர்கள் எங்களுக்குப் பகல்வரை ரொட்டியும் இறைச்சியும் உண்ண அளித்ததை நிச்சயமாக நான் கண்டேன்.
அப்பொழுது மக்களில் சிலர் (விருந்து) உண்டு விட்டுப் புறப்பட்டனர். மற்றும் சிலர் உணவருந்தி விட்ட பின்னும் (அவ்)வீட்டில் இருந்தவாறு உரையாடிக் கொண்டிருந்தார்கள். எனவே, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெளியில் புறப்பட்டு விட்டனர். நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அப்பொழுது அவர்கள் தங்கள் மனைவியரின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு 'ஸலாம்' கூறினார்கள்.
அச்சமயம் அவர்கள் (மனைவிகள்) நபி (ஸல்) அவர்களை நோக்கி, 'நாயகமே! தாங்கள் தங்களின் (புது) மனைவியை எவ்வாறு அடையப் பெற்றீர்கள்?' என்று கேட்டனர். பின்னர் மக்கள் ஜைனப் (ரலி) அவர்களின் வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டனர் என்ற செய்தியை, நானோ அல்லது வேறு எவரோ நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கவே, அவர்கள் எழுந்து ஜைனப் (ரலி) அவர்களின் வீட்டிற்குள் சென்றனர். நானும் அவர்களுடன் நுழைந்தேன். அப்பொழுது அவர்கள் தங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு திரையிட்டனர். அதே நேரத்தில் திரை பற்றி இறைவனின் திருவசனம் இறங்கி அது பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்:முஸ்லிம், நஸயீ
கேள்வி: அன்னை ஜைனப் (ரலி) அவர்கள் காரணமாக அல்லாஹ் அருளிய கட்டளை என்ன?
பதில்: "ஈமான் கொண்டவர்களே! உணவிற்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரையில் அது தயார் ஆவதை வராகவும், அழகு குறைந்தவராகவும் இருந்ததைக் காரணமாக வைத்து ஜைத் (ரலி) அவர்களுடன் சரியாக வாழாமல் அவர்கள் வெறுப்படையும் சொற்களைக் கூறி வந்தார்கள் ஜைனப் (ரலி). இச்சொற்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஜைத் (ரலி) அவர் கள், நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அதன் பின்னரே இருவருக்கும் கசப்பு மேலோங்கித் தலாக் ஏற்பட்டு விட்டது.
கேள்வி: இத்தா கழித்தபின் ஜைனப் பிந்து ஜஹ்ஷ் யாரை மணந்து கொண்டார்கள்?
பதில்: இத்தா கழிந்த பின் நபி (ஸல்) அவர்களே ஜைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டனர்.
கேள்வி: அன்னை ஜைனப் (ரலி) அவர்களை நபி (ஸல் ) அவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொண்டனர்?
பதில்: இது பற்றி ஹதீஸில் வந்துள்ளது. அது வருமாறு: "ஜைனப் (ரலி) அவர்களுடைய 'இத்தா' காலம் கழிந்த பின், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களை நோக்கி, “நீர் ஜைனப் (ரலி) அவர்களிடம் சென்று, 'நான் அவரை மணம் முடிக்க விரும்புவ தாகக் கூறும்" என்றார்கள். எனவே, அனஸ் (ரலி) அவர்கள் அவர்களிடம் சென்றபோது, அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார். பின்னர் நிகழ்ந்தவற்றை அனஸ் (ரலி) அவர்களே விவரிக்கிறார்கள்; அவரை நான் கண்டதும் (அவர் இருந்த நிலை) என் மனத்திற்குப் பெரும் கவலையைத் தரவே, அவரைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. எனவே அவரை விட்டும் சற்றுத் திரும்பி, பின் சென்று நின்று 'ஜைனபே! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (உம்மை) மணமுடிக்க விரும்புவதாக உம்மிடம் அறிவிக்குமாறு என்னை அனுப்பி வைத்தனர்' என்று கூறினேன்.
அதற்கு அவர், 'நான் யாதொன்றும் செய்வதற்கில்லை. என்னு டைய இறைவனிடமிருந்து அனுமதி வரும் வரை' என்று கூறித் தாம் தொழும் இடத்திற்குச் சென்று தொழத் துவங்கி விட்டார். குர்ஆனில் சில வசனங்கள் அருளப்பட்டன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வந்து அவரிடம் அனுமதி பெறாது உள்ளே நுழைந்து சென்றனர். பின்னர் அவர்கள் எங்களுக்குப் பகல்வரை ரொட்டியும் இறைச்சியும் உண்ண அளித்ததை நிச்சயமாக நான் கண்டேன்.
அப்பொழுது மக்களில் சிலர் (விருந்து) உண்டு விட்டுப் புறப்பட்டனர். மற்றும் சிலர் உணவருந்தி விட்ட பின்னும் (அவ்)வீட்டில் இருந்தவாறு உரையாடிக் கொண்டிருந்தார்கள். எனவே, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெளியில் புறப்பட்டு விட்டனர். நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அப்பொழுது அவர்கள் தங்கள் மனைவியரின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு 'ஸலாம்' கூறினார்கள்.
அச்சமயம் அவர்கள் (மனைவிகள்) நபி (ஸல்) அவர்களை நோக்கி, 'நாயகமே! தாங்கள் தங்களின் (புது) மனைவியை எவ்வாறு அடையப் பெற்றீர்கள்?' என்று கேட்டனர். பின்னர் மக்கள் ஜைனப் (ரலி) அவர்களின் வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டனர் என்ற செய்தியை, நானோ அல்லது வேறு எவரோ நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கவே, அவர்கள் எழுந்து ஜைனப் (ரலி) அவர்களின் வீட்டிற்குள் சென்றனர். நானும் அவர்களுடன் நுழைந்தேன். அப்பொழுது அவர்கள் தங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு திரையிட்டனர். அதே நேரத்தில் திரை பற்றி இறைவனின் திருவசனம் இறங்கி அது பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அறிவிப்பவர்:
அனஸ் (ரலி),
நூல்:முஸ்லிம், நஸயீ
கேள்வி: அன்னை ஜைனப் (ரலி) அவர்கள் காரணமாக அல்லாஹ் அருளிய கட்டளை என்ன?
பதில்: "ஈமான் கொண்டவர்களே! உணவிற்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரையில் அது தயார் ஆவதை எதிர்பார்த்தவர்களாக நபியினுடைய வீடுகளில் நுழைந்து விடாதீர்கள். எனினும், நீங்கள் (விருந்துண்பதற்கு) அழைக்கப் பட்டால் அப்பொழுது உள்ளே செல்லுங்கள். எனவே நீங்கள் உணவை அருந்தி விட்டால் எந்தப் பேச்சிலும் ஈடுபடாதவர்களாக கலைந்து விடுங்கள். நிச்சயமாக அ(வ்வாறு பேசிக் கொண்டிருப்ப)து நபிக்குத் தொல்லையைக் கொடுக்கும். அவரோ உங்களிடம் (இதனைக்கூற) வெட்கப்படுவார்.
''அல்லாஹ்வோ உண்மையைக் கூற வெட்கப்படமாட்டான். (அவருடைய மனைவிகளான) அப்பெண்களிடம் ஏதேனுமொரு பொருளை நீங்கள் கேட்(க வேண்டியதேற்பட்)டால், அப்பொழுது திரைக்கப்பாலிருந்தே அவர்களிடம் கேளுங்கள். அது உங்களுடைய இருதயங்களையும், அவர்களுடைய இருதயங்களையும் மிகவும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதருக்கு நீங்கள் தொல்லை கொடுப்பதும் உங்களுக்குத் தகுமானதல்ல. அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு பொழுதும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளவும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடம் (பாவத்தில்) மகத்தானதாக இருக்கின்றது.'
கேள்வி:மேற்கூறிய இறை கட்டளையின் கருத்து என்ன?
பதில்: விருந்துக்குச் செல்பவர்கள் விருந்து உண்பதற்கு வீட்டின் உரிமையாளர்கள் உள்ளே வருமாறு அழைத்தாலன்றித் தாமே உள்ளே நுழையக் கூடாது.
அவ்வாறு உள்ளே சென்று விருந்து உண்டு விட்டால் அவ்வீட்டாருக்குத் தொல்லை கொடுக்காமல் உடனே வெளியேறி விட வேண்டும் என்பதே அதன் கருத்துச் சுருக்கமாகும்.
கேள்வி: "ஏதும் பொருள் கேட்பதானால் திரைக்கு அப்பாலிருந்தபடியே கேளுங்கள்" என்று வருகின்ற வசனத்தின் கருத்து என்ன?
பதில்: இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள கட்டளை முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். அதாவது ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் வீட்டிற்குச் சென்றால், மூன்று முறைகள் அனுமதி கேட்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அனுமதி கேட்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அஸ்ஸலாமு அலைக்கும் யாஅஹ்லல் பைத்தி வீட்டுக்கு உரியவர்களே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்" என்று சொல்லி, தம்முடைய பெயரையும் கூறி, இன்னார் உள்ளே வரலாமா என்று கேட்க வேண்டும். பதில் கிடைக்கவில்லையென்றால் சிறிது தாமதித்து, மீண்டும் அனுமதி கேட்க வேண்டும். அனுமதி கிடைத்தால் உள்ளே செல்ல வேண்டும். இல்லையென்றால் கோபமோ, பொறாமையோ கொள்ளாமல் திரும்பி வந்து விட வேண்டும்.
ஹல்ரத் அனஸ் (ரலி) அவர்கள் திரு மதீனாவுக்கு வரும் பொழுது பத்து வயதுச் சிறுவராக இருந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: "நான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் இவ்வுலகத்தை விட்டும் மறைந்தபொழுது, நான் இருபது வயது இளைஞனாக இருந்தேன். பெண்கள் திரைமறைவில் இருக்க வேண்டும் என்று இறைவன் அருளியுள்ள செய்தி பற்றி நான் மிகவும் அறிந்திருக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் ஜைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்து கொண்டு முதல் இரவை முடித்துக் கொண்ட காலையில் வலீமா (திருமண) விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
"அதற்குப் பெருங்கூட்டத்தினரை அழைத்திருந்தார்கள். அனைவரும் வந்திருந்தனர். விருந்துண்டு விட்டுச் சென்றனர். ஒரு சிலர் மட்டும் விருந்து உண்டு பெருமானார் (ஸல்) அவர்களுடைய வீட்டில் நீண்ட நேரம் தங்கியிருந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை வெளியேறுமாறு சொல்ல முடியாத நபி (ஸல்) அவர்கள், தாங்களே வீட்டை விட்டு வெளியேறினார்கள். நானும் அவர் களுடன் வெளியில் வந்தேன். அப்படியேனும் அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் நினைத்தார் கள். நானும், அவர்களும் ஹல்ரத் ஆயிஷா (ரலி) அவர்களுடைய அறை வரை வந்து விட்டுச் சிறிது நேரம் பொறுத்து அங்கு சென்றோம். அவர்கள் வெளியேறிருப்பார்கள் என்று எண்ணினோம். ஆனால் அச்சிலர், அப்பொழுதும் பேசிக் கொண்டுதான் இருந்தார்களே தவிர வெளியேறவில்லை. மீண்டும் நாங்கள் அங்கிருந்து வெளியேறி வந்து ஹல்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் அறை வரை வந்து விட்டுத் திரும்பவும் ஜைனபின் வீட்டுக்குச் சென்றோம். அப்பொழுது தான் அவர்கள் வெளியேறி இருந்தார்கள். உடனேயே நபி (ஸல் ) அவர்கள் எனக்கும் அவர்களுக்குமியிடையே திரை போட்டு விட்டார்கள். அவர்கள் அந்த அறையிலிருக்கும் பொழுதே இவ்வசனம் இறக்கப்பட்டது.
அறிவிப்பவர்கள்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்:புகாரி,முஸ்லிம்
கேள்வி: இந்தச் சட்டம் அருளப்படுவதற்கு முன் உள்ள நிலை என்ன?
பதில்: இச்சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் பெண்கள் வெளியில் சாதாரணமாகப் போய் வந்து கொண்டிருந்தார்கள். தங்கள் வீடுகளில் கழிப்பிடம் (கக்கூஸ்) இல்லாத காரணத்தால் வெளியிடங்களுக்கு அவர்கள் சென்று வருவார்கள். இச்சட்டம் வந்த பின்னர் அவர்கள் வீட்டங்கிஇருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதால் கழிப்பிடங்களை வீடுகளிலேயே அமைத்துக் கொண்டனர்.
கேள்வி:ஃபர்தாவின் சட்டம் எப்பொழுது ஏற்பட்டது?
பதில்: ஒரு முறை ஹல்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நல்லவரும் கெட்டவரும் உங்களிடம் (வீட்டினுள்) நுழைகின்றனர். முஃமின்களான தாய்மார்களை(உங்களுடைய மனைவிகளை) திரை மறைவில் இருந்து கொள்ளுமாறு நீங்கள் ஏவினால் நன்றாக இருக்குமே" எனக் கூறினார்கள். அப்பொழுதே (பெண்கள்) திரை மறைவில் இருக்க வேண்டுமென்ற வசனம் இறக்கப்பட்டது.
இது இறங்கிய சமயம் நபி (ஸல்) அவர்கள் ஹல்ரத் ஜைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்து கொண்ட தினத்தின் காலை நேரமாகும். ஹிஜ்ரி 5-ம் ஆண்டு, துல்கஃதா மாதத்தில் இது நடந்தது.
அறிவித்தவர்கள்: ஹல்ரத் அனஸ் (ரலி)
நூல்:புகாரி
கேள்வி: அன்னை ஜைனப் (ரலி) அவர்களின் குணநலன்கள் யாவை?
பதில்: அன்னை அவர்கள் ஏழை எளியவர்கள் மீது இரக்கம் கொண்டவர்களாகவும், தாராள மனம் கொண்டவர்களாகவும், தர்ம காரியங்களை அதிகம் செய்பவர்களாகவும் இருந்தனர்.
கேள்வி: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜைனப் (ரலி) அவர்களின் தர்ம குணம் பற்றிக் கூறியது என்ன?
பதில்: "உங்களில் எவருடைய கை நீளமாக இருக்கிறதோ அவரே முதன் முதலாக என்னுடன் வந்து சேர்வார்" என்று கூறினர்.
கேள்வி: நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட அன்னையவர்கள் என்ன செய்தனர்?
பதில்: ஒவ்வொருவரும் தங்கள் கைகளை அளவு எடுத்தனர். அண்ணலார் கூறியதன் விளக்கம் என்னவென்றால், "ஸதகா செய்வதற்காக உங்களில் எவரின் கை நீளுகின்றதோ அவரே என்னை முதலில் வந்து அடைவார்" என்பதாகும். அவ்வகையில் அன்னை ஜைனப் (ரலி) அவர்கள் அதிகமாக ஸதக்கா செய்ததன் மூலம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் முதன்மையாக அவர்களை அடைந்து கொண்டார்கள்.
கேள்வி: இவர்களின் மரணம் எப்பொழுது நிகழ்ந்தது?
பதில்: இவர்கள் ஹிஜ்ரி 20-ல் காலமானார்கள். தங்கள் மரணத்துக்குரிய கஃபன் துணிகளையெல்லாம் இவர்களே தயார் செய்து வைத்திருந்தார்கள்.
கேள்வி: இவர்களின் ஜனாஸாத் தொழுகையை நடத்தியவர்கள் யார்?
பதில்: ஹல்ரத் உமர் (ரலி) அவர்கள் ஜனாஸாத் தொழுகையை நடத்தினார்கள். உஸா இப்னு ஜஹ்ஷ், அப்துல்லாஹ் இப்னு அபீ அஹ்மத் இப்னு ஜஹ்ஷ் முதலியவர்கள் மண்ணறையில் இறங்கி அவர்களின் உடலை இறக்கினார்கள்.
கேள்வி: அன்னையார் எங்கே அடக்கப் பெற்றார்கள்?
பதில்: ஜன்னத்துல் பகீஃ' என்னும் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
கேள்வி: அன்னை ஜைனப் (ரலி) அவர்கள் மரணமாகும் போது அவர்களின் வயது என்ன?
பதில்: அச்சமயம் அன்னையாருக்கு வயது ஐம்பது.
Comments
Post a Comment
Best comment is welcomed !