திருமணத்தின் காரணமாக விலக்கப்படும் பெண்கள்

 


திருமணத்தின் காரணமாக

விலக்கப்படும் பெண்கள்


قال النبي : إِنَّ اللَّهَ فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا وَحَدَّ حُدُودًا فَلَا تَهَعْتَدُدُ


அண்ணல் நபி (ஸல்)அவர்கள் அருளினார்கள்: "திண்ணமாக அல்லாஹ் சில காரியங்களைக் கடமையாக்கியுள்ளான். அவற்றைப் பாழாக்கிவிடாதீர்கள். சில வரம்புகளை நிர்ணயித்துள்ளான். அவற்றை மீறாதீர்கள்"


அல்லாஹ் நிர்ணயித்துள்ள இத்தகைய வரம்புகளில் ஒன்றுதான் திருமணம் என்பதும். அதன் நிர்ணயம் ஹலால்-ஹராம் (ஆகுமாகுதல், விலக்கப்படல் எனும்) இரு நிலைகளிலும் உள்ளது.


குடும்ப பந்தம், பால்குடி பந்தம், திருமண உறவு போன்ற காரணங்களினால் அல்லாஹ் சில குறிப்பிட்ட பெண்களை ஒருமனிதனுக்கு விலக்கப்பட்டவர்களாக ஆக்கியுள்ளான்.


அப்படி ஒரு மனிதன் திருமணம் செய்யக்கூடாதென விலக்கப்பட்ட பெண்கள் இரு வகை யினராவர்.


1) நிரந்தரமாக விலக்கப்பட்டவர்கள்.


2) குறிப்பிட்ட காலம் வரை விலக்கப்


பட்டவர்கள்.


நிரந்தரமாக விலக்கப்பட்டவர்கள்:


இவர்கள் 3 வகையினர்:


1) குடும்பப் பந்தத்தினால் விலக்கப்பட்டவர்கள்.


இவர்கள் ஏழுவகைப் பெண்கள். இவர்கள் பற்றி குர்ஆனில் அந்நிஸா 4 ஆம் அத்தியாயத் தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :


قال الله تعالى: حُرِّمَتْ عَلَيْكُمۡ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَ بَناتُ الأُخت (النساء الآية: ٢٣)


(இந்தப் பெண்களை மணம்புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் அன்னை யர், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன்பிறந்த சகோதரிகள், சகோதரரின் புதல்விகள், சகோதரியின் புதல்வி कनां" (4: 23)


அ. அன்னையர்: இவர்களில் தாயும் பாட்டிகளும் சேருவர், தந்தைவழிப் பாட்டிகளாயினும் தாய்வழிப் பாட்டிகளாயினும் சரியே!


ஆ. புதல்விகள்: இவர்களில் சொந்தப் புதல்விகளும் மகன்வழிப் பேத்திகளும் மகள் வழிப் பேத்திகளும் அடங்குவர்.


இ. சகோதரிகள்: இவர்களில் உடன் பிறந்த சகோதரிகளும் தந்தைவழிச் சகோதரிகளும் தாய் வழிச் சகோதரிகளும் அடங்குவர்.


ஈ.தந்தையின் சகோதரிகள்: இவர்களில் பாட்டனின் சகோதரிகளும் பூட்டனின் சகோதரிகளும் மற்றும் தாய்வழிப் பாட்டனின் சகோதரிகளும் தாய்வழிப் பூட்டனின் சகோதரிகளும் அடங்குவர்.


உ. உங்கள் அன்னையின் சகோதரிகள்: இவர்களில் பாட்டனின் சகோதரிகளும் பூட்டனின் சகோதரிகளும் மற்றும் தாய்வழிப் பாட்டனின் சகோதரிகளும் தாய்வழிப் பூட்டனின் சகோதரிகளும் அடங்குவர்.


ஊ. சகோதரரின் புதல்விகள்: இவர்களில் உடன்பிறந்த சகோதரரின் புதல்விகளும் தந்தை வழிச்சகோதரரின் புதல்விகளும் தாய்வழிச் சகோதரரின் புதல்விகளும் மற்றும் அவர்களின் மகன் வழிப் பேத்திகளும் மகள் வழிப்பேத்திகளும் அடங்குவர்.


எ. சகோதரியின் புதல்விகள்: இவர்களில் உடன்பிறந்த சகோதரியின் புதல்விகளும் தந்தை வழிச் சகோதரியின் புதல்விகளும் தாய்வழிச் சகோதரியின் புதல்விகளும் மற்றும் அவர்களின் மகன்வழிப் பேத்திகளும் மகள்வழிப் பேத்திகளும் அடங்குவர்.


2. பால்குடி உறவினால் திருமணத்திற்கு விலக்கப்படும் பெண்கள் (இவர்கள் குடும்ப உறவினால் விலக்கப்பட்ட பெண்களைப்போன்ற வராவர்)


قال النبي : يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "குடும்பப் பந்தத்தினால் விலக்கப்படும் பெண்கள் பால்குடி உறவினாலும் (திரு மணத்திற்கு) விலக்கப்படுவார்கள்"


ஆனாலும் திருமணத்தை விலக்கி வைக்கும் பால்குடிக்குச் சில நிபந்தகைள் உள்ளன.


அ. பால்குடித்தல் என்பது ஐந்து தடவை களும் அதற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.


எனவே ஒரு குழந்தை ஒரு பெண்ணிடத்தில் நான்கு தடவை பால்குடித்தால் அவள் அந்தக் குழந்தைக்குத் தாயாக மாட்டாள்.


ஏனெனில் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பைப் பதிவு செய்துள்ளார்கள்: "திருமணத்தை விலக்கி வைக்கும்படியான அறியப்பட்ட பத்து முறை பால் குடித்தல்கள் தொடர்பான வசனங்களே குர்ஆனில் முதலில் இறக்கியருளப்பட்டன. பிறகு அவை அறியப்பட்ட ஐந்துமுறை பால்குடித்தல் உடைய வசனங்களின் மூலம் மாற்றப்பட்டு விட்டன. (ஐந்துமுறை பால்குடித்தல் உடைய) இந்த வசனங்கள் ஓதப்பட்டு வந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்தார்கள்"


ஆ. பால்குடித்தல் என்பது பால்குடி மறக்கடிக்கப்படும் பருவத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். அதாவது, குழந்தை பால்குடி மறக்கும் பருவத்திற்கு முன்னர் ஐந்து தடவை பால் குடித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. பால்குடி மறந்த பின்பு ஐந்து தடவை பால் குடித்திருந்தாலோ அல்லது சில தடவை பால்குடி மறப்பதற்கு முன்பும் இன்னும் சில தடவை அதற்குப் பின்பும் இருந்தாலோ அந்தப்பெண் அந்தக் குழந்தைக்குத் தாய் ஆக மாட்டாள்.


பால்குடியின் நிபந்தனைகள் நிறைவடைந்து விட்டால் குழந்தை பால் கொடுத்த அந்தப் பெண்ணின் பிள்ளையாகி விடுகிறது. அவளுடைய பிள்ளைகள் அந்தக் குழந்தைக்குச் சகோ தரர்களாகி விடுகின்றனர். அந்தப் பிள்ளைகள் இந்தப் பால்குடிக்கு முன்னர் பிறந்தவர்களா யினும் சரி அதன் பின்னர் பிறந்தவர்களாயினும் சரியே! மேலும் அந்தப் பாலுக்குக் காரணதாரரா கிய அந்தக் கணவனின் எல்லாப் பிள்ளைகளும் பால்குடித்த குழந்தைக்குச் சகோதரர்களாகி விடு கின்றனர். அந்தப் பிள்ளைகள் பால் கொடுத்த அந்தப் பெண்ணுக்குப் பிறந்தவர்களாயினும் அவரது இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர்களாயினும் சரியே!


இங்கு ஒன்றை நாம் அறிந்து கொள்வது அவசியம். பால்குடித்த 'குழந்தை'யின் பிள்ளை களைத் தவிர அதன் உறவினர் எவருக்கும் இந்தப் பால்குடி விஷயத்தில் எந்தத் தொடர்பும் கிடையாது. அது அவர்களில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தார்.


எனவே அந்தக் குழந்தையின் குடும்ப பந்த உடைய சகோதரன் அதன் பால்குடித் தாயைத் திருமணம் செய்வது கூடும். அதன் பால்குடிச் சகோதரியைத் திருமணம் செய்வதும் கூடும்.


ஆனால் பால்குடித்த 'குழந்தை'யின் சந்ததிகள் (பிள்ளைகள்) பாலூட்டிய அந்தப் பெண்ணுக் கும் அந்தப் பாலுக்குக் காரணதாரராகிய கணவருக்கும் பிள்ளைகள் போன்றாவார்கள்.


3) திருமண உறவின் காரணமாக விலக் கப்பட்டவர்கள்.


அ. தந்தை மற்றும் பாட்டனின் மனைவியர்:


-பூட்டனின் மனைவி, அவருடைய தந்தையின் மனைவி என்று இன்னும் மேலே போனா லும் சரியே! -அவர்கள் தந்தைவழிப் பாட்டனாக இருந்தாலும் தாய்வழிப் பாட்டனாக இருந்தா லும் சரியே! ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:


قال الله تعالى: وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاءكُمْ مِنَ النساء (سورة النساء الآية: (٢٢)


உங்கள் தந்தையர் மணம் புரிந்திருந்த பெண்களை நீங்கள் மணம் புரியாதீர்" (4:22) ஒரு மனிதன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஒப்பந்தம் நிறைவேறி விடுகிறபோது அவளுடன் அவன் உடலுறவு கொண்டாலும் சரி, உடலுறவு கொள்ளாவிட்டாலும் சரியே -அவனுடைய புதல்வர்களின் மீதும் மகன்வழிப் பேரன்களின் மீதும் மகள்வழிப்பேரன்களின் மீதும் அந்தப்பெண் (ஹராம்) விலக்கபட்டவளாகி விடுகிறாள்.. பேரன்களின் புதல்வர்கள், அந்தப் புதல் வர்களின் புதலவர்கள் என்று எவ்வளவு இறங்கு வரிசையில் போனாலும் சரியே!


ஆ. புதல்வர்களின் மனைவியர். பேரன்களின் மனைவியர், கொள்ளுப் பேரன்களின் மனை வியர் என்று எவ்வளவு இறங்கு வரிசையில் போனாலும் சரியே! ஏனெனில் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:


قال الله : وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلابِكُمْ (النساء الآية: (٢٣)


உங்கள் முதுகந்தண்டுகளில் இருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை (நீங்கள் திருமணம் செய்வதும் விலக்கப்பட்டுள்ளது)" (4:23)


ஒரு மனிதன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஒப்பந்தம் நிறைவேறிவிட்டால் அவள் அவனது தந்தை மீதும் பாட்டனார்களின் மீதும் (ஹராம்) விலக்கப்பட்டவளாகி விடுகிறாள்., பாட்டனார்களில் பூட்டன், பூட்டனின் பாட்டன் என எவ்வளவு மேலே சென்றாலும் சரி எல்லாப் பாட்டன்களும் அடங்குவர்! அவர்கள் தந்தை வழிப்பாட்டனாக இருந்தாலும் தாய்வழிப்பாட் டனாக இருந்தாலும் சரியே! திருமண ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமே அவர்கள் மீது அவள் விலக்கப் பட்டவளாகி விடுகிறாள். அவளுடன் அவன் உடலுறவு கொள்ளவில்லை என்றாலும் சரியே!


இ. மனைவியின் தாய் மற்றும் அவளுடைய பாட்டிகள்: பாட்டியின் தாய், பாட்டியின் பாட்டி என்று மேலே சென்றாலும் சரியே!


ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: "உங்கள் மனைவியரின் அன்னைரை திருமணம் செய்வதும் (உங்கள் மீது விலக்கப்பட்டுள்ளது) (4:23)


ஒரு மனிதன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஒப்பந்தம் நிறைவேறி விட்டால் அவ ளுடைய அன்னையும் பாட்டிகளும் அவன் மீது விலக்கப்பட்டவர்களாகி விடுகிறார்கள். அவளு டன் அவன் உடலுறவு கொள்ளவில்லை என்றா லும் சரியே! பாட்டிகள், தந்தைவழிப் பாட்டிக ளாக இருந்தாலும் தாய்வழிப் பாட்டிகளாக இருந் தாலும் சரியே!


ஈ. மனைவியின் புதல்விகள்:


இவர்களில் அவளுடைய மகன்வழிப் பேத்திகளும் மகள்வழிப் பேத்திகளும் அடங்குவர். இவர்கள் வளர்ப்புப் புதல்விகளாவர்(அதாவது மனைவியின் புதல்விகளாவர்) அவர்களின் மகள்கள் பேத்திகளும் ஆவர். ஆனால் ஒரு நிபந்தனை: அவர் தனது மனைவியுடன் உடலுறவு கொண்டி ருக்க வேண்டும். உடலுறவுக்கு முன்னதாக மணமுறிவு ஏற்பட்டுவிட்டால் அவளது புதல்விகளை மணம்புரிவது அவன் மீது விலக்கப்பட மாட்டாது. அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:


قال الله تعالى: وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورَكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْهُمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ


(سورة النساء الآية: (۲۳)


மேலும் நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெ டுத்த மேலும் உங்கள் மடிகளில் வளர்ந்த உங்கள் புதல்விகளைத்திருமணம் செய்வதும் (உங்க ளுக்கு விலக்கப்பட்டுள்ளது) ஆனால் (திருமணமாகி) நீங்கள் அந்த மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லை எனில் (அவர்களை விடுத்து அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள் வதில்) உங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லை" (4:23)


ஒரு மனிதன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளுடன் உடலுறவு கொண்டால் அவ ளுடைய புதல்விகளும் பேத்திகளும் அவன் மீது (ஹராம்) விலக்கப்பட்டவர்களாகி விடுவர். அவ ளின் முந்தைய கணவரின் மூலம் பிறந்தவர் களாயினும் சரி, அவனுக்குப் பின்னர் (அதாவது அவன் மணவிலக்கு செய்த பின்னர்) அவள் மறுமணம் செய்துகொண்ட கணவரின் மூலம் பிறந்தவர்களாயினும் சரியே!


ஆனால் உடலுறவுக்கு முன்பே மணமுறிவு ஏற்பட்டு விட்டால் அவளுடைய புதல்விகளும் பேத்திகளும் அவன் மீது (ஹராம்) விலக்கப்பட்டவர்களாக மாட்டார்கள்.


2. குறிப்பிட்ட காலம் வரை விலக்கப்பட்டவர்கள்:


இந்தப் பெண்களில் பல வகையினர் உள்ளனர்: அ. மனைவியின் சகோதரி. மனைவியின் தந்தையின் சகோதரி. (அதாவது மனைவியின் அத்தை) அவளுடைய தாயின் சகோதரி, (அதா வது சின்னம்மா, பெரியம்மா) ஆகியோர். அவனுக்கும் அவன் மனைவிக்கும் பிரிவு ஏற்படும் வரையில் இந்தப் பெண்களைத் திருமணம் செய்வது அவன் மீது விலக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவு அவளது மரணத்தினால் ஏற்பட்டாலும் சரிஅல்லது மணவிலக்கு நிகழ்ந்து இத்தா காலம் கழிந்ததால் ஏற்பட்டாலும் சரியே! குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:


قال الله تعالى : وَ أَنْ تَجْمَعُوا بَيْنَ الأختين (النساء الآية : ٢٣)


"இரண்டு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனையிவராக்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது"(4:23) மேலும் அண்ணல் நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்:


"ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக ஆக்குவதும் கூடாது. ஒருபெண்ணையும் அவளுடைய தாயின் சகோரரியையும் ஒருசேர மனைவி யராக்குவதும் கூடாது" (நூல்: புகாரி, முஸ்லிம்)


ஆ. இத்தாவில் இருப்பவள்.


அதாவது ஒரு பெண் அவளுடைய கணவரால் மணவிலக்கு செய்யப்பட்டு இத்தா காலம் கழியாதிருந்தால் அந்தக் காலம் கழியும் வரையில் அவளைத் திருமணம் செய்வது கூடாது. இதேபோன்று இத்தா நிலையிலுள்ள பெண்ணுடன் மறுமணம் செய்வதற்கான பேச்சு வார்த்தை நடத்துவது கூடாது.. இத்தா காலம் கழியும் வரையில்!


இ. ஹஜ், உம்றா காரணமாக திருமணத்திற்கு விலக்கப்பட்ட பெண்.


இப்படிப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்வது கூடாது.. (ஹஜ் - உம்றாவுக்கான) இஹ்ரா மில் இருந்து விடுவடும் வரையில்!


இவ்வாறு தற்காலிகமாகத் திருமணம் விலக் கப்படும் பெண்களின் வரிசை அதிகமாக இருப்ப தால் அவர்களைப் பற்றி கூறுவதை இங்கு தவிர்த்து விட்டோம்.


ஆனால் மாதவிடாய் ஒரு பெண்ணின் மீது திருமண உடன்படிக்கை நிகழ்வதைத் தடை செய்யாது. மாதவிடாய் காலத்திலும் அவள் திரு மணம் புரியலாம். ஆனால் மாதவிடாய் நின்று தூய்மைாயாகி குளிக்காத வரையில் அவளுடன் உடலுறவு செய்வது கூடாது.

Comments