திருமணம்
மேன்மைமிகு ஷைக்முஹம்மத் பின் ஸாலிஹ் அல் - உஸைமீன் (ரஹ்)
தமிழில்
K.J. மஸ்தான் அலீ பாகவி, உமரி (அபூ காலித்)
بسم الله الرحمن الرحيم
சமூகச் சூழ்நிலைகள்
அல்-கஸீம் சட்டக் கல்லூரியும் அரபி மொழியியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் இந்தக் கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதில் கலந்து கொள்வதன் மூலம் எனக்கும் எனது உரையைக் கேட்கக்கூடிய, படிக்கக் கூடிய அனைவருக்கும் - இன்ஷா அல்லாஹ்- நற்பயன் கிடைக்க வேண்டும் என நான் விரும்பு கிறேன்.
அல்லாஹ் நம் அனைவரது பணியையும் அவனுக்கே உரித்தான தூய பணியாய், அவனது விருப்பத்திற்கு ஏற்ற நல்ல பணியாய் ஆக்கி அருளுமாறு இறைஞ்சுகிறேன்.
எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் பேசத்தொடங்கும் முன் ஒரு விஷயத்தை எடுத்துச்சொல்ல விரும்புகிறேன். அது பொருத்தமான ஒன்றாகவே அமையும் இன்ஷாஅல்லாஹ்!
அன்புச் சகோதரர்களே! பெரியோர்களே! இன்றைய காலத்தில் இஸ்லாம் பல்வேறு சவால் களை எதிர் நோக்கியுள்ளது., பல திசைகளில் இருந்தும் இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக் கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
1) சிந்தனை ரீதியான தாக்குதல்
2) பண்பாட்டு ரீதியான தாக்குதல்
3) கொள்கை ரீதியான தாக்குதல்
இவ்வாறு இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும் சூழ்நிலைகளில் எல்லாம் அவை எவ்வளவு பலமான தாக்குதல்களாக இருந்தா லும் அவற்றை எதிர் கொண்டு பதில் அளிப்பது ஏன், அதிக பலத்தோடு அவற்றிற்குப் பதிலடி கொடுப்பது அவசியம் என்பதையும் அப்படிச் செய்யவில்லை எனில் அத்துடன் இஸ்லாத்தின் கதை முடிந்தது என்றே பொருள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
இந்தப்பணி மார்க்க அறிஞர்கள், மார்க்கத்தின் மீது பற்று உள்ளோரின் தோளின் மீது விழுந் துள்ள பொறுப்பாகும். அவர்களால் எந்த அளவுக்கு முயற்சி செய்து- நாற்புறங்களில் இருந்தும் நம்மை நோக்கி வருகிற இந்தத் தாக்கு தல்களை - எதிர்ப்பு அலைகளைத் தடுத்து நிறுத்திட வேண்டும். ஏனெனில் இன்றைய முஸ்லிம் உலகம் இந்த எதிர்ப்பு அலைகளை எல்லாம் எப்படிச் சமாளிப்பது என்பதை அறியாமல் திகைத்து நிற்கிறது!
சுவூதி அரேபியா இஸ்லாத்தின் தொட்டிலாகவும் முஸ்லிம்களின் கிப்லாவாகவும் அவர்களுக் கெல்லாம் ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. எனவே நாச வேலைகள் அனைத்தையும் இந்த நாட்டை நோக்கித்தான் திருப்பி விட வேண்டும் என்று எதிரிகள் கூறுவதை நாம் பரலவாகக் கேள்விப்படுகிறோம்.
அவ்வாறே எதிரிகள் இன்று சிந்தனை ரீதி யாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இந்த நாட்டை அழித்து நாசமாக்கிடக் கடும் தாக்குதல்கள் தொடுத்திருப்பதைக் காணலாம். கடுமையான சூழ்ச்சி வலை பின்னி வருவதையும் நாற்புறங்களில் இருந்தும் தாக்குதலுக்கு வரிந்து கட்டிக் கொண்டி ருப்பதையும் காணலாம்!
எதிரிகளின் இந்த தீயசூழ்ச்சிகளை முளையிலேயே கிள்ளி எறிந்திட இந்நாட்டிலுள்ள அறிஞர் பெருமக்களும் வாய்மைமிக்க தலைவர்களும் உரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனில் பெரும் குழப்பங்களும் தீமைகளும் தொல்லைகளும் தலைதூக்குவது நிச்சயம்! எதிரிகள் இந் நாட்டினுள் ஊடுருவி உளவு வேலைகளில் ஈடுபட்டு விரும்பத்தகாத விபரீதங்கள் ஏற்படுவதை நாம் காண நேரிடும்!
சகோதரர்களே! இந்த எதிர்ப்பலைகளுக்கு எதிரில் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் இவைதாம்:
1) ஒருங்கிணைந்த இஸ்லாமிய அழைப்புப் பணி.
2) ஒருங்கிணைந்த உழைப்பு
3) நம்மிடையே ஊடுருவுவதற்கான சந்தர்ப்பம் எதிரிகளுக்கு அளிக்காதிருப்பது
ஆனால் இந்த அடிப்படையில் நாம் செயல்படவில்லை எனும் உண்மையை நான் துணிந்து சொல்வேன். நம்மில் ஒவ்வொருவரும் தனித்தனியேதான் செயல்படுகிறோம். ஓர் இலட்சியத்திற் காக இரண்டு பேர் ஒற்றுமையாக செயல்படுவதை நாம் காணமுடியவில்லை. இன்னும் தெளி வாகச் சொல்வதானால் ஒரு பாதையில் இரண்டு பேர் பயணிப்பது அரிதாக உள்ளது.. இத்த னைக்கும் அந்த இருவரின் இலட்சியம் ஒன்றுதான்!
ஆகையால் என்னைப் பொறுத்தவரையில் இந்நாட்டில் வாழும் அறிஞர் பெருமக்களுடைய கடமை யாதெனில் அவர்கள் அனைவரும் ஒரு லட்சயித்தின் கீழ் ஒன்றுதிரள வேண்டும்., அவர் கள் ரியாத்தை சேர்ந்தவர்களாயினும் ஹிஜாஸை சேர்ந்தவர்களாயினும் கஸீமை சேர்ந்தவர்களாயி னும் சரியே! அனைவரும் ஒரே குறிக்கோளுக்காக ஒன்றுபட வேண்டும். மிகுந்த பொறுப்பு உணர்வுடன் பிரச்னைகளை ஆராய வேண்டும். ஏனெனில் இந்தப் பிரச்னைகள் மிகவும் அபாய கரமானவை என்பது எனது கருத்தாகும். எனவே முழுமையாக இவற்றைப் பரிந்திட வேண்டும். குறிப்பாக தகவல் தொடர்புச் சாதனங்கள், பண் பாட்டியல் விவகாரங்கள், கல்விக் கூடங்களின் பாடத்திட்டம் - கற்பிக்கும்முறை ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அத்துடன் தீனின் கொள்கைகோட்பாடுகள், பண்பாடுகளை விட்டு பொதுமக்கள் விலகிச் செல்வதற்கான காரணங் களையும் ஆராய்ந்திட வேண்டும்.
அது மட்டுமல்ல, இன்று பெரும்பாலான மாணவர்களும் கல்வியாளர்களும் உலகச் சுகபோகங் களின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் நிலையைப் காண்கிறோம். சொத்து சுகங்களையும் வாழ்க் கைச் சாதனங்களையும் பெருக்கிடும் முயற்சியில் மூழ்கிக் கிடப்பதைப் பார்க்கிறோம்! இந்நிலை, இவர்களின் அழைப்புப் பணியை ஊனப்படுத்துவதுடன் பொதுமக்களிடம் அதனை மதிப்பிழக்கவும் செய்து விடுகிறது.
இறைமார்க்கத்தைக் கற்றுக் தேர்ந்த ஒருவரின் நடத்தை, அவரைச் சுற்றிலும் வாழ்கிற மக்களிடம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்த வல்லதாகத் திகழ்கிறது. நாலாந்தர மனிதர்கள் உலகச் சுகங்களைத் தேடி அலைவது போன்று நம்முடைய கல்வியாளர்களும் உலக சுக போகங்களில் மூழ்கிக் கிடப்பதையே மக்கள் பார்ப்பார்களேயானால் அவர்களின் அறிவுரைகள், வழிகாட்டல் களின் மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்பாடாது!
சகோதரர்களே! இவ்வாறுதான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் விஷயத்தில் நலம் நாடுவதும் நல்லுரை பகர்வதும் நம்மீது கடமையாகிறது. ஏனெனில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தீன் என்பது நலம் நாடுவதே என்று திரும்பத்திரும்ப மூன்று தடவை கூறினார்கள். தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! யாருக்கு நலம் நாடு வது? அதற்கு நபியவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் அவனது வேதத்திற்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் நலம் நாடுவதாகும் என்று பதில் அளித்தார்கள்.
எனவே ஆட்சியதிகாரத்தில் உள்ளோருக்கு நலம் நாடுவது நல்லுரை பகர்வது நமது கடமை., அதில் குறிப்பிட்ட சிலரை மட்டும் நாம் நம்பிக்கிக் கொண்டிருக்கக் கூடாது., அவர்கள் வேண்டுமானால் ஆட்சியில் இருப்போருக்கு நல்லுரை கூறட்டுமே என்று! ஆட்சிப் பொறுப்பில் உள்ளோருக்கு நல்லுரை கூறுவோரின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். சத்தியத்தை நாற் புறங்களில் இருந்தும் அவர்கள் அறிந்திட வேண்டும்., எல்லாத் திக்கிலிருந்தும் நல்லுரை அவர் களைச் சென்றடைந்திட வேண்டும். அப்பொழுது அதன் பக்கம் கவனம் செலுத்தித்தான் ஆக வேண்டும்., சத்தியத்தின் வழியில் சென்றுதான் தீரவேண்டும் என்கிற நிலை வரும்! அதற்கான நற்பேற்றை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிட வேண்டுமென அவனை இறைஞ்சுவோமாக! இதுவே அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தெளிவான வழிமுறையாகும்.
இவ்வாறே முஸ்லிம் பொதுமக்களைப் பொறுத்த வரை பெரும்பாலான பள்ளிவாசல் களில் வேதனைக்குரிய நிலை என்னவெனில், அநேக இமாம்கள் கல்வியறிவற்றவர்களாய் இருப்பதைப் பார்க்கிறேம்! மக்களுக்கு அவர்கள் அறிவுரை கூறுவதில்லை., நல்வழிகாட்டுவதில்லை.. அவர்களோடு பேசுவதே இல்லை!
சில காலத்திற்கு முன்பு வரையில் உலக வாழ்வில் செல்வச் செழிப்பின் வாயில்கள் மக்க ளின் மீது திறந்துவிடப்படுவதற்கு முன்பு வரையில் இமாம்கள் சில நல்ல நூல்களைத் தேர்ந் தெடுத்து தொழுகையாளிகளுக்குப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு அன் றைய இமாம்கள் கல்வியாளராக இல்லாதிருப்பினும் கல்விப்பணி செய்வார்கள். தொழுகை யாளிகள் நற்பயன் அடைந்து வந்தார்கள்.
ஆனால் இன்றோ பெரும்பாலான பள்ளி வாசல்களில் நூல்கள் எதுவும் வாசிக்கப்படுவ தில்லை! ஜமாஅத்தினருக்கு இமாம்கள் பயன் உள்ள வழிகளைக் காட்டுவதில்லை.
இதனால் தீனின் விஷயங்களை-சட்டங்களை மக்கள் பெரும் அளவு அறியாதவர்களாய் இருக் கும் நிலையை நீங்கள் காண்கிறீர்கள். இவையெல்லாம் அறிஞர்கள், கல்வியாளர்களின் குறை பாட்டினால் நேர்ந்த விளைவுகளாகும். பொறுப்பில் உள்ளவர்களின் அலட்சியப் போக்கினால் ஏற்பட்ட நிலைகளாகும்.
எனவே சகோதரர்களே! நாம் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடவேண்டும். நம்முடைய முயற்சிகளை ஒருமுகப்படுத்த வேண்டும். நம்முடைய ஆட்சியாளர்களுக்கு நலம் நாட வேண் டும். நல்லுரை கூற வேண்டும். மஸ்ஜித்களில் முஸ்லிம் பெருமக்களுக்கு நல்லறிவு புகட்டிட முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். மஸ்ஜித்களில் மட்டுமல்ல, வீதிகளில், பொது இடங்களில் பொது நிகழ்ச்சிகளில் நம்மால் முடிந்த வரையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இன்னொரு அதிமுக்கியமான விஷயம், நமது இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் இடை யில் நாளுக்கு நாள் தொடர்புகள் குறைந்து வருகின்றன. இடைவெளி அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக நமது இளைஞர்கள் திசை தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். சரியான வழிகாட்டல் இல்லாமல் தடுமாறுகிறார்கள்.
உண்மையில் பெரியவர்களின் அலட்சிய மனப்பான்மைதான் இவற்றிற்கெல்லாம் காரணம்! பெரியவர்களில் யாரும் இளைஞர்களின் நடைமுறை வாழ்க்கையில் பொதுவாகக் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் சொல்கிற எந்தக் கருத்தையும் செவிசாய்த்துக் கேட்பதில்லை., ஆக்கப்பூர்வமான கருத்தாக அது இருந்தாலும் சரியே! இது தவறு!
எனவே நமது கடமையாதெனில் நாம் இந்த இளைஞர்களுடனே இருந்து அவர்களின் நிலை மைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவர் களின் மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ் நிலைகள் யாவை? இறைமார்க்கத்தை அறவே அறியாதவர்களாய் இருப்பதன் காரணம் என்ன? தீனில் பால் பற்றுதல் கொள்ளாது விலகிச் செல்வது எதனால்? என்பதை எல்லாம் நாம் கவ னிக்க வேண்டும்.
நோயினை அறிந்தால்தானே அதற்குரிய மருந்தை நம்மால் கொடுக்க முடியும்!
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? இளைஞர்கள் சிலர் தேவையில்லாத சில செயல்களைச் செய்து விட்டால் எல்லா இளைஞர்களையும் ஒட்டு மொத்தமாகப் பறக்கணித்து விடுகிறோம். அவர்கள் அனைவரையும் ஒதுக்கி வைத்து விடுகிறோம். எல்லா இடங்களிலும் அவர்களைக் குறை சொல்லத்தொடங்கி விடுகிறோம்! அது மட்டுமல்ல, அவர்களுடைய பணிகளை அலட்சியப் படுத்துகிறோம். அவர்களைக் கேவலமாகப் பார்க்கிறோம். இந்தப் போக்குதான் - பெரியவ பெரியவர்கள், கல்வியாளர்கள், இறைமார்க்கத்தின் மீது பற்றுள்ளவர்கள் ஆகியோரை விட்டு இளைஞர்களைத் தொலைவில் ஆக்கிப் பெரும் தீமையை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் ஷைத்தான்கள் தங்களின் விருப்பப்படி அந்த இளைஞர்களை இழுத்துச் செல்கின்றனர்!
ஆகவே சகோதரர்களே! முக்கியமான இந்தப் பிரச்னையைப் பொறுப்போடு ஆராய்வது நமது கடமையாகும். இதன் பக்கம் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும். இதில் மேலும் நாம் தவறிழைக்கக் கூடாது.
குறிப்பாக ஆசிரியர்கள் மாணவர்களை இஸ்லாமியப் பண்பாட்டில் வார்த்தெடுப்பதற்கு முழு மையாக முயன்றிட வேண்டும்.
முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் போதனைகளில், குர்ஆன் ஹதீஸின் வழிகாட்டல்களில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகை யில் விளக்கிக் கூற வேண்டும்.
தீனின் - இறைமார்க்கத்தின் யதார்த்த நிலை பற்றிய அறிவுஞானங்களை ஊட்ட வேண்டும். ஷரீஅத் சட்டங்களைத் தெளிவாக விளக்குவதுடன் சட்ட நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அவர்களுக்க விவரிக்க வேண்டும்.
ஏனெனில் இன்றுள்ள கற்பிக்கும் முறையில் குறிப்பாக கல்லூரிகளில் உள்ள கல்வித் திட்டத்தில், முறையில் சில குறைகளைக் காண்கிறேன். ஆசிரியர்கள் சிலர் பாடங்களை வறட்சி யாக நடத்துகின்றனர். அதாவது, மார்க்கச்சட்டங்களுக்கான ஆதாரங்களையும் சட்ட நுணுக்கங் களையும் மாணவர்களுக்கு விரிவாகச் சொல்லிக் கொடுப்பதில்லை.
ஓர் இறைநம்பிக்கையாளன் அல்லாஹ் - ரஸூலின் கட்டளைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவற்றின் சட்ட நுணுக்கத்தை அறிந்தாலும் அறியாவிட்டாலும் சரியே
என்பது உண்மைதான். குர்ஆனில் அல்லாஹ் கூறியிருக்கிறான்: قال الله: وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّ لَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللهُ وَرَسُولُهُهُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِم (سورة الأحزاب ، الآية : (٣٦)
"அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்து விட்டால் பிறகு அந்த விவகாரத்தில் சுயமாகத் தீர்ப்புளிக்கும் அதிகாரம் -இறைநம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடையாது" (33:36)
என்றாலும் மாணவர்கள் சட்ட நுணுக்கத்தையும் அறிந்து கொண்டால் மன நிறைவு பெறு வார்கள். ஷரீஅத் சட்டங்களின் பக்கம் கவனம் திரும்பும். அவற்றை நடைமுறைப்படுத்தும் ஆர்வம் பிறக்கும்.
ஆகையால் நம்முடைய ஆசிரிய சகோதரர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது என்ன வெனில், கல்வியை மாணவர்களின் முன்னிலையில் புத்தம் புதிதாக உயிர்த்துடிப்புடையதாக சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கல்வி அவர்களின் உள்ளங்களைத் தொட வேண்டும். மனத்தைப் பண்படுத்த வேண்டும். அதனால் அவர்களுக்குச் சிந்தனைத் தெளிவும் மன நிம்மதியும் ஏற்பட வேண்டும்.
இப்பொழுது நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்புக்கு வருகிறேன். திருமணம், அதன் பயன்கள், அது தொடர்பாக உரிமைகள், கடமைகள் என்பது எனது இன்றைய சொற்பொழிவின் தலைப்பாகும்.
இந்தத் தலைப்பினை இதன் முக்கியத்துவம் கருதியே நான் தேர்ந்தெடுத்துள்ளேன். ஏனெ னில் மக்களில் பெரும்பாலோர் திருமணம் தொடர்பாக பல சட்டங்களை அறியாதிருக்கிறார்கள். மேலும் திருமணத்தால் சமூகக் கூட்டுவாழ்க்கையில் பல சிக்கல்கள் எழுகின்றன. அவற்றிற்கு எளிதான தீர்வுகள் வேண்டுமென சமுதாய மக்களின் நலனிலும் தீனில் நலனிலும் அக்கறை கொண்ட வாய்மையுள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். சிக்கல்கள் பற்றி அலசுகிற போது தான் விளக்கத்தின் ஒளியில் அவற்றைக் கொண்டு வந்தால்தான் அவற்றிற்கு எளிதான தீர்வுகள் கிடைக்கும். மக்கள் அந்தப் பிரச்னைகள் குறித்து அலட்சியமாக இருந்தால் -அவற்றைப் பார்க்கவேமாட்டோம் என கண்களை மூடிக்கொண்டால் அவை சிக்கல்கள் நிறைந்தே இருக்கும். அவை பற்றிய தெளிவின்மை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
நான், இந்தத் தலைப்பை பத்து வகையாகப் பிரித்துள்ளேன். அவை வருமாறு:
1) நிகாஹ் - திருமணம் என்பதன் பொருள்
2) திருமணத்தின் சட்ட நிலை
4) மணமகளின் பண்புகள்
5) திருமணத்தின் காரணமாக விலக்கப்படும் பெண்கள்
6) ஒருவன் எத்தனை பெண்களைத் திருமணம் செய்யலாம்?
7) திருமணத்தின் தத்துவம்
8) திருமணத்தினால் ஏற்படும் நலன்கள், சட்ட நிலைகள்
9) மணவிக்கின் சட்டமும் அதன் ஒழுங்குமுறைகளும்
10) மணவிக்கினால் ஏற்படும் சட்டநிலைகள்
இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொன்றையும் அடுத்து அடுத்து கட்டுரைகளில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் மூலம் பார்ப்போம்.
Comments
Post a Comment
Best comment is welcomed !