1-நிகாஹ் என்பன் பொருள்
நிகாஹ் எனும் சொல்லின் அகராதிப் பொருள் திருமண ஒப்பந்தம் செய்தல் அல்லது மனைவி யுடன் உடலுறவு கொள்ளல் என்பதாகும்.
அபூ அலீ - அல் காலீ எனும் அரபி மொழி வல்லனர் கூறுகிறார்: இந்தப் பொருள்வேறுபாட் டைப் புரிந்து கொள்வதற்கு அரபிகள் மிக நுட்பமான சொல்லாட்சிகளைப் பயன்படுத்துகின்ற னர். அதன் மூலம் திருமண ஒப்பந்தம் எனும் பொருளில் எங்கு வருகிறது, உடலுறவு கொள் ளல் எனும் பொருளில் எங்கு வருகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, 'நகஹ ஃபுலானா' அல்லது 'நகஹ பின்(த்)த ஃபுலானா' என்று சொல்லப் பட்டால் அவன் இன்ன பெண்ணை திருமணம் செய்தான் அல்லது இன்னாரின் மகளைத் திரு மணம் செய்தான் என்று பொருள்.
'நகஹ இம்ரஅ(த்)தஹு அல்லது 'நகஹ ஸௌஸ(த்)தஹு என்றால் அவன் தன்னுடைய மனைவியுடன் உடலுறவு கொண்டான் என்று பொருள்.
நிகாஹ் என்பதன் மார்க்க ரீதியான பொருள் ஆண்பெண் இருவருக்கும் இடையிலான ஒப்பந் தம் என்பதாகும். அதன் நோக்கம் அவ்விருவரும் ஒருவர் மற்றவரின் மூலம் சுகம் அனுபவிப்பதும் நல்லதொரு குடும்பத்தை அமைப்பதும் சீரானதொரு சமுதாயத்தை உருவாக்குவதும் ஆகும்.
இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகிறது. திருமணத்தின் நோக்கம் சுகம் அனுபவிப்பது மட்டுமல்ல., அத்துடன் வேறொரு இலட்சியமும் அங்கே உண்டு. அதுதான் சிறந்ததொரு குடும் பத்தை அமைப்பதும் சீரானதொரு சமுதாயத்தை உருவாக்குவதுமாகும். ஆனால் மனிதர்களின் நிலைமைகளைப் பொறுத்து இந்த இரண்டு குறிக்கோள்களில் ஒன்று மற்றதை மிகைத்து நிற்கும்.
2 - திருமணத்தின் சட்ட நிலை
திருமணம் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதொரு செயலாகும். திருணம் செய்வதற் கான சக்தியும் வேட்கையும் உள்ள மனிதர்களின் விஷயத்தில் அது கட்டாயமாக வலியுறுத்தப் பட்ட ஒன்றாகும். திருமணம் என்பது ரஸூல்மார்களின் வழிமுறைகளில் உள்ளதாகும். திருக் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
قال الله عز وجل : وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلاً مِّنْ قَبْلِكَ وَ جَعَلۡنَا لَهُمْ أَزَُّٰوَاجَ (سورة الرعد الآية : (۳۸)
"உமக்கு முன்பும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும் மனைவி மக்களை உடையவர்களாகவே அவர்களை நாம் ஆக்கி யிருந்தோம்" (13 : 38) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்திருந்தார்கள். மேலும் சொன்னார்கள்:
قال النبي إلى الزَوْجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي
"நான் திருமணம் செய்துள்ளேன். எனவே யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்"
இதனால்தான் மார்க்க அறிஞர்கள் கூறுவர்: வேட்கை உள்ளவர் திருமணம் புரிவது நஃபில் அதிகப்படியான வழிபாடுகளைவிடச் சிறந்ததாகும். ஏனெனில் அதில்தான் பல நலன்களும் பயன் களும் அடங்கியுள்ளன. அத்தகைய சில நலன்களையும் பயன்களையும் பின்னர் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
திருமணம் சில நேரங்களில் கடமையானதொரு செயலாகிறது. எவ்வாறெனில் ஒருவர் அதிக அளவு இச்சையுடையவராக இருந்தால் அப்படிப்பட்டவர் திருமணம் செய்யாதிருந்தால் தடுக்கப் பட்ட (ஹராமான) செயலைச் செய்து விடுவதாக அஞ்சினால் அவர் தனது கற்பைப் பாதுகாக்க வேண்டும். தடுக்கப்பட்ட தீய நடத்தையில் வீழ்ந்திடாமல் அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
قال النبي ﷺ : يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجُ ، لِلْبَصَرِ وَ احْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ
فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وَجَاءَ
"ஓ இளைய சமுதாயமே! உங்களில் எவர் திருமணத்திற்கு சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்தக்கூடியது., வெட்கத்தலத்தைப் பாதுகாக்கக்கூடியது! எவர் அதற்கு சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். திண்ணமாக நோன்பு அவருக்கு ஒரு கேடயமாகும்"
3 - திருமணத்தின் நிபந்தனைகள்
இஸ்லாமிய ஒழுங்கமைப்பின் சிறப்பும் சட்டங்களை வகுத்தளிப்பதிலுள்ள அதன் நுட்பமும் யாதெனில், ஒப்பந்தங்கள் - உடன்படிக்கைகளுக்கு சில நிபந்தனைகளை இஸ்லாம் விதித்திருப்ப தாகும்., அவற்றைக்கொண்டு அந்த ஒப்பந்தங்கள் கட்டமைப்பைப் பெறுகின்றன. தொடர்ந்து அவற்றைச் செயல்படுத்துவதற்கான கால அளவும் தகுதியும் நிர்ணயமாகின்றன. இவ்வாறாக ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் சில நிபந்தனைகள் உள்ளன. அவை இன்றி அந்த ஒப்பந்தங்கள் முழுமை பெறமாட்டா!
இந்நிலை ஷரீஅத் சட்டங்களின் உறுதிப்பாட்டிற்கும் பயன்பாட்டிற்கும் தெளிவான ஆதார மாக உள்ளது. இந்தச் சட்டங்கள் பேரறி வாளனும் நுண்ணறிவாளனும் ஆகிய இறைவனிடம் இருந்து அருளப்பட்டவைதாம் என்பதற்குச் சான்றாகவும் உள்ளது. மக்களைச் சீர்படுத்தக் கூடிய விதிமுறைகள் யாவை என்பதை அந்த இறைவனே நன்கறிவான் அவர்களுடைய தீனும் உலக வாழ்வும் எந்தெந்த சட்டங்களால் சீர்பெறுமோ அவற்றையே அவர்களுக்குச் சட்ட விதியாக்கு கிறான். இப்படிச் செய்வதன் நோக்கம் எந்தவிவகாரமும் கட்டுப்பாடுகளில்லாமல் ஒழுங்கற்றுப் போய் விடக் கூடாது என்பதே!
இத்தகைய ஒப்பந்தங்களில் ஒன்றுதான் திருமண ஒப்பந்தம். அதற்குச் சில நிபந்தகைள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு கூற விரும்புகிறேன்.
1 - மணமகன் மணமகளின் விருப்பம்
விரும்பாத பெண்ணை மணந்து கொள்ளு மாறு மணமகளை நிர்பந்தம் செய்வது கூடாது. இதுபோல விரும்பாத ஆண்மகனை மணந்து கொள்ளுமாறு மணமகளை நிர்பந்தம் செய்வது கூடாது. அல்லாஹ் கூறுகிறான்:
قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَنْ تَرثُوا النِّسَاءَ الْسَرْثُوا النِّسَاءَكَرْ الآية: (١٩)
இறைநம்பிக்கை கொண்டவர்களே! விதவைப் பெண்களுக்கு -நீங்கள் பலவந்தமாக வாரிசுதாரர் களாய் ஆகுவது கூடாது" (4 : 19) அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: قال النبي : لا تُنْكَحُ الأَيمُ حَتَّى تُسْتَأمَرُ وَ لا تُنْكَحُ الْبَكْرُ حَتَّى تُسْتَأْذَنُ ، قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا ؟ قَالَ أَنْ
تسكت - رواه مسلم
"விதவைக்கு அவளது இசைவின்றி திருமணம் செய்விப்பது கூடாது. கன்னிப் பெண்ணுக்கு அவளது அனுமதி கேட்காமல் திரு மணம் முடித்து வைப்பது கூடாது. தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! அவளிடம் அனுமதி கேட்பது எவ்வாறு? அதற்கு நபியவர்கள் சொன் னார்கள்: அவளது மௌனமே அவளது அனுமதி ஆகும்" (நூல்: முஸ்லிம்)
பெண்ணுக்கு அவளது விருப்பமில்லாமல் திருமணம் செய்துவைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். அவள் விதவையாக இருந்தாலும் சரி, கன்னிப்பெண்ணாக இருந்தாலும் சரியே! ஆனால் விதவைப் பெண் தனது விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். கன்னிப் பெண்ணுக்கு அவளது (சந்தோசமான) மௌனமே போதுமானதாகும். ஏனெனில் தனது திருப்தியை வெளிப்படையாகச் சொல்ல சில நேரம் அவள் வெட்கப்படலாம்!
திருணம் வேண்டாமென ஒருபெண் மறுத்து விட்டால் திருமணம் முடித்தாக வேண்டு மென அவளை யாரும் கட்டாயம் செய்வது கூடாது. அவளுடைய தந்தைக்கும்கூட அந்த உரிமை கிடையாது! ஏனெனில் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
قال النبي ﷺ : وَالْبَكْرُ يَسْتَأْذِنُهَا أَبُوهَا - رواه مسلم
"கன்னிப் பெண்ணிடம் அவளுடைய தந்தை அனுமதி கேட்க வேண்டும்" (நூல்: முஸ்லிம்)
இந்நிலையில் அவளுடைய தந்தை மீது எந்தக் குற்றமும் இல்லை. தன் மகளுக்கு அவர் மணம் முடித்து வைக்கவில்லை என்று! ஏனெனில் திருமணம் வேண்டாமென மறுத்தது. அவள்தான்! ஆனாலும் அவளைப் பராமரித்துப் பாதுகாக்கும் கடமை அவர் மீது உள்ளது.
இரண்டு பேர் அவளைப் பெண் கேட்டு வருகிறபோது நான் இன்னாரை விரும்புகிறேன் என்று அவள் சொல்ல அவளுடைய தந்தையோ நான் சொல்கிற மணமகனைத்தான் நீ மணந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் இந்நிலையில் அவள் விரும்பும் ஆண்மகனுக்குத் தான் அவளை மணம் முடித்துக் கொடுக்கவேண்டும்., அவன் அவளுக்குப் பொருத்தமாக இருக்கும் பட்சத்தில்! பொருத்தமற்றவனாக இருந்தால் அவளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுக்க முடியாது என மறுக்கும் உரிமை தந்தைக்கு உண்டு! தந்தை மீது எந்தக் குற்றமும் வராது!
2 - பொறுப்பாளர்
பொறுப்பாளர் யாரும் இன்றி திருமணம் நடை பெற்றால் அது கூடாது. ஏனெனில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: " பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது"
ஒரு பெண் தனது திருமணத்தைத் தானே முன்னின்று நடத்தினால் அவளது திருமணம் கூடாது. திருமண உடன்படிக்கையை அவளே நேரடியாக மேற்கொண்டாலும் சரி அல்லது இன் னொருவரிடம் பொறுப்பு ஒப்படைத்தாலும் சரியே அந்தத் திருமணம் கூடாது!
ஒரு பெண்ணின் வாரிசு உறவுக்காரர்களில் பருவ வயதும் பகுத்துணரும் ஆற்றலும் கொண் டவர் யாரோ அவர் அவளது பொறுப்பாளாவார். எடுத்துக்காட்டாக, தந்தை, தந்தையின் தந்தை (அதாவது பாட்டன்), மகன், மகனின் மகன் (பேரன்). பேரனின் மகன் (பூட்டன்) என இந்த வரிசையில் ஆனாலும் சரியே! மேலும் உடன் பிறந்த சகோதரர், தந்தைவழிச் சகோதரரின் புதல்வர்கள் இவர்களில் நெருங்கிய உறவுடையவர் முதல் தரப்பொறுப்பாளர் ஆவார். அவ ருக்குப் பிறகு அடுத்த நிலையிலுள்ளவர்கள் அடுத்தடுத்து பொறுப்பாளர்களாக வருவார்கள்!
ஒரு பெண்ணின் தாய்வழிச்சகோதரர்களும் அவர்களின் மகன்களும் அவளுக்குப் பொறுப்பா ளராக வர முடியாது. இதேபோன்று தாயின் தந்தையும் தாய் மாமன்களும் பொறுப்பாளராக வர முடியாது. ஏனெனில் இவர்கள் வராஸத் அனந்தர உறவுக்காரர்கள் அல்லர்.
திருமணம் நடைபெறுவதற்குப் பொறுப்பாளர் ஒருவர் அவசியம் எனும்போது -அவரது கடமை என்ன? பொருத்தமான - தகுதியான மணமகனை அவர் தேர்வு செய்ய வேண்டும். பலர் பெண் கேட்டு வந்தால் யார் மிகவும் பொருத்தமானவரோ அவருக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒருவர் மட்டும் பொருத்தமானவராக இருந்து, அந்தப் பெண்ணும் அவரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்தால் அவருக்கே அவளை மணம் முடித்துக்கொடுப்பது பொறுப்பாளர் மீது கடமையாகும்.
இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஒருவரை எந்த பெண்மகளுக்கு அல்லாஹ் பொறுப்பாளராக நியமித்திருக்கிறோனோ அந்தப் பெண்மகளுக்காக அவர் ஏற்றிருக்கிற பொறுப்பு எத்துணை பெரியது என்பதை நாம் அறிந்திட வேண்டும்! அந்தப் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஓர் அமானிதம். அதைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணிநடப்தும் சரியான முறையில் அதைப் பயன்படுத்துவதும் அவர் மீது கடமையாகும். சில சுயநலன்களுக்காக அப் பெண்ணின் திருமணத்தைத் தடுத்துவைப்பதோ தனக்குக் கொடுக்கப்பட உள்ள மஹர் தொகை யில் பேராசை கொண்டு பொருத்தமற்ற மணமகனுக்கு அவளை மணமுடித்துக் கொடுப்பதோ அவருக்கு ஆகுமானதல்ல! ஏனெனில் இது மோசடி செய்வதாகும். அல்லாஹ் திருக்குர் ஆனில் கூறுகிறான்:
قال الله تعالى : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَخُونُوا اللهَ وَالرَّسُوْلَ وَ تَخُوَانُوْلَ وَ تَخُوَانُوا أَمُوَانُوا وَأَنْتُمْ تَعْلَمُونَ (سورة الأنفال الآية : (٢٧)
"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக் கும் அவனுடைய தூதருக்கும் (அறிந்தும் புரிந் தும்) மோசடி செய்யாதீர்கள். அறிந்து கொண்டே உங்களது 'அமானிதங்களில் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்" (8: 27) இன்னோர் இடத்தில்.
قال الله تعالى: إِنَّ اللهَ لاَ يُحِبُّ كُلِّ خَوَانِ كَفُور (سورة الحج : الآية : (۳۸)
"திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை., நம்பிக்கை மோசடி செய்யக்கூடிய, நன்றித்துரோ கம் செய்யக்கூடிய ஒவ்வொருவரையும்" (22:38)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
قال النبي : كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! அவரவரின் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி உங்கள் ஒவ்வொருவரிடமும் விசாரணை செய்யப்படும்"
சமுதாயத்தில் சில பேரைக் காணலாம். அவர்களுடைய மகளைப் பெண்கேட்டு அவர்களிடம் தூது அனுப்பப்படும்போது - பொருத்தமான ஆடவரேதான் அவளைப் பெண்கேட்டுச் செல்கிறார் எனும்பொழுது அதனைத் தட்டிக்கழித்து விடுகிறார்கள். இவ்வாறு அடுத்தடுத்துப் பெண்கேட் டுச் செல்லும் பலபேரையும் தட்டிக்கழித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு செய்கிறவர் பொறுப்பாளர் எனும் தகுதியை இழந்துவிடுவார்! அவருக்கு அடுத்த நிலையிலுள்ள ஏனைய பொறுப்பாளர்கள் அவளை மணம் முடித்துக் கொடுக்க முன் வர வேண்டும். அவர்களில் மிக நெருங்கிய உறவு உடையவர்கள் வரிசையாகப் பொறுப்பாளராய் வருவார்கள்.
4 - மணமகளின் பண்புகள்
திருமணத்தின் நோக்கம் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று சுகம் அனுபவிப்பதும் நல்லதொரு குடும்பத்தை - சிறப்பான தொரு சமுதாயத்தை உருவாக்குவதும் ஆகும்.
இதன்படி இந்த இரண்டு நோக்கங்களை நிறைவேற்றும் தகுதி உள்ள பெண்ணே திருமணம் செய்து கொள்ளத்தக்க பெண்மணி ஆவாள். அதாவது அவள் புற அழகும் அக அழகும் பெற் றிலங்கிட வேண்டும்.
புற அழகு: உடல் ரீதியான ஆரோக்கியம். ஒருபெண் அழகுத் தோற்றம் உடையவளாக, இனிய சொல்லுடையவளாக இருந்தால் அவளைக் காண்பதன் மூலம் கண் குளிர்ச்சி அடையும். அவளது இனிய பேச்சுக்காக காதுகள் ஏங்கும். அவளுக்காக இதயம் மலரும். நெஞ்சில் நிம்மதி பொங்கும். அவளிடம் மனம் சாந்திபெறும். அல்லாஹ்வின் பின்வரும் கூற்று அவளைப் பொறுத்து உறுதிப்படும்.
قال الله : وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوَيْإِنْ خَلَقَ بَيْنَكُمْ مَوَدَّةً وَ رَحْمَةً (سورة الروم الآية : ٢١)
"மேலும் அவனின் (அதாவது இறைவனின்) சான்றுகளில் இதுவும் ஒன்று: அவன் உங்களுக் காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்., நீங்கள் அவர்களிடம் மனஅமைதி பெற வேண்டும் என்பதற்காக! மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்று (30:21)
அக அழகு: இறைமார்க்கப்பற்றும் நற்பண்பும் நிறைந்திருத்தல். ஒருபெண் எந்த அளவுக்கு இறைமார்க்கப்பற்று மிகுந்தவளாகவும் நிறை குணம் உடையவளாகவும் இருக்கிறாளோ அந்த அளவுக்கு அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய வளாக இருப்பாள். நற்பேறுடையவளாகத் திகழ் வாள்.
இறைமார்க்கத்தில் பற்றுமிக்க பெண்மணி அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றக் கூடியவளாகத் திகழ்வாள். கணவனின் உரிமைகள், அவனது சொத்துகள், குழந்தைகள் மற்றும் தனது கற்பு ஆகியவற்றைப் பாதுகாத்து வருவாள். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதில் கணவனுக்கு உதவியாக இருப்பாள். அவனுக்கு மறதி ஏற்பட்டால் அவள் நினைவுபடுத்துவாள். அவன் சோர்வடையும்போது அவள் உற்சாகமூட்டுவாள். அவன் கோபம்கொண்டால் அவள் சாந்தப்படுத்துவாள்.
நல்லொழுக்கம் நிறைந்த பெண்மணி தன் கணவனிடம் அன்பாகவும் அதிக நெருக்கமாகவும் இருக்க முயற்சி செய்வாள். கணவனை மதித்து நடப்பாள். எந்த விஷயத்தில் அவள் முந்தி நிற்க வேண்டுமென அவன் விரும்புகிறானோ அதில் அவள் பிந்த மாட்டாள். எங்கு பிந்தி நிற்க
வேண்டும் அவன் விரும்புகிறானோ அங்கு முந்த மாட்டாள். وَلَقَدْ سُئِلَ النَّبِيُّ أَيُّ النِّسَاءِ خَيْرٌ؟ قَالَ : الَّتِي تَسُرُّهُ إِذَا نَظَرَ ، وَ تُطِيعُهُ إِذَا أَمَرَ ، وَلَا تُخَالِيَهُنَا تُخَالِيَهُ مَالِهِ بِمَا يَكْرَهُ
"ஒரு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எந்தப்பெண் மிகவும் சிறந்தவள்? என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் பதிலளித்தார்கள்: கணவன் பார்க்கும்போது மகிழ்ச்சியளிப் பவள்.,அவனது ஆணைக்குக் கீழ்ப்படிபவள்.. தன் கற்பிலும் கணவனின் பொருட்களிலும் அவன் விரும்பாதவற்றைச் செய்யாமலும் அவனுக்கு மாறுபட்டு நடக்காமலும் இருப்பவள்"
قال النبي : تَزَوِّجُوا الْوَدُوۡدَ الْوَلُوْدَ فَإِنِّى مُكَاثِرٌ بِكُمُ الْأَنْبِيَاءَ الْأَنْبِيَاءَ الْأَنْبِيَاءَ الْأَنْبِيَاءَ الْأَمَوْ
மற்றொரு தடவை சொன்னார்கள்: "அதிகம் அன்பு செலுத்தக்கூடிய, பிள்ளைகளை அதிகம் பெற்றெடுக்கக்கூடிய பெண்ணைத் திருமணம் முடியுங்கள். ஏனெனில் நான் உங்களின் மூலம் ஏனைய நபிமார்களுக்கு மத்தியில் அதிக அளவு உம்மத்- சமுதாயத்திரைப் பெற்றவனாகத் திகழ் வேன்"
புறஅழகும் அகஅழகும் ஒருங்கே அமையப் பெற்ற பெண்ணை மனைவியாகப் பெற்றிட முடிந் தால் அது அல்லாஹ்வின் பேருதவியினால் கிடைக்கும் நற்பேறாகும். முழுமையான நிலையாகும்.
Comments
Post a Comment
Best comment is welcomed !