திருமணத்தினால் ஏற்படும் சட்ட நிலைகள்

 




- திருமணத்தினால் ஏற்படும் சட்ட நிலைகள்


திருமணத்தினால் பற்பல சட்ட நிலைகள், நலன்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலவற்றை நாம் குறிப்பிடுகிறோம்.


1 'மஹ்ர்' வழங்குது அவசியம்.


'மஹர்' திருமணத்தின்போது பெண்ணுக்குச் சேர வேண்டிய உரிமையாகும். திருமணத்தில் அதை நிபந்தனையாகக் குறிப்பிட்டாலும் குறிப்பிடாவிட்டாலும் சரியே!


மஹ்ர் என்பது திருமண ஒப்பந்தத்தை முன்னிட்டு மனைவிக்கு (மணமகன் சார்பாக) வழங் கப்படுகிற பணமோ பொருளோ ஆகும். (திருமணத்தில்) மஹ்ரின் அளவு வரையறை செய்து கூறப்பட்டால் அதுவே மஹ்ர். அது குறைவாக இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் சரியே! மஹ்ரின் அளவு இவ்வளவுதான் என்று குறிப்பிடப்படாமல் இருந்தால் (மஹ்ர் எதுவும் கொடுக் காமல் திருமணம் நடைபெறுவதுபோன்று அல்லது மஹ்ர் இவ்வளவு என்று குறிப்பிடாமல் திருமணம் நடைபெறுவது போன்று) அப்போது ஊர் வழக்கில் உள்ள மஹ்ரை (மஹ்ருல் மிஸ்ல்) வழங்குவது கடமையாகும்.


இதன் மூலம் தெரியவருகிறது: திருமணத்தின் போது மணமகன் சார்பாக மணமகளுக்கு மஹர் அவசியம் வழங்கியாக வேண்டும். பின்வரும் குர்ஆன் வசனத்தில் இறைவன் இடும் கட்டளை அதுவே:


قال الله تعالى: وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نَحْلَةً ( النساء الآية: (٤)


மேலும் பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக்கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள்" (4:4)


ஆயினும் இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேசம் போன்ற நாடுகளில் முஸ்லிம்களிடையே திருமணத்தின்போது சீதனம் எனும் பெயரில் பணத்தையும் பொருள்களையும் பெண்ணிடம் இருந்து ஆண்மகன் வாங்கிக்கொள்ளும் பழக்கம் உள்ளது எனும் விவரம் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இது இஸ்லாமிய ஷரீ அத்தின் நடைமுறைகளின் பாற்பட்டதல்ல. அது மட்டுமல்ல, ஷரீஅத்தின் வழிகாட்டலுக்கு நேர்முரணான செயலுமாகும் இது!


மஹர் பணமாகவோ பொருளாகவோ இருக்கலாம் என்பது போன்று பயன்பாடாகவும் இருக்க லாம். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு ஒரு பெண்ணைத் திருமணம் முடித்துக் கொடுத்தார்கள். குர்ஆனில் சில அத்தியாயங்களை அவளுக்கு அவர் கற்றுக் கொடுப்பதையே மஹ்ராக நிர்ணயம் செய்தார்கள்.


ஷரீஅத் சட்டத்தைப் பொறுத்தவரையில் மஹ்ர் குறைவாக இருக்க வேண்டும். குறைவாக எளிதாக இருக்கும் மஹ்தான் மிகச் சிறந்ததாகும். அதில் - அண்ணல் நபி (ஸல்)அவர்களைப் பின்பற்றுதலும் இருக்கிறது. அருள் வளமும் இருக்கிறது. திண்ணமாக செலவு குறைவான திருமணம்தான் அதிக அருட்பேறு உள்ள திருமணமாகும்.


இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹில் அறிவித்துள்ளார்கள்: "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளேன்' என்று தெரிவித் தார். அவளுக்கு நீ கொடுத்த மஹ்ர் எவ்வளவு? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், நான்கு ஊக்கியா (அதாவது, 160 வெள்ளி நாணயம்) என்று சொன்னார். இதனைக் கேட்டதும் நபியவர்கள் கூறினார்கள்: நான்கு ஊக்கியாவா? வெள்ளியை நீங்கள் இந்த மலையில் இருந்து வெட்டி எடுக்கிறீர்கள்போல் தெரிகிறது! - தற்போது உமக்குக் கொடுப்பதற்கு உம்மிடம் எதுவும் இல்லை. ஆனால் உம்மை ஒரு படையுடன் அனுப்பலாம் என உள்ளேன். அதில் ஏதாவது உமக்குக் கிடைக்கலாம்" நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அவரிடம் கூறியது அவர் ஓர் ஏழை என்பதனாலாகும்.


உமர் (ரலி)அவர்கள் சொன்னார்கள்: "பெண்களுக்கான மஹர் தொகையை அளவுக்கு மீறி அதிகப்படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது இவ்வுலகில் புண்ணியச் செயலாகவும் மறுமையின் பயபக்தி நிலையாகவும் இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விட அதிக மான மஹ்ர் கொடுத்திருப்பார்கள். நபியவர்கள் தம் மனைவியரில் எவருக்கும் 12 ஊக்கியாவுக்கு அதிகமாக மஹ்ர் கொடுக்கவில்லை. அவர்களின் பெண்மக்களில் எவருக்கும் அதற்கு அதிகமான மஹ்ர் வாங்கப்படவில்லை. ஒருஊக்கியா என்பது 40 வெள்ளி நாணயமாகும்.


இன்றைய காலத்தில் மஹ்ர் தொகையின் அதிகரிப்பு சமுதாயத்தில் பல தீய விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. எத்தனையோ ஆண்களையும் பெண்களையும் திருமணத்தை விட்டும் தடுத்து வைத்துவிட்டது. ஓர் ஆண்மகன் மஹ்ர் தொகையைச் சம்பாதிப்பதற்கு பல ஆண்டுகளைத் தியா கம் செய்ய வேண்டியதாகிறது. இதனால் பல்வேறு தீமைகள் உண்டாகின்றன. அத்தகைய சில தீமைகளை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.


அ. ஆண்கள் பெண்களின் வாழ்வு திருமணமின்றி வீணாகுவது.


ஆ. மஹ்ர் கூடுதலாக உள்ளதா? குறைவாக உள்ளதா? என்றுதான் பெண் வீட்டார் பார்க்கி றார்கள். பெரும்பாலோரின் கண்ணோட்டம், மஹ்ர் என்பது ஆண்மகனிடம் இருந்து தமது மகளுக் குச் சம்பாதித்துக் கொடுக்கும் கருவி என்பதே! மஹ்ர் அதிகம் எனில் மணமுடித்துக் கொடுக்கி றார்கள்., விளைவுகளைக் குறித்து சிந்திப்பதே இல்லை. மஹ்ர் குறைவாக இருந்தால் மணம் முடித்துக் கொடுக்க மறுத்து விடுகிறார்கள்! தீனிலும் நல்லொழுக்கத்திலும் மணமகன் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும் சரியே!


இ. இப்படியாக மஹ்ர் திகைப்பூட்டும் அளவு இருக்கும்போது - கணவன், மனைவிக்கிடையே உறவு மோசமடைந்து விடுமானால், நல்ல முறையில் அவளை விட்டும் பிரிந்து விடுவதற்கு கணவனின் மனம் இடம் தராது! மஹ்ராக கொடுத்த பணத்தில் கொஞ்சமாவது அவள் திருப்பித் தர வேண்டும் என்பதற்காக அவளுக்குத் தீங்கிழைப்பான். தொல்லை கொடுப்பான். மஹ்ர் குறைவாக இருந்தால் அவளை விட்டுப் பிரிவது அவனுக்கு இலகுவாகியிருக்கும்!


மக்கள் மஹ்ர் விஷயத்தில் நடுநிலையான போக்கை மேற்கொண்டு, அதற்காக ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து உதவினால், சமுதாயப் பிரமுகர்களும் இதனை நடைமுறைப்படுத் தினால் சமுதாயத்திற்குப் பல நன்மைகளும் அதிக அளவு அமைதியும் கிட்டும்! அதிகமான ஆண்களும் பெண்களும் திருமணம் முடித்து இல்லற வாழ்வை மேற்கொள்ளலாம்!


ஆனால் மனம் வருந்தத்தக்க நிலை என்ன வெனில் மஹ்ர் தொகையை அதிகப்படுத்துவதில் தான் மக்கள் போட்டிபோட்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டிருக்கிறார்கள். முன்னெப்போதும் அறியப்பட்டிருக்காத பல்வேறு பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக மஹ்ரில் சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இது எங்கு போய் முடியும் என்பதை நாம் அறியோம்!


முன்பு ஒரு காலத்தில் மக்களில் சிலரிடம் குறிப்பாக நாட்டுப்புற மக்களிடம் ஒருவித நடை முறை இருந்தது. அதில் சில வசதிகள் உள்ளன. அது என்னவெனில், மஹ்ரில் ஒரு பகுதியைச் சில காலத்திற்குப் பிறகு கொடுப்பதுதான்! எடுத்துக்காட்டாக, மஹ்ரின் அளவை நிர்ணயித்து அதில் பாதியைத் திருமணம் நடக்கும்போது கொடுப்பது., மீதியை ஓராண்டு ஈராண்டுக்குப் பிறகோ ஆறு மாதத்திற்குப் பிறகோ கொடுப்பது! இந்த நடைமுறை மணமக னுக்கு ஓரளவு சிரமத்தைக் குறைக்கிறது.


2-செலவு


தன் மனைவியின் செலவுக்கு மகிழ்ச்சியாகப் பணம் கொடுப்பது கணவன் மீது கடமையாகும். அவளது உணவு, உடை, இடம் ஆகியவற்றிற்கு அவன் ஏற்பாடு செய்ய வேண்டும். இவை போன்ற அத்தியாவசியத் தேவைகளில் அவன் கஞ்சத்தனம் செய்தால் அவன் பாவியாவனான். அப்போது அவன் தன் தேவைக்குப் போதுமான அளவு அவனது பணத்திலிருந்து எடுத்துக்கொள் ளலாம். அல்லது அவனது பெயரில் கடன் வாங்கிக் கொள்ளலாம். அந்தக் கடனை அவன் திருப்பிக் கொடுப்பது அவசியமாகும்.


திருமணச் செலவுகளில் வலீமாவும் ஒன்று. இது திருமண நாட்களில் கணவன் ஏற்பாடு செய்து, மக்களை அழைத்து வழங்கும் விருந்தாகும். இது, கண்டிப்பாகக் கட்டளையிடப்பட் டுள்ள ஸுன்னத் எனும் நபிவழி, நபி (ஸல்) அவர்களும் வலீமா விருந்து அளித்துள்ளார்கள். அதனை வழங்குமாறு பிறரை ஏவியும் உள்ளார்கள்.


ஆனால் வலீமா விருந்தில் விலக்கப்பட்ட வீண் விரயத்தைத் தவிர்ப்பது கடமை. இந்த விருந்து கணவனின் பொருளாதார நிலைமைக்கு ஏற்பவே அமைதல் வேண்டும்.


மக்களில் சிலர் இது விஷயத்தில் அளவு, தரம் இரண்டைப் பொறுத்தும் வீண் விரயம் செய்கிறார்கள். இது ஆகுமானதல்ல! இதனால் ஏராளமான பணம் எவ்விதப் பயனுமின்றி வீணா கிறது!


3 கணவன், மனைவி இருவரின் குடும்பங்களுக்கிடையிலான உறவு


-கணவன், மனைவி இருவரிடையே அன்பையும் கருணையையும் அல்லாஹ் ஏற்படுத்தியுள் ளான். பழக்க வழக்க நிலையில் இத்தகைய அன்புறவு சில உரிமைகளையும் கடமைகளையும் வலியுறுத்துகிறது. இந்தஉறவு நீடித்து நிலைத்து நிற்கும் பொருட்டே அந்தக் கடமைகளும் உரிமைகளும் அவசியமாகின்றன!


- திருமணம் செய்வது கூடாது எனும் நிலை


4 மனைவியின் தாய், அவளுடைய பாட்டிமார்கள், கொள்ளுப்பாட்டி ஆகியோரைத் திருமணம் செய்வது கூடாது எனும் நிலை கணவனுக்கு ஏற்படுகிறது.


இதேபோன்று மனைவியின் புதல்விகள், அவளுடைய மகன்களின் புதல்விகள், அப்புதல்வி களின் புதல்விகள் ஆகியோரைத் திருமணம் செய்வதும் அவனுக்குத் தடைசெய்யப்படுகிறது. இந்த இரண்டாவது நிலை, தன் மனைவியுடன் அவன் உடலுறவு கொண்டிருந்தால் மட்டுமே ஆகும்.


இவ்வாறாக கணவனின் தந்தை, பாட்டனார், பூட்டனார் மற்றும் கணவனின் புதல்வர்கள், புதல்வர்களின் புதல்வர்கள் ஆகியோரைத் திருமணம் செய்வது கூடாது எனும் நிலை மனைவிக்கு ஏற்படுகிறது!


5-வாரிசுதாரர் ஆகும் நிலை


ஒரு மனிதன் ஒரு பெண்ணை முறையாகத் திருமணம் செய்து கொண்டால் ஒருவர் மற் றொருவரின் சொத்தைப் பரஸ்பரம் வாரிசாகப் பெறும் நிலை அவ்விருவரிடையே செல்லுடியா கிறது. குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:


قال الله تعالى: وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ ... إلى قوله : تُوْصُوْنَ بِهَا أَوْنَ الآية: (١٢)


மேலும் (மரணமடைந்த) உங்களுடைய மனைவியர் விட்டுச் சென்ற சொத்தில், அவர் களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப்பங்கு உங்களுக்குண்டு. அவர்களுக்குக் குழந் தைகள் இருந்தால், அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரணசாஸனம் நிறை வேற்றப்பட்ட பிறகும் அவர்கள் விட்டுச் சென்ற கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (இந்தப் பங்கீடு) (4 : 12)


அவன் அவளுடன் உடலுறவு கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அவன் அவனுடன் தனியே இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியே! இந்த வாரிசு நிலை செல்லுபடிகிறது!


9 மணவிலக்கின் சட்டமும் அதன் ஒழுங்கு முறைகளும்


தலாக் மணவிலக்கு என்பது மனைவியை விட்டும் முற்றாக விலகி விடுவதாகும்., சொல் அல்லது எழுத்து அல்லது சைக்கினை ஆகிய வற்றின் மூலம்!


மணவிலக்கைப் பொறுத்து சட்டத்தின் அசல் நிலை யாதெனில், அது வெறுக்கத்தக்க செயல் என்பதே. ஏனெனில் அதனால் திருமணத்தின் பயன்களும் நலன்களும் பாழாகிப்போகின்றன. குடும்பத்தின் கட்டுக்கோப்பு குலைந்து விடுகிறது!


நபிமொழியில் கூறப்பட்டுள்ளது: "ஹலாலான (ஆகுமான) செயல்களிலேயே அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமானது தலாக் (எனும் மணவிலக்கு) தான்" (நூல்: அபூ தாவூத்)


ஆனாலும் சில நேரங்களில் தலாக் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. ஒன்று: ஒரு பெண் தன் கணவனுடன் தொடர்ந்து வாழ்வதில் துன்பத்திற்கு ஆளாகிறாள். அல்லது ஆண், தன் மனைவியிடம் துன்பம் அடைகிறான். இவை அல்லாத இன்னும் பல காரணங்களாலும் தலாக் நிகழ்கிறது!


ஆதலால் அல்லாஹ் தன் அடியார்களுக்கு மணவிலக்கு செய்ய அனுமதித்திருப்பது அவன் பொழிந்த அருட்கொடையே ஆகும். துன்பத்தை யும் நெருக்கடியையும் சகித்துக் கொண்டிருக்கு மாறு தன்னுடைய அடியார்களை அல்லாஹ் நிர்பந்திக்கவில்லை!


ஒரு மனிதன் தன் மனைவியை வெறுப்பானாகில் பொறுமை எல்லை மீறிப்போகிறதெனில் அவளை அவன் மணவிலக்கு செய்வதில் குற்றமில்லை. ஆனால் பின்வரும் ஒழுங்கு முறை களை அவன் பேணிட வேண்டும்.


அ. மாதவிடாய்க் காலத்தில் மணவிலக்கு செய்யக்கூடாது.


மாதவிடாய்க் காலத்தில் அவளை அவன் மணவிலக்கு செய்வானாகில் அல்லாஹ்வின் கட்ட ளைக்கும் அவனுடைய தூதரின் கட்டளைக்கும் மாறுபட்டு நடப்பவனாவான். ஹராம் எனும் விலக்கப்பட்ட காரியத்தைச் செய்தவன் ஆவான்!எனவே அவளைத் திரும்ப அழைத்துக்கொள்வது அவனது கடமையாகும். மாதவிடாய்க் காலம் முடியும் வரையில் அவளைத் தன் மனைவியாய் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அவளை மணவிலக்கு செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம்.இதிலும்கூட சிறந்த முறை யாதெனில் இரண்டாவது தடவை மாதவிடாய் ஏற்படும் வரை அவளை விட்டு விடவேண்டும். அதிலிருந்து அவள் தூய்மையானதும் விரும்பினால் தன் மனைவியாக வைத்துக் கொள்ளலாம். விரும்பினால் மண விலக்கு செய்யட்டும்!


ஆ. தூய்மைக் காலத்தில் உடலுறவுக்குப் பின் விவாக ரத்து செய்யக்கூடாது., கர்ப்பம் தரித்திருப்பதாக தெரிந்தாலே தவிர!


ஒருவன் தன் மனைவியை மாதவிடாய் நின்ற பிறகு அவளுடன் உடலுறவு வைத்துக் கொண்ட நிலையில் - மணவிலக்கு செய்ய விரும்பினால், அவளுக்கு மீண்டும் மாதவிடாய் கண்டு அதன் பிறகு தூய்மையாகிற வரையில் அவளை மணவிலக்கு செய்யக்கூடாது! காலம் எவ்வளவு நீண்டாலும் சரியே! அதன் பிறகு மணவிலக்கு செய்ய விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பே செய்துவிட வேண்டும். ஆனால் அவள்கர்ப்பம் தரித்திருப் பதாகத் தெரியவந்தால் அல்லது முன்னரே அவள் கர்ப்பவதியாக இருந்தால் (உடலுறவு கொள் வதுடன்) அவளை மணவிலக்கு செய்வதில் குற்றமில்லை! குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:


قال الله تعالى: يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوْ هُنَّ لِعِدَّ هُنَّ لِعِدَّ الآية : (١)


"நபியே! நீங்கள் பெண்களை மணவிலக்கு செய்ய விரும்புவீர்களாயின் அவர்களின் இத்தா காலத்தை நிர்ணயிக்க வசதியாக மணவிலக்கு செய்யுங்கள்" (65 : 1)


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: "மனைவியை அவளது மாதவிடாய்க் காலத்தில் மணவிலக்கு செய்ய வேண்டாம். அதிலிருந்து அவள் தூய்மையான பிறகும்கூட அவளுடன் உடலுறவு வைத்துக்கொண்டு அதன் பிறகு மணவிலக்க செய்ய வேண்டாம். மாறாக, மாதவிடாய் காணும் வரை அவளை விட்டுவைக்கவும். அதிலிருந்து அவள் தூய்மையான பிறகு ஒரே ஒருதடவை அவளை தலாக் சொல்லவும்"


இ . ஒரே நேரத்தில் ஒரு தடவைக்கு மேல் தலாக் சொல்லக் கூடாது.


உன்னை இரண்டு தலாக் சொல்கிறேன் என்றோ. உன்னை முத்தலாக் சொல்கிறேன் என்றோ, உன்னை தலாக் சொல்கிறேன், உன்னை தலாக் சொல்கிறேன். உன்னை தலாக் சொல்கிறேன் என்றோ (மூன்று தடவை) கூறி மணவிலக்கு செய்வது சரியல்ல! ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்வது ஹராம் விலக்கப்பட்ட செயலாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது:


عن النبي أَنَّهُ قَالَ فِي رَجُلٍ طَلَّقَ امۡرَأَتَهُ ثَلَاثَ تَطْلِيقَاتِ جَمِيعَبَبِاتِ جَمِيعَبَلْكَ اللهِ ، وَ أَنَا بَيْنَ أَظْهُرِكُمْ ؟ حَتَّى قَامَ رَجُلٌ


فَقَالَ : يَا رَسُولَ اللَّهُ أَلَا أَقْتُلُهُ؟


தன் மனைவியை ஒரே நேரத்தில் முத்தலாக் சொன்ன மனிதனைக் குறித்து நபியவர்கள் கூறினார்கள் : நான் உங்களிடையே உயிருடன் இருக்கும்போதே இன்ன மனிதர் அல்லாஹ்வின் வேதத்துடன் விளையாடுகிறாரா? - உடனே ஒரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த மனிதரைக் கொன்று விடவா? என்று கேட்டார்"


பெரும்பாலான மக்கள் மணவிலக்கின் சட்டங்களை அறியாதிருக்கிறார்கள். எப்பொழுது தலாக் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுதே உடனுக்குடன் தலாக் சொல்லி விடுகி றார்கள். நேரத்தையோ எண்ணிக்கையையோ பொருட்படுத்துவதில்லை! முஸ்லிம்களின் கடமை, அல்லாஹ் வகுத்துள்ள வரம்புகளைப் பேணி நடந்திட வேண்டும். அவற்றை மீறி நடக்கலாகாது! அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:


قال الله تعالى: وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللهُ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ (سورة الطلاق الآية: (1)


"ஒருவன் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவானாகில் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டவன் ஆவான்" (65 : 1) மற்றோர் இடத்தில்,


قال الله تعالى: وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللهُ فَأُولئِكَ هُمُ الظَّالِمُوْنَ (سورة البقرة الآية:)


"யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறார் களோ அவர்கள்தாம் அநியாகக்காரர்கள்"(2: 229)


10 மணவிலக்கினால் ஏற்படும் சட்ட நிலைகள்


மணவிலக்கு என்றால் மனைவியை முற்றாகப் பிரிந்து விடுவது என்றானபோது பலவேறு சட்டநிலைகள் ஏற்படுகின்றன. அவை வருமாறு: அதனால்


அ. இத்தாக் கடமை., அவளுடன் உடலுறவு கொண்ட பிறகோ அல்லது தனி அறையில் அவளுடன் இருந்த பிறகோ மணவிலக்கு செய்தால் இத்தா (குறிப்பிட்ட காலம் காத்திருப்பது) கடமை ஆகும். குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் :


قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنَاتِ ثُمَّ طَُلْمْهَا الَّذِينَ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ


تَعْتَدُّونَها (سورة الأحزاب الآية: (٤٩)


இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திரு மணம் செய்து பிறகு அவர்களைத் தீண்டுவதற்கு முன்பே மணவிலக்கு செய்து விட்டீர்களா னால், நீங்கள் கணக்கிடக்கூடிய இத்தா காலம் எதுவும் உங்களுக்காக அவர்கள் மீது கடமை " (33:49)


இத்தா என்பது,


* மூன்று மாதவிடாய்க் காலம் காத்திருப்பதாகும்., அவள் மாதவிடாய் ஏற்படும் பெண்ணாக இருந்தால்!


* மாதவிடாய் ஏற்படும் பெண்ணாக அவள் இல்லையெனில் மூன்று மாதங்கள் காத்திருப்ப தாகும்.


* அவள் கர்ப்பவதியாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும் வரை காத்திருப்பதாகும்.


ஆ. மனைவி, கணவன் மீது ஹராம் விலக்கப்பட்டவளாகிவிடுவாள்.. இதற்கு முன் னால் இரண்டு தடவை அவளை மணவிலக்கு செய்திருந்தால்!


-அதாவது, தன் மனைவியை அவன் மணவிலக்கு செய்து, பிறகு இத்தா காலத்தில் அவளை மனைவியாக திரும்ப அழைத்துக் கொள்கிறான்.. அல்லது இத்தா காலம் கழிந்த பிறகு அவனை மணந்து கொள்கிறான்., பிறகு மீண்டும் இரண்டாம் தடவையும் அவளை மணவிலக்கு செய்து இத்தா காலத்தில் அவளை மனைவியாக திரும்ப அழைத்துக் கொள்கிறான்., அல்லது இத்தா காலம் கழிந்த பிறகு அவளை மீண்டும் மணந்து கொள்கிறான்.. இதன் பிறகு மூன்றா வது தடவையும் அவளை மணவிலக்கு செய்தால் இப்போது அவள், அவனுக்கு ஹலால் ஆகுமாக் கப்பட மாட்டாள்., அவனல்லாத வேறு ஒருவனை முறையாக அவள் திருமணம் செய்த பிறகு அவளுடன் அந்த இரண்டாம் கணவன் உடலுறவு கொண்டு பிறகு அவள் மீது வெறுப்படைந்து மணவிலக்கு செய்தால் இவை யெல்லாம் இயல்பாக நடந்திருந்தால் மட்டும்தான் அவள். முதல் கணவனை திருமணம் செய்வதற்கு ஹலால் - ஆகுமாக்கப்படுவாள்!


குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:


قال الله تعالى : الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمۡسَاكَ بِمَعْرُوْفِ أَوْ تَسْرِيحُ بِإ:ةزب (22)


தலாக் (மணவிலக்கு) இரண்டு தடவைகள்தாம். பிறகு நேரிய விதத்தில் (அவளை) மனைவியாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது அழகிய முறையில் விடுவித்து விட வேண்டும்" (2 : 229) அதே வசனங்களில் தொடர்ந்து கூறுகிறான்:


قال ايضا: فَإِنْ طَلْقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهَمَا أَنْ يَتَرَاجَعَا إِنْ ظَنَّا أَنْ يُقِيمَا


حُدُودَ الله وَ تِلْكَ حُدُودُ اللهُ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُوْنَ ( البقرة الآية: (۲۳۰)


பின்னர் அவனை அவன் மணவிலக்கு செய்து விட்டால் (அதாவது, மூன்றாவது தடவை யாக மணவிலக்கு செய்து விட்டால்) இப்பொழுது அவள் அவனுக்கு ஹலால்- அனுமதிக்கப் பட்டவள் அல்ல. வேறொரு ஆடவனை அவள் திருமணம்செய்து அவன் அவளை மணவிலக்கு  செய்யாத வரையில்! இப்படி அவன் (இரண்டாம் கணவன்) அவளை மணவிலக்கு செய்து விட்டால் அப்பொழுது முதல் கணவனும் அவளும் அல்லாஹ் விதித்த வரம்புகளில் நிலைத் திருப்போம் என்று எண்ணினால் அவ்விருவரும் (மீண்டும் மணவாழ்க்கைக்குத் திரும்புவதில்) அவர்கள் மீது குற்றமில்லை. (இறைவரம்புகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகளை) அறிந் திருக்கும் மக்களுக்கு அவன் இவற்றை விளக்குகிறான்" ( 2 : 230)


ஒருவன் தன் மனைவியை மூன்று தடவை மணவிலக்கு செய்து விடுவானாகில் பிறகு அவள் வேறொருவனைத் திருமணம் செய்து கொள்கிற வரை அல்லாஹ் அவளை அவன் மீது ஹராம் விலக்கப்பட்டவளாக்கியுள்ளான். ஏனெனில் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் எத்தனை தடவை எனும் கணக்கின்றி மணவிலக்கு செய்து கொண்டும் பிறகு அவளை மனைவியாக திரும்ப அழைத்துக் கொண்டும் இருந்தார்கள்!


ஒரு தடவை ஒரு மனிதர் தன் மனைவியின் மீது கோபம்கொண்டார். அவனை நோக்கிக் கூறினார்: "நான் உனக்கு வாழ்வும் அளிக்க மாட்டேன்., பிரிந்து போகவும் விடமாட்டேன்" அவள் 'அது எப்படி?' என்று கேட்டாள்.


அதற்கு அவர் சொன்னார்: "நான் உன்னை மணவிலக்கு செய்து விடுவேன். பிறகு இத்தா காலம் முடிந்து வரும் போது உன்னைத் திரும்ப அழைத்துக்கொள்வேன். மீண்டும் மணவிலக்கு செய்து விடுவேன். இத்தா காலம் முடிந்து வரும் போது உன்னை அழைத்துக்கொள்வேன். இப்ப டியே செய்து கொண்டிருப்பேன்"


இதனை அந்தப் பெண்மணி, நபி (ஸல்) அவர்களிடம் சொன்னாள். அப்பொழுது அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:


"தலாக் இரண்டு தடவைகள்தாம். (அதாவது திரும்ப அழைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட தலாக் இரண்டு தடவைகள்தாம்) இந்த வசனத்தின் மூலம் பெண்களை, அவர்களின் தணவன் மார்களின் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பதற்காக தலாக் மூன்று தடவைகள்தாம் என்று வரையறை செய்தான்!


சகோதரர்களே! திருமணச் சட்டஙகள் தொடர்பாக சற்று அதிகமாக நான் பேசியிருக்கக் கூடும். இந்த விவரங்களை எல்லாம் போதிய அளவில் இடம்பெறச்செய்ய வேண்டும் என்பதே நோக்கம்! அதேநேரத்தில் படிப்பவர்களைச் சோர்வு அடையச்செய்யும் அளவு நீண்டுவிடவும் கூடாது என்பதில் கவனம் செலுத்தியுள்ளேன். தெளிவு குன்றச் செய்திடும் அளவு மிகச் சுருங்கி விடக் கூடாது என்பதிலும் கவனம் செயுத்தியுள்ளேன்.


இந்தச் சொற்பொழிவின் மூலம் அல்லாஹ் யாவருக்கும் நற்பயன் அளித்திட வேண்டுமென இறைஞ்சுகிறேன். இந்தப் பணியினை அவனுக்காகவே நிறைவேற்றப்பட்ட தூய பணியாய் அவ னது திருப்திக்கு ஏற்ற நல்ல பணியாய் அவன் ஆக்கிட வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.


மேலும் இந்தச்சமுதாயத்தில், அல்லாஹ்வின் கட்டளைகளை நன்கறிந்த சந்ததிகளை- அவன் விதித்த வரம்புகளைப் பேணி நடக்கக் கூடிய, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய சந்ததிகளை அல்லாஹ் தோற்றுவிக்க வேண்டும் என்றும் இறைஞ்சுகிறேன்.


எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழி யில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை வழிபிறழச் செய்துவிடாதே! மேலும் எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக நீயே தாராளமாக வழங்குவனாக இருக்கிறாய்.


எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மை வழங்குவாயாக! மறுவுலகிலும் நன்மை வழங்குவாயாக! மேலும் நரகத்தின் வேதனையில் இருந்து எங்களைக் காத்தருள்வாயாக! ஸல்லல்லாஹு அலா நபிய்யினா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்.

Comments