திருமணத்தின் தத்துவம்
இது தொடர்பாகப் பேசத் தொடங்குவதற்கு முன் ஒன்றை உறுதியாக நாம் அறிந்து கொள் வது அவசியம். அதாவது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் அனைத்தும் தத்துவார்த்தமானவை. ஒவ்வொரு சட்டமும் பொருத்தமாகவே அமைந்துள்ளது. எந்த ஒருசட்டமும் வீணானதோ மூடத் தனமானதோ அல்ல. அதற்குக் காரணம் இந்தச் சட்டங்கள் அனைத்தும் எல்லாம் அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாகிய இறைவனிடம் இருந்து அருளப்பட்டிருப்பதே!
ஆனால் (இந்தச் சட்டங்களில் உள்ள) எல்லாத் தத்துவங்களையும் எல்லா மனிதர்களாலும் அறிய முடியுமா என்றால் சந்தேகமின்றி மனிதனின் கல்வியும் அறிவும் சிந்திக்கும் திறனும் ஒரு வரை யறைக்குட்பட்டவைதான்! எனவே அனைத்து விஷயங்களையும் அவனால் அறிந்து கொள்ள முடி யாது. அதற்குத் தேவையான முழுஞானம் அவனுக்கு வழங்கப்படவில்லை. அல்லாஹ் திருக் குர்ஆனில் கூறுவது போன்று:
قال الله : وَمَا أُوتِيْتُمْ مِنَ الْعِلْمِ إِلا قَلِيلاً ( الاسراء الآية: (٨٥)
ஞானத்தில் இருந்து மிகக் குறைந்த அளவே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது (17:85)
ஆகையால் அல்லாஹ் தன் அடியார்களுக்காக என்னென்ன ஷரீஅத் சட்டங்களை வகுத்துத் தந்துள்ளானோ அவற்றை முழு மனத்துடன் ஏற்றுக் கொள்வது நம்மீது கடமையாகும். அவற் றின் தத்துவங்கள் நமக்குத்தெரிந்தாலும் தெரியா விட்டாலும் சரியே! ஏனெனில் அந்த நுணுக்கங் கள் நமக்குத் தெரியவில்லை என்பதால் உண்மையில் அவற்றிற்கு எந்தத் தத்துவமே இல்லை என்பதல்ல., மாறாக நமது அறிவும் சிந்தனையும் அந்தத் தத்துவங்களைப் புரிந்திட முடியாத வகையில் குன்றியவை என்பதே உண்மை!
திருமணத்தின் தத்துவங்கள்
1) கணவன் -மனைவி இருவரின் பாதுகாப்பு.
-அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "இளைஞர் சமுதாயமே! உங்களில் யார் திருமணம் செய்ய சக்திபெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம், பார்வையைத் தாழ்த்தக் கூடியது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கக் கூடியது"
2) தீமைகள் மற்றும் ஒழுக்கச் சீரழிவில் இருந்து சமுதாயத்தைப் பாதுகாத்தல்.
திருமணம் இல்லையெனில் ஆண்கள் பெண்களிடையே தீமையும் ஒழுக்கச் சீரழிவும் பெருமளவு பரவி விடும்!
3) கணவன் மனைவி இருவரும் ஒருவர் மற்றவரின் மூலம் இன்பம் அனுபவித்தல்.
இது, கணவன் மனைவி என்கிற உறவின் அடிப்படையில் இருவர் மீதும் சில பொறுப்புக ளும் உரிமைகளும் கடமையாகுவதைப் பொறுத்ததாகும்.
மனைவிக்குப் பொறுப்பாளனாக கணவன் இருக்கிறான்., அவளுடைய உணவு, இருப்பிடம் போன்ற தேவைகளுக்கு நல்ல முறையில் ஏற்பாடு செய்வான்.
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்:* மனைவியருக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது உங்கள் மீது கடமை"
இதேபோன்று வீட்டின் அத்தியாவசியப் பணி களைக் கவனித்தல், பாராமரிப்பது, கணவருக்குப் பணிவிடை செய்வது, குழந்தைகளின் கல்வி, பரா மரிப்பு போன்றவற்றிற்கு மனவிை பொறுப்பு ஏற்கிறாள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனைவி, அவளுடைய கணவனது வீட்டின் பொறுப்பாளி யாவாள். அவளது பராமரிப்பின் கீழ் உள்ளவை பற்றி அவளிடம் (மறுமை நாளில்) விசாரணை செய்யப்படும்"
4) குடும்பங்கள். கோத்திரங்களிடையே உறவை வலுப்படுத்துதல்.
எங்கேயோ வாழ்கிற இரு குடும்பங்கள்.. சொந்தபந்தம் எதுவுமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கிடையே திருமண பந்தம் என்பது உறவையும் நெருக்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.
இதனால் திருமணத்தை வம்ச உறவுக்குச் சமமானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான் - முன்னர் நாம் குறிப்பிட்டது போன்று!
ஏனெனில் திருமணம்தான் மனித இனம் நிலைத்திருப்பதன் அடிப்படையான சந்ததி உரு வாக்கத்திற்கு மூலகாரணமாக அமைந்துள்ளது.
5 - சிறப்பான முறையில் மனித இனம் நீடித்து வாழ்தல். குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
قال الله تعالى : يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَ زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالاً كَثِيرًا وَ
نساء (سورة النساء الآية: (1)
ஓ மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவில் இருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள்., அவனே அதே ஆன்மாவில் இருந்து அதன் துணையைப் படைத்தான். மேலும் அவர்கள் இருவரின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய் क्रां" (4: 1)
மேலும் திருமணம் இல்லையெனில் இரண்டு தீமைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது:
1) மனித இனத்தின் அழிவு. அல்லது
2) மனிதன் விபச்சாரத்தின் மூலம் பிறந்து வாழ வேண்டியதாகும். யார் அவனது மூதாதையர் என்பது தெரியாதுபோகும். நல்லொழுக்கத்தை அவன் பேணிடவும் மாட்டான்.
இந்த இடத்தில் குடும்பக் கட்டுப்பாடு' செய்வதன் சட்ட நிலை பற்றி சில விஷயங்களைச் சொல்வது பொருத்தமாக இருக்குமெனக் கருதுகிறேன். ஓரிரு பிள்ளைகளுடன் குழந்தைப் பேற்றினை நிறுத்திக் கொள்வது இஸ்லாமிய ஷரீஅத்தின் விருப்பத்திற்கு மாற்றமானதாகும்.
ஏனெனில் பிள்ளைகளை அதிகம் பெற்றெடுக்கக்கூடிய பெண்ணைத் திருமணம் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மட்டுமல்ல ஏனைய சமுதாயத்தினருக்கு மத்தி யில் அல்லது நபிமார்களுக்கு மத்தியில் எனது உம்மத்தினரின் எண்ணிக்கை குறித்து நான் பெருமை அடைபவனாக இருக்கிறேன் என அதற்கான காரணத்தையும் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஃபிக்ஹு சட்ட வல்லுனர்கள் சொல்வர்: அதிகக் குழந்தைப் பேறுடையவள் என அறியப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்வது அவசியம். அவள், முன்பு திருமணம் செய்தவளாக இருந்து ஒன்றுக்திகமான பிள்ளைகளைப் பெற்றவளாக இருந்தால்- அவளைக் கொண்டே அதனை அறிய லாம். அப்படி திருமணம் செய்தவளாக இல்லை எனில் அவளுடைய நெருங்கிய உறவுப் பெண் களின் மூலமாக தாய், சகோதரி மூலமாக அதை அறியலாம்!
குடும்பக் கட்டுப்பாடு செய்யத் தூண்டும் காரணி என்ன?
உணவு நெருக்கடி ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் காரணமா? அல்லது குழந்தைகளை நல்ல விதமாக வளர்ப்பது சிரமமாகி விடும் எனும் அச்சம் காரணமா?
முந்தையது காரணமெனில் அது அல்லாஹ்வைப் பற்றி தவறான கருத்து கொள்வதாகி விடும். ஏனெனில் அல்லாஹ் ஓர்உயிரைப் படைக்கிறான் எனில் அதற்கு உணவளிக்கும் பொறுப்பையும் அவனே ஏற்றுள்ளான். குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
قال الله تعالى: وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللهِ رِزْقُهَا (سورة هود الآية)
உணவளிப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை" (11:6)
இன்னோர் இடத்தில்,
قال الله تعالى : وَكَأَيِّنْ مِّنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا ، اللهَ يَرْزُقُهَا وَ إِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيم (سورة العنكبوت الآية: (٦٠) "எத்தனையோ பிராணிகள் உள்ளன., அவை தாமே தமது உணவைச் சுமந்துகொண்டு திரிவ தில்லை. அல்லாஹ் அவற்றிற்கு உணவளிக்கிறான். உங்களுக்கும் அவனே உணவு அளிக்கி றான்.அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கு
அறிபவனாகவும் இருக்கிறான்" (29 :60 )
மேலும் வறுமைக்கு அஞ்சி தம்முடைய பிள்ளைகளைக் கொல்லக் கூடியவர்கள் குறித்து இவ்வாறு கூறுகிறான்:
قال الله : نَحْنُ نَرْزُقُكُمْ وَ إِيَّاكُمْ (سورة الاسراء الآية: (٣١)
"நாம்தாம் அவர்களுக்கும் (அதாவது உங்கள் பிள்ளைகளுக்கும்) உணவளிக்கிறோம். உங்க ளுக்கும் உணவளிக்கிறோம்" (17:31)
குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு குழந்தைகளைச் சிறந்த முறையில் பராமரிப்பதன் சிரமம் குறித்த அச்சம் காரணமாக இருந்தால் அதுவும் தவறாகும். ஓரிரு குழந்தைகளை மட்டும் வைத் திருக்கும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்த்துப் பராமரிக்கும் விஷயத்தில் எவ்வளவு பெரிய சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது! ஆனால் அதிகமான பிள்ளைகளை வைத்திருக்கும் தாய் தந்தையர் எத்துணை இலகுவாக பிள்ளைகளை வளர்த்து பராமரித்து விடுகிறார்கள்!
எனவே குழந்தைகளைப் பராமரித்து வளர்ப்பதன் இலகுவும் சிரமமும் அல்லாஹ் தருகிற சௌகரியத்தைப் பொறுத்த விஷயமாகும்.
ஓர் அடியான் தன் அதிபதியை அஞ்சி வாழ்ந்தால் ஷரீஅத்தின் வழிகளில் நடைபோட்டால் அவனுடைய செயல்களை அல்லாஹ் இலகு வாக்கித் தருகிறான். அல்லாஹ் கூறுகிறான்:
قال الله تعالى: وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا (سورة الطلاق الآية: (٤)
யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ அவரது விவகாரத்தில் அல்லாஹ் இலகுவவை ஏற்படுத் துகிறான்" (65:4)
குடும்பக் கட்டுப்பாடு செய்வது இஸ்லாமிய ஷரீஅத்திற்கு முரணான செயல் என்பது தெளி வாகி விட்டது எனும்போது இப்படி ஒரு கேள்வி எழலாம்:
தாயின் நலனை முன்னிட்டு அதற்கேற்ற முறையில் குழந்தைப் பேற்றைக் கட்டுப்படுத்து வதற்கும் இந்தச் சட்டம்தானா?
இல்லை! தாயின் நலனை அனுசரித்து குழந்தைப் பேற்றைக் கட்டுப்படுத்துவது ஷரீஅத்தி ற்கு முரணானது அல்ல. குழந்தைப் பேற்றைக் கட்டுப்படுத்துவது என்றால் அடிக்கடி கருத் தரிப்பதைத் தடுக்கும் வழியை கணவன், மனைவி இருவருமோ அல்லது ஒருவரோ மேற் கொள்வதாகும். இதில் குற்றமில்லை. கணவன் மனைவி இருவரும் அதைப் பொருந்திக் கொள்ளும் பட்சத்தில் அது கூடும்!
எடுத்துக்காட்டாக, மனைவி பலவீனமாக இருக்கிறாள், கர்ப்பம் தரிப்பது அவளை மேலும் பலவீனம் அடையச் செய்துவிடும்., அல்லது ஏதேனும் நோய் ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் உள்ளது., அவளது நிலையோ உடலுறவு கொண்டால் சீக்கிரம் கர்ப்பம் தரித்து விடுகிறாள்! இந்த நிலையில் குறிப்பிட்ட சில காலத்திற்கு கருத்தடை மாத்திரைகளை அவள் பயன்படுத் தாலம். அதில் குற்றமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் அஸ்ல்' செய்பவர்களாக இருந் தார்கள். அப்படிச் செய்யக்கூடாதென அவர்கள் தடை செய்யப்படவில்லை. 'அஸ்ல்' செய்வ தென்பது உடலுறவின்பொழுது கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்கச் செய்யும் இயல்பான ஒருவழிமுறை ஆகும்!
Comments
Post a Comment
Best comment is welcomed !