கொரோனா வைரஸ் : அச்சம் , பயம், பீதி =மரணம்



இன்று உலக முழுதும் பேசப்படுகின்ற ஒரு செய்தி என்றால் அது இந்த தொற்று நோய் பற்றி தான் !  இந்த கொரோனா பற்றி விழிப்புணர்வு செய்வதைவிட கேலி கிண்டலும் செய்வதுதான் அதிகம்! ஒரு பக்கம் சிலருக்கு பயம் , அச்சம் . இன்னொரு பக்கம் இதைப்பற்றி டிக்டக் கேலிக் கூற்று நடக்கிறது. சிலருக்கு இறைவனின் சோதனை விளையாட்டாக இருக்கிறது! இன்னும் சிலருக்கு அது பொழுதுபோக்காக இருக்கிறது! சிலர் வரம்புமீறி செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது! இன்னும் சிலர் இருக்கிறார்கள் , அவர்களுக்கு இறைவனின் வல்லமை பற்றி தெரியாமல் இறைவனைப் பற்றி கிண்டல் செய்கிறார்கள். இறைவன் யார் ? அவனின் வல்லமை என்ன ?  அவனால் முடியாதது எதுவும் உண்டா ?  அவன் அறியாமல்  இந்த உலகத்தில் ஏதாவது நடக்கிறதா ? அவன் நாடாமல் மனிதனுக்கு துன்பம் வருகிறதா ? படைத்தவன் யார் ? படைப்புகள் யார் ? இதெல்லாம் அறியாமல் , புரியாமல் பெரும்பாலும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள் !


இறைவனின் வல்லமை என்ன  என்பதை ஒரு மனிதன் புரிந்துகொள்ள வேண்டும் அதேநேரத்தில் அந்த இறைவனைப் பற்றி அறிந்துகொள்ள  வேண்டும்! இறைவனின் சக்தி அது மாபெரும் சக்தி அதற்க்கு அளவுகோல் இல்லை! அவனால் முடியாதது என்பது  எதுவும் இல்லை . இறைவன் நாடியதை உடனே செய்து முடிப்பான் ,  அதற்கு எந்த நேரமும் காலமும் அவனுக்கு தேவையில்லை ! இறைவன் ஆகுக என்று சொன்னால் , அது உடனே ஆகிவிடும்! இறைவனுக்கு தெரியாமல் இந்த பூமியிலும் சரி வானத்திலும் சரி , எதுவும் நடக்காது .  ஒரு மரத்திலிருந்து ஒரு இல்லை கீழே விழுவதாக இருந்தாலும் ,இறைவன் நாடாமல் அது விழமுடியாது. இறைவன் நாடாமல் இந்த உலகத்திற்கு எந்த கஷ்டமும் அல்லது நோயும் வராது என்பதை ஒரு மனிதன் தன் மனதில் ஆழமாக பதியவைக்க வேண்டும்! ஒரு மனிதனுக்கு ஒரு துன்பம் வந்தால் , அது இறைவனால் வந்தது ! அது அந்த மனிதனுக்கு ஒரு சோதனையாக இருக்கலாம் அல்லது வேறு படிப்பினை பெறுவதற்காக இருக்கலாம் அல்லது ஒரு சிறு தண்டனையாகவும் இருக்கலாம்! இந்த கொரோனா தொற்று நோய் எதனால் வந்தது ?  என்று சிந்திக்காமல் , சிலர் சிரித்து கொண்டு விளையாடிக்கொண்டு திரிகிறார்கள் ! அதை டிக் டாக்கில் கேலிக் கூத்தாக செய்கிறார்கள். இன்னும் சிலர் கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் பரப்பி கொண்டு விளையாடுகிறார்கள்! எதனால் இறைவன் இந்த நோயை இந்த உலகத்திற்கு அனுப்பினான் என்பதை ஆழமாக சிந்த்தித்து பாருங்கள்.. அதற்க்கு இதான் காரணம்.. இதோ ஒரு சிறிய பட்டியல் .... உலகத்தில் அநியாயங்கள்;  அநீதிகள் , கொலைகள், மோசடிகள் , கற்பழிப்புகள் , ஏமாற்றுதல் , கள்ளக்காதல் , கணவனுக்கு துரோகம் செய்தல், மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன் , இறைவனுக்கு மாறு செய்தல், பெரிய பாவங்கள் மற்றும் பெற்றோர்களை துன்புறுத்துதல் இப்படி பட்டியலாக சொல்லிக்கொண்டே போகலாம்.... எல்லாம் மிகைத்துவிட்டது ! வரம்புமீறி நடக்கிறது .  இறைவனின் கோபம் ,   மனிதர்களுக்கு வேதனையாக  மாறிவிட்டது! காரணம் மனிதர்களாகிய நாம்தான்!

நல்லவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் , சிலருக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்காமல் , நமக்கு என்ன வந்துச்சு என்று வேடிக்கை பார்த்துகொண்டுயிருக்கிறார்கள் ! மக்களாகிய நாம் சரியாக ஒழுங்காக இல்லை , ஆனால் நாம் ஆட்சியாளர்களை குறைச் சொல்கிறோம்! நாம் சரியாக இருந்தால் , நல்லவராக இருந்தால் , நேர்மையாளராக இருந்தால், ஓட்டுக்கு பணம் வாங்காமல் இருந்தால் , மனித நேயத்துடன் வாழ்ந்தால், இறைவன் ஏன் நமக்கு ஒரு கெட்ட ஆட்சியாளனை கொடுப்பான் ? நம்மீது ஒரு மோசமான அநியாயம் செய்யக்கூடிய ஆட்சியாளனை சாட்டுவனா ? சிந்திப்போம்!

இறைவன் நாடாமல் எதுவும் நடக்காது , நமக்கு எதுவும் வராது! நமக்கு மரணம் எழுதப்பட்டது அது எப்படி வரும் ?  அது எந்த ரூபத்தில் வரும்? எங்கே வரும்? எந்த நோயால் வரும்? யாருக்கும் தெரியாது! நாம் எல்லோரும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் ஒழிய நாம் மரணத்திலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது! தயவு செய்து பீதியை உண்டாக்காதீர்கள்! புரளியை  ஏற்படுத்தாதீர்கள்! பொய்களை பரப்பாதீர்கள்! நோய்க்கு எந்த மருந்தையும் தவறுக்காக யாருக்கும் கூறாதீர்கள்! இறைவன் நாடியது நடக்கும் என்று நிம்மதியாக அதிகம் அதிகம் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரியவரர்களாக மாறுவோம்! நல்லது சொல்கின்றோம் என்ற பெயரில் தீயதை பரப்பிக் கூறாதீர்கள்! வதந்தியை நம்பாதீர்கள்!

இந்த நோயை ஒரு படிப்பினையாக நாம் எடுத்துக்கொள்வோம்! நம்முடைய வாழ்க்கையில் இது ஒரு பாடமாக இருக்கட்டும்! துன்பத்திற்கு பிறகு இன்ஷாஅல்லாஹ் இன்பம் இருக்கிறது! எதுவும் இங்கே நிரந்திரம் இல்லை!

இறைவனிடம் கண்ணீர்விட்டு அழுது  மன்றாடினால், அந்த நோய் இறைவன் நாடினால் கரைந்து போய்விடும்! அல்லது மறைந்து போய்விடும்!

இறைமறை (திருக்குரான் ) அது எல்லோருக்கும் பொதுமறை ! அதை படியுங்கள்! வாழ்க்கையில் பயன் பெறுங்கள்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
சத்திய பாதை இஸ்லாம் 

Comments