தமிழ் சொற்பொழிவுகள்
மரணம் பல விதம் விசாரணை நாள் பாவமன்னிப்பு

Tuesday 28 April 2015

மௌனம் சிரமம் இல்லாத வணக்கம்


மௌனம் சிரமம் இல்லாத வணக்கம்!
 தன்னை வணங்கி வழிபடுவதற்கா கவே மனித குலத்தையும், ஜின் வர்க் கத்தையும் படைத்த அல்லாஹ்வை. நெருங்குவதற்கான இறை கடமைகளை, புரிவதன் வாயிலாக இறை எதிர்பார்ப்பை எட்டச் செய்வதுடன், இம்மை மறுமைக்கான மனிதவாழ்வும், சீரமைக்கப்படுவதன் நோக்கில், உடல் இயக்கம், பண ஒதுக்கல் சார்ந்த கடமைகளை ஏதோ ஒரு வகையில், நன்மையுடன் சிரமத்தையும் தாங்கியே புரிய வேண்டியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே பெருமானார் (ஸல்) அவர்கள் புனித ஹஜ் கடமையை, ஜிஹாதிற்கு ஒப்பிட்டுள்ளார்கள்.  [அல்லாஹ்வையும் , மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர்கள் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் . ஒரு ஹதீஸின் கருத்து இது.


l இறை வணக்க மென்றால், சிரமப் பட்டுத்தான் ஆகவேண்டும் சிரமமில் லாத செலவினமில்லாத வணக்கமென் றால் அது மெளனமே.


(அல்-ஹதீஸ்)

l மெளனம் என்பது அறிவு நிறைந்த ஒரு செயல் ஆனால் அதன் வழியில் செல்பவர்கள் மிகக் குறைவு.

(இமாம் கஸ்ஸாலி)

l (அமைதியாக) மெளனமாக இருங்கள். அது ஷைத்தானை விரட்டியடிக்கச் செய்யும் வழிகளில் ஒன்றாகும். அது உங்கள் மார்க்க விடயங்களில், உங்க ளுக்கு உதவி செய்யும். (அஹ்மத்)

l மெளனம் அது எல்லாராலும் சாதிக் கக்கூடியதல்ல அறிவுடையோரின் ஆயுதமே அது. (ஒரு பெரியார்)

பேச்சைக்குறைத்து நாவை அமைதிக்குள்ளா க்கி மெளனம் சாதிப்பதும் ஒரு வணக்கமெ ன்ற இஸ்லாத்தின் அங்கீகாரம், மனித இலெளகீக ஆத்மீக விடயங்களில் ஏனைய உறுப்புக்களை விட மிக அத்தியாவசியமான தாக விளங்குகின்றது. நாவின் சிறந்த செயல் பாடுகளே!

அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய அளப்பரிய அருட்கொடைகளில் நாவிற்கு அளிக்கப்பட்டுள்ள அபார சக்தியும், திறமையும், வேறெந்த மனித உறுப்பிற்கும் அளிக்கப்பட வில்லையென்பது இறை கொடையான பேச்சாற்றல் வாயிலாக மனித உள்ளுணர்வுகளையும், கருத்துக்களையும், தேவைகள் பரஸ்பர பரிமாற்றங்களையும் வெளிக்கொணர்வதன் வாயிலாக நாவின் அசைவு, இயக்கம், துரிதம் என்பனவா யிலாக மனித வாழ்வு உயிரோட்டமும், பிரகாசமும் பெறுவதோடு, உலகம் இயங் குவதற்கும் அது உந்து சக்தியாக விளங்கு கின்றது.

இந்த அடிப்படையில் இறை கடமைகள், இதர அமல்களுக்கான இறை வசனங்களை உச்சரிப்பதற்கு நாவின் பிரயோகம் வாயிலாக அபார நன்மை பயக்கின்ற; சுவர்க்கத்திற்கு வழி காட்டும் ஒரு உன்னத உறுப்பாக இருப்பதுடன் அதற்கு மாற்றமாக இறைவனால் தவிர்க்கப்பட்ட பொய், புறம், அவதூறு, சபித்தல், சாடுதல், கேலி போன்ற நாவின் தீய செயற்பாடுகளால் நரகிற்கு வழிகாட்டக்கூடிய ஒரு உறுப்பாகவும் நாவே விளங்குகின்றது. இதன் காரணமாக ஒரு மனிதனது சுவர்க்கத்திற்கும், நரகத்திற்குமான பயணத்தை நாவுதான் தீர்மானிக்கின்ற முடிவில் மக்கள் வாழ்வு அமைந்திருக்கின்றது.

இறை வணக்கங்களை இறையச்சத்தோடு, நிறை வேற்றுவது போல, நாவின் இயக்கத்தைக்கட்டுப்படுத்தி, நேர்மையான சொல்லை உரைப்பதும் சத்தியத்திற்காக குரல் கொடுப்பதும், ஒரு மனிதனின் தக்வாவை மேன்மைப்படுத்த நாவின் செயற்பாடே காரணமாகின்றது இதற்கு மாற்றமாக நாவை கட்டவிழ்த்துவிட்டு, நாவின் வார்த்தைகள் பிறரை நோவினை செய்யும் சொல்லம்புகளாக மாறி துன்புறுத்துவது, இறை பார்வையில் அது வெறுக்கத்தக்க பாவமான செயலாகவும், யூத, கிறிஸ்த்துவ பண்பாடுகளின் உள்ளதாகவும் இது விளங்குகின்றது. இந்நோக்கில் பாவச் செயல்களில் ஈடுபடும் மனித உறுப்புக்களில் நாவுதான் பிரதான பங்கு வகிக்கின்றது.

ஒரு மனிதன் காலங்காலமாக உயிரிலும் மேலாக பாதுகாத்து வந்த மானம் மரியாதை அந்தஸ்த்து அத்தனையையும் ஒரு நொடியில் பலர் முன்னிலையில் தீய வார்த்தைகளால் மானபங்கப்படுத்தி, அவர் உணர்வுகளைக்கொளுத்தி, சாகடித்து மானத்தை காற்றில் பறக்கவிடச் செய்யும் இந்த நாவு பயங்கரமான, உயிர் பறிக்கும் அரக்கனைவிட கொடுமையான வலிமை பொருத்திய ஒரு சிறு தசைத்துண்டே!

l எவர்கள் நம்பிக்கை கொண்டவர்க் கிடையே மானக்கேடான விடயங்க ளைப் பரப்பவிரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையி லும், மறுமையிலும், துன்புறுத்தும் வேதனையுண்டு அதனால் ஏற்படும் தீங்குகளை அல்லாஹ்தான் நன்கறி வான் நீங்கள் அறிய மாட்டீர்கள்

(24:10)

நாவின் செயற்பாடுகளில் மிகவும் பாரதூரமானதும், பல குற்றங்களுக்கும் வழிவகுப்பதும் பொய்யே. பொய் பெரும்பாவங்களில் ஒன்றாவதுடன் இது ஒரு கொடிய நோயாகப்பரவி, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவு பிரிவினை சமூகத் துரோகச் செயல்களை உண்டாக்க வல்லது.

l ஒரு முஃமினிடம் எல்லாத் தீமைக ளும் இருக்கலாம் ஆனால் அவனி டம் பொய்யும் நேர்மையீனமும் இருக்கக் கூடாது. (அஹ்மத்)

l ஒரு மனிதனின் பேச்சு அதிகரித்தால், அவன் சொல்லும் பொய்களும் அதி கரித்து அவனுக்கு கேடு விளைவிக்கும்

(அல் ஹதீஸ்)

l புறம் பேசுவது இறந்த மனிதனின் மாமிசத்தை உண்பதற்கு ஒப்பாகும் பிறரைப்புறம் பேசித்திரிபவர்களுக்கு கேடுதான் மறுமையில் ‘ஹுதாமா’ என் னும் நரகில் அவன் எறியப்படுவான்.[முற்றும்.]
இக்லாஸ் இல்லையென்றால் உன் அமல் கலாஸ் .....

உள்ள தூய்மையுடன் அல்லாஹ்வை வணங்க அல்லாஹ் நமக்கு கிருபைச் செய்வானாக .
நல்அமல்கள்  இறை திருப்தியை நாடி மனத் தூய்மையுடன் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறில்லாமல் முகஸ்துதிக்காக வணங்குவது 'சிறிய ஷிர்க் ' ஆகும். அந்த
நற் செயல் பயனற்றதாகிவிடும் . இது நயவஞ்சகர்களின்  தன்மை என அல்லாஹ்
கூறுகிறான்.


நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக் (கக் விரும்பு ) கின்றனர் .
எனினும் அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகின்றான் . அவர்கள் தொழுகையில்
நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்கு காண்பிக் (க விரும்பு)
கின்றார்கள் . அவர்கள் வெகு சொற்பமாகவன்றி  அல்லாஹ்வை தியானிப்பதில்லை.
                     (அல்குர் ஆன் :

"பிறர் புகழ்வதற்காக நற்செயல்கள் செய்வதும் ஷிர்க் ஆகும். இதைப் பற்றி
நபி (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்துக் கூறினார்கள்:

"பிறர் புகழ்வதற்காக எவன் வணங்குகிறானோ அவனை அல்லாஹ் தண்டிப்பான் .
முகஸ்துதிக்காக எவன் வணங்குகிறானோ அவனையும் அல்லாஹ் தண்டிப்பான் ."
(சஹீஹ் முஸ்லிம்)

ஒருவர் ஒரு நற் செயலை அல்லாஹ்வின் திருப்தியையும் மக்களின் புகழையும்
நாடிச் செய்வானேயானால் அந்த நற் செயலும் வீணானதே .

அல்லாஹ் அருளியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இணை வைப்பவர்களின்
இணையை  விட்டும் நான் முற்றிலும் தேவையற்றவன் . எவர் தனது நற் செயலில்
என்னுடன் பிறரை இணைத்துக் கொண்டாரோ அவரையும் அவரது இணைவைக்கும்  இந்தச்
செயலுடன் விட்டுவிடுகிறேன் ."      (சஹீஹ் முஸ்லிம்)

ஒருவர் ஒரு நற் செயலை அல்லாஹ்வுக்காகத் துவங்குகிறார் . பிறகு அவரது
உள்ளத்தில் முகஸ்துதி எண்ணம் ஏற்படுகிறது . உடனே அவர் அந்தத் தீய
எண்ணத்தை மனதிலிருந்து அகற்றிட முயற்சி செய்வாரெனில்  அவரது நற்செயல்
வீணாகிவிடாது .

ஆனால் அந்தத் தவறான எண்ணம் வரும்போது தடுப்பதற்கு முயற்சி
செய்யாமலிருந்தால் அந்த நற்செயல் வீணாகிவிடும்.

அல்லாஹ் அனுமதிக்காதவைகளிருந்து  பயன்களைத்  தேடுவது :

சிலர் தாயத்துகள் , கயிறுகள் , வளையங்கள்  போன்றவற்றை அணிந்து
கொள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள் . சிலர்
தங்களது கை, கழுத்து , இடுப்பில் அவைகளை கட்டிக் கொள்கிறார்கள் . சிலர்
சில கற்களை ராசிக்கல் என்று கூறி அதை மோதிரங்களில் பதித்து அணிகிறார்கள்
.

இவ்வகையான அனைத்து செயல்களும் இறை நம்பிக்கைக்கு  எதிரானதாகும் . இவை
மென்மேலும் ஈமானில் பலவீனத்தை ஏற்படுத்துகின்றன . இவைகளில் மூலம்
நிவாரணம் தேடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும் .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தாயத்தைத் தொங்க விட்டவன்
அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான் .(முஸ்னத் அஹ்மத் )

இக்காரியங்களைச் செய்பவன் , இவைகள் தானாகவே நன்மை தீமை செய்யும் ஆற்றல்
பெற்றவை என நம்புவன் பெரிய 'ஷிர்க்கைச்  செய்தவனாவான் .
இவை நன்மை தீமைக்குக் காரணமாக அமையலாம் என்று நம்பிக்கை கொண்டால் அது
சிறிய ஷிர்க் ' ஆகும் . அனைத்து வகை ஷிர்க்கும் பெரும் பாவத்தைவிட மிகக்
கொடியதாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் இதிலிருந்து காப்பாற்றுவானாக .

அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment

Best comment is welcomed !