தமிழ் சொற்பொழிவுகள்
மரணம் பல விதம் விசாரணை நாள் பாவமன்னிப்பு

Saturday 16 January 2016

பெண்களே

பெண்களே! நீங்கள் தர்மம் செய்து செய்து வாருங்கள். அதிகமாக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள் . ஏனென்றால் நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேன்'' என்று திருநபி [ஸல்] அவர்கள் கூறிய போது  , சிலர் காரணம் என்ன  என்று வினவினர். அதற்கு திருநபி [ஸல்] அவர்கள்,  '' நீங்கள் கணவன்மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள். அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள். மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகிறீர்கள். உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை'' என்று கூறினார்கள்.[அல்ஹதீஸ்]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் , பெண்களைப் பற்றி இப்படி கூறியிருப்பதை . பெண்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்!  ஒருவருக்கு ஒரு நல்ல சாலிஹான மனைவி கிடைப்பது,  அவருடைய வாழ்க்கை சுவன பூஞ்சோலையாக தான் இருக்கும்! மாறாக ஒருவருக்கு தீய குணம் உள்ள மனைவி கிடைத்தால். அவர் வாழ்க்கை ....? [சொல்ல வேண்டாம் அல்லாஹ்  பாதுகாக்கணும்!]


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள் . முற்றிலும் உண்மைதான்!  அப்படி உள்ள பெண்ணை எங்கே தேடுவது >>? அல்லாஹ்விடம் கேளுங்கள் ! அவன் உங்களுக்கு ஒரு சாலிஹான மனைவி யை அமைத்துக் கொடுப்பான்!

பெண்களே! உங்களுக்கு அல்லாஹ்  விரும்புவது ரொம்ப எளிதான விடயத்தை தான் ! அவன் [அல்லாஹ் ] உங்களுக்கு கஷ்ட்டத்தை நாடவில்லை. ஒரு தாய்க்கு ஒரு நல்ல பிள்ளையாக இருப்பது. கணவனுக்கு ஒரு நல்ல சாலிஹான மனைவியாக இருப்பது.  இந்த இரண்டிலும் எல்லா விடயமும் அடங்கியிருக்கு!

அண்ணல் நபி [ஸல்] அவர்கள், ஒரு தோழரிடம் ஆறு உபதேசங்கள் செய்கிறார்கள். இந்த ஆறு விடயங்களும் எல்லோருக்கும் பொருந்தும். வாழ்க்கைக்கு தேவையான உபதேசங்கல்தான்!
''மஆதே ! ஒரு பாசமிகு நேசன் சொல்வதைப் போல் சொல்கிறேன்! வெகு கவனமாக அவற்றை நீ செவியேற்று செயல்படுத்து!

எப்போதும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்!
எப்போதும் நல்ல செயல்களையே செய்!
எப்போதும் மிக மென்மையாகவே பேசு!
எப்போதும் முழு உண்மையையே உரை!
எப்போதும் அமானிதத்தை பாதுகாத்திடு!
எப்போதும் எளிய வழியையே கடைபிடி!''

மேற்கண்ட அந்த ஆறு அரும்பண்புகளும்  இன்றைக்கு நம் ஒவ்வொருவருக்கும் அதிஅவசியமான  ஒன்றாக இருக்கிறதன்றோ  ! குறிப்பாக பெண்களாகிய நீங்கள் அவை கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் ஒரு பெண் சீர் பெறும்போது ஒரு முழுக் குடும்பமே சீர் பெறுகிறது. ஒரு பெண் சீரழியும்போது மொத்த குடும்பமே சீரழிந்து போய்  விடுகிறதல்லவா . அதனால்தான் சொல்கிறோம் ஒரு பெண்ணுக்கு இவ்வாறு குணங்களும் அவசியம் என்று.

இஸ்லாம் கூறுகிறது.. ஒரு பெண்ணுக்கு குரலுக்கு பர்தா! பார்வைக்கு பர்தா!
அல்லாஹ்  கூறுகின்றான்..
''[அந்நியருடன் பேசும்போது] பேச்சில் நீங்கள் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவனுடைய இதயத்தில் [பாவ] நோய் உள்ளதோ அவன் தவறான பாவங்களில் ஆசை கொள்வான்.''
அல்குர் ஆன் .. 33..32]

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''பார்ப்பவர்கள் மீதும் , பார்க்கப்படுபவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் .''- நூல் பைகீ
மேற்கண்ட ஹதீஸில் அந்நிய பெண்களை பார்க்கும் ஆண்களையும், பிறர் பார்க்கும் விதத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு  வெளியே வரும் பெண்களையும்  நபி [ஸல்] அவர்கள் சபித்துள்ளார்கள். பெண்களை பார்ப்பது எவ்வாறு குற்றமோ, அதேபோல் பெண்கள் , ஆண்களைப் பார்ப்பதும் குற்றமாகும்.

பெண்கள் எப்படி நடந்து கொள்வது , எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதைப் பற்றி பார்த்தோம்.
இன்ஷாஅல்லாஹ்  இனி நாம் பார்ப்பது.. பெண்கள் தங்களின் கணவன்மார்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்  .....!

பெரும்பாலும் குடும்பங்களில் ஆண்களை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக தான் பார்க்கிறார்கள். ஒரு கணவன் தன்  குடும்பத்துக்கு நல்லவிதமாக பணம் சம்பாதிக்கும் காலம்வரை , மனைவி  , கணவரை நல்லவிதமாக கவனித்து வருகிறாள் . பிறகு அவர் வீட்டோடு வந்த பிறகு, ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை மனைவி. [நடக்கும் உண்மையான நிகழ்வுகள் , கற்பனை அல்ல]  மனைவிக்கு எடுப்புடி வேலை செய்யும் வேலைக்காரனைப் போல் நடத்தப்படுகிறார். கணவன் காலம் முழுதும் மனைவிக்கு நிறைய செய்திருப்பார். ஆனால் , மனைவிக்கோ எந்த திருப்தியும் இருக்காது. நன்றி  கெட்டவளாக தான் நடந்துக் கொள்வாள். கணவரை உதாசிணப்படுத்துவது , இழிவாக கருதுவது, மற்றவர்களிடம் தவறாக குறை கூறுவது, எல்லாத்துக்கும் குற்றம் கண்டு பிடிப்பது  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...  மனம் உடைந்து  போய்  கணவர் . நரக வாழ்க்கை வாழ்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் புலம்பி கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி ஒருவேளை   அல்லாஹ்வின் நாட்டப்படி  அவர் இறந்துவிட்டால். இந்த பெண்ணின் நிலை என்ன ஆகும்? கணவனுக்கு செய்த தீங்குகளுக்காக இவள் குற்றவாளியாகி விடுவாள் என்பதை ஏன்  பெண்கள் புரிந்துக் கொள்வதில்லை! கணவன் உயிருடன் இருக்கும்போது மன்னிப்பு கேட்டால் ஒழிய, அவன் மன்னித்து விட்டால், அல்லாஹ்  அவளை மன்னித்து விடுவான். கணவன் மன்னிக்காதவரை , அல்லாஹ்  மன்னிக்க மாட்டான் என்பதை ஏன்  பெண்கள் விளங்கிக் கொள்ளவில்லை! மனைவிக்கு மண்ணறை  வேதனை காத்திருக்கும்  . அல்லாஹ்வின் நல்லடியார்களே! நிறைய சிந்தியுங்கள்! அல்லாஹ்  எல்லா பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது என்னுடைய பேராசை!  சில பெண்கள் இப்படி செய்கிறார்கள் என்பதை சுருங்கக் கூறியிருக்கிறேன். இறுதியாக ஒரு ஹதீஸ் சொல்லி முடிக்கிறேன்...

* ஈமான் கொண்ட மனிதனுக்கு அல்லாஹ்வின் பயத்திற்குப் பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுபடுவாள். அவன் அவளை பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன்  அவளை விட்டு வெளியேறினால் தன்  கற்பையும், கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள்.
நூல்.. இப்னு மாஜா.]

பெண்களே! டிவிக்கு முன்னால்  சீரியலைப் பார்த்துக் கொண்டு அழுவதை நிறுத்திவிட்டு. முஸ்ஸல் லாவில் தொழுது அல்லாஹ்விடம் அழுது  பாவமன்னிப்புக் கோருங்கள்! அல்லாஹ்  மன்னிப்பவன், கருணையாளவன் .
அல்லாஹ்க்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்பட்டு, கணவருக்கும் கட்டுப்பட்டு. ஒரு நல்ல சாலிஹான பெண்ணாக மரணிக்க  வேண்டும்! கணவன் திருப்தியில் நீங்கள் மரணிக்க வேண்டும் என்பதே  எல்லோரின் விருப்பம். எனக்காக நீங்கள் துஆச் செய்யுங்கள் ! அல்லாஹ்  உங்களுக்கும் எங்களுக்கும் அருள் செய்வானாக!!! ஆமீன்            !!!!!!!
அஸ்ஸலாமு அழைக்கும் [ வரஹ் ]
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.
ஒரு அன்பான பணிவான வேண்டுகோள் இதில் ஏதாவது தவறுகள் கண்டீர்கள் என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள். இன்ஷாஅல்லாஹ்  அடுத்த முறை நான் திருத்திக் கொள்கிறேன்.  

No comments:

Post a Comment

Best comment is welcomed !