வாழ்க்கையை அனுபவியுங்கள்! சடைந்து விடாதீர்கள்!
என் அன்பான சகோதர சகோதரிகளே! அல்லாஹு தஆலா இந்த உலக வாழ்க்கையை நாம் நல்ல முறையில் வாழவேண்டுமென விரும்புகிறான். அல்லாஹ் அனுமதித்த ஹலாலானவற்றை நாம் அனுபவிக்க வேண்டுமென்று அல்லாஹ் விரும்புகிறான்.
அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் இப்படி கேட்கிறான்:
(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்திய அலங்காரத்தையும், உணவில் நல்லவற்றையும் யார் தடைசெய்தார்?" "அது இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (ஆகுமானது) ஆகும். மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டும் அது) பிரத்தியேகமாக இருக்கும்" என்று கூறுவீராக. புரிந்து கொள்கிற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
நமக்காகவே இந்த உலகத்தில் பல அழகிய அருட்கொடைகளை அவன் படைத்திருக்கிறான். பல நல்ல உணவுகளை உருவாக்கி இருக்கிறான். நல்ல ஆடைகளை அவன் படைத்திருக்கிறான். இந்த பூமியில் உள்ள எண்ணற்ற அருட்கொடைகளை நாம் அவற்றை அனுபவித்து அவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அவன் விரும்புகிறான்.
73. அல்குர்ஆன் 7:32.
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
மக்களே! பூமியிலுள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதையே உண்ணுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.4
நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்து உண்ணுங்கள்! இன்னும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள். அவனையே (நீங்கள்) வணங்குபவர்களாக இருந்தால்.75
அவன்தான் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்.
மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்."
அல்குர்ஆனின் பல நூறு வசனங்களில் அல்லாஹு தஆலா நமக்கு புரிந்த அருள்களை பெருமையோடு நமக்கு சொல்லிக் காட்டுகிறான். நாம் அவற்றை அனுபவித்து அவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்று அவன் விரும்புகிறான். நன்றி செலுத்தினால் அவனது அருளை அவன் நமக்கு அதிகப்படுத்தி கொடுப்பான் என்று நமக்கு வாக்கும் அளிக்கிறான்.
மேலும், "நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக (என் அருளை) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்; இன்னும், நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என் தண்டனை (உங்களுக்கு) கடுமையானதாக இருக்கும்" என்று உங்கள் இறைவன்
74. அல்குர்ஆன் 2: 168.
75. ஆம் 2: 172.
76. அல்குர்ஆன் 2:29.
77. அல்குர்ஆன் 16: 18.
ஆன்மீகவாதி மட்டுமல்ல. உண்மையான ஆன்மீகவாதி குடும்ப வாழ்க்கையை வாழ்கிறவர்தான் என்பதை நிரூபித்தார்கள். இரவெல்லாம் வணங்கினாலும் மனைவியை மறக்கவில்லை. அவளுக்கு கொடுக்க வேண்டிய சுகத்தை கொடுக்க மறக்கவில்லை. அவளோடு பேசுவதை, சிரித்து விளையாடுவதை மறக்கவில்லை. வரட்டு ஆன்மீகம் பேசி, பக்தியின் போலி வேஷம் போட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றவில்லை. சிறந்த கணவனாக, சிறந்த தந்தையாக. சிறந்த உறவினராக, சிறந்த அண்டை வீட்டாராக, சிறந்த நண்பராக வாழ்ந்து காட்டினார்கள்.
தத்துவங்களை சொல்வதும் எழுதுவதும் எளிது. அதை நடத்திக் காட்ட வேண்டும். பின்பற்றி வாழ்க்கையில் செயல்படுத்தி காட்ட வேண்டும்.
வாழ்க்கையின் ஒப்பற்ற நிகரற்ற தத்துவங்களை சொன்னது மட்டுமல்ல, செய்து காட்டினார்கள் நமது நபி அவர்கள்.
நமது கட்டுரையின் இறுதி பகுதி என்பதால் பல செய்திகளை குறிப்புகளாக கூறி இதை நிறைவு செய்ய ஆசைப்படுகிறோம். அல்லாஹ் அருள் புரினாவாக! ஆமீன்.
1. நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
2. உங்கள் உடலை அழகாக வசீகரமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.
3. நல்ல ஆடைகளை, சுத்தமான ஆடைகளை, நடுத்தரமான நல்ல ஆடைகளை அணிந்து மகிழுங்கள்.
4. ஆண்கள் வெளியில் வீசும்படியான மனைவிக்கு பிடித்த
நல்ல நறுமணத்தை பயன்படுத்துங்கள். உங்களை எப்போதும் மணம் கமழும்படி வைத்துக் கொள்ளுங்கள்!
5. பெண்கள் உங்கள் நறுமணத்தை வீட்டுக்குள் கணவனுக்காக பூசிக் கொள்ளுங்கள்.
வணக்க வழிபாடுகளை மறந்து விடக்கூடாது. அதைத்தான் அல்லாஹ் நமக்கு தடை செய்கிறான்.
(இறை இல்லங்களில் தொழுகின்ற ஆண்கள் வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் (இன்னும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மையாக செய்வதை விட்டும்) அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும். (அவர்கள் அப்படி அமல் செய்தது ஏனெனில்,) அவர்கள் செய்த மிக அழகிய நன்மைகளுக்கு அல்லாஹ் கூலி வழங்குவதற்காகவும் தனது அருளிலிருந்து அவர்களுக்கு மேலும் அதிகப்படுத்துவதற்காகவும் ஆகும். அல்லாஹ் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.
உலக மோகத்தில் மூழ்கி அல்லாஹ்வை மறப்பதுதான் கூடாது. செல்வத்தை சம்பாதிப்பதில் ஈடுபட்டு வணக்க வழிபாடுகளை விடுவது அல்லது அதில் அலட்சியம் செய்வது, அதை மறந்திருப்பது. இவைதான் கூடாது.
நமது மார்க்கத்தில் துறவரம் அறவே இல்லை. வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறேன் என்று குடும்பத்தை விட்டு விலகுவதோ, அல்லது திருமண வாழ்க்கை வேண்டாமென்று ஒதுங்குவதோ, தாம்பத்தியத்தை வெறுத்து, அது வேண்டாம் என்று புறக்கணித்துவிட்டு நான் வணக்க வழிபாட்டில் ஈடுபட போகிறேன் என்று கூறுவதோ நமது மார்க்கத்தில் கிஞ்சிற்றும் அனுமதி இல்லை.
இது குறித்து பல வசனங்களும் பல நபிமொழிகளும் வந்துள்ளன. உஸ்மான் இப்னு மள்வூனுக்கு நபி அவர்கள் தபத்துலை மறுத்தார்கள். அவருக்கு நபியவர்கள் அதற்கு அனுமதி கொடுத்திருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம்.82 "தபத்துல்" என்றால் திருமணம் முடிக்காமல் வணக்க வழிபாட்டுக்காக ஒதுங்கிவிடுவது.
மூன்று நபர்கள் நபி அவர்களின் மனைவிமார்களிடம் நபியவர்களின் வணக்கவழிபாட்டை விசாரிக்க வந்தார்கள். அவர்களுக்கு சொல்லப்பட்ட வணக்க வழிபாடுகளை மிக குறைவாக அவர்கள் கருதினார்கள். நபி அவர்களிருந்து நாங்கள் எங்கே? அவர்களுக்கோ அவர்களின் முந்திய பிந்திய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டன என்று கூறினார்கள். அவர்களில் ஒருவர் கூறினார்: நான் இனிமேல் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருப்பேன். மற்றொருவர் கூறினார்: நான் காலமெல்லாம் நோன்பு வைப்பேன், நோன்பை விட மாட்டேன். இன்னொருவர் கூறினார்: நான் பெண்களை விட்டு விலகியே இருப்பேன். ஒருபோதும் திருமணம் முடிக்க மாட்டேன். ஆக, அவர்களிடம் ரஸூலுல்லாஹ் வந்தார்கள். நீங்கள்தான் இப்படி இப்படி கூறினீர்களா? என்று கேட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் உங்களில் அல்லாஹ்வை அதிகம் பயப்படுகிறேன். உங்களில் அதிகம் அல்லாஹ்வை அஞ்சுகிறேன். என்றாலும் நான் நோன்பு வைக்கிறேன். நோன்பை விடவும் செய்கிறேன். தொழுகிறேன். தூங்குகிறேன். திருமணம் முடிக்கிறேன். ஆக, யார் என் வழிமுறையை விட்டு விலகுவாரோ அவர் என்னை சேர்ந்தவர் இல்லை.63
ரஸூலுல்லாஹ்வே! ஆண்மை நீக்கம் செய்ய எனக்கு அனுமதி கொடுங்கள் என்று உஸ்மான் இப்னு மள்வூன் கூறினார். அதற்கு நபி அவர்கள் கூறினார்கள்: துறவறத்திற்கு பதிலாக
அறிவிப்பாளர்: ஸஃத் இப்னு அபீ வக்காஸ் . நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 5073.
83. அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் நூல்: ஸஹீஹுல் புகாரி : 5063.
இணைவைத்தல் இல்லாத, இலகுவான மார்க்கத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிறான்.
நாங்கள் ரஸூலுல்லாஹ் அவர்களுடன் போருக்கு செல்வோம். எங்களுக்கு எதுவும் சொந்தமாக இருக்கவில்லை. ஆகவே, நாங்கள் கேட்டோம். நாங்கள் ஆன்மை நீக்கம் செய்துகொள்ளட்டுமா? ஆக, நபியவர்கள் எங்களை அதிலிருந்து தடுத்தார்கள். 35
இன்னும் இதுபோன்ற பல வசனங்களும் நபிமொழிகளும் உள்ளன. நமது மார்க்கம் நடுநிலையானது. அதில் முரண்பாடுகள் இருக்காது. அதில் எல்லை மீறுதல் இருக்காது, அதில் இயற்கைக்கு மாற்றமான, இயற்கைக்கு ஒத்துவராத, இயற்கையோடு முரண்படுகிற எந்த சட்டமும் இருக்காது. அல்லாஹ்தான் இயற்கையை படைத்தான். அவன் அனைத்தையும் நன்கறிந்தவன். அவன் அனுப்பிய தூதர்களை இயற்கை விதிகளுக்கு ஏற்ப மனிதன் வாழவேண்டிய ஒழுக்கங்களையும் வழிமுறைகளையும் கற்பித்து தர அனுப்பினான். இந்த உலக வாழ்க்கைக்கு பின்னர் இருக்கிற மறுமை வாழ்க்கையை நினைவில் வைத்து, அங்கு சொர்க்கத்திற்காக இங்கு நல்லமல்களை அதிகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தையும் இலட்சியத்தையும் மறந்துவிடாமல், அதே நேரத்தில் உலக இன்பங்களில் ஹலால் ஆகுமானது. ஹராம் கூடாதது என்று இரு வகைகளை பிரித்து, ஹலாலை எப்படி அனுபவித்து, இந்த உலக வாழ்க்கையை இன்பமாக மகிழ்ச்சியாக வாழ்வது என்ற கல்வியை நபிமார்கள் போதித்து சென்றார்கள்.
நமக்கு இறுதி தூதராக அனுப்பப்பட்ட முஹம்மத் அவர்கள் நமக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.
அறிவிப்பாளர்: ஸயீத் இப்னு அல்ஆஸ் நூல்: முஃஜம் கபீர் - தப்ரானி 5519.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது நூல்: ஸஹீஹுல் புகாரி
6 : 5075.
ஆன்மீகவாதி மட்டுமல்ல. உண்மையான ஆன்மீகவாதி குடும்ப வாழ்க்கையை வாழ்கிறவர்தான் என்பதை நிரூபித்தார்கள். இரவெல்லாம் வணங்கினாலும் மனைவியை மறக்கவில்லை. அவளுக்கு கொடுக்க வேண்டிய சுகத்தை கொடுக்க மறக்கவில்லை. அவளோடு பேசுவதை, சிரித்து விளையாடுவதை மறக்கவில்லை. வரட்டு ஆன்மீகம் பேசி, பக்தியின் போலி வேஷம் போட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றவில்லை. சிறந்த கணவனாக, சிறந்த தந்தையாக. சிறந்த உறவினராக, சிறந்த அண்டை வீட்டாராக, சிறந்த நண்பராக வாழ்ந்து காட்டினார்கள்.
தத்துவங்களை சொல்வதும் எழுதுவதும் எளிது. அதை நடத்திக் காட்ட வேண்டும். பின்பற்றி வாழ்க்கையில் செயல்படுத்தி காட்ட வேண்டும்.
வாழ்க்கையின் ஒப்பற்ற நிகரற்ற தத்துவங்களை சொன்னது மட்டுமல்ல, செய்து காட்டினார்கள் நமது நபி அவர்கள்.
நமது கட்டுரையின் இறுதி பகுதி என்பதால் பல செய்திகளை குறிப்புகளாக கூறி இதை நிறைவு செய்ய ஆசைப்படுகிறோம். அல்லாஹ் அருள் புரினாவாக! ஆமீன்.
1. நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
2. உங்கள் உடலை அழகாக வசீகரமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.
3. நல்ல ஆடைகளை, சுத்தமான ஆடைகளை, நடுத்தரமான நல்ல ஆடைகளை அணிந்து மகிழுங்கள்.
4. ஆண்கள் வெளியில் வீசும்படியான மனைவிக்கு பிடித்த
நல்ல நறுமணத்தை பயன்படுத்துங்கள். உங்களை எப்போதும் மணம் கமழும்படி வைத்துக் கொள்ளுங்கள்!
5. பெண்கள் உங்கள் நறுமணத்தை வீட்டுக்குள் கணவனுக்காக பூசிக் கொள்ளுங்கள்.
6. வெளியில் செல்லும்போது நறுமணம் வீசாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
7. ஆண்கள், எப்போதும் வேலை, வியாபாரம், தொழில், வெளி
தொடர்பு என அவற்றிலேயே மூழ்கி குடும்பத்தை மறந்து விடாதீர்கள்.
8. எல்லாவற்றுக்கும் நேரத்தை காலத்தை குறித்துக் கொள்ளுங்கள். வேலைக்கும் வாழ்வாதாரத்திற்கும் தேவையான நேரத்தை சரியாக கொடுங்கள். அதே நேரத்தில் உங்கள் மனைவிக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய நேரத்தை தவறவிட்டு விடாதீர்கள். அவள் உங்களை நம்பிவந்த, நீங்கள்தான் அவளுக்கு ஆதரவும் பாதுகாப்பும் என்று அண்டிவந்த ஓர் உயிர் என்பதை மறந்து விடாதீர்கள்.
9. குடும்ப வேலை, சமையல் வேலை, வீட்டை கவனித்தல் என பல சுமைகள் பெண்களுக்கு இருந்தாலும் தன்னை அலங்கரித்து சுத்தமாக அழகாக நறுமணமாக வைத்துக்கொள்ள வேண்டும். கணவன் பார்க்கும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்படி தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும்.
10. அப்படித்தான் ஆணும் மார்க்க எல்லைக்கு உட்பட்டு தனது ஆடை விஷயத்தில் தனது மனைவிக்கு பிடித்தமான ஆடையை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். இருவரில் ஒவ்வொருவரும் ஹலாலான வழிகளில் மற்றவரை கவர்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்த வேண்டும்.
11. இருவரும் ஒன்றாக வணக்க வழிபாடுகள் செய்ய வேண்டும். குர்ஆன் ஓதுவது. திக்ரு செய்வது, மார்க்க நூல்கள் படிப்பது. மார்க்க கல்வி வகுப்புகளுக்கு செல்வது. தஃவா பயணங்கள் செல்வது. ஹஜ், உம்ரா பயணங்கள் செல்வது, உறவுகளை சந்திக்க செல்வது, நோயாளிகளை நலம் விசாரிக்க செல்வது. இப்படி நன்மைகளில் ஒன்றாக கூட்டாக பங்கெடுத்து கொள்ள வேண்டும்.
12. இவைபோக, அல்லாஹ் வாழ்வாதாரத்தில் வசதி கொடுத்து இருந்தால், மார்க்க எல்லைகளை அனுசரித்தவாறு, பொதுவான. பாதுகாப்பான, மார்க்கத்திற்கு முரணில்லாத சுற்றுலா தலங்களுக்கு இருவரும் ஒன்றாக பயணம் செய்து வரலாம். ஆனால், அதற்காக மிக ஆடம்பரமாக செலவுகள் செய்வதோ. வீண்விரயம் செய்வதோ, பெருமைக்காக செல்வதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய காரியமாகும்.
13. உங்கள் மனைவியிடம் அன்பாக பேச பழகிக் கொள்ளுங்கள். உங்கள் அக்கறையை வெளிப்படுத்த மறந்து விடாதீர்கள். உங்கள் பாசத்தை காட்ட தயங்காதீர்கள். அவளோடு நெருக்கத்தை குறைத்து விடாதீர்கள். வெளியில் சென்றால், காலை, மாலை, மதியம், இரவு என பல நேரங்களில் அவளுக்கு போன் செய்து அவளை நலம் விசாரியுங்கள். அவளது உடல் நிலையைப் பற்றி தொடர்ந்து கவனமாக இருங்கள். அவளை பசியாக பட்டினியாக பங்கறையாக வைத்திருக்காதீரகள், மனைவிக்கு தேவையான ஓய்வை, அமைதியை கொடுத்து விடுங்கள். அவளை ஒரு மிஷின் மாதிரி 24 மணி நேரமும் வேலை வாங்காதீர்கள். அவளின் உடல்வாகு, உடல் ஆரோக்கியம், உடல் வலிமை என பல விஷயங்களை கவனத்தில் வைத்து அவளிடமிருந்து உங்களுக்கான பணிவிடையை எதிர்பாருங்கள்.
14. மனைவியும் தனது கணவனோடு அன்னியோன்னியமாக இருக்க வேண்டும். சிரித்து பேசி, அன்பாக உபசரித்து, கணவனின் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும். கணவனை விட்டுக்கொடுக்க கூடாது. கணவனாகிறவன். படிப்பு, கல்வி தகுதி, உடல் அழகு, பொருளாதாரம், குடும்ப கௌரவம் என பலவற்றில் தன்னை விட குறைந்திருந்தாலும் அவனுடைய கணவன் என்ற தகுதியே போதுமானது, மனைவி அவனுக்கு எல்லா விதமான பணிவிடைகளைச் செய்வதற்கும் பணிவாக நடப்பதற்கும். ஆனால், இதை பல பெண்கள் புரிந்து கொள்ளவில்லை.
15. இருவரும் தங்களுக்கு இடையில் வருகிற மனக்கசப்புகளை நீண்ட நேரம் நீடிக்க விட்டுவிடக் கூடாது.
16. ஒருவர் மற்றவரை குறைத்து பேசுவதையும். குத்திப் பேசுவதையும், ஒருவர் மற்றவர் மீது வீண் பழி சுமத்துவதையும், ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் காரணம் கேட்பதோ. தப்பான அர்த்தத்தை கொடுப்பதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
17. இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த நேரம் ஒதுக்க வேண்டும். அப்போது ஒருவர் மற்றவருக்கு உணவூட்டி விட வேண்டும். முடிந்தால் இருவரும் ஒரே தட்டில் உணவு உண்ணவேண்டும்.
18. பிறருக்கு முன்னால் அன்பாகவும் தனிமையில் வெறுப்பாகவும் இருப்பது நயவஞ்சகமாகும். உங்கள் அன்பையும் பாசத்தையும் நல்ல உறவுகளையும் வெளி மக்கள் பார்க்கும்படி பகட்டாக காட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் அன்பையும் பாசத்தையும் மறைத்து வையுங்கள்.
19. பிறர் பார்வைக்கு முன்னால் நெருக்கமாக பழகாதீர்கள். உங்கள் மனைவியை பிறருக்கு முன்னால் திட்டவும் செய்யாதீர்கள், இகழவும் செய்யாதீர்கள். அதுபோன்று புகழவும் செய்யாதீர்கள். அப்படித்தான் மனைவிமார்கள் தங்கள் கணவனையும் பிறர் முன்னால் புகழவும் செய்ய வேண்டாம். இகழவும் செய்ய வேண்டாம். உங்கள் வாழ்க்கை துணையை கண்டிப்பதாக இருந்தால் தனிமையில் கண்டியுங்கள். தனிமையில் குறைகளை எடுத்துச் சொல்லுங்கள்.
20. உங்கள் அன்பையும், பாசத்தையும், குடும்ப நெருக்கத்தையும், நல்ல குணத்தையும் நடிப்பாக ஆக்கி விடாதீர்கள். காட்சி பொருளாக ஆக்கி விடாதீர்கள்.
21. வாழ்க்கையில் அவ்வப்போது நிகழ்கிற பிரச்சனைகளை பெரிது படுத்தாதீர்கள்.
22. ஆண் தன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றால், அவன் தன் மகளிடம் அவளின் கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்புவானோ அப்படி தனது மனைவியோடு நடந்து கொள்ளட்டும். அதுபோன்று பெண் தனது கணவனோடு எப்படி நடக்க வேண்டுமென்றால், தனது மகனோடு அவனின் மனைவி எப்படி நடக்க வேண்டுமென்று அவள் விரும்புவாளோ அப்படி தனது கணவனோடு அவள் நடந்து கொள்ளட்டும்.
23. கணவன் மனைவியை கை நீட்டி அடிப்பதோ, அல்லது பிற பொருள்கள் மூலம் அடிப்பதோ அறவே கூடாது. ஒரு சின்ன மிஸ்வாக் குச்சியை கொண்டு மட்டும் அடிக்கலாம். அதுவும் காயம் ஏற்படக் கூடாது. தழும்புகள் வரக் கூடாது, உள் காயம் ஏற்படக் கூடாது.
24. மனைவி, தனது கணவனை ஒருபோதும் அடிக்கவே கூடாது. அவனை அவமரியாதை செய்து பேசக் கூடாது. கண்ணியக் குறைவான சொற்களைக் கொண்டு அழைக்கக் கூடாது.
25. கணவனின் வீட்டார், அல்லது மனைவியின் வீட்டார் வீட்டுக்கு வந்தால் இருவரும் அவர்களை மிக கண்ணியமாக உபசரித்து, மன மகிழ்வோடு அவர்களை தங்க வைத்து, நல்ல முறையில் உணவளித்து, முடிந்தளவு அன்பளிப்பு செய்து அவர்களை வழி அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு முன் சச்சரவு செய்வதோ, வாக்குவாதம் செய்வதோ கூடாது. இன்னும் வந்த விருந்தாளிகளை அவமானப்படுத்தும்படியான செயலை செய்வதோ, அவர்களால் நெருக்கடிக்கு உள்ளாகுவதோ கூடாது. எது உங்களிடம் இருக்குமோ அதில் நல்லதைக் கொண்டு, சிறந்ததைக் கொண்டு அவர்களை உபசரியுங்கள். அவர்களுக்காக உங்களை கடனாளிகளாகவும் ஆக்கத் தேவை இல்லை.
முற்றும்.அல்ஹம்துலில்லாஹ்
Comments
Post a Comment
Best comment is welcomed !