மஹ்ரம் இன்றி பயணம் செய்யக்கூடாது
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அறிவிப்பதாவது, لا تُسَافِرِ الْمَرْأَةُ إِلا مَعَ ذِي مَحْرَمٍ ، وَلَا يَدْخُلُ عَلَيْأَلٌَّا وَمَعَهَا مَحْرَمٌ
'(திருமணத்தடையுள்ள) மஹ்ரமான ஆண்கள் துணையின்றி ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! (திருமணத்தடையுள்ள) மஹ்ரமான ஆண் கள் துணையில்லாத நிலையில் ஒரு பெண்ணிடம் போகக்கூடாது' என அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன் னார்கள்.
'உணவருந்துகையில் அவர்களிடம் நாங்கள் போகிறோமே?' என்றேன்.
'எப்போது போகவேண்டுமோ அப்போது செல் லுங்கள். அல்லாஹ் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்பதை அறிந்து கொள் ளுங்கள்' என்றார்கள் அண்ணலார். (ஷுஃபுல் ஈமான், பைஹகீ)
இதே கருத்துள்ள நபிமொழி ஒன்றை அப்துல் லாஹ் இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்கள்.
'(திருமணத்தடையுள்ள) மஹ்ரமான ஆண்கள் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! (திருமணத்தடையுள்ள) மஹ்ரமான ஆண் இல்லாத நிலையில் ஒரு பெண்ணிடம் போகக் கூடாது' என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
'நான் ஜிஹாதியப்படையில் என் பெயரை பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்கு போக இருக்கிறாள். நான் என்ன செய்வது?' என்றார் அதைக்கேட்ட ஒருவர்.
'உங்கள் பெயரை விலக்கிக்கொண்டு மனைவி யோடு ஹஜ்ஜுக்கு செல்லங்கள்' என்றார்கள் அண்ணலார். (சஹீஹ் புகாரி)
மஹ்ரமான துணையின்றி ஒரு பெண் மூன்று நாள்களுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என தடைவிதிக்கும் நபிமொழி ஒன்று அஹ்மத், புகாரி, முஸ்லிம், அபூ தாவுது, தயாலிஸி ஆகிய நூற்க ளில் உள்ளது.
8. பெண்கள் வருகைக்கென பள்ளியில் தனி வாயில்
மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் ஒரு வழியை பெண்களுக்கென அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம அவர்கள் ஒதுக்கி னார்கள்.
لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ
இந்த கதவின் வழியே பெண்கள் மட்டும் வந்து செல்லட்டும் என அறிவித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் இறப்பெய்யும் வரை அவ் வழியே செல்லாமல் தவிர்த்தார்கள் என நாஃபிஃ அறிவிக்கிறார். (அபூதாவுது)
பெண்களுக்கென பள்ளிவாசலில முறையான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கவேண்டும் என்ப தையே இந்நபிமொழி உணர்த்துகின்றது. தேவை யில்லாமல் பெண்கள் வெளியே செல்லக்கூடாது; அலங்காரம் செய்தவாறு ஒருக்காலும் வெளியே செல்லக்கூடாது; அப்படி வெளியே செல்வதாக இருந்தால் அது பள்ளிவாசலாகத்தான் இருக்க வேண்டும்; அதுவும் பள்ளிவாசலில் பெண்கள் வந்து செல்வதற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் ஷரீஅத் வலியுறுத்துகின்றது.
மேலே நாம் பள்ளிவாசலுக்கு பெண்கள் வரா மல் இருப்பதே சிறந்தது என்பதை கண்டு வந்தோம். இங்கு பெண்களுக்கென தனிவாயில் அமைக்குமாறு அண்ணலார் கூறியுள்ளதைக் காண்கிறோம். இரண்டையும் தெளிவாக உணரா மல் இஸ்லாமிய உம்மத் தத்தளித்துக் கொண்டி ருப்பதை இன்று கண்கூடாகக் காண்கிறோம்.
முதலாவது, பெண்கள் தேவையின்றி இல்லங் களை விட்டு வெளியேறக் கூடாது. ஆனால், இன்றோ முஸ்லிம் பெண்கள் எல்லா இடங்களி லும் காணப் படுகிறார்கள். அங்காடிகள், கடைத் தெருக்கள், வணிகவளாகங்கள், காய்கறிச் சந்தை கள், நகைக்கடைவீதிகள், ஜவுளிக்கடைகள், உணவு விடுதிகள் என பல இடங்களிலும் அவர்கள் உலா வருகிறார்கள்.
இரண்டாவது, அப்படி வெளியே வருவதாக இருந்தால் பள்ளிக்குத்தான் வரவேண்டும். ஆனால், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்பதால் நாம் பெண்களை பள்ளிக் குள் அனுமதிப்பதில்லை. பள்ளிக்கு வரும் வாய்ப்பு பெண்களுக்கு இல்லை என்பதால் சராசரி அடிப்படை இஸ்லாமியக் கல்விகூட பெண்களிடம் இல்லை. அடிப்படைக் கல்வி இல் லாததால் பல்வேறு தவறுகளை செய்கிறார்கள், பல்வேறு ஆபத்தான சிக்கல்களில் மாட்டிக் கொள் கிறார்கள்.
முஸ்லிம் பெண்களை பள்ளிவாசலுக்குள் அனு மதி அளிக்க மறுத்துவிட்டு மறுபுறம் முஸ்லிமல் லாத பெண்களை அனுமதிக்கிறோம். பல பள்ளிவாசல்களிலும் மக்ரிப் நேரத்திலும் அசர் நேரத்தி லும் முஸ்லிமல்லாத பெண்கள் ஓதுவதற்காக நிற் பதை சர்வசாதாரணமாக பார்க்கலாம். ஹிஜாப் அல்லாத ஆடைகளில் அவர்கள் வந்துசெல்வது நிச்சயமாக ஆண்களின் பார்வையை ஈர்க்கவே செய்கின்றது. ஆயினும் அதனை நாம் கண்டு கொள்ளமல் அலட்சியப்படுத்துகிறோம்.
மூன்றாவதாக, பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்துசெல்ல போதிய முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் வந்து போக தனிவழி இருக்கவேண்டும்; ஆண்களுக்கு பின்னால் குழந்தைகளுக்குப் பின்னால் அதாவது ஆண்களின் பார்வை படாத இடத்தில் அவர் களுடைய ஸஃப்புகள் அமையவேண்டும்; தொழுகை முடிந்ததும் உடனடியாக பெண்கள் எழுந்து சென்றுவிடவேண்டும், அதுவரை ஆண் கள் அமைதியாக தத்தமது இடங்களில் அமர்ந் திருக்க வேண்டும்; ஆண்களும் பெண்களும் எவ் வகையிலும் கலந்துவிடக்கூடாது; இமாம் தவறி ழைத்தால் 'ஸப்ஹானல்லாஹ்' என சொல்லி அவ ருக்கு உணர்த்த வேண்டும், ஆனால், பெண்கள் உணர்த்த எண்ணினால் தம் குரலெழுப்பி இதை உணர்த்தக்கூடாது. மாறாக, கைதட்டி உணர்த்த வேண்டும்; பள்ளிவாசலுக்கு வரும் பெண்கள் முறையான ஹிஜாபோடு ஆயிஷா அவர்கள் சொல்வதைப்போல 'காக்கைகள்' தலையில் உட்கார்ந்திருப்பதைப் போல வரவேண்டும்; நறுமணம் பூசாமல் (அதாவது வழியிலோ பள்ளி யிலோ ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் எந்த வொரு அம்சமும் இல்லாமல்) வரவேண்டும்.
நான்காவதாக, கல்விக்கூடங்கள், பாடசாலை கள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் போன்ற வற்றிற்கு பெண்கள் செல்வதை தவிர்க்கமுடியாது என எண்ணத் தொடங்கிவிட்டோம். ஆண்கள் இல்லாத 'மகளிர் மட்டும்' நிலையங்களாக இவற்றை மாற்றமுடியாதா? என்னும் சிந்த னையே நமக்கு எழுவதில்லை. ஆனால், பள்ளி வாசலில் மட்டும் பெண்களை அனுமதிக்க மறுக் கிறோம். இஸ்லாமியக் கல்வியை கற்பதற்கான வேறு ஏற்பாடுகள் எதனையாவது செய்திருக்கி றோமா என்றால் அதுவும் இல்லை. இஸ்லாமை கற்பிக்க எங்களுக்கும் ஒரு நாளை ஏற்பாடு செய் யுங்கள் என ஸஹாபியப் பெண்கள் அண்ணலா ரிடம் கோரிக்கை வைத்து கேட்டுப் பெற்றிருக் கிறார்கள். இளம்பெண்களுக்கு இஸ்லாம் தெரியா ததன் விளைவுகளை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.
Comments
Post a Comment
Best comment is welcomed !