கணவரிடம் பிற பெண்களைப் பற்றி வர்ணிக்கலாகாது
'எந்தப் பெண்ணும் இன்னொரு பெண்ணை வர் ணிக்கக் கூடாது. தன் கணவன் அவளை நேரடி யாகப் பார்ப்பது போல அவளை வர்ணித்து விவ ரிக்கக் கூடாது' என அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தடை விதித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் இதனை அறிவிக்கிறார்கள். (புகாரி)
எனவேதான், காஃபிரான பெண்களை முஸ்லிம் பெண்கள் சந்திக்கவோ தோழமை கொள்ளவோ கூடாது என ஷரீஅத் வலியுறுத்துகின்றது. காரணம் அவர்கள் முஸ்லிம் பெண்களைப் பற்றி தமது கணவர்களிடம் ஏகத்துக்கும் வர்ணித்துக்கூற வாய்ப்புள்ளது.
அதுபோன்றே, தீய (ஃபாஸிக்) பெண்களிடமும் உறவு வைத்திருக்கக் கூடாது. அவர்கள் அந்நிய ஆண்களிடம் இப்பெண்களைப் பற்றி வர்ணிக்க வும் இவர்களுடைய அந்தரங்கத்தைப் பற்றிக்கூற வும் ரகசியங்களை வெளிப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
முஸ்லிம் பெண்கள் தமது அழகலங்காரத்தை யார் யாரிடம் வெளிப்படுத்தலாம் என இறைவன் தெளிவாக, துல்லியமாக வரையறுத்து அன்னூர் அத்தியாயத்தில் கூறியுள்ளான்.
أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ
தம்மிடம் வேலைக்கு இருக்கும் அடிமைப் பெண்களிடம் அழகலங் காரத்தை வெளிப்படுத்த லாம்
இதற்கு என்ன பொருள்?அடிமைப் பெண்கள் தவிர மற்ற பெண்களிடம் அழகலங்காரத்தை வெளிப்படுத்துவது குற்றம் எனப் பொருள்.
16. அந்நிய ஆண்கள் முன்னிலையில் தேவையின்றி பேசக்கூடாது
'இமாம் தவறிழைத்தால் ஆண்கள் (ஸுப்ஹா னல்லாஹ்' என) தஸ்பீஹ் சொல்ல வேண்டும். பெண்கள் சுட்டிக்காட்ட எண்ணினால் கைகளைத் தட்ட வேண்டும்' என அண்ணல் நபிகளார் ஸல் லல்லாஹு அலைஹி வ ஸலலம் அவர்கள் சொல் லியுள்ளார்கள். (அபூ ஹுரைரா/ புகாரி, முஸ்லிம்)
17. அழலாம், ஒப்பாரி வைக்கக்கூடாது
'நாங்கள் ஐந்து பெண்கள் அண்ணல் நபிகளாரி டம் பைஅத் செய்தோம். ஒப்பாரி வைக்கக் கூடாது என்பதும் அந்த பைஅத்தில் இடம் பெற்றிருந்தது. எங்களில் ஒரே ஒரு பெண் மட்டும் அதனை நிறைவேற்றவில்லை' என உம்மு அதிய்யா ரழியல் லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
இழவு வீடுகளில் பெரும்பாலும் பெண்கள் பெருங்குரலெடுத்து கதறி அழுது மாரிலும் வயிற்றிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்திருப்பீர்கள். இதுதான் ஒப்பாரி எனப்படுகின்றது. ஒப்பாரி வைப்பதை இஸ்லாம் தடை செய் கின்றது.
18. அமைதியான சூழலில் ஸலாம் சொல்லலாம்
ஒரு பள்ளியில் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அவ்வழியே அண்ணலார் கடந்து சென்றார்கள். அப்போது பெண்களைப் பார்த்து 'அஸ்ஸலாமு அலைக்கும்' என ஸலாம் உரைத்தார்கள்.
'நன்றி கெட்டவர்களாக மாறி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன். நன்றி கெட்டவர்களாக மாறி விடா தீர்கள் என எச்சரிக்கிறேன்' என்றார்கள். அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா இதனை அறிவிக்கிறார் கள். முஸ்னத் அஹ்மத், அபூ தாவுது, திர்மிதீ, அல் அதபுல் முஃப்ரத்/இமாம் புகாரி)
சீர்குலைவோ குழப்பமோ ஏற்படாது என்ற அமைதியான சூழலில் ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் சொல்லாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் என ஸலாம் சொல்லத் தான் அனுமதியே தவிர, கை குலுக்க அனுமதி இல்லை.
நன்றி கெட்டவர்களாக மாறிவிடாதீர்கள் என அண்ணலார் எச்சரித்துள்ளார்கள். அதாவது, பொதுவாக பெண் தமது கணவர்களிடம் ஏதாவது பிணக்கு ஏற்பட்டு விட்டால் 'ஒருநாளும் உங்களால் எனக்கு ஒரு பயனும் ஏற்பட்டதே இல்லை' என சட்டென சொல்லி விடுகிறார்கள். இவ்வளவு நாள்கள் பெற்றதையும் பயனுற்றதையும் எளிதில் மறந்து விடுகிறார்கள். இதுதான் அவர்களுடைய நன்றி மறத்தல் ஆகும்.
நன்றி கொல்லும் மக்களில் பெண் முன் னிலை வகிக்கிறார்கள். அப்படி ஆகிவிடாதீர்கள் என அக்கறையோடு இறைவனின் தூதர் எச்சரிக்கிறார்கள்.
Comments
Post a Comment
Best comment is welcomed !