இல்லத்துணையோடு நன்றிகெட்ட பண்பு
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்,
அஃதாவது الْعَشِيرَ وَيَكْفُرْنَ الإِحْسَانَ لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ
ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّّ
'நரகம் எனக்குக் காட்டப்பட்டது. அதில் பெரும் பாலும் பெண்களே இருக்கக் கண்டேன். அல் லாஹ்வை நிராகரித்தவர்களா? என வினவப்பட்ட போது, இவர்கள் வாழ்க்கைத் துணையை நிரா கரித்தவர்கள். வாழ்க்கைத் துணையை நிராகரித்த வர்கள். நன்முறையில் நடந்துகொண்டதை (இஹ் ஸானை) நிராகரித்தவர்கள். காலம் முழுக்க அவர் களுள் ஒருத்திக்கு நீ நன்மை புரிந்து, உன்னிடம் ஒரு குறையை அவள் கண்டுகொண்டால் உன்னி டம் எந்த நன்மையையும் இதுவரை நான் கண்டதே
இல்லை என சொல்லி விடுவாள்' என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
கணவர்களோடு நன்றிகெட்டு நடந்துகொள்வது அவர்களை நரகில் கொண்டு போய்ச் சேர்க்கின் றது. பொதுவாகவே மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான் குர்ஆன் கூறுவதைப் போல,
إِنَّ الْإِنْسَانَ لِرَبِهِ لَكَنُودٌ
'உண்மையில் மனிதன் தன்னிறைவனுக்கு மிக்க நன்றிகெட்டவனாகவே இருக்கிறான்' (அல்குர் 100:6)
அதில் பெண்கள்தாம் முதலிடம் வகிக்கிறார்கள். நன்றி மறத்தல் என்னும் பண்பு கீழ்த்தரமான பண் பாகும். தரங்கெட்டவர்களிடம்தான் அதனைக் காணமுடியும். சகமனிதர்களுக்கு நன்றி செலுத்தும் பழக்கம் உள்ளவன் யாவற்றையும் அளவின்றி அளிக்கின்ற ஏக இறைவனுக்கு நன்றி செலுத்து பவனாய் மாறுகிறான். சக மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன், செய்நன்றி மறப்பவன், நன்றி கொல்பவன் இறைவனுக்கு நன்றி செலுத்துபவ னாய் ஒருபோதும் ஆவதில்லை.
இறைவனுக்கு எதிரான செயல்களில் கீழ்ப்படிக்கூடாது.
ஆயிஷா அறிவிப்பதாவது, அன்சாரிப் பெண்க ளுள் ஒருவர் தம் மகளுக்கு மணமுடித்து வைத் தார். அவரின் மகளின் தலைமுடி உதிர்ந்து விட் டது. அவள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் வந்து இது குறித்து தெரி வித்துவிட்டு, 'என் கணவர், தலையில் ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுமாறு பணிக்கிறார்' என்றார்.
அதற்கு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்,
لا إِنَّهُ قَدْ لُعِنَ الْمُوصِلاتُ
'வேண்டாம்! (ஒட்டுமுடிவைக்காதே) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்' என் றார்கள். (புகாரி)
கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென பொதுவாக வலியுறுத்தப் படுகின்றது. சிறப்பாக, இறைவனுக்குக் கீழ்ப்படியுமாறும் இறைவனின் ஷரீஅத்திற்கு கட்டுப்படுமாறும் அவன் வலியுறுத் துகையில் கீழ்ப்பட்டே ஆகவேண்டும். இவற் றுக்கு எதிராக நடக்குமாறு அவன் நிர்ப்பந்தித்தால் அவற்றில் கட்டுப்பட வேண்டியதில்லை. இறை வனுக்குக் கட்டுப்படாதே என ஆணையிடவோ நிர்ப்பந்திக்கவோ கணவனோ, தந்தையோ யாருக்கும் உரிமை இல்லை.
ஆனால், இதற்கு நேர்எதிரான நிலையைக் காணு கிறோம. கணவன் சொல்கிறான் என்பதற்காகவே இறைநெறிக்குக் கட்டுப்படாத, கணவன் தடுக்கி றான் என்பதற்காகவே இறைவனுக்கு மாற்றமான செயல்களை செய்யத் துணிகின்ற பெண்களை காண முடிகின்றது. நேர்வழி காட்ட இறைவனே போதுமானவன்.
29. கணவனின் அனுமதியின்றி இயங்காதே!
அம்ரு இப்னு ஷஅப் தம் தந்தை வாயிலாக அறி விப்பதாவது,
'மணமுடித்து மானங்காக்கும் உரிமையை கண வனுக்கு அளித்துவிட்ட பிறகு, தன்னுடைய சொந் தப் பொருளையும் சுயமாக ஒருபெண் செலவிடக் கூடாது' என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸலல்லம் அறிவித்தார்கள். (முஸ் னத் அஹ்மத், நஸாஈ, இக்னு மாஜா, ஹாகிம்)
மணமானபின் தனக்குச் சொந்தமான பொருளை தான் விரும்பியவாறு செலவு செய்யும் அதிகாரம் பெண்களுக்கு இல்லை என மாலிக் பாடசாலை யினர் கருதுகிறார்கள். மற்றவர்களைப் பொருத்த மட்டில் அவ்வாறு பொருள் கொள்வதில்லை. ஊதாரித்தனமாகவும் ஆடம்பரமாகவும் மடத்தன மாகவும் பெண்கள் செலவு செய்துவிடுவார்கள். அவை அல்லாத பிற வழிகளில் செலவு செய்யும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்றே மற்ற ஃபுகஹாக்கள் கருதுகிறார்கள். கீழ்வரும் குறிப் புகளை மனதில் கொள்க!
(1) கதீஜா ரழியல்லாஹு அன்ஹா மணமான பின் தன் செல்வம் முழுவதையும் அண்ணலாரி டம் ஒப்படைத்துவிட்டார்கள். பல்வேறு இஸ்லா மிய வழிகளில் அச்செல்வம் யாவும் செலவானது.
(2) ஒரு பெருநாள் அன்று அண்ணலார் பெண் களிடம் போன் உரையாற்றினார்கள். ஒரு பேரீச்சம் பழத்தை தானம் கொடுத்தாவது நரகில் இருந்து தப்பித்துக் கொள்ளமாறு அறிவுரை பகன்றார்கள். அதைக்கேட்ட பெண்கள் பலரும் காதுகளிலும் கழுத்துகளில் அணிந்திருந்த தத்தமது அணிகலன் களை கழற்றிக் கொடுத்தார்கள். கணவர்களிடம் அனுமதி பெறவில்லை.
(3) பேறுகாலத்தை நெருங்கிய பெண்கள் தமது செல்வத்தை விரும்பியவாறு செலவு செய்யவோ அன்பளிப்புகள் அளிக்கவோ அனுமதியில்லை என்பது நாமறிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கிய விஷயமாகும்.
30. கணவரின் இல்லத்தாருக்கும் பணிவிடை
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்.
'நாங்கள் (தபூக்) போரிலிருந்து அண்ணல் நபிக ளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர் களுடன் திரும்பிக் கொண்டிருந்தோம். நான் மெது வாகப் போகும் எனது ஒட்டகத்தின் மீது இருந்து கொண்டு அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனம் ஒன்றில் வந்து சேர்ந்து தம்மிடமிருந்த கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தைக் குத்தி னார். உடனே என்னுடைய ஒட்டகம் நீ காணுகிற ஒட்டகங்களிலேயே மிக உயர் ரகமானது போன்று ஓடலாயிற்று. (உடனே நான் திரும்பிப் பார்த் தேன்.) அங்கு அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இருந்தார் கள். அவர்கள் (என்னிடம்,) 'என்ன அவரசம் உனக்கு?' என்று கேட்டார்கள்.
'நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'கன்னிப் பெண் ணையா? (மணந்தாய்)?' என கேட்டார்கள்.
நான் 'கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந் தேன்)' என்று சொன்னேன்.
'கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவ ளாடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!' என்று கேட்டார்கள்.
'என் தந்தை அப்துல்லாஹ் ஒன்பது (அல்லது ஏழு) பெண் பின்ளளைகளை விட்டவிட்டு இறந்து விட்டார். ஆகையால் அவர்கள் வயதையொத்த ஒரு பெண் மனைவியாக வருவதை நான் விரும்ப வில்லை. அவர்களை வளர்த்து எடுக்கக்கூடிய, அவர்களை சீர்படுத்தக்கூடிய ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கவே விரும்பினேன்' என்றேன். அதைக்கேட்ட அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம், 'அல்லாஹ் உனக்கு அருள் பாலிக்கட்டும், உன்னை வளப்படுத்தட் டும்' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
பெண்கள், கணவன் வீட்டு உறவினர்களுக்கு பணிவிடையையோ கடமைகளையோ செய்ய வேண்டிய அவசியமில்லை என நாம் கருதி வரு கிறோம். அவ்வெண்ணம் தவறு என்பதையே மேற்கண்ட நபிமொழி இடித்துரைக்கின்றது.
Comments
Post a Comment
Best comment is welcomed !