அந்நிய ஆண்களிடம் எச்சரிக்கை
உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது.
إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல் லம் அவர்கள் 'அந்நியப் பெண்கள் இருக்குமிடத் திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக் கிறேன்' என்றார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கொழுந்தனார் (கணவருடைய சகோதரன் அல்லது நெருங்கிய உறவினர்) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என வினவினார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர் கள், 'கொழுந்தன் மரணத்திற்கு நிகரானவன்' என் றார்கள். (சஹீஹ் புகாரி, சஹீஹ் முஸ்லிம்)
பெண்களும் ஆண்களும் ஒன்றுகலப்பதையும் பொதுத்தளங்களில் ஒன்று சேர்வதையும் முற்றாக தடை செய்கின்றது இஸ்லாமிய ஷரீஅத். பெண் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்கின்றது. ஜும்ஆ தொழுகையோ இறைவனின் பாதையில் ஜிஹாத் செய்வதோ இறைவழியில் வெளிச் சென்று தான தருமங்கள் செய்வதையோ பெண் கள் மீது ஷரீஅத் கடமை ஆக்கவில்லை. ஏன்? இதுவே காரணம்.
ஒரு முஸ்லிம் பெண் தேவையிருந்தால் ஒழிய வீட்டை விட்டு வெளியே வர மாடடாள். வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால் பள்ளி வாசலுக்கு தொழச் செல்வதற்குத்தான் முதலிடம், அதற்க பல்வேறு நிபந்தனைகள் உள்ளன என் பதைக் கண்டோம்.
வீட்டில் இருக்கும்போதும் முறையான ஹிஜாபை பேணியாக வேண்டும். ஹிஜாப் என்றால் ஆண்-பெண் கலப்பு நிகழா வண்ணம் தடுக்கின்ற திரை எனப் பொருள்கொள்க!
எனவேதான் இங்கு எம்பெருமானார் ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பெண் களைச் சந்திப்பதில் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்துகிறார்கள். கணவனின் சகோதரனான கொழுந்தனுக்கும் கணவருடைய நெருங்கிய உற வினர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்துமா? என கேள்வி எழுப்பப்படுகின்றது. அவருக்குத் தான் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக பொருந்தும் என்கிறார்கள் அண்ணலார். ஏனெ னில் கணவனின் சகோதரன் மரணத்தைப் போன்ற வன். மரணத்தை எண்ணிப் பயப்படுவதுபோல அவனை எண்ணி பயப்பட வேண்டும். மரணத் தினால் ஏற்படுகின்ற ஆபத்து, இழப்பைப் போல கொழுந்தனோடு திரையைப் பேணாத பட்சத்தில் ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
ஷரீஅத் - உங்களையும் என்னையும் படைத்த இறைவன் வகுத்துள்ள ஷரீஅத் - இதனை விதி யாக்குகின்றது. நாங்களெல்லாம் அப்படி கிடை யாது என யாருமே சொல்லமுடியாது, கூடாது. தேவையில்லாமல் அண்ணியிடம் பேசு வது, சுவாரஸியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது, கலகலப்பாக இருப்பது போன்ற விஷ யங்களுக்கெல்லாம் ஷரீஅத்தில் இடமே இல்லை.
சொல்லக் 40/80
'இந்த உலகம் இனிமையானது, செழிப்பானது. உங்களிடம் இதனை இறைவன் ஒப்படைத்துள்ளான். நீங்கள் எப்படி நடந்துகொள்கின்றீர்கள் என்பதை சோதிக்கப் போகிறான்.
فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ
உலக விஷயத்திலும் பெண்கள் விஷயத்திலும் பயந்து நடந்து கொள்ளுங்கள். இஸ்ரவேலர்கள்
முதன்முதலாக பெண்கள் விஷயத்தில் தான் சோத னைக்கு உள் ளாக்கப் பட்டார்கள்' என அண்ண லெம் பெருமா னார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் நவின்றுள்ளார்கள். (அபூ ஸஈத் குத்ரி/ முஸ்லிம்)
பெண்களுக்கென தனி கல்விச்சாலை
அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவரகளிடம் சில பெண்கள் வந்தார் கள். 'இறைவனின் தூதரே, தங்களிடம் கூடுகின்ற ஆண்களின் அவைக்கு எங்களால் வரயியலாது. எங்களுக்கென ஒரு நாளை நிர்ணயுங்கள் என்றார்கள்.
அதைக்கேட்ட அண்ணலார், குறிப்பிட்ட நபரின் வீட்டில் உங்களுக்கான ஒன்றுகூடுகை நடை பெறும் என நிர்ணயித்தார்கள். அந்நாளில் அவ் வீட்டில் பெண்கள் எல்லாம் ஒன்றுதிரளலாயினர்.
அக்கூடுகைகளின்போது அண்ணலார் அறிவு றுத்திய விஷயங்களில், 'மூன்று பெண்மக்கள் இறந்தும் அத்துக்கத்தைப் பொறுத்துக் கொண்ட வர்கள் சொர்க்கம் புகுவார்' என்பதும் ஒன்று. அதைக் கேட்ட பெண்களில் ஒருவர், 'நாயகமே, இரண்டு பெண்கள் இறந்திருந்தால்- என்றொரு வினாவைத் தொடுத்தார். 'இரண்டு பேர் இறந்திருந்தாலும்!' என அண்ணலார் விடை பகன்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)
இன்றைய நம் பெண்களின் நிலையைக் காணும் போது இது எவ்வளவு அவசியம் என்பது விளங்கும். பள்ளிவாசல் தவிர மற்றெல்லாம் இடங்களி லும் முஸ்லிம் பெண்கள் நிறைந்து காணப்படுகின் றார்கள். பள்ளிவாசல்களிலோ மாற்று மதப் பெண்கள் வரிசையாக நிற்கின்றார்கள். பள்ளி வாசலுக்கு போவதை பெண்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று எதற்காக சொல்லப்பட் டதோ அது எள்ளளவும் நிறைவேறுவதில்லை. பள்ளிக்கு போக எண்ணாத பெண்கள் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போன்ற இடங்களுக்கு தங்குதடை யில்லாமல் போகின்றார்கள். பள்ளிவாசல் களிலோ மாற்று மதப் பெண்கள் ஹிஜாப் கூட இல்லாமல் நிற்கின்றார்கள்.
பள்ளிவாசலுக்கு வராத பெண்களுக்காக சிறப்பு வகுப்புகள், தனி அமர்வுகள் ஏற்படுத்தியாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
Comments
Post a Comment
Best comment is welcomed !