கணவரின் அனுமதிபெற்று வெளியேறுக!
ஆதிகா பின்த் ஸைத் என்பார் உமர் அவர்களின் ஒரு மனைவி காலைத் தொழுகையையும் இரவு இஷா தொழுகையையும் அவர் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்-தோடு தொழுது வந்தார். 'எவ் வாறு பள்ளிக்கு போய் தொழ உங்களால் முடி கின்றது? உமர் இதனை அவ்வளவாக விரும்ப வில்லை என்பதும் ரோஷப்படுகிறார் என்பதும் உங்களுக்குத் தரியவில்லையா?' என ஒருசிலர் அவரிடம் கேட்டார்கள்.
'அப்படி என்றால் அவர் என்னைத் தடுக்க வேண்டியது தானே? ஏன் தடுக்கவில்லை?' என் றார் ஆதிகா.
'பெண்கள் பள்ளிவாசலுக்குப் போவதை தடுக் காதீர்கள் என்னும் நபிமொழிதான் அவரைக் கட் டிப்போட்டுள்ளது' என்றார்கள்.
(அறிவிப்பு:அப்துல்லாஹ் இப்னு உமர் பதிவு: புகாரி)
இது தீவிர கவனத்தை ஈர்க்கும் ஒரு பதிவாகும். பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள் என ஒருபுறம் அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம் எச்சரித்துள்ளார்கள். 'பள்ளிக்கு செல்ல பெண்கள் உங்களிடம் அனு மதி கோரினால் அனுமதி அளிக்க மறுக்காதீர்கள்' என அண்ணலார் சொல்லியுள்ளார்கள். இந்நபி மொழியை அறிவிக்கும் அப்துல்லாஹ் இப்னு உமர் மற்றொரு நபிமொழியையும அறிவித்துள் ளார்கள். 'பள்ளிவாசலுக்கு பெண்கள் செல் வதைத் தடுக்காதீர்கள். ஆயினும் வீட்டில் தொழு வதே அவர்களுக்குச் சிறந்தது' இத்தகவல் அபூ தாவுது- நூலில் பதிவாகியுள்ளது.
'அல்லாஹ்வின் தூதர் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் இஸ்ரவேலர்களின் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்ல தடை விதிக்கப் பட் டதைப் போல, பள்ளிவாசலுக்குச் செல்லவேண் டாம் என பெண்களுக்கு தடை விதித்திருப்பார் கள்' என ஆயிஷா அவர்கள் தம் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதைக்கேட்டுக் கொண்டி ருந்த அம்ரா பின்த் அப்துர் ரஹ்மான் 'அப்படியா? பள்ளிக்கு போகக்கூடாது என பனூ இஸ்ராயீல் களின் பெண்டிர் தடுக்கப்பட்டார்களா?' என வின வினார். ஆமென்றார்கள் ஆயிஷா. (ஸுனன் அபூ தாவுது, சஹீஹ் என்கிறார் அல்பானி)
ஜுமுஆ நாளன்று பள்ளிவாசலுக்கு வருகின்ற பெண்களைத் தடுக்கும் விதமாய் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத அவர்கள் சிறுசிறு கற்களை எறி வார்கள் என அவர்களுடைய முதன்மை மாணாக் கரான அபூ அம்ரு அஷ்ஷைபானி அறிவிக்கிறார். (முசன்னஃப் இப்னு அபீ ஷைபா)
5. பள்ளி போன்றவிடங்களுக்குச் செல்கையில் நறுமணம் ஆகாது
إِذَا اسْتَعْطَرَتِ الْمَرْأَةُ فَتَرَّتْ عَلَى الْقَوْمِ لِيَجِدُوا رِيحَهَا فَهِيَ كَذَا
நறுமணம் பூசிக்கொண்டு அதை முகரச்செய்வ தற்காக என்பதற்காக ஒரு 'குழுவைக் கடந்து செல் லும் பெண்.... போன்றவள்' என அண் ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல் லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (அறிவிப்பு: அபூ மூஸாஅஷ்அரி பதிவு: அபூ தாவுது, முஸ்னத் அஹ்மத்)
முஸ்னத் அஹ்மத், நஸாஈ, இப்னு குஸைமா போன்ற நூற்களில் பதிவாகி உள்ள அறிவிப் பிலோ 'அவள் விலைமகள்' என்றே கூறப் பட்டுள்ளது.
எவ்வளவு கடுஞ்சொல்லை இறைத்தூதர் கை யாண்டுள்ளார் கள் என்பதை கவனிக்கவேண்டும். நறுமணத்தோடு பிறஆண்கள் மத்தியில் நடமா டும் பெண் ஏற்படுத்தும் மோசமான விளைவு களை எண்ணியே இறவைனின் தூதர் இத்தகு கடுஞ்சொல்லை பயன்படுத்தி உள்ளார்கள். இப்னு குஸைமாவில் உள்ள அறிவிப்பில் ('அவ ளைக் காணும்) கண்கள் யாவும் விபச்சாரம் செய்ப வையே' என்னும் பதம் இடம் பெற்றுள்ளது.
6. வெளியே போகும்போது
அலங்காரம் கூடாது
ثَلَاثَةٌ لا تُسْأَلُ عَنْهُمْ رَجُلٌ فَارَقَ الْجَمَاعَةَ وَعَصَى إِمَامَصَى إِمَامَصٌٌَ மற்றும் أَمْرَ الدُّنْيَا فَتَبَرَّجَتْ بَعْدَهُ
ஃபுழாலா இப்னு உபைத் அறிவிப்பதாவது, 'மூன்று நபர்களைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள். (1) ஜமாஅத்-தை விட்டு விலகி, தலைவருக்கு கட்டுப்பட மறுத்து, மாறுசெய்யும் நிலையில் செத் துப்போனவன். (2) தன் உரிமையாளனிடம் இருந்து ஓடி செத்துப்போன அடிமை அல்லது அடிமைப்பெண். (3) தேவையான வசதிவாய்ப்பு களை எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு கணவன் வெளியே சென்றிருக்க, தன்னை அலங் கரித்துக்கொண்டு வெளியே சுற்றித்திரிந்து மேயும் பெண். இவர்களைப் பற்றி எதுவும் கேட்காதீர்' என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (இமாம் புகாரியின் சஹீஹுல் அல்அதபுல் முஃப்ரத், நாசி ருத் தீன் அல்பானி, வரம்பு மீறுதல்)
ஒரு பெண் தன்னுடைய அலங்காரங்களை திரை யிட வேண்டும். ஒரு பெண் பலவாறு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். இயற்கையாக பெண்ணுக்கு இறைவன் அளித்துள்ள அழகை மேலும் மெருகூட்டி ஆடை அணிகலன்கள் மூலம் கவர்ச்சி ஆக்குகிறாள் இறைமறை குர்ஆன் C u ú ஸீனத் என குறிப்பிடுகின்றது. Cuø
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ
தங்கள் அழகலங்காரத்தை வெளிக்காட்டலாகாது (அல்குர்ஆன் 24-31)
பெண்கள் தங்களுடைய உடற்பகுதியை வேறு சில வகைகளிலும் அலங்கரித்துக் கொள்கிறார் கள். அவற்றில் எச்சரிக்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும். அவற்றை காண்பதாக இருந்தால் பெண்களின் உடற்பகுதியையும் கண்டாக வேண் டும். உதாரணமாக கண்களுக்கு மை தீட்டப்படு கின்றது, சுர்மா தீட்டப்படுகின்றது. அதுவும் ஓர் அலங்காரம்தான்! அந்த அலங்காரத்தை பார்ப்ப தாக இருந்தால் பெண்களின் கண்களையும் முகத் தையும் கண்டே ஆகவேண்டும். கைகளில் மரு தாணி இடப்படுகின்றது, மோதிரங்கள் அணியப் படுகின்றன. இந்த அலங்காரங்களை காண்பதாக இருந்தால் கைகளை கண்டே தீர வேண்டும். அதே போன்று மாலைகள் ஆரங்கள் தோடுகள் வளை யல்கள் போன்றன அணியப்படுகின்றன அவற் றை காண்பதாக இருந்தால் அவை அலங் கரித்துள்ள உடல் உறுப்புக்களையும் காண நேரி டும். யாவரும அறிந்த விஷயமே இது.
அலங்கரித்துக் கொண்டு தன் அலங்காரத்தை பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காக தேவை எது வும் இல்லாதநிலையிலும் வெளியே போகின்ற பெண்களை இந்நபிமொழி சாடுகின்றது.
Comments
Post a Comment
Best comment is welcomed !