பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.

 


பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.


1. பணிக்குச் செல்லும் ஒரு பெண், தான் மேற்கொள்ளும் அப்பணியை செய்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாலோ, அவளுக்கு அப்பணியைச் செய்து கொடுப்பதற்கு ஆண்கள் யாரும் இல்லாதிருந்தாலோ அல்லது அப்பெண்ணின் பணி சமுதாயத்திற்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தாலோ வெளியில் செல்லலாம்.


2. தன் வீட்டில் தான் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்ட பின்னரே பெண்கள் வெளிவேலையில் ஈடுபட வேண்டும்.


3. பெண்களுக்கிடையில்தான் அவள் தன் வெளி வேலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும். பெண்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல், மருத்துவம் செய்தல், பெண்களுக்காக மட்டும் நர்ஸாக


பணியாற்றுதல் போன்ற பணிகளை ஆண்களுடன் இரண்டறக் கலந்துவிடாது செய்து கொள்ளவேண்டும்.


4. மார்க்கக் கல்வியைக் கற்பது அவள் மீது கட்டாயக் கடமையாக உள்ளது. இதை அவள் வெளியில் சென்று கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அது


பெண்கள் வட்டத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். பள்ளிவாசல் போன்ற இடங்களில் நடைபெறும் மார்க்க விளக்கக் கூட்டங்களில் பங்கு கொள்வதில் தவறில்லை. ஆனால் அவள் தன் அழகு அலங்காரங்களை மறைத்தாக வேண்டும். ஆண்களை விட்டும் ஒதுங்கியவளாக இருக்கவேண்டும். இஸ்லாத்தின் ஆரம்பகால பெண்களைப் போன்று பள்ளிவாசலுக்குச் சென்று நல்லமல்கள் புரியவேண்டும். இஸ்லாமியக் கல்வியைக் கற்கவேண்டும்.


பிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது



பெண்ணின் உடல் அலங்காரம்


பெண்களின் இயற்கையான பண்புகளோடு தொடர்புள்ளவற்றையே அவளிடமிருந்து எதிர்பார்க்கவேண்டும். நகம் வெட்டுவதும் அதை வழக்கமாக தொடர்ந்து செய்து வருவதும் நபிவழியாக இருக்கிறது. இவை ஹதீஸில் வந்துள்ள மனிதன் இயல்பாகவே செய்யக்கூடிய விஷயங்களாக உள்ளன. நகத்தைக் களைவதால் சுத்தம் ஏற்படுகிறது. அழகு கிடைக்கிறது. அது நீண்டதாக வளர்ந்திருப்பதில் அவலட்சனம் இருக்கின்றது. நகத்தைக் களையாமல் விட்டு விடுவதால் மிகப்பெரிய (தொல்லைகள்) ஏற்படுகின்றன. கோரப் பிராணிகளுக்கு ஒப்பாக (விரல்கள்) ஆகிவிடுகிறது. அதற்கு கீழாக அழுக்கு சேர்ந்து விடுகிறது. அதில் தண்ணீர் சென்றடைவதைத் தடுக்கிறது, நபிவழியை மறந்து, இறைமறுப்பாளர்களைப் பின்பற்றி நகத்தை நீளமாக வளர்க்கும் ஒரு வித சோதனைக்கு சில பெண்கள் ஆளாம்யுள்ளனர்.


அக்குள்முடி, மர்மஸ்தான முடியைக் களைவதும் பெண்களுக்கும் சுன்னத்தாக உள்ளது. அதில் அழகும் இருக்கிறது. வாரம் ஒரு முறை களைய வேண்டும். முடியாவிட்டால் நாற்பது நாட்களுக்கு ஒரு முறையாவது களைதல் சிறந்ததாகும்.


பெண்ணின் தலைமுடி அலங்காரம்


அ. முஸ்லிம் பெண் தன் தலைமுடியை நீளமாக விட வேண்டும். காரணமின்றி தலையை மொட்டையடிப்பது விலக்கப்பட்டுள்ளது.


சவூதி அரேபியாவின் மார்க்க தீர்ப்பு வழங்கும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் பின் இப்ராஹீம் ஆலுஷேக் அவர்கள் கூறுகிறார்கள்.


"பெண்கள் தங்கள் தலைமுடியை மழித்தல் கூடாது."


"பெண் தன் தலைமுடியை மழிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்" என அலீ(ரழி), உஸ்மான், இக்ரிமா போன்ற நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். (நூற்கள்: நஸயீ, பஸ்ஸார் மற்றும் இப்னுஜரீர்)


நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளதாக ஹதீஸில் ஒரு விஷயம் வருமானால் அது விலக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் குறிக்கும். அதற்கு மாற்றமமான இன்னொரு விஷயம் வந்தாலே தவிர.


முல்லா அலிகாரி அவர்கள் 'மிஷ்காத்' என்ற நூலின் விரிவுரையான தன்னுடைய 'மிர்காத்' என்ற நூலில் கூறுகிறார். "பெண் தன் தலைமுடியை மளிப்பது கூடாது என்பது எதற்காகவென்றால் பெண்கள் கூந்தலை விடுவது தோற்றத்திலும் அழகிலும் ஆண்கள் தாடி விடுவதற்கு ஒப்பானதாகும்." (ஷேக் முஹம்மதுபின் இப்ராஹீம் பத்வா தொகுப்பு 2« 49)


ஒரு பெண் தன் தலைமுடியை நீளமாக விடுவது சிரமமானதாகவோ, அதைப் பராமரிப்பதற்கானச் செலவை மேற்கொள்வது அவளுக்கு முடியாமலோ இருக்குமானால் தேவையான அளவு அலங்காரத்தை நோக்கமாகக் கொள்ளாது. தலைமுடியை குறைத்துக் கொள்வதில் தவறில்லை. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களின் சில மனைவிமார்கள், அலங்காரத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காகவும், நீண்ட முடி வளர்க்கும் தேவையற்று இருந்ததாலும் தங்கள் தலைமுடியை குறைத்துக் கொண்டார்கள்.


அதேநேரத்தில் இறைமறுப்பாளர்கள் மற்றும் தீயவர்களுக்கு ஒப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, ஆண்களுக்கு ஒப்பாக தோற்றமளிக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ ஒரு பெண் தன் தலைமுடியைக் குறைப்பாளானால் அது தடை செய்யப்பட்டதாகும். பொதுவாகவே இதைத் தடை செய்வதற்குண்டான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் அலங்காரத்திற்காக அவ்வாறு செய்வாளானால் நாம் அறிந்தவரை அது அனுமதிக்கப்படாததாகும்.


முஹம்மத் அமீன் சின்கீதீ 'அள்வாஉல் பயான்' எனும் குர்ஆன் விளக்கவுரை நூலில் குறிப்பிடுகிறார்.


"தற்போது அதிமான நாடுகளில் பழக்கத்தில் காணப்படுகின்ற பெண்கள் தங்கள் தலைமுடியை முழுமையாக வெட்டிக் கொள்வது என்பது இஸ்லாமிய பெண்களும் இஸ்லாத்திற்கு முற்காலத்திலுள்ள அரபியப் பெண்களும் செய்துவந்த பழக்கத்திற்கு நேர் மாற்றமான கலாச்சாரமாகும். இது மார்க்கத்திலும் பண்பாட்டிலும் பரந்து விட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்."


நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் தங்கள் தலை முடியைக் குறைத்து குட்டையாக ஆக்கிக் கொள்வார்கள். என ஹதீஸில் வந்ததன் விளக்கம் என்னவென்றால், நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களின் மனைவிமார்கள் அவர்களுக்காக தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள். அவர்களின் தலை முடிதான் மிகவும் அழகானதாகும்.


நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்களின் மனைவிமார்களுக்கென தனிச்சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களில் பூமியில் உள்ள எந்த ஒரு பெண்ணும் கூட்டாக முடியாது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களின் மனைவிமார்களை வேறு யாரும் திருமணம் செய்ய முடியாது. ஆசையில்லாத அளவிற்கு அவர்கள் திருமணத்திலிருந்து நிராசையாகிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்ற காரணத்தினால் அப்பெண்களின் மரணம் வரை இத்தாவில் இருக்கின்ற பெண்களைப் போன்றிருக்கிறார்கள்.


அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு உகந்ததல்ல, மேலும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒரு போதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமான காரியமாகும்."(அல்குர்ஆன் 33:53)


ஆண்களிலிருந்து முழுமையாகவே அவர்கள் நிராசையாகிவிட்டதால் மற்ற பெண்களுக்கு அனுமதிக்கப்படாத சில விஷயங்கள் இவர்களுக்கு சலுகை வழங்கப்படுவதற்கு காரணமாக இருக்கலாம். அல்வாஉல் பயான் (5598-601)


பெண்கள் தன் தலை முடியைப் பாதுகாக்க வேண்டும், அதை கண்காணிக்கவேண்டும் அதை கோர்வையாகப் பிண்ணிப்போட வேண்டும். முடியை தலைக்கு மேலோ அல்லது தலைக்குப் பின் பக்கமோ கொண்டை போன்று குவித்து வைப்பது கூடாது.


மேலும்,இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பில் கூறுகிறார்கள். சில மோசமான பெண்கள் தங்கள் தலைமுடியை ஒன்றாகச் சேர்த்து ஒரே கூந்தலாக்கி தங்கள் இரண்டு புஜத்திற்கிடையில் தொங்கவிடுகின்றனர். (பக்கம் 22அ ப பக்கம் 145)


சவூதி அரேபியாவின் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் பின் இப்றாஹீம் அவர்கள் கூறுகிறார்கள்: இக்காலத்தில் சில முஸ்லிம் பெண்கள் தங்கள் தலை முடியை ஒரு ஓரத்திலிருந்து சீவி முடியை ஒன்று சேர்த்து தலைக்குப் பின் பக்கமாக விடுவதும் அல்லது தலைக்கு மேலே சேர்த்துவைப்பதும் ஃபிரஞ்ச் கலாச்சாரமாகும், இவ்வாறு செய்வது கூடாது. அவ்வாறு செய்வது இறை மறுப்பாளர்களுக்கு ஒப்பானதாகும்.


"என் சமுதாயத்தில் இரண்டு கூட்டத்தினர் நரக வாசிகளாக இருக்கின்றனர். அவர்களை நான் பார்த்ததில்லை (அதாவது அவர்கள் நான் வாழும் காலத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்). ஒரு சாரார் மாட்டு வாலைப் போன்ற சாட்டையை தங்களின் கையில் வைத்துக் கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமானவர்களாகக் காட்சியளிக்கும் பெண்கள்; அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள் பிறரையும் அவர்கள் பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை சாய்ந்த ஒட்டகத்தின் திமில் போல் இருக்கும் அவர்கள் சுவர்க்கம் செல்லவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சுவர்க்கத்தின் நறுமணம் நீண்ட தூரத் திலிருந்து வீசும்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறும் றார்கள்" என அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)


ஆடிஆடி நடப்பார்கள் என்பதன் பொருள், தவறான விபச்சாரிகள் தங்கள் தலையை சீவிக் கொள்வது போன்று இவர்கள் தங்கள் தலையைச் சீவிக் கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் மற்றபெண்களுக்கும் அவ்வாறு சீவிவிடுவார்கள். இவ்வாறு செய்வது ஃபிரஞ்ச்காரர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களின் கலாச்சாரமாகும்.


முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடிப்பது எவ்வாறு கூடாதோ அவ்வாறே காரணமின்றி தலைமுடியைக் குறைத்துக் கொள்வதும் கூடாது. 'விக்' மற்றும் 'சவுரி' போன்ற ஒட்டு முடிகள் வைத்துக் கொள்வதும் கூடாது.


"பிறருக்கு தன் முடியுடன் வேறு முடியைச் சேர்த்து வைப்பவள், தன் முடியுடன் வேறு முடியை சேர்க்கும் படி கேட்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்." (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)


இவ்வாறு செய்வதனால் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. 'டோப்பா' மற்றும் 'விக்' இந்த வகையைச் சார்ந்ததுதான்.


"முஆவியா(ரழி) ஒரு முறை மதீனாவிற்கு வந்தபோது மக்களுக்கு பிரசங்கம் செய்தார்கள். அப்போது முடிக் கற்றை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, 'உங்கள் பெண்களுக்கு என்ன நேர்ந்தது? இதுபோன்ற முடிகளை எல்லாம் அவர்கள் தங்கள் தலையில் இணைக்கின்றனர்.' 'எந்த ஒரு பெண்ணாவது தன் தலைமுடியுடன் வேறு முடியைச் சேர்த்து வைப்பாளானால் அது ஏமாற்றம், மோசடி செய்யக்கூடியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" எனக் கூறினார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)


ஆ. ஒரு முஸ்லிம் பெண் தன் புருவ முடிகள் முழுவதுமாகவோ, கொஞ்சமாகவோ களைவது தடை செய்யப்பட்டுள்ளது. கத்தியால் மளிப்பதோ, கத்திரியால் வெட்டுவதோ கூடாது.


"புருவ முடியை முழுவதுமாகவோ, கொஞ்சமாகவோ நீக்கக்கூடியவளையும், தனக்கு நீக்கிவிடும் படி கேட்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்."


இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாகும். மனிதர்களிடத்தில் இவ்வாறு மாற்றங்களைத் தான் செய்யப்போவதாக ஷைத்தான் அல்லாஹ்விடம் சபதம் எடுத்துள்ளான். அதையே இன்று அவன் செயல்படுத்தியும் வருகிறான்.


அல்லாஹ் கூறுகிறான்: "இன்னும் அல்லாஹ்வுடைய படைப்புகளின் கோலங்களை மாற்றும்படி (மனிதர்களை) ஏவுவேன் என்றும் ஷைத்தான் கூறினான்." (அல்குர்ஆன் 4:119)


"பச்சைக் குத்திக்கொள்ளக் கூடியவளையும், பிறருக்கு பச்சைக் குத்துபவளையும், புருவமுடியை எடுப்பவளையும், பிறருக்கு எடுத்து விடுபவளையும், அழகிற்காக பற்களுக்கிடையில் இடைவெளி ஏற்படுத்தி அல்லாஹ் வின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்துபவளையும் அல்லாஹ் சபிக்கின்றான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறிவிட்டு, 'இறைத் தூதர் சபித்தவர்களை நானும் சபிக்கக்கூடாதா? இது அல்லாஹ்வின் வேதத்திலும் உள்ளதே' என்றும் அவர்கள் கூறிவிட்டு, 'இறைத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் எதை விட்டும் அவர் உங்களைத் தடுத்தாரோ அதைவிட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 59:7) என்ற குர்ஆன் வசனத்தையும் ஓதினார்கள். (நூல்: திர்மிதி)


இறைவனின் சாபத்தை உண்டாக்கும் பெரும் பாவங்களில் ஒன்றான இவ்விஷயத்தில் அதிகமான பெண்கள் இன்று சிக்கியுள்ளனர். புருவமுடியை நீக்குவது அன்றாட முக்கிய வேலைகளில் ஒன்றாகி விட்டது. ஒரு பெண்ணை இவ்வாறு செய்து கொள்ளுமாறு அவளுடைய கணவன் தூண்டினாலும் அவள் அவனுக்குக் கட்டுப்படக்கூடாது. ஏனெனில் பாவமான காரியங்களில் கட்டுப்படுதல் மார்க்கமாக இல்லை.


இ. அழகுக்காக ஒரு பெண் தன் பற்களைத் தீட்டி அவற்றிற்கு இடையில் இடைவெளி ஏற்படுத்துவதும் தடுக்கப்பட்டதாகும். அதே நேரத்தில் பற்களுக்கிடையில் இயற்கையாகவே குறை இருக்குமானால் அதைப் போக்கிக் கொள்வதற்காக ஒழுங்குபடுத்திக் கொள்வதும், பற்களில் வேறு ஏதேனும் புளு அரித்திருந்தால் அவற்றைச் சீர்செய்து கொள்வதும் தவறாகாது. இது, பற்களில் காணப்படும் குறைகளைப் போக்குவதற்காக பல் மருத்துவ நிபுணர்கள் செய்யும் சிகிச்சையாகும்.


ஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.


'தன் உடம்பில் பச்சைக் குத்திக்கொள்ளக் கூடியவளையும், பச்சை குத்தும்படி கேட்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.


பச்சைக்குத்துவது என்பது ஊசி போன்ற பொருளால் கை அல்லது முகம் போன்ற உறுப்பில் குறை ஏற்படுத்தி அந்த இடத்தில் சுர்மா, மை போன்றவற்றை வைத்து அடையாளமிடுவது, இது விலக்கப்பட்டதும், பெரும்பாவங்களில் ஒன்றுமாகும். இதை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் என்றால் அது பெரும் பாவமாகத்தான் இருக்கவேண்டும்.

Comments