சந்தேகம் தவிர்ப்பீர்!
சந்தேகம் ஒரு சாதாரண நோயா!?
மனநோய்களில் ஒரு பெரிய நோய் சந்தேக நோய். எல்லா நோய்களுக்கும் ஒரு மருத்துவர் இருப்பார். ஆனால், சந்தேக நோய்க்கு அந்த மனிதனே தன்னை மாற்றாத வரை அந்த நோயை யாரும் குணப்படுத்த முடியாது.
ஓர் இடத்தில் புகையும்போது அங்கே நெருப்பு இருக்குமோ என்று சந்தேகம் வரலாம். ஒருவனுக்கு அங்கே புகைகிறதோ என்று வீணான மனபிரமையில் இருந்தால் அவனை என்ன சொல்வது?
மனிதன் ஒரு சந்தேகப் பிறவி என்று சொல்வார்கள். அதற்காக எல்லோரையும் சந்தேகப்படுவதா? எல்லா விஷயங்களிலும் சந்தேகப்படுவதா?
நாம் பிறக்கும்போது நம்மோடு சேர்ந்து பல குணங்களும் நமக்குள் பிறந்து விடுகின்றன. அவற்றில் நல்ல குணங்களும் உண்டு, கெட்ட குணங்களும் உண்டு.
கெட்ட குணமே இல்லாமல் ஒரு மனிதன் பிறக்க முடியாது. காரணம், வானவர்கள் பூமியில் பிறக்க மாட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையினால் நேரடியாக ஒளியிலிருந்து படைக்கப்பட்டார்கள். பரிசுத்தமான ஒளியிலிருந்து படைக்கப்பட்ட அவர்களிடம் படைப்பாளன் குறைகளை வைக்கவில்லை. அவர்களுக்கு சோதனை இல்லை. அவர்களுக்கு இருப்பதெல்லாம் கட்டளையும் கீழ்ப்படிவதும்தான்.
சோதனைகள் நமக்குதான். சோதனைக்கு இரண்டு தேவை. நல்லது. கெட்டது. நன்மை, தீமை, இப்படி இருந்தால்தான் அங்கே சோதனை பூர்த்தியாகும்.
மனிதன் ஒரு கலவை. குழைக்கப்பட்ட பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதன் அந்த மண்ணைப் போன்று தனக்குள் வித்தியாசமான குணங்களையும் பண்புகளையும் கொண்டவன்.
மனிதனை பரிசுத்தப்படுத்தி, அவனுக்குள் இருக்கும் கெட்ட குணங்களை நீக்கி, அவனுக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்த்து, அவனை நன்மைகளால் நிறைந்தவனாக ஆக்குகிற சிறந்த பணியைக் கொண்டு நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள்.
மனிதனை பரிசுத்தப்படுத்தவும் இறைவனுக்கு பிடித்தமானவனாக அவனை மாற்றவும் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்; அவர்கள் மீது வானத்திலிருந்து வேதங்கள் இறக்கப்பட்டன.
ஒருமனிதன் வாழும்போது அவனுக்கு நிம்மதி, கண்ணியம் கிடைக்க வேண்டும். அவனால் பிறருக்கும் நிம்மதியும், கண்ணியமும் கிடைக்க வேண்டும்.
பிறரால் உனக்கு நிம்மதி. உன்னால் பிறருக்கு நிம்மதி, பிறரால் உனக்கு பாதுகாப்பு. உன்னால் பிறருக்கு பாதுகாப்பு! இப்படி வாழ்ந்தால்தான் எல்லோரும் வாழமுடியும்.
சரி, இப்போது குடும்ப விவகாரத்திற்கு வருவோம்.
குடும்பம் என்றால் அது ஒரு வீடு! வீடு என்றால் வாசல் இருக்கும். ஜன்னல் இருக்கும். இதுவெல்லாம் இருந்தால் நல்ல காற்று. சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரும். சில சமயம் துர்நாற்றமும் சேர்ந்து வந்து விடுகிறது. நாம் அப்போது கதவுகளை சாத்தி வைக்க வேண்டும்.
அப்படித்தான் நமது வீட்டுக்கு நாலுபேர் வருவார்கள். வருபவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். சிலர், அப்படியும் இப்படியும் இருப்பார்கள். சிலர், மோசமாக இருப்பார்கள். சிலர், கெடுப்பதற்காகவே வருவார்கள். சிலர், வந்த பின்னர் கெட்டு போவார்கள்.
பெண்கள் ஒரு நறுமணத்தைப் போல. அவர்களை மூடி வைக்க வேண்டும். நறுமணத்தை மூடி வைத்தாலே அதன் நறுமணம் சில சமயம் வெளியே வீசிவிடும்போது. அதுவே திறந்திருந்தால் என்ன சொல்ல வேண்டும்!
பெண் ஆசை இல்லாத ஆண் இல்லை. ஆண் ஆசை இல்லாத பெண் இல்லை.
ஓர் இனத்திற்கு அதன் எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு வருவது இயல்பாகும். இதில் யாரையும் விதிவிலக்காக்க முடியாது. அல்லாஹ் நாடினாலே தவிர.
குதிரையின் கண்ணுக்கு மறைப்பு போடப்படுவதால் அது இங்கும் அங்கும் பார்க்காமல், அதை ஓட்டுபவன் திருப்புகிற திசையில், பாதையில் செல்கிறது. எதையும் பார்த்து பயப்படுவதோ மிரள்வதோ ஏற்படாமல் சீராக சென்று கொண்டே இருக்கும்.
நமக்கு அப்படி இல்லை. நமது பார்வைக்கு திரை போட்டால் நம்மால் நடக்க முடியாது. மிகுந்த சிரமத்திற்குள்ளாகி விடுவோம். எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். அது நமது உரிமை என்று சிலர் நினைக்கிறார்கள்.
உண்மையில் அப்படி இல்லை.
அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டுள்ள நமக்கு எல்லாமே ஒரு கட்டுப்பாடுதான்.
நமது பார்வைக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. நமது செவிக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. நமது யோசனைக்கு, நமது சிந்தனைக்கு, நமது பேச்சுக்கு இப்படி எல்லாவற்றுக்கும் நமக்கு கட்டுப்பாடு இருக்கிறது.
முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ்வின் கட்டளையாவது, அவர்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளட்டும்.35
நபி அவர்கள் நமக்கு கூறினார்கள்: பார்வைக்கு பின் அடுத்த பார்வை பார்க்காதே 36
பெண்கள், அந்நிய ஆண்களை பார்ப்பதும் ஆண்கள், அந்நியப் பெண்களை பார்ப்பதும் அல்லாஹ் உடைய இந்த மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். 37
ஓர் பெண், அந்நிய ஆணை தனிமையில் சந்திப்பதும், ஓர் ஆண், அந்நிய பெண்ணை தனிமையில் சந்திப்பதும் பெரும் குழப்பத்தை உண்டாக்கிவிடும் என்று மார்க்கம் நமக்கு எச்சரிக்கிறது. 38
இத்தகைய கட்டுப்பாடுகள் எதற்காக? நமது சுதந்திரத்தை பறிப்பதற்காக அல்ல. மாறாக, நமது சுதந்திரத்தையும், உரிமையையும், உணர்வுகளையும், கண்ணியத்தையும் பாதுகாப்பதற்காக மார்க்கத்தில் சில கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.
அல்லாஹ்வின் மார்க்கம் நமக்கு போட்டுள்ள ஒவ்வொரு சிறிய பெரிய காட்டுப்பாட்டுக்கு பின்னாலும் பல நூறு தத்துவங்கள் உள்ளன. அவற்றை நமது சிற்றறிவைக் கொண்டு முழுமையாக நாம் புரிய முடியாது. அந்த கட்டுப்பாடுகளை நாம் கடைப்பிடிக்கும்போதுதான் அவற்றின் நன்மைகளை நாம் வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக உணர முடியும், பார்க்க முடியும்.
அந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் வாழ்கிற பிற மக்களின் வாழ்க்கையை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சனைகளும், சிக்கல்களும் அவர்களின் வாழ்க்கையை நரகமாக ஆக்கி இருக்கின்றன. இஸ்லாமை தவிர தீர்வு இல்லை.
அவர்கள் எந்த ஒரு தீர்வை தங்கள் பிரச்சனைக்கு தீர்வாக கொண்டு வந்தாலும் அது அவர்களின் குறுகிய அறிவினால் அவர்கள் உருவாக்கியதால் அதில் பல நூறு குறைகளும், தவறான பக்க விளைவுகளும் இருக்கும். ஒரு பிரச்சனையிலிருந்து வெளியேற முயற்சித்து பல பத்து பிரச்சனைகளில் சிக்குவதுதான் அவர்கள் கொண்டுவந்த தீர்வின் இறுதி நிலையாக இருக்கும். முஸ்லிம்களாகிய நமக்கு அப்படி அல்ல.
அல்ஹம்து லில்லாஹ்!
சரி, இப்போது மேற்கூறப்பட்ட விளக்கத்திற்கும் நமது தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம்.
ஆம், தொடர்பு இருக்கிறது.
நமது பெண்களும் சரி, நமது ஆண்களும் சரி, பிறரிடம் பழகும்போது அளவோடு பழக வேண்டும். எல்லைக்குள் பழக வேண்டும். கட்டுப்பாடுகளுக்குள் நின்று பழக வேண்டும். சட்டங்களை பின்பற்றி பழக வேண்டும். வரைமுறைகளை அனுசரித்து பழக வேண்டும். ஸூரா அஹ்ஸாபும் (33), அந்நூரும் (24) பல ஒழுக்க மாண்புகளை நமக்கு கற்பிக்கின்றன.
கதவை திறக்காமல் காற்று உள்ளே வராது என்பதை போல் பெண்கள் இடம் கொடுக்காமல் குடும்பத்தில் தவறுகள் நடக்காது.
மான், நீர் குடிக்க ஏரிக்கு செல்லாமல் முதலை அதை கவ்விப்பிடிக்காது.
பசித்த சிங்கத்தின் குகையை தாண்டி கொழுத்த மிருகம் சென்றால் அது என்ன சும்மா இருக்குமா?
அதனால் நமது வீட்டுக்கு நாம் அழைத்து வருகிறவர்களை நன்கு கவனித்து நல்லவர்களை மட்டுமே நாம் அழைத்து வர வேண்டும்.
நபி அவர்கள் சொன்னார்கள்: உனது வீட்டின் உணவை இறையச்சமுள்ளவன் மட்டுமே உண்ணட்டும்.38
ஆம், தக்வா இல்லாதவன் வீட்டுக்குள் நுழைந்தால் அவனுக்கும் பிரச்சனை, அவனால் நமக்கும் பிரச்சனை.
நமது பெண்கள் பிற ஆண்களோடு பழகும்போது நாம் அவர்களை கவனித்து தேவையான அறிவுரைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
மிக மிக அவசிய தேவை இல்லாமல் பெண்கள் ஆண்களுக்கு முன்னால் வராமல் இருக்க வேண்டும்.
மிக மிக அவசிய தேவை இல்லாமல் பெண்கள் ஆண்களிடம் பேசாமல் இருக்க வேண்டும்.
இப்படித்தான் பிற வீட்டுக்கு செல்கிற ஆண்களும் கவனமாக, கண்ணியமாக இருக்க வேண்டும். பாதையில் நடக்கும்போது நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். முள் இருக்கும். மேடு பள்ளம் இருக்கும். இன்னும் பிற விஷ ஜந்துக்கள் கூட இருக்கலாம்.
அப்படித்தான் பெண்களில் சிலர் அப்படி இப்படியுமாக இருப்பார்கள். ஆண்களுக்கு அல்லாஹ் அவர்களின்
39. அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல் குத்ரீ நூல்: ஸுனன் அபூதாவூது,
: 4832. மர்மஸ்தானத்தை பாதுகாக்கும் கட்டளையை மிக கண்டிப்போடு கூறி இருப்பதோடு, மீறுபவர்களை எச்சரித்தும் இருக்கிறான்.“°
இதுவெல்லாம் நாம் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள்! நாம் பேண வேண்டிய சட்ட திட்டங்கள்.
சரி, இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் பொறுங்கள் கூறுகிறேன்.
அதாவது, இப்படி கணவன் மனைவி ஒழுக்கமாக வாழும்போது அன்பானது, தானாக நமது விலாசம் தேடி வரும். பள்ளத்தை நோக்கி நீர் வழிந்தோடுவதை போன்று நிம்மதியானது, நமது இல்லம் நோக்கி நாம் அழைக்காமலே வரும்.
கணவனும் மனைவியை முழுமையாக நம்ப வேண்டும். மனைவியும் கணவனை முழுமையாக நம்ப வேண்டும். இஸ்லாமிய ஒழுக்கங்களில் சில கைவிடப்படும்போது, மார்க்கத்தின் கட்டுப்பாடுகள் சில மீறப்படும்போது குடும்பத்திற்குள் குழப்பம் அழைக்கப்படாத விருந்தாளியாக வருவது சகஜமாகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
சரி, இன்னும் கொஞ்சம் விஷயத்திற்குள் போவோம். அதாவது, ஆண், தன் மனைவியின் சொல், செயல், நடவடிக்கையின் மீது எடுத்த எடுப்பில் சந்தேகப் பார்வையை செலுத்தி விடக்கூடாது. ஒவ்வொரு செயலுக்கும் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று அர்த்தம் தேடக்கூடாது. அப்படித்தான் மனைவியும்.
தனது கணவன் மீது வீணான சந்தேகம் கொள்கிற பெண் ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. அது மட்டுமல்ல. அவளால் தனது கணவனுக்கும் நிம்மதியை கொடுக்க முடியாது.
இருவரில் யார் ஒருவருக்குள் சந்தேக நெருப்பு பற்றிக் கொண்டதோ அந்த நெருப்பு அவனை அல்லது அவளை எரித்து விடும். அடுத்தவரை அதன் அனலும், ஜுவாலையும் பொசுக்கிக் கொண்டே இருக்கும்.
ஆகவே, ஒருவர் மற்றவர் மீது நம்பிக்கை வைத்து வாழுங்கள்!
சந்தேகம் வராத அளவிற்கு இருவரும் கட்டுப்பாடுகளை பேணி வாழுங்கள்!
குழப்பம் ஏற்படாத அளவிற்கு குடும்பத்தை பாதுகாப்பாக வைத்து வாழுங்கள்!
ஒருவர் மற்றவருக்கு அன்பையும், அக்கறையையும், புரிந்துணர்வையும், பாசத்தையும் அந்தளவு கொடுத்து வாழுங்கள். உங்கள் துணையின் கவனம் உங்கள் அல்லாத மற்றவர் மீது செல்லாமல் இருக்கட்டும்.
உங்கள் மனைவி அவசிய தேவைக்காக யார் ஒருவரிடமும் பேசினால் உடனே சந்தேகிக்காதீர்கள். பிறருடன் எப்படி பேச வேண்டும் என்ற ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள்!
பிறரிடம் பழகும்போது தூரத்தை கடைப்பிடிக்க வையுங்கள். பிறகு, பாரத்தை அல்லாஹ்வின் மீது போட்டு விடுங்கள்!
அல்லாஹ் எதை வெளிப்படுத்த வேண்டுமோ அதை வெளிப்படுத்துவான். அல்லாஹ் எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து விடுவான். அல்லாஹ் மறைத்ததை நீங்கள் தோண்டி துருவி ஆராயாதீர்கள். அல்லாஹ் வெளிப்படுத்தியதை கண்டும் காணாமல் தய்யூஸாக இருக்காதீர்கள்.""
அதாவது, மனைவி பல ஆண்களிடம் மேய்பவளாக இருப்பதை பார்த்துவிட்டு, அதை சகித்து செல்லும் பொட்டையனாக இருக்காதீர்கள். ரோஷம் உள்ள ஆணாக இருக்க வேண்டும். பெண்ணாகிறவளும் நாணமும், வெட்கமும், கட்டுப்பாடுகளும் அதிகம் உள்ளவளாக இருக்க வேண்டும். கணவனல்லாதவரிடம்
41. அறிவிப்பாளர்: உக்பா இப்னு ஆமிர் ஆ. நூல்: ஸஹீஹ் நசாயி, எண்: 2561.
எப்படி பேச வேண்டுமோ அதை அறிந்து பேச வேண்டும்.
பிறர் மனம் கெடும்படி பேசக் கூடாது. பிறர் உள்ளம் சாய்கிறபடி உரையாடக் கூடாது. பிறருக்கு குழப்பம் ஏற்படுகிற அளவிற்கு நெருங்கக் கூடாது.
சகோதரியே, உன் கணவன் மீது வீணான சந்தேகத்தை விதைத்து விட்டு பிறகு அதே சந்தேகத்தோடு அவனது ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தத்தை நீ கொடுத்தால் அவ்வளவுதான் உனது வாழ்க்கை!
ஒருவர் மற்றவரின் அந்தரங்கங்களை ஆராயாதீர்! அவர் என்ன பார்க்கிறார், யாரிடம் என்ன பேசுகிறார், அவரின் போனில் யார் யார் உடைய நம்பர் இருக்கிறது. மெசேஜில் என்ன இருக்கிறது இப்படியாக உங்கள் வாழ்க்கை துணையை பற்றி சந்தேக நெருப்பில் எரிந்து கொண்டே இருக்காதீர்கள். அல்லாஹ்வை நம்புங்கள்! பிறகு உங்கள் வாழ்க்கை துணையையும் நம்புங்கள்!
ஒட்டகத்தை கட்டிபோட்டுவிட்டு நம்பிக்கை வையுங்கள் என்று சொல்லப்படுவதை போல, மார்க்க சட்டங்களை பேணிக்கொண்டு நம்பிக்கையை வையுங்கள்! ஒருவர் மற்றவர் பின்னாலேயே நிற்காதீர்கள்! அவரவருக்கு தேவையான சுதந்திரத்தை, உரிமையை கொடுங்கள்! தக்வாவை போதித்துக் கொண்டே இருங்கள்!
உங்கள் குடும்பத்திலும் என் குடும்பத்திலும் அல்லாஹ் நல்லதையே நாடுவானாக! ஆமீன்.
உங்கள் கண்களுக்கு ஏதாவது உறுதியாக தென்பட்டால் ஆலோசனையும், அறிவுரையும் வழங்குங்கள்! அல்லாஹ்வை பயந்து கொண்டால் அல்ஹம்து லில்லாஹ்! அதை அப்படியே மறந்து விடுங்கள்! இல்லை என்றால் அழகிய முறையில் உங்கள் துணையை விட்டு விலகி விடுங்கள்! முள்ளை காலில் வைத்துக் கொண்டு நொண்டி நொண்டி நடக்காதீர்கள்!
வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கே தவிர! குழப்ப நெருப்பை உள்ளத்தில் சுமந்து கொண்டு எரிந்து சாவுவதற்கு அல்ல.
கெட்டுப்போன உணவை சாப்பிட மாட்டோம் அல்லவா?
ஊசிப்போன, நாறிப்போன உணவின் பக்கம் நெருங்க மாட்டோம் அல்லவா?
அப்படித்தான் ஒழுக்க கேட்டால் வாழ்க்கை நாறிவிடக் கூடாது.
அப்படி ஒரு சோதனை நிகழ்ந்துவிட்டால், அதற்கு வன்முறையை தீர்வாக தேடாதீர்கள்! அவரின் கடிவாளத்தை அவரின் முதுகில் போட்டுவிட்டு நீங்கள் விலகி வந்துவிடுங்கள்!
நிம்மதி விலகுவதில்தான் என்றால் விலகிதான் ஆக வேண்டும். நிம்மதிக்கு விலை இந்த உலகத்தில் எதுவும் இல்லை.
அன்பாக வாழுங்கள்! அன்பாக வாழ்வதற்கு வீண் சந்தேகங்களை தவிர்த்து, நம்பிக்கையோடு வாழுங்கள்! ஒருவர் மீது ஒருவர் தேவையற்ற குற்றங்களை தேடாமல், முழுமையாக நம்பிக்கை வைத்து வாழுங்கள்! வீண் எண்ணங்களுக்கு வழிவிட்டு, சந்தேகத்தில் மூழ்கி நிம்மதியையும், பரஸ்பர அன்பையும் தொலைத்து விடாதீர்கள்!
அல்லாஹ்வே, எங்களுக்கு எங்கள் குடும்பத்தில் நிம்மதியை, அன்பை, கண் குளிர்ச்சியை தருவாயாக! ஈமானுடனும், இஸ்லாமுடனும், தக்வாவுடனும் எங்களை வாழவைப்பாயாக!
"எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!”
ஆமீன்.
***
Comments
Post a Comment
Best comment is welcomed !