உறவாடுவீர்!
உலகத்தில் ஒப்பற்ற ஓர் உறவு கணவன் மனைவியின் உறவு என்று சொல்லலாம்.
கணவன் மனைவியின் உறவை பேம் பேர் மீஸாகன் கலீளா என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதாவது, மிக தடிப்பமான ஒப்பந்தம், மிக உறுதியான உறுதிமொழி, மிகவும் வலிமையான வாக்குறுதி என்பது இதன் பொருளாகும்.
அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒருவர் மற்றவரின் உரிமையாகவும் உரிமையாளராகவும் ஆகிவிடுகிறார்கள். ஒருவர் மற்றவருக்காக மாறிவிடுகிறார்கள். ஒருவர் ஒருவரோடு இணைந்து விடுகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் ஜோடியாக ஆகிவிடுகிறார்கள். ஆகவேதான் திருமணத்தை இஸ்லாமில் ) ஸிவாஜ் - ஜோடி சேருதல் என்று சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம் திருமணத்தை நிகாஹ் என்றும் அரபியில் சொல்லப்படுகிறது. நிகாஹ் என்றால் உடலுறவு கொள்வது என்று பொருள்.
ஆம். இந்த திருமணத்தின் மூலம்தான் ஓர் ஆண். ஒரு பெண்ணை தொடுவது. உரசுவது. காமத்தோடு பார்ப்பது, அந்தரங்கத்தை அறிவது, பார்வைகள் இணைவது மட்டுமல்ல, உடலும் உடலும் ஒட்டி உரசி உணர்ச்சிகளை கிளப்பி, இன்பக் கடலில் மூழ்குவதை அல்லாஹ் அனுமதிக்கிறான்.
இப்படியாக இருவரும் தங்களுக்குள் எவ்வித திரையுமின்றி அன்னியோன்னியமாக கலந்துறவாடி மகிழ்ச்சியாக இருப்பதற்கு புதிய ஓர் உலகத்தையே அல்லாஹ் திருமணத்தின் மூலம் அவ்விருவருக்கும் ஹலாலாக ஆக்கி இருக்கிறான்.
நிகாஹ் உடைய அடிப்படை நோக்கமே மனிதனின் இயற்கையான உடல் ஆசையை ஆகுமான வழியில் ஆகுமாக்கப்பட்ட எதிர்பாலினத்தின் மூலம் தீர்த்துக்கொண்டு, தனது கற்பை பாதுகாப்பதாகும். அத்துடன் தனக்காக வருங்கால சந்ததிகளை தேடுவதுமாகும். ஆம், மனித சந்ததிகளை உருவாக்குவது திருமணத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இந்த இரண்டு முக்கிய நோக்கங்களும் ஹலாலான நிகாஹ் இன்றி நிறைவேறாது.
உலகத்தில் எல்லா உயிரினங்களிலும் இனப்பெருக்கம் என்பது மிக முக்கியமாக நிகழவேண்டிய, நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டிய ஓர் இயற்கை விதியாகும். உலகத்தில் ஊர்வன, பரப்பன, நடப்பன என எல்லா உயிரினங்களிலும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இனப்பெருக்கத்தை தவிர்ப்பதோ; அல்லது. அதை மட்டுப்படுத்துவதோ, கட்டுப்படுத்துவதோ அல்லாஹ் உருவாக்கிய இயற்கையின் மீது போர் தொடுப்பதாகும். இந்த பிரபஞ்சத்தில் அல்லாஹ் உருவாக்கி வைத்திருக்கிற படைப்புகள் மீது ஆயிரம் அணுகுண்டுகளை போட்டு அழிப்பதற்கு சமமாகும்.
இனப்பெருக்கத்தை நிறுத்துகிற; அல்லது. கட்டுப்படுத்துகிற முட்டாள்தனத்தை மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் செய்வதில்லை.
அல்லாஹ் சொல்வதை போல, மனிதன் மிகப் பெரிய அநியாயக்காரனாகவும் முட்டாளாகவும் இருக்கிறான்.
மனிதனுக்கு தெளிவான அறிவு கொடுக்கப்பட்டிருந்தும். அவன் அதை கொண்டு நேரிய முறையில் சிந்திக்க மறுக்கிறான். மாறாக, சாத்தானின் வழியில் சிந்தித்து, அழிப்பதை ஆக்குவதாகவும்; நாசப்படுத்துவதை நல்லது செய்வதாகவும் மனிதன் கற்பனை செய்து கொள்கிறான்.
சரி, தலைப்புக்கு வருவோம்.
கணவன் மனைவி இருவரும் ஒருவர் மற்றவருக்கு ஆடை என்று அல்லாஹ் சொல்கிறான்.
ஆம், அப்படித்தான் ஒருவர் ஒருவரோடு, உடலோடு உடலாக ஒட்டிக் கொள்ள வேண்டும்.
நாம் புதிய ஆடையை அணிந்தவுடன், மகிழ்ச்சி அடைவதுபோல ஒவ்வொரு முறையும் கணவனின் உடல் மனைவியின் உடலுடன் சேரும்போது அவர்கள் புத்தம் புதிய உணர்வுகளையும், இன்பங்களையும். ஆனந்தத்தையும் அனுபவிக்கிறார்கள்.
அது ஒவ்வொரு முறையும் புதிய அனுபவமாகவும் இன்பமாகவும் இருப்பதாவது. அதன் மீது மனிதனுக்கு சடைவு வரக் கூடாது என்பதற்காக இருக்கலாம். ஏனெனில், மனிதன் அதை சடைந்து விட்டால் பிறகு இனப்பெருக்கத்தில் குழப்பம் ஏற்பட்டு விடும். அது மட்டுமா இருவரின் அன்பிலும், பாசத்திலும், அக்கறையிலும், ஒருவருக்கு மற்றவர் மீதுள்ள ஈடுபாட்டிலும் விரிசல் ஏற்பட்டு விடும்.
காரணம் என்னவென்றால், தேவை என்பது உலக வாழ்க்கையின் இயக்கத்துடைய அடிப்படையாகும். தேவை என்ற ஒன்றை மனிதனுக்கு அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கவில்லையென்றால் மனிதன் எந்த வேலைக்கும் செல்ல மாட்டான். மனிதன் வேலைக்கு செல்லவில்லையென்றால் உலகத்தில் யாரும் சாப்பிட முடியாது. குடிக்க முடியாது. ஓர் இடத்திலிருந்து வேறு ஓர் இடத்திற்கு செல்ல முடியாது. யாரும் யாரிடமும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். ஒவ்வொருவரும் அவரவரின் வேலையை அவரே செய்ய வேண்டும். இது உலகத்தில் சாத்தியமற்ற ஒன்றாகும்.
ஆகவே, கணவனுக்கு மனைவியின் தேவையையும் மனைவிக்கு கணவனின் தேவையையும் அல்லாஹ் ஆக்கி இருப்பது அவனது ஒப்பற்ற வல்லமை மிக்க ஞானத்தின் வெளிப்பாடாகும்.
ஆம். இருவரும் இந்த தாம்பத்திய இல்லற உறவின் மூலம் ஒவ்வொரு நாளும் தங்களுடைய திருமண பந்தத்தை புதுப்பித்துக் கொள்கிறார்கள். தங்கள் முதலிரவை நினைவுப்படுத்திக் கொள்கிறார்கள். தங்களை புதுமண தம்பதிகளாக உணர்கிறார்கள். இது. அவர்களுக்கு வாழ்க்கையில் உற்சாகத்தை தருகிறது; வாழ்க்கையில் அவர்களுக்கு பிடிப்பை தருகிறது; அவர்களுக்கு வாழ்க்கையின் மீது ஆசையையும், பற்றையும், ஈடுபாட்டையும் கொடுக்கிறது; வாழ்க்கையின் அர்த்தத்தை உணர செய்கிறது. மனிதனுக்கு மிகப் பெரிய நிம்மதியை கொடுக்கிறது; மன அமைதியை கொடுக்கிறது.
நீங்கள் மன அமைதி பெறுவதற்காக உங்கள் துணைகளை உங்களிலிருந்து அல்லாஹ் படைத்திருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்று என்று அல்லாஹ் கூறுவதில் மாபெரும் தத்துவம் இருக்கிறது.45
படைத்தவன் (மனிதனின் தேவையை) அறியமாட்டானா? என்று (ஸூரா அல்முல்கில்) அந்த இறைவன் மனிதனிடம் கேள்வி கேட்கிறான்.
நம்மையும், நமது ஆசைகளையும், நமது உணர்வுகளையும், நமது தேவைகளையும் படைத்தவன் அவன். ஆகவே, அவற்றை நிறைவேற்ற ஆரோக்கியமான, இலகுவான வழிகளையும் அவன் உருவாக்கி இருக்கிறான். ஆகவே, அவன் காட்டிய வழியை குறை சொல்பவனும்; அல்லது, அதை மாற்றுபவனும்; அல்லது, வேறு வழியை தேடுபவனும் உலக மகா முட்டாளாக, மூடனாக, மூர்க்கனாக, முரடனாக, சாத்தானின் நண்பனாக இருப்பான்.
சரி, குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வருவோம்.
குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியின் தத்துவம் பல காரியங்களில், பல விஷயங்களில் மறைந்திருக்கிறது. அவை எல்லாமே சம நிலையில் பேணப்பட வேண்டும். அவை ஒவ்வொன்றுக்கும் அதற்கேற்ப முக்கியத்துவமும் தகுதியும் தரப்பட வேண்டும். ஒன்றைப் பேணி, மற்றொன்றை புறக்கணித்து விடக்கூடாது. ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்றொன்றை கைவிட்டு விடக்கூடாது. ஒன்றை கவனித்து, மற்றொன்றை அலட்சியம் செய்யக் கூடாது.
குழந்தைகள் பெற்றுக்கொள்ள முறையான தாம்பத்தியம் மிக முக்கியம். கணவன் மனைவி இருவருக்குமிடையில் அன்பு அதிகரிக்க, பாசம் பீறிட, நேசம் நிலைத்திட, உறவுகள் சிறந்திட, பரஸ்பர ஒற்றுமை ஓங்கிட, ஒருவருக்கு மற்றவர் மீது அன்பும் அக்கறையும் அதிகரித்திட, ஒருவர் மீது ஒருவருக்கு தேடல் அதிகமாகவும் நீடித்திருக்கவும் இந்த இல்லற உறவு மிக அவசியம். அப்படித்தான் அல்லாஹ் அமைத்திருக்கிறான்.
அப்படி இல்லை என்று ஒருவன் மறுத்தால் அவன் ஆண்மை அற்ற பொட்டையனாக இருப்பான். பெண் ஒருத்தி இதை மறுத்தால் அவள் பெண்மையற்றவளாகத்தான் இருப்பாள்.
இறைத்தூதர்கள் ஆன்மிகத்தின் உச்சத்தை எட்டியவர்கள்: மறுமையின் கவலை மிகைத்தவர்கள்; அல்லாஹ்வின் அன்பில் ஆழமாக மூழ்கியவர்கள்; அவனது நினைவில் தங்களையே மறந்து விடுபவர்கள். அப்படி இருந்தும் அவர்கள் ஆண்கள் என்ற அடிப்படையில் ஓர் முழுமையான ஆணுக்குள்ள ஆண்மையின் தேடலாக அவர்களுக்கு பெண்கள் மீது ஹலாலான ஈர்ப்பும் ஆசையும் இருந்தது. அதை வெளிப்படுத்துவதில் அவர்கள் எந்த தவறையும் காணவில்லை. அதில் அவர்கள் போலியான வெட்கத்தின் வேஷம் போடவில்லை. வெளியில் துறவிகளாகவும் உள்ளே கள்ளத்தனம் செய்பவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை. தேவைகளுக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்து மிக மகிழ்ச்சியாக இன்பமாக வாழ்ந்தார்கள் நபிமார்களும் ரஸூல்மார்களும்.46
எனக்கு உலகத்தில் பிடித்தமான இரண்டில் ஒன்று மனைவிகள் என்று நபி அவர்கள் தன்னை பற்றி மக்களுக்கு எவ்வித வரட்டு கூச்சமும் இன்றி சொன்னார்கள் என்றால் மனைவியின் அவசியத்தையும் அவளால் ஆணுக்கு கிடைக்கிற இன்பத்தையும், சுகத்தையும், நிம்மதியையும் இங்கே நபி அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்."
அதுமட்டுமா, சில சமயம் எல்லா மனைவிகளுடன் அவரவருடைய வீட்டுக்கு சென்று ஒரே நாளில் தாம்பத்திய உறவும் வைத்திருக்கிறார்கள். 48
ஒரு மனைவிக்கு பின்னர் இன்னொரு மனைவியுடன் சேர்வது என்றால் உடலுறவுக்கு பின்னர் உறுப்பை நன்கு கழுவிவிட்டு பிறகு குளித்து அல்லது உளூ செய்து சுத்தமாகி கொள்ளுங்கள் என்று வழிகாட்டினார்கள்.49
மனைவியுடன் இருந்த பின்னர் குளித்துவிட்டு தலையில்
46. அல்குர்ஆன் 13:38.
47. அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் . நூல்: ஸஹீஹ் நசாயி, எண்: 3939.
48. அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் .நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 5215.
49. அறிவிப்பாளர்: அபூ ராஃபிஃ . நூல்: ஸுனன் அபூதாவூது, எண்: 219.தண்ணீர் சொட்ட தொழுமிடத்தில் வந்து நின்றிருக்கிறார்கள்.50
ஒரு முறை மனைவியிடம் உடலுறவு கொண்டிருந்தார்கள். குளிக்கவில்லை. மறந்துவிட்டார்கள். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின்னர், தொழுகை நடத்த வந்துவிட்டார்கள். பிறகு அல்லாஹ் அவர்களுக்கு நினைவூட்டினான். உடனே தோழர்களை அப்படியே நிற்க வைத்துவிட்டு குளிக்க சென்றார்கள். பிறகு வந்து தொழுகை நடத்தினார்கள்.51
பெண்களுக்கு மாதம் மாதம் வருகிற மாதவிடாய் காலத்தில் நபி அவர்களின் மனைவிமார்கள் இருக்கும்போது கூட நபி அவர்கள் அந்த மனைவிகள் மூலம் ஆகுமான முறையில் இன்பம் பெற்று இருக்கிறார்கள். தங்களது கீழாடையை நன்கு இருக்கமாக கட்டிக்கொள்ள சொல்வார்கள். குறிப்பாக ஹைழ் வருகிற அந்த உருப்பின் மீது துணியை கட்டிக்கொள்ள சொல்வார்கள். பிறகு அந்த இடத்தை தவிர்த்துவிட்டு மனைவியை கட்டி அனைத்து இன்பம் அடைவார்கள்.32
அந்தளவு மனைவிகளிடம் தாம்பத்திய உறவு அது முழுமையாக இருந்தாலும் சரி, இல்லை அறை முழுமையாக இருந்தாலும் சரி அதை அந்த மனைவியிடம் அனுபவிப்பதில் அவர்கள் எந்த குறையும் வைக்கவில்லை. நாளை இன்னொரு மனைவியிடம் சென்று அங்கு அனுபவித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடவில்லை.
குளிப்பதற்கு இன்றிருக்கிற தண்ணீர் வசதிகள் அன்று இல்லை என்றாலும் பெரும்பாலும் இந்த தேவைகளை இரவிலேயே நபி அவர்கள் நிறைவேற்றிக் கொண்டார்கள் என்றால் இந்த தாம்பத்திய உறவுக்கு நபி அவர்கள் எந்தளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை நாம் புரிய வேண்டும்.
50. அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் எண்: 605.
51. அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா
ஆ. நூல்: ஸஹீஹ் முஸ்லிம் எண்: 605.
52. அறிவிப்பாளர்: மைமூனா பின்த் அல்ஹாரிஸ் ஆயிஷா நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 302,303. நூல்: ஸஹீஹ் முஸ்லிம் எண்: 293.அதுமட்டுமா, போர், ஹஜ், உம்ரா போன்ற சிரமமான பயணங்களில் கூட நபி அவர்கள் மனைவிகளை விட்டு பிரியவில்லை. அவர்களில் பலரை அல்லது சிலரை தம்மோடு அழைத்துச் சென்றார்கள். இரவுகளை தமது மனைவிகளோடு கழித்தார்கள். இது நபி அவர்கள் குடும்ப வாழ்க்கையில் தாம்பத்திய உறவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மிக ஆழமாக உணர்த்துகிறது.
தக்வாவின் உச்சத்தை அடைவதற்காக அல்லாஹ் கடமையாக்கிய நோன்புடைய மாதத்தில் கூட இரவு காலங்களில் உங்கள் மனைவிகளுடன் நீங்கள் இல்லற உறவு வைத்து உங்கள் ஆன்மாக்களை சாந்தி அடைய செய்யுங்கள். குழந்தை செல்வத்தை தேடுங்கள் (அல்குர்ஆன் 2:187) என்று அல்லாஹ் அனுமதி அளித்திருப்பதை ஆழமாக கவனித்து பார்ப்பவருக்கு புரியவரும், தாம்பத்திய உறவுடைய அவசியமும், அதன் பலனும், நன்மையும்.
அது மட்டுமா, ஹஜ் உடைய பயணத்தில் உம்ராவை முடித்த பின்னர் இஹ்ராமை விட்டு வெளியேறி உங்கள் மனைவிகளிடம் நீங்கள் சுகத்தை தேடிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான் என்றால் இந்த தாம்பத்திய உறவுடைய அவசியம் மனிதனுக்கு எந்தளவு இருக்கிறது. என்பதை புரிய முடியும். ஒரே இஹ்ராமில் செய்யப்படுகிற உம்ரா, ஹஜ்ஜை விட உம்ராவிற்கு பின்னர் இஹ்ராமை முடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு பிறகு ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டுகிற ஹஜ் தமத்துஃ சிறந்தது என்று நபி அவர்கள் வழிகாட்டியதிலிருந்தும் இந்த தாம்பத்திய உறவின் அவசியமும் சிறப்பும் புரிய வருகிறது.
நபி அவர்கள் தமது வாழ்நாளின் இறுதி நேரத்தை எதிர்பார்த்திருந்தபோது கூட ஒரு பக்கம் இறைவழிபாட்டை எப்படி கவனத்தில் வைத்திருந்தார்களோ அதுபோன்று மனைவிகளில் தனக்கு மிகப் பிரியமான மனைவியிடம் தங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதை வெளிப்படுத்துவதில் அவர்கள் வெட்கப்படவில்லை. அவர்களின் ஆசையை மற்ற மனைவிமார்கள் நிறைவேற்றினார்கள். நபி அவர்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா உடைய வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள். 53
நபி அவர்கள் மனைவிமார்களுடன் மட்டுமல்லாமல், அடிமைப் பெண் மூலமும் வாழ்க்கையில் இல்லற சுகத்தை தேடி இருக்கிறார்கள். இதில் எவ்வித குறையும் இல்லை என்பதை மக்களுக்கு தமது செயல் மூலம் நிரூபித்து காட்டினார்கள். பெரும்பாலும் பல ஸஹாபாக்களும் கூட மனைவிகளுடன் பல அடிமைப் பெண்களையும் தங்கள் இல்லற வாழ்க்கைக்காக வைத்திருந்தார்கள். அவர்கள் மூலம் குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள்.
நபி அவர்கள் தமது அடிமைப் பெண் மாரியா மூலம் தமக்கு கிடைக்கப்பெற்ற இப்ராஹீம் என்ற ஆண் மகன் மீது நாம் சொல்லால் வர்ணிக்க முடியாத பாசத்தை வைத்திருந்தார்கள். அந்த குழந்தை இறந்தபோது நபி அவர்கள் அழுதார்கள். இந்த அழுகையானது அல்லாஹ் உள்ளத்தில் ஏற்படுத்திய கருணை, இரக்கம், பாசம் என்று மக்களுக்கு விளக்கம் கூறினார்கள்.54
நபியவர்களின் மகனார் இப்ராஹீம் உயிரோடு இருந்திருந்தால் அவர் நபியாக ஆகியிருப்பார். ஆனால், நபி அவர்களுக்கு பின்னர் நபி இல்லை. அவர்கள்தான் இறுதி நபி ஆவார்கள் என்று அந்த மகனாருக்கு அல்லாஹ்விடம் இருந்த கண்ணியத்தை பற்றி ஒரு நபித்தோழர் சொல்லிக் காண்பிக்கிறார்.55
53. அறிவிப்பாளர்: ஆயிஷா நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 1389.
54. அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் .நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 1303.
55. அறிவிப்பாளர்: இஸ்மாயில் இப்னு அபூ காலித் . நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 6194.தமது மனைவியுடன் இச்சையாக எவ்வளவு நேரம் விளையாண்டாலும் அது அல்லாஹ்விடம் குற்றமில்லை. அது விரும்பத்தக்க ஒன்று என்று நபி அவர்கள் மக்களுக்கு தாம்பத்திய உறவை ஆர்வமூட்டி கூறி இருக்கிறார்கள். (அல்ஹதீஸ்) ஏனெனில், இத்தகைய விளையாட்டின் மூலம்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லற உறவின் மீது ஆசை ஏற்படுகிறது. ஒருவர் மற்றவரின் இச்சையை தீர்ப்பதில் மனமுவந்து இறங்கி வருவார்கள் என்பதை நபி அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். 50
மனக்கசப்புகள் நீங்க, கணவனுக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவன் மீதும் அன்பும் பாசமும் அக்கறையும் பொங்கி எழ தாம்பத்திய உறவு மிக மிக முக்கியமான ஒரு கீ பாயின்ட் ஆகும்.
மனைவி கணவனுக்காக நல்ல ஆடை அணிந்து தன்னை அலங்கரிப்பதும் அவ்வாறே கணவன் தன்னை அழகுபடுத்திக் கொள்வதும் இஸ்லாமில் மிக முக்கியமான சட்டமாகும்.
அதிகம் நோன்பு வைத்து, அதிகம் இரவு வழிபாடு செய்து உன்னை பலவீனப்படுத்தி உன் மனைவியோடு உனது ஆசையையும் அவளின் ஆசையையும் நீ நிறைவேற்ற முடியாமல் போவதை நபி அவர்கள் அனுமதிக்கவில்லை.
அப்படி செய்த தமது தோழர்களை கண்டித்தார்கள். உமது மனைவிக்கு உம் மீது கடமை இருக்கிறது என்று நபி அவர்கள் அந்த தோழர்களை எச்சரித்தார்கள். அந்த தாம்பத்திய கடமையை நபி அவர்கள் அதை மறந்த தோழர்களுக்கு நினைவூட்டினார்கள். 57
56. அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் .நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ எண்: 4534.
57. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 5199.அது அலட்சியம் செய்யப்படுவதை நபி அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. மறுமையின் தேடல் என்ற பெயரிலோ, இறைவழிபாட்டில் மூழ்குதல் என்ற சாக்குப்போக்குகளை கூறியோ தாம்பத்திய உறவை விட்டு விலகி வாழ்வதை நபி அவர்கள் அனுமதிக்கவில்லை. அதை கடுமையாக கண்டித்தார்கள்.56.
நபி அவர்களும் ஸஹாபாக்களும் தங்கள் வயோதிகத்தில் திருமணம் முடித்ததிலிருந்தும்; வயோதிகத்தில் குழந்தை பெற்றெடுத்ததிலிருந்தும்; இறுதி மூச்சு வரை உள்ளூரிலும் பயணத்திலும் மனைவிகளுடனும் அடிமைப் பெண்களுடனும் தாம்பத்திய உறவு வைத்ததிலிருந்தும் "தாம்பத்திய உறவு மனிதனின் சீரான வாழ்க்கைக்கு எந்தளவு மிக மிக அவசியமானது, முக்கியமானது" என்பதை பொது அறிவுள்ள ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும்.
தாம்பத்திய உறவுக்கு சக்தி இருந்து, நோய் போன்ற எவ்வித தடைகள் இல்லாதபோது, கணவனின் ஆசையை நிறைவேற்றாமல் விலகி செல்கிற பெண் மீது இறைவனின் சாபமும் வானவர்களின் சாபமும் இறங்குவதாக நபி அவர்கள் எச்சரித்தார்கள். 5
மனைவி அடுப்படியில் உணவு சமைத்துக் கொண்டிருந்தாலும் அல்லது வாகனத்தின் மீது அமர்ந்திருந்தாலும் கணவன் படுக்கைக்கு அழைத்தால் மறுப்பு சொல்லக் கூடாது என்று மார்க்கம் வழிகாட்டி, தாம்பத்தியத்தின் அவசியத்தை உடனே நிறைவேற்றிக்கொள்ள தூண்டுகிறது.60
கணவன் உள்ளூரில் இருக்கும்போது அவனது அனுமதி
58. அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் நூல்: ஸஹீஹுல் புகாரி : 5063.
59. அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ஆ. நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 3237.
60. அறிவிப்பாளர்: தல்க் இப்னு அலீ ஹனஃபி நூல்: ஸுனனுத் திர்மிதி1660
இல்லாமல் மனைவி உபரியான நோன்பு வைப்பதை நபி அவர்கள் தடுத்ததிலிருந்தும் குடும்ப வாழ்க்கையில் தாம்பத்திய உறவின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நாம் புரியலாம்.
சில தம்பதிகள் ஓரிரு பிள்ளைகளை பெற்றுக் கொண்ட பின்னர், அந்த பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் தனி தனி அறையில் இரவு கழிக்கிறார்கள். ஒரே வீடு. ஆனால், இரவு தங்குமிடம் வேறு வேறு, ஒரே அறையாக இருந்தாலும் படுக்கை வேறு வேறு, கணவனை விட்டு மனைவி அல்லது மனைவியை விட்டு கணவன் விலகி செல்வது இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகி விட்டது.
எந்த பெண், கணவனின் இல்லற அழைப்புக்கு பதிலளித்து அவனுக்கு பணிந்து நடக்கிறாளோ அவளை ஸாலிஹாத் - நல்ல பெண்களில் உள்ளவள் என்று குர்ஆன் புகழ்கிறது. இல்லற அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை என்றால், கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லை என்றால் அறிவுரை கூறுங்கள். அவளுடன் படுக்கையில் பேசாதீர்கள். தேவைப்பட்டால் காயம் ஏற்படாதவாறு அவளை அடித்து திருத்துங்கள் என்று அல்குர்ஆன் அறிவுரை வழங்குகிறது. அவள் கீழ்ப்படிந்து நடந்து கொண்டால் அவள் மீது வீணான குறைகளை தேடாதீர் என்று அல்குர்ஆன் எச்சரிக்கிறது.2
தனது ஆசையை பெண் நிறைவேற்றி கொடுக்கவில்லை என்றால் அவளை தலாக் செய்வதில் ஆண் மீது எவ்வித குற்றமும் இல்லை, அவ்வாறே தனது ஆசையை நிறைவேற்றி கொடுக்க முடியாத. குழந்தை பாக்கியம் தர முடியாத ஆணிடமிருந்து விவாகரத்து பெற பெண்ணுக்கு முழு உரிமையை மார்க்கம்
61. அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா .நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 5195.
வழங்கி இருக்கிறது. தாய்மை அடைவதை பெண்ணின் தார்மீக உரிமையாக இஸ்லாம் பார்க்கிறது.
தாம்பத்திய உறவு இல்லாமல் வாழ்வது வெளிச்சம் வராத பூட்டப்பட்ட குறுகிய இருட்டு அறையில் சிறை வைக்கப்பட்டது போலாகும்.
இல்லற உறவு இல்லாமல் வாழ்வது கடும் வெப்பம் நிறைந்த வறட்சியான பாலைவனத்தில் குடிக்க நீர் இல்லாமலும் ஒதுங்க நிழல் இல்லாமலும் வாழ்வது போலாகும்.
ஆண் பெண் காம உறவு இல்லாமல் வாழ்வது உணவும் நீரும் இல்லாமல் வாழ்வது எவ்வளவு சிரமமோ. அது முடியாத ஒன்றோ அது போலாகும்.
ஓடுகிற தண்ணீரை அடைப்பதும், வீசுகின்ற காற்றை நிறுத்துவதும் எவ்வளவு சிரமமோ அதுபோன்றுதான் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் தனது உடல் ஆசையை நிறைவேற்ற ஆகுமான வழி இல்லாமல் வாழ்வது.
காற்று இல்லாமல் உடல் புழுங்குவதை விட காம ஆசை நிறைவேறாமல் உள்ளம் புழுங்குவதை தாங்கிக்கொள்வது மிக மிக கடினம்.
பசியினால் வயிற்றில் ஏற்படும் வலியை சமாளிப்பதை விட காமம் தீர்க்கப்படவில்லை என்றால் மனிதனின் மனதில் ஏற்படுகிற நெருக்கடியை சமாளிப்பது மிக கடினம்.
மரணம் ஒன்று மட்டுமே ஓர் உயிரினத்தின் காமத்தின் முடிவாக இருக்குமே தவிர வயதோ பலவீனமோ காமத்தின் முடிவாக இருக்க முடியாது. ஒவ்வொரு வயதுக்கும் அந்த வயதுக்கு ஏற்றார்போல காமம் இருக்கும். இதை மறுப்பவன் கண்ணிருந்தும் கபோதியாவான்.
உங்கள் வாழ்க்கை துணைக்கு அவரின் உடல் ஆசையை தணிக்காமல் உங்களுடன் அவரை வாழ சொல்வது எப்படி என்றால் ஒரு பறவையை அதன் இறக்கைகளை வெட்டிவிட்டு, பிறகு அதை ஆகாயத்தில் தூக்கி வீசி பறக்க சொல்வதை போன்றுதான் அது.
அல்லது ஒரு மீனை கடலிலிருந்து பிடித்துக்கொண்டு வந்து அதை கரையில் வீசி எறிந்து நீ நீந்து என்று சொன்னால் அது எவ்வளவு சிரமப்படுமோ அப்படித்தான் அதுவும்.
இன்னும் நூறு உதாரணங்களை இன் ஷா அல்லாஹ் கூற முடியும்! புத்தி உள்ளவர்களுக்கும் சிந்திப்பவர்களுக்கும் இதுவே போதும்.
ஆகவேதான், தனது கணவன் போருக்கு சென்று நீண்ட நாள் ஆனதால் உடல் ஆசையினால் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் நிலையை அறிந்த கலீஃபா உமர் அவர்கள் நான்கு மாதங்களை போரில் கழித்த ஆண்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்பும்படி அரசாணை பிறப்பித்தார்கள். 3
இன்னும், இஸ்லாமில் நீண்ட காலமாக ஒருவரை சிறைப்படுத்தி வைப்பது என்பது அறவே இல்லை. குற்றவாளி ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருப்பினும் சரி, அவர் போரில் கைது செய்யப்பட்டவராக இருந்தாலும் சரி, அவரை அடைத்து வைத்து இம்சை படுத்தக் கூடாது. அவர்களை அடிமைகளாக்கி உங்கள் இல்லங்களில் வைத்துக் கொள்ளுங்கள்!
பெண் அடிமைகள் இஸ்லாமை ஏற்றால் அவர்களுடன் நீங்கள் இல்லற உறவு வைக்கலாம். அவர்களில் உள்ள ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! இப்படியாக அடிமைகளுக்கும் கூட இல்லற வாழ்வுடைய உரிமையை வழங்கிய ஒப்பற்ற மார்க்கம் இஸ்லாம்.
மனிதனின் அத்தனை இயற்கை தேவைகளையும் ஆசைகளையும் அழகிய முறையில் நிறைவேற்றிக்கொள்ள
63. அறிவிப்பாளர்: இப்னு உமர் 4 நூல்: பைஹகி எண்: 17908.
ஆரோக்கியமான நேர்மையான வழிகளை காட்டுகிற மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
ஆகவே, என் மார்க்க சகோதர சகோதரிகளே! உங்கள் உலக அல்லது மார்க்க பணிகளை காரணம் கூறி தாம்பத்திய உறவை மறந்தோ. அலட்சியம் செய்தோ. புறக்கணித்தோ, அதை விட்டு விலகி இருந்தோ உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் துணையுடைய வாழ்க்கையின் இன்பத்தையும், மகிழ்ச்சியையும். சுகத்தையும், ஆனந்தத்தையும் தொலைத்து விடாதீர்கள்.
பெண்களே உங்களை அலங்காரப்படுத்தி உங்கள் கணவனுக்கு உங்கள் மீது ஆசைவரும்படி வைத்துக் கொள்ளுங்கள்! ஆண்களே உங்கள் உடலை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொண்டு நீங்களும் இன்பம் பெற்று உங்கள் வாழ்க்கை துணைக்கும் இன்பத்தை கொடுங்கள்!
மனைவியோடு உறவுகொள்வதை நன்மையான ஒரு காரியமாக நபி அவர்கள் சொன்னதை புரிந்து கொள்ளுங்கள்! ஆம், ஆசையை ஹராமான வழியில் தீர்த்துக்கொண்டால் பாவம்தானே. அப்படி என்றால் அதை ஹலாலான வழியில் தீர்த்தால் ஏன் அது நன்மையாக ஆகாது என்று விளக்கமும் தெளிவும் நபி அவர்கள் கொடுத்தார்கள். 64
தண்ணீர் இல்லை என்றாலும், தொழுகை முன்னால் இருக்கிறதே என்று தாம்பத்தியத்தை நீங்கள் நிறுத்த வேண்டாம். நீங்கள் தயம்மும் செய்து சுத்தமாகி தொழுது கொள்ளலாம் என்று அல்லாஹ் அனுமதித்து இருக்கிறான்.
நீங்கள் நோயுற்று தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறபோது கூட தாம்பத்திய வாழ்க்கையில் மனம் நாடினால் நீங்கள் தாம்பத்திய உறவை நிறுத்தாதீர்கள். உங்கள் ஆசையை
64. அறிவிப்பாளர்: அபூதர் அல்கிஃபாரி .நூல்: ஸஹீஹ் முஸ்லிம். எண்: 1006.
உங்கள் மனைவியிடம் நிறைவேற்றிய பின்னர், நீங்கள் குளிக்க முடியவில்லை என்றால் பரவா இல்லை. தயம்மும் செய்துகொள்ளுங்கள் என்று அல்லாஹ் அல்குர் ஆனில் அனுமதித்ததை புரிந்து கொள்ளுங்கள்!65
மருத்துவ துறையின் உலக அறிஞர்கள் ஒருமித்து கூறுகிறார்கள். "ஆகுமான இல்லற உறவினால் மனிதனுக்கு முழுமையான உற்சாகமும் உடல் வலிமையும் சுறுசுறுப்பும் கிடைக்கின்றன” என்று.
எத்துனை முறை தன் இணையுடன் சேர்ந்து பிரிந்து பறந்து விளையாண்டு மகிழ்கிற சிட்டுக்குருவியை பாருங்கள்!
அன்பாக கொஞ்சி விளையாடுகிற. முத்தங்களையும் அன்புகளையும் நிமிடத்திற்கு பலமுறை பரிமாறிக்கொள்கிற காதல் பறவைகளை பாருங்கள்!
ஜோடியாக சுற்றி திரிந்து இனப்பெருக்கம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிற உயிரினங்களை பாருங்கள்!
காம உறவு இல்லாமல் எந்த உயிரினமும் இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அது மிக முக்கியம். அதை உணர்ந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்!
உடலும், உள்ளமும், அகமும், புறமும், ஆன்மாவும், ஆசையும் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ தாம்பத்திய வாழ்க்கை மிக மிக அவசியம் என்பதை புரிந்து அந்த இன்பத்தை ஒருவர் மற்றவருக்கு கொடுக்க தவறாதீர்கள்!
உங்கள் வாழ்க்கை துணையின் ஆசையை உங்களால் அறவே நிறைவேற்ற முடியவில்லை எனில், அதற்கு உங்களிடம் பலவீனம் இருப்பது மருத்துவ ரீதியாக ஊர்ஜிதமாகி, அதை சரிசெய்வதும் அறவே முடியாது என்றிருந்தால் உங்களுக்கான
65. அல்குர்ஆன் 443,மார்க்க ஆலோசனை இதுதான்.
அதாவது. உங்கள் வாழ்க்கை துணைக்கு தாம்பத்தியம் தேவையாக இருந்தும் உங்களால் அதை கொடுக்க முடியவில்லை எனில் நீங்கள் ஆணாக இருந்தால் அவளுக்கு அழகிய முறையில் நல்ல பொருளாதார அன்பளிப்பு செய்து அவளை விட்டுவிடுங்கள்! அவள் விரும்பியவனை மணம் முடித்து அவளுக்கு அல்லாஹ் விதித்த சந்ததிகளை அவள் தேடிக்கொள்ளட்டும். அவள் தாய்மை அடையட்டும். அல்லாஹ்வின் நாட்டத்தில் சந்ததி இல்லை என்றாலும் தாம்பத்திய உறவின் மூலம் அவள் வாழ்க்கையின் சுகத்தையும் இன்பத்தையும் அனுபவித்து நிம்மதியாக அமைதியாக சாந்தமாக வாழ்ந்து கொள்ளட்டும்.
அல்லது, பலவீனம் பெண்ணாகிய உன்னிடம் இருந்தால், உனது கணவனுடன் படுத்து அவனுக்கு ஹலாலான ஆசையை தீர்க்க உன்னால் இயலவில்லை எனில், அதற்கு உன்னிடம் மார்க்க அனுமதித்த காரணமும் இருந்தால் அல்லாஹ் உன்னை மன்னிக்க போதுமானவன். நீ உனது கணவன் இன்னொரு திருமணம் செய்வதை தடுக்காதே! அதில் குறுக்கே நிற்காதே! அவன் இன்னொரு மனைவியை மணம் முடித்து தனக்கு சந்ததிகளை தேடிக்கொள்ளட்டும். அல்லது. வாழ்க்கையின் இன்பத்தை அனுபவித்து கொள்ளட்டும். நீயும் அவனுக்கு மனைவியாக அவனுடன் வாழ்ந்து. அவனது செல்வத்தின் மூலமும் அரவணைப்பின் மூலமும் பலன் பெற்றுக்கொள்!
இதற்கு மாற்றமாக குருட்டுத்தனமான செண்டிமெண்ட் பேசிக் கொண்டு; அல்லது, காஃபிர்களின் கலாச்சார காதல் டயலாக் பேசிக் கொண்டு உங்கள் இம்மை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்!
நான் கூறிய செய்திகள் சரியானதாக இருந்தால் அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்தாகும். தவறாக இருந்தால் அவை என் புறத்திலிருந்தும் ஷைத்தான் புறத்திலிருந்துமாகும்.
அல்லாஹ்வே! சொல்லிலும் செயலிலும் நேரான நல்லதின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவாயாக! உன் பக்கமே எங்கள் முகங்களை திருப்புவாயாக! இம்மையிலும் அழகியதை மறுமையிலும் அழகியதை எங்களுக்கு கொடுப்பாயாக! ஆமீன்.
அல்லாஹ்வே! எங்களுக்கு இஸ்லாமிலும் இல்லறத்திலும் மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கையை தந்தருள்வாயாக!
"எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!”
ஆமீன்.
Comments
Post a Comment
Best comment is welcomed !