போட்டிப் போட வேண்டாம்! பிடிவாதம் பிடிக்க வேண்டாம்!

 


போட்டிப் போட வேண்டாம்! பிடிவாதம் பிடிக்க வேண்டாம்!


இணங்கி வாழ்வது. விட்டுக்கொடுத்து போவது. சகித்து செல்வது இன்பமான இனிமையான இல்லற வாழ்க்கைக்கு மிக முக்கியமான அருமருந்தாகும்.


வாழ்க்கை என்பது விட்டுக்கொடுத்து வாழ்வதுதானே தவிர, நீயா நானா என்று போட்டி போடுவதற்குரிய கேம் அல்ல வாழ்க்கை.


பணிந்து செல்வதிலும்; தான் விரும்பியதை தனது துணைக்காக விட்டுக் கொடுத்து போவதிலும்; பெருந்தன்மையாக நடந்து கொள்வதிலும்; பிடிவாதம் பிடிக்காமல் உன் விருப்பத்தை நான் ஏற்கிறேன் என்று இறங்கிப்போவதிலும்தான் வாழ்க்கையின் இன்பம் இருக்கிறது.


இன்று, பலருடைய வாழ்க்கை நரகமாக மாறி இருப்பதற்கு காரணம் பொருளாதாரம் குறைந்திருப்பதோ; வீடு சிறியதாக, நெருக்கடியாக இருப்பதோ; வருமானம் குறைவாக இருப்பதோ; செல்வ சேமிப்புகள் இல்லாதிருப்பதோ; நோய்நொடிகள் தொற்றிக் கொண்டிருப்பதோ அல்ல. அல்லது, வேறு விதமான வசதி இன்மையோ அல்ல. மாறாக, கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இருக்கிற ஈகோ பிரச்சனையும் நீயா நானா என்ற போட்டி மனப்பான்மையும்தான் குடும்ப பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.


பலருடைய நல்ல வாழ்க்கை நாசமாகிப்போனதே இந்த


போட்டி மனப்பான்மையினால்தான். நான் ஏன் இவனுக்கு


விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மனைவியும், நான் ஏன்


இவளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கணவனும்


பிடிக்கிற பிடிவாதம்தான் சச்சரவுகளுக்கும் பிரிவினைகளுக்கும்


மனக்கசப்புகளுக்கும் முக்கிய காரணம்.


பிரியத்துடன்தான் கல்யாணம் நடந்தது. முழு சம்மதத்துடன்தான்


திருமணம் நடைபெற்றது. எல்லோரும் வாழ்த்தினார்கள்.


இருவீட்டார்களும் நல்லவர்கள்தான். கணவன் மனைவி


இருவரும் அவரவர் இடத்தில் நல்லவர்தான். ஆனால்,


இருவரில் ஒவ்வொருவரிலும் ஒரு ஷைத்தான் இருப்பான்.


அவன் சும்மா இருப்பானா? நீ ஏன் இறங்கி போக வேண்டும்?


என்று ஒவ்வொருவரையும் அவரின் ஷைத்தான் ஏத்தி


விடுவான்.


விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போக மாட்டார்.


பணிபவர் தாழ்ந்துவிடமாட்டார்.


மன்னிப்பவரின் கண்ணியம் குறைந்துவிடாது.


இந்த உண்மைகளை நாம் காலம் சென்ற பின்னர்தான் புரிய வருகிறோம். பெருமை அல்லாஹ்விற்கு மட்டும் தகுதியான குணம், படைப்புகளிடம் பெருமை இருப்பது அல்லாஹ்விற்கும் பிடிக்காத குணம், மக்களுக்கும் பிடிக்காத குணம்.


பெருமை பிடித்தவர்களையும் பெருமை அடிப்பவர்களையும் யாரும் விரும்ப மாட்டார்கள்.


பணிவு என்பது வானவர்களின் குணம். அது உள்ளவர்களை அல்லாஹ்வும் விரும்புகிறான். மக்களும் விரும்புகிறார்கள். எல்லோராலும் அவர்கள் நேசிக்கப்படுவார்கள். எங்கு சென்றாலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படும். மக்கள் அவர்களை வரவேற்பார்கள்.


பிள்ளைகளுக்கு பெற்றோர் முன்னால் பணிவு இருக்க வேண்டும். மனைவிக்கு கணவன் முன்னால் பணிவு இருக்க வேண்டும்.


கணவன் மனைவியோடு பழகுவதில் பேசுவதில் பெருமை இன்றி, பணிவு கலந்த அன்போடு, அன்பு கலந்த பணிவோடு, பாசத்தோடு, நேசத்தோடு இருக்க வேண்டும்.


மனைவியை திட்டுவதோ, மட்டமாக பேசுவதோ. தரம் தாழ்த்தி பேசுவதோ, குத்திக்காட்டி பேசுவதோ, மனைவியோடு பேசும்போது கீழ்த்தரமான சொற்களை உபயோகிப்பதோ அறவே கூடாது. இவை இஸ்லாமில் கண்டிக்கப்பட்ட குணமாகும்.


மனைவியின் மீது கணவனுக்கும் கணவன் மீது மனைவிக்கும் உரிமையும் கடமையும் உண்டு. இருவரும் ஒருவருக்கு ஒருவர் கண்ணியம் கொடுப்பதிலும்; ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதிலும்; ஒருவர் மற்றவருக்கு தேவையானதை செய்து கொடுப்பதிலும் சரி சமமான உரிமையும் தகுதியும் பெறுகிறார்கள்.


கணவன், மனைவியை நிர்வகிப்பவன், செல்வத்தை உழைத்து சம்பாதித்து, மனைவிக்கும் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் செலவளிப்பவன் என்ற அடிப்படையிலும், இயற்கையாக அல்லாஹ் அமைத்த உடல் அமைப்பின்படி பொறுப்புகளை சுமக்க தகுதி பெற்றவன் என்ற அடிப்படையிலும் ஆண்களுக்கு பெண்களை பார்க்கிலும் ஒரு தகுதி அதிகம் உண்டு என்று குர்ஆன் சொல்கிற அதே நேரத்தில் இருவரில் ஒருவர் ஒருவரை சேர்ந்தவரே அதாவது இருவரும் சமமானவர்களே என்றும் குர்ஆன் கூறுகிறது.?


அதாவது, ஒவ்வொருவருக்கும் அவரவரின் உடல் அமைப்பு. பாலினம், மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கவனித்து தனித்தனி கடமைகளையும் பொறுப்புகளையும் அல்லாஹ் வழங்கி இருக்கிறான்.


67. அல்குர்ஆன் 4:34.


ஒருவரின் கடமையை மற்றொருவர் நிறைவேற்ற முடியாது. ஆகவே, ஒவ்வொருவரும் மற்றவரை மதித்து அரவணைத்து அன்புடன் நடக்க வேண்டும்; நடத்த வேண்டும்.


கணவன் மனைவி இருவரில் யாரும் யாருக்கும் அடிமையும் இல்லை. யாரும் யாருக்கும் எஜமானனும் இல்லை. அல்லாஹு தஆலா ஆணுக்கு ஒரு தனி சிறப்பை கொடுத்திருக்கிறான். அதுபோன்று பெண்ணுக்கும் தனி சிறப்பை கொடுத்திருக்கிறான். அந்த சிறப்புகள் ஒருவர் மீது ஒருவர் பெருமை பேசுவதற்கோ. ஆதிக்கம் செலுத்தி, அடிமையாக்குவதற்கோ இல்லை. அந்த சிறப்புகள் மார்க்க அடிப்படையில் சில கடமைகளை விசேஷமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அல்லாஹ் கொடுத்திருப்பதால் உள்ள சிறப்புகளாகும். மற்றபடி அல்லாஹ்விடம் ஆணும் பெண்ணும் சமம்தான்.


இந்த உலகத்தை அழகிய முறையில் படைக்க, சிறப்பான முறையில் அதை இயக்க அவனுடைய ஞானம் எப்படி முடிவு செய்ததோ அந்த தத்துவத்தின் அடிப்படையில் அவன் இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள படைப்புகளையும் படைத்தான். அவ்வாறே, ஒவ்வொரு படைப்பிலும் பாலினத்தையும் படைத்திருக்கிறான்.


அவனது ஞானம் எத்தகையது என்றால் முன்னோர் பின்னோர் என அனைத்துலக மக்களின் அறிவுகளை எல்லாம் ஒன்று சேர்த்து வைத்து சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் ஞானத்தை நாம் புரிய முயற்சித்தாலும் ஓர் அளவிற்குதான். அதுவும் அல்லாஹ் நாடிய அளவிற்குதான் நாம் புரிய முடியும். அதற்கு மேல் நாம் புரிய முடியாது. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்பதும், நம்புவதும், அந்த கட்டளைக்கு பணிந்து நடப்பதும்தான் சரியான அறிவாகும். குதர்க்கம் செய்வதோ எதிர்த்து பேசுவதோ அறிவாக ஆக முடியாது.


சரி, கணவன் மனைவியின் வாழ்க்கையில் எப்போதுமே காற்று ஒரு சீராகவே வீச வேண்டும் என்று அவசியம் அல்ல. அதுவும் ஓர் உலகம்தானே. உலகத்தில் நடக்கிற கிளைமேட் சேஞ்சிங் அதிலும் நடக்கத்தான் செய்யும்.


எல்லாவற்றுக்கும் மேலாக ஷைத்தானும் நஃப்ஸும் நமது நிம்மதியை கெடுப்பதற்காகவே முழு முயற்சியோடு. அதீத பிரயாசையோடு முயற்சி செய்துகொண்டிருக்கும்போது அந்த இருவரின் கெடுதியிலிருந்து நாம் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?


குடும்பத்தை பிரிப்பது ஷைத்தானுக்கு மிகப் பிரியமான ஒரு காரியமாகும். சந்தேகங்களை போடுவதும், சச்சரவுகளை உருவாக்குவதும், பிரச்சனைகளை இழுத்துக் கொண்டுவருவதும், குழப்பங்களின் குட்டையை கிளறுவதும், மனக்கசப்புகளின் குப்பைகளை நோண்டுவதும், வாக்குவாதத்தின் தீயை மூட்டுவதும் ஷைத்தானுக்கும் நஃப்ஸுக்கும் கைவந்த கலையாகும்.


அந்த இருவரும் வேடன்களைப் போல. நாம் வேட்டைகளைப் போல. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.


வேட்டைக்காரன் தந்திரக்காரனாக இருப்பான். வேட்டைக்காரன் சாமர்த்தியவானாக இருப்பான். வேட்டைக்காரன் சூழ்ச்சிக்காரனாக இருப்பான். அவன் பல விதமான வலைகளை உடையவனாக இருப்பான். வில், அம்பு, துப்பாக்கி போன்ற பல ஆயுதங்களை நம்மை தாக்குவதற்காக வைத்திருப்பான். நம்மை சுண்டி இழுக்க நமக்கு தீனி போடுவான். இரையை வீசுவான். எது நமக்கு பிடிக்கும். எது நமக்கு பிடிக்காது என்பது அவனுக்கு தெரியும். எந்த உணவை வீசினால் நாம் மயங்கி அதை தேடி வருவோம் என்பதெல்லாம் வேட்டைக்காரனுக்கு நன்கு தெரியும்.


குடும்பத்தை சிதைக்க, கணவன் மனைவியை பிரிக்க, நிம்மதியை


குலைக்க, குடும்ப அமைதியை கெடுக்க பல வழிகளில் ஷைத்தான் முயற்சி செய்வான். அந்த வழிகளில் ஒன்றுதான் இந்த நீயா நானா என்று போட்டி போடுதலும், இது எனது விருப்பம், இது எனது உரிமை என்று அடம்பிடித்தலும் ஆகும்.


எல்லாவற்றுக்கும் மார்க்கம் ஒரு தெளிவை நமக்கு கொடுத்திருக்கிறது. நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது எது, எதை நாம் கண்டும் காணாமல் இருக்க வேண்டும். எதற்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். எதை எந்தளவுக்கு வலியுறுத்த வேண்டும். எதற்கு எந்தளவு பிரயாசை எடுக்க வேண்டும், எந்த காரியத்தை முதலில் கவனத்தில் வைக்க வேண்டும், எதை மறந்தால் பிரச்சனை இல்லை, எதை மறக்கக்கூடாது, எதில் கணவனுக்கு கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும். எதில் மன்னிப்பு உண்டு, மனைவியின் விருப்பங்கள் எந்தளவிற்குவரை நிறைவேற்றப்பட வேண்டும், யார், யாருக்கு அதிகமாகவோ முதலிலோ விட்டுக்கொடுக்க வேண்டும். வாழ்க்கையில் கணவனின் பங்களிப்பு என்ன, மனைவியின் பங்களிப்பு என்ன, அல்லாஹ்வின் கடமைகள் என்ன. அடியார்களின் கடமைகள் என்ன, நன்மையான காரியங்கள் என்ன, பாவமான காரியங்கள் என்ன. இப்படியாக பல வரைமுறைகளை மார்க்கம் நபி அவர்களுடைய வாழ்க்கை வழிகாட்டல் மூலமாக நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது.


மார்க்கத்தின் வழிகாட்டல்களில் ஒரு வழிகாட்டலை நாம் புறக்கணித்தாலும், இஸ்லாம் கூறி இருக்கிற நற்குணங்களில் ஒரு நற்குணத்தை நாம் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டாலும், குர்ஆன் கூறுகிற சட்ட வரம்புகளில் ஒன்றை நாம் மீறி நடந்தாலும், நபி அவர்களின் ஸுன்னாக்களில் ஒன்றுக்கு நாம் மாற்றம் செய்தாலும் கண்டிப்பாக குழப்பமும் பிரச்சனையும் உருவாகும். இதை நாம் மறந்து விடக்கூடாது.


நம் மூலமாக நடக்கிற தவறுகளுக்கு உடனுக்குடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதை திருத்திக் கொள்ள வேண்டும். அதிலிருந்து மீண்டு நேரான வழிக்கு வந்து விட வேண்டும். அடியார்களின் உரிமைகளில் குறை செய்திருந்தால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும்.


பிரச்சனைகளின்போது முதலில் மன்னிப்பவராக நான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.


மனக்கசப்புகள் ஏற்படுகிறபோது முதன்முதலாக நான் சமரசமாகிவிட தயாராக இருக்கிறேன் என்று ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.


வாக்குவாதங்கள் முற்றும்போது போட்டி போட நான் தயாரில்லை, நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். நான் அமைதி காக்கிறேன், நான் உன் கருத்தை ஏற்கிறேன் என்று உடனே இறங்கி வர ஒவ்வொருவரும் முந்திக்கொள்ள வேண்டும்.


ஈகோவிற்கும் போட்டி மனப்பான்மைக்கும் இடம் கொடுத்து ஷைத்தானை மகிழ்விப்பதை தவிர்க்க வேண்டும். மன்னிப்பும் விட்டுக்கொடுத்தலும் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் பிடித்தமானவை என்பதை மறந்து விடக்கூடாது. நபி அவர்கள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் எத்தனை உரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள். எவ்வளவு கீழே இறங்கி வந்தார்கள். முஸ்லிம்களுக்கு நிம்மதி, அமைதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமது உம்ரா உடைய இஹ்ராமை கூட உம்ராவை நிறைவேற்றாமல் முடித்துக்கொள்ள முடிவெடுத்தார்கள். அப்படியே செய்தார்கள். தங்கள் தோழர்களுக்கும் அவர்களும் அப்படியே செய்யவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்கள். 8 68


சமாதானமாக, சுமூகமாக செல்வதுதான் அல்லாஹ்விடம் மிக சிறந்தது. வாழ்க்கைக்கு மிக உகந்தது என்று குர்ஆன் கூறுகிறது.


68. அறிவிப்பாளர்: அல்மிஸ்வர் இப்னு மஹ்ரமா .நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 2731.


மன்னிப்பதும் விட்டுக்கொடுப்பதும் தக்வா - இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது என்று குர்ஆன் வழிகாட்டுகிறது.


ஆண், கூடுதல் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அல்குர்ஆன் அறிவுரை கூறுகிறது.


பிரச்சனை முத்திவிட்டால், இரு வீட்டார் வரை செய்தி சென்றுவிட்டால் இரு வீட்டாரின் நடுவர்களும் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சமாதானம் செய்து சேர்த்து வைப்பதுதான் ரொம்ப நல்லது என்று அல்லாஹ் வழிகாட்டுகிறான். பிரிவது என்பது சேர்த்து வைப்பது அறவே முடியாத கட்டத்தில் செய்யப்படுகிற அறுவை சிகிச்சையைப் போல. அதை முதன்மை படுத்தக் கூடாது.


இவ்வுலக வாழ்க்கையை இன்பமாக கழிக்க வேண்டுமென்றால் இணங்கி, இணைந்து, இசைந்து போக கற்றுக்கொள்ள வேண்டும். முரண்டு பிடித்தாலோ, முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலோ, பிடிவாதம் காட்டினாலோ. நீயா நானா என்று போட்டி போட்டாலோ, நீ முதலில் விட்டுக்கொடு, இல்லை, நீ முதலில் விட்டுக்கொடு, அல்லது. நீ முதலில் இறங்கி வா. இல்லை, நீ முதலில் இறங்கி வா என்று ஒவ்வொருவரும் திமிரு பிடித்தாலோ, ஈகோவிற்கு அடிமையாகி விட்டாலோ பலமாக இழுக்கப்படுகிற கயிறோ ரப்பரோ ஒரு கட்டத்தில் பிய்ந்துதான் போகும் என்பதை போன்றுதான் உறவுகளும் முறிந்துவிடும் என்பது எதார்த்த உண்மையாகும்.


வாழ்க்கையை புரியவேண்டும், உணர்வுகளை மதிக்க வேண்டும். அன்புகளையும் அன்பளிப்புகளையும் பரிமாறிக்கொள்ள வேண்டும். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மனைவியின் சின்ன சின்ன சிணுங்கல்களை, கணவனின் அவ்வப்போது வந்துபோகும் கோபதாபங்களை மனதில் வைக்கக் கூடாது. மனதுக்குள் கோபத்தை மறைத்து வைப்பது வெடிபொருளுக்கு அருகில் நெருப்பை மறைத்து வைப்பது போலாகும்.


முஃமின்கள் கோபப்படும்போது மன்னித்து விடுவார்கள் என்று குர்ஆன் நமக்கு போதிக்கிறது. நீங்கள் பொறுமையாக இருப்பதும் பொறுத்துக் கொள்வதும் மிக சிறந்தது என்றும் பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்றும் குர்ஆன் நற்செய்தி கூறுகிறது.


ஆகவே. நாம் நமது நபி அவர்களையும் நமது சான்றோரையும் பின்பற்றி அன்போடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அன்போடு வாழ என்னென்ன தியாகங்களை செய்ய வேண்டுமோ அவற்றை நாம் செய்தாக வேண்டும். எந்தளவு விட்டுக்கொடுக்க முடியுமோ அந்தளவு நாம் விட்டுக்கொடுக்க வேண்டும்.


நாமாக ஒரு காரியத்தை முடிவெடுத்து, அதில் பிடிவாதம் பிடிக்காமல் நல்லோர், மற்றும் நன்மையை விரும்புகிறவர்களோடு ஆலோசனை செய்து அவர்களின் நல்ல அபிப்ராயத்தை செவிகொடுத்து ஏற்று நடக்க வேண்டும்.


நபி அவர்களுக்கு. நீங்கள் உங்கள் தோழர்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்க நாம் எந்தளவு ஆலோசனைக்கு தேவை உள்ளவர்கள் என்பதை நாம் புரிய வேண்டும்.


என் அன்பு சகோதர சகோதரிகளே! அன்போடு பாசத்தோடு வாழ பழகிக் கொள்ளுங்கள். ஈகோ என்ற விஷச்செடியை உங்கள் குடும்பத்தில் வளர விடாதீர்கள். நீயா, நானா பார்த்துவிடுவோம் என்று போட்டிபோடுவதற்கு வாழ்க்கை ஒன்றும் மல்யுத்த மைதானமல்ல.ஒருவர் மற்றவரை முடிந்தளவு புரிந்து வாழுங்கள்!


உங்கள் வாழ்க்கை துணைக்கு விட்டுக்கொடுத்து வாழுங்கள்!


"எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!"


ஆமின்


***

Comments